Thursday, October 11, 2018

How to identify Maha Vishnu?

ஒரு சிறந்த விஷ்ணு பக்தர் இருந்தார். அவர் எப்போதும் சொல்வாராம் கிருஷ்ணா நீ எங்கே இருந்தாலும் உன்னைக் கண்டுபிடித்துவிடுவேன் என்று.

அதற்கு எப்படிக் கண்டுபிடிப்பாய் என்று கேட்டு அதன் சூட்சுமத்தை அறிய விரும்பினாராம் கிருஷ்ணர்.

அதற்கு இந்த பக்தர் கூறினாராம் நீ மச்சாவதாரம் என்ற மீனின் அவதாரம் எடுத்தாயே அப்பொழுது, தண்ணீரில் இருந்த எல்லா மீன்களுக்கும் கண்கள் வட்டவடிவமாக இருந்தது.

ஆனால் நீ மீனாக இருந்தபோது செவ்வரி ஓடிய தாமரை இதழ் போல் உன் கண்கள் நீளமாக இருந்ததே, அரவிந்த நயனா என்றாராம் பக்தர்.

மச்ச அவதாரம் மட்டுமல்ல கூர்ம, வராக, நரசிம்ம என்று பல விலங்கின அவதாரங்களை எடுத்தாயே அப்போதும் உன் கண் மலர்கள் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டன கிருஷ்ணா என்று கூறினார்.

No comments:

Post a Comment