Tuesday, September 18, 2018

Greatness of pancakshara -spiritual story

சிவியநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
*பிறவாமையை, எப்படி பெறுவது!*
_____________________________________
பிறவாமையைப் பெறுவதற்கு எளிய வழியை, பாடலில் தருகிறார் நம் திருநாவுக்கரசு சுவாமிகள்.

திருநாவுக்கரசு சுவாமிகள் சிவலாயம் ஒன்றிற்கு சென்று தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தார்.

எதிர் புறத்திலிருந்து வந்த ஒரு பெரியவர், அப்பர் பெருமானிடம், அய்யா! முதுமை அடைந்து விட்டேன், எனக்கு விரைவில் பிறப்பற்ற இறப்பு கிடைக்குமா? என்று வினவினார்.

அதற்கு, அப்பர் சுவாமிகள் அப்பெரியவரிடம் கேட்டார், அய்யா ! தாங்கள் இந்நாள் வரை தினமும் இறைவனின் திருநாமமாகிய திருஐந்தெழுத்தை வாயாரா கூறி வந்துள்ளீர்களா?

இல்லை ஐயனே!...

அனுதினமும் இறைவனுடைய பெருமைகளையாவது கேட்டு, அதை ஏனையோருக்கு அடுத்துக் கூறிவோ பாடவோ செய்திருக்கிறீர்களா?

இல்லை ஐயனே!.......

சரி!, தினமும் உணவு உட்கொள்ளுவதற்கு முன்பாகவாவது அருகிலுள்ள சிவலாயம் சென்று வலம் வந்து ஈசனை வணங்கியிருக்கிறீர்களா?

இதுவும் செய்யவில்லை ஐயனே!....

இறைவனுக்கு மலர்களை சேகரித்து ஈசனின் பாதங்களுக்குக் கொண்டு சமர்த்துள்ளீர்களா?

இதுவும் செய்யவில்லை ஐயனே!....

சைவ நெறியும் ஈசனின் அடையாளத்தையும் நினைந்தே இருக்க, அவன்  நாமம் *சிவாயநம* என்று கூறி திருநீரு அணிந்து வணங்கிக் கொள்ளும் பழக்கம் உண்டா? 

இல்லையே ஐயா!.....

சிவத்தின் அடையாள சின்னமான உத்திராட்சமாவாவது அணிந்திருக்கிறீர்களா?

அதற்கும் அப்பெரியவர் 
ஐயா!, இவற்றை எல்லாம் ஒருநாளும் ஒரு பொழுதேனும் செய்ததும் இல்லை, கேட்டதும் இல்லை என்றார்.

உடனே அப்பர் பெருமான் மனம் நொந்து அய்யா, இவ்வளவு காலமும் இதையெல்லாம் செய்யாமல் வீணாக காலத்தை கழித்து விட்டீர்களே!

கிடைத்தற்கரிய வாய்ப்பை இதுவரை வீனாக்கி விட்டீர்களே!, செய்த பாவங்களை குறைக்க எடுத்த மனிதப் பிறவியை வீணே தொலைத்து விட்டு, மேலும் மேலும் பாவ சுமைகளை நிறைத்துவிட்டீர்களே! என்றார்.

இதன் பொருட்டு அப்பர் பெருமான் பாடிய பாடல் 

🔔 *திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்*
*தீவண்ணர் திறம் ஒருகால் பேசாராகில்*
*ஒருகாலுந் திருக்கோவில் சூழாராகில்*
*உண்பதன் முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்*
*அருநோய்கள் கெட வெண்ணீ றணியாராகில்*
*அளியற்றார் பிறந்த வாறு ஏதோ என்னில்*
*பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்*
*பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே*

நாவுக்கரசர் இதை தமிழ் வேதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment