Thursday, September 20, 2018

Kamakotisha Vruttam in Sanskrit

॥ श्रीकामकोटीशवृत्तम् ॥

श्रीकामकोटीशदेवम् -
भक्तहृत्पद्मसूर्यं विनम्रो भजेऽहम् ॥ ० ॥

பக்தர்களின் ஹ்ருதயங்களாகிய தாமரைகளை (மலர்விக்கும்) ஸூர்யனான ஶ்ரீ காமகோடி (பீடாதீச்வரரான குரு-)தேவரைப் பணிவுடன் வணங்குகிறேன்.

श्रीचक्रराजं नमन्तम् -
योगलिङ्गं च नित्यं सुमैरर्चयन्तम् ।
शिष्यार्तिम् उत्सारयन्तम् -
तप्तचित्तान् कृपावृष्टिभिः सेचयन्तम् ॥ १ ॥
(श्रीकामकोटीशदेवम्)

உயர்ந்ததான (அம்பாளின்) ஶ்ரீசக்ரத்தையும் (சிவனார் கயிலையிலிருந்து ஶ்ரீ சங்கர பகவத்பாதரிடம் கொடுத்தனுப்பிய) யோக லிங்கத்தையும் தினமும் வணங்கி புஷ்பங்களால் அர்ச்சிப்பவரும், சிஷ்யர்களின் துக்கங்களை விரட்டுபவரும், தவித்த மனதுடையவர்கள் மீது (குளிர்ந்த) கருணை மழைகளைப் பொழிவிப்பவரும் … (ஆன ஶ்ரீ காமகோடீச குருதேவரை வணங்குகிறேன்).

सर्वज्ञपीठे लसन्तम् -
वेदशास्त्रादिविद्योच्चयं वर्धयन्तम् ।
गीतं स्तुतिं पाठयन्तम् -
रामनामादिकं बालकैर्लेखयन्तम् ॥ २ ॥
(श्रीकामकोटीशदेवम्)

ஸர்வஜ்ஞ பீடத்தில் விளங்குபவரும், வேதம் சாஸ்த்ரம் முதலிய உயர்ந்த வித்யைகளை வளர்ப்பவரும், பாட்டுகள்/ஸ்தோத்ரங்களை பாட/ஓத வைப்பவரும், ராம நாமம் முதலியவற்றை சிறுவர்கள் (நாமெல்லோரையும்) எழுத வைப்பவரும் …

काञ्चीपुरे राजमानम् -
मोक्षभुव्यस्मदर्थं तपस्तप्यमानम् ।
नारायणाख्यां ब्रुवाणम् -
शङ्कराचार्यनामौचितीं सन्दधानम् ॥ ३ ॥
(श्रीकामकोटीशदेवम्)

காஞ்சீபுரத்தில் பொலிபவரும், மோக்ஷ ஸ்தலமான (இவ்விடம்) நமக்காக தபஸ் செய்பவரும், நாராயண (என்ற) பெயரை (என்றும்) சொல்பவரும், (உலகுக்கெல்லாம் நன்மை செய்து நடந்து காட்டும் ஆசான் என்று பொருள்படும்).ஶங்கராசார்யர் (என்ற) பெயரின் பொருத்தத்தைக் காப்பாற்றுபவரும்…

श्रीमातुरङ्के शयानम् -
बालभावेन निष्कल्मषं भाषमाणम् ।
कीर्तिश्रिया वर्धमानम् -
वृद्धकालेऽपि कृत्यं सदाऽऽतिष्ठमानम् ॥ ४ ॥
(श्रीकामकोटीशदेवम्)

(தமது ஹ்ருதய பாவனையில்) ஶ்ரீமாதாவான (காமாக்ஷியின்) மடியில் படுத்திருக்கும் (குழந்தையானவரும், அத்தகைய) குழந்தை போன்று கல்மஷம் இன்றி பேசுபவரும், புகழ் என்றும் செல்வத்தால் வளர்பவரும், வயதான காலத்திலும் (தமது) கடமைகளை எப்பொழுதும் கடைபிடிப்பவரும்…

धर्मे दृढं प्रेरयन्तम् -
सर्वतः प्रातिकूल्येऽपि धैर्यं सुवन्तम् ।
दुर्वासनाः सन्तुदन्तम् -
शान्ततायुक्तम् अस्मत्प्रमादान् मृजन्तम् ॥ ५ ॥
(श्रीकामकोटीशदेवम्)

தர்மத்தில் திடமாக செயல்படும்படிச் செய்பவரும், (தர்மத்தைச் செய்வதில்) எல்லா புறத்திலிருந்தும் இடையூறுகள் வந்தாலும் தைரியம் ஏற்படுத்துபவரும், (நமது மனதில் இருக்கும்) தீய வாசனைகளை அறவே அழிப்பவரும், (அவை போகும் வரை நாம் செய்யும்) தவறுகளைப் பொறுமையுடன் திருத்துபவரும்… (ஆன ஶ்ரீ காமகோடீச குருதேவரை வணங்குகிறேன்).

चित्तस्य शुद्धिं विधेहि -
लोकयात्राभवाद् दुःखपूगाच्च पाहि ।
पापं समस्तं लुनीहि -
भक्तिगङ्गाजलेनाश्रितान् नः पुनीहि ॥ ६ ॥
(श्रीकामकोटीशदेवम्)

(ஶ்ரீ காமகோடீச குருதேவனே! எங்களது) மனதைச் சுத்தப்படுத்து! உலக வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களின் கூட்டத்தினின்றும் காப்பாற்று! (எங்கள்) பாபம் அனைத்தையும் வெட்டியெறி! பக்தி (என்னும்) கங்கா ஜலத்தினால் (உம்மை) அண்டிய எங்களை பவித்ரமானவர்களாக ஆக்கு!

॥ इति श्रीकामकोटीशवृत्तं सम्पूर्णम् ॥

-*-*-*-

No comments:

Post a Comment