Tuesday, September 18, 2018

Sardar Patel

சுதந்திரப் போராட்டக் காலம். கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.

நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வாதத்தைத் தொடர்கிறார். 
 
உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்று கேட்க..

"என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர். 

பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்டபோது அவர் சொன்னார்,

"உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டுவர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களைத் தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீட்கச் சாத்தியமிருக்கிறதே..''

வியந்து போன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.

அந்த வழக்கறிஞர்: 
சர்தார் வல்லபாய் பட்டேல்.

இப்படியான அருமையான மனிதர்கள் வாழ்ந்து சென்ற பூமி: இந்தியா

No comments:

Post a Comment