Friday, August 17, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 9 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 1 அத்தியாயம் 9

அத்தியாயம் 9
உத்தராயண புண்ய காலத்தை எதிர்பார்த்து அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரைக் காண எல்லோரும் சென்றனர். பீஷ்மரின் தர்மோபதேசத்தைக் கேட்க எல்லா ரிஷிகளும் உடன் சென்றனர்.

சுகர் பீஷ்மரை 'நிபதிதம் பூமௌ திவ: ச்யுதம் இவ அமரம்', தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்த தேவனைப்போல் இருந்தார் என்று வர்ணிக்கிறார். பீஷணர் உண்மையில் அஷ்ட வசுக்களில் ஒருவராய் இருந்து சாபத்தினால் மனிதராகப் பிறந்ததை இது குறிக்கிறது.

கிருஷ்ணர் பீஷ்மரிடம் சென்றதும் அவரை வணங்கினார் . பீஷ்மர் பின்பு ஆசார ப்ரபவோ தர்ம: தர்மஸ்ய பிரபு: அச்யுத: என்று சொல்லப்போவதை காட்டுபவர்போல். ஸஹஸ்ரநாமத்தில் அமாநீ மானதோ மான்ய: என்று ஒரு நாமம். இதன் பொருள், பகவான் எல்லோராலும் வணங்கப் படுபவர். ஆனால் அவர் மரியாதைக்குரிய பக்தர்களை வணங்குகிறார். என்பது.

பீஷ்மர் ராஜரிஷிகள் பிரம்ம ரிஷிகள் தேவரிஷிகள் அனைவரையும் பார்த்து உவகை எய்தினார். மகாத்மாக்களின் தரிசனம் கடைசிகாலத்தில் கிடைப்பது பகவன்நாமஸ்மரணத்தைக் காட்டிலும் உயர்ந்தது, அந்திமகாலத்தில் நாமஸ்மரணம் செய்ய முடியாவிட்டாலும் மகான்களுடைய கடாக்ஷம் பாபங்களைப் போக்கும் .

கிருஷ்ணரைப் பார்த்து பீஷ்மர் அவரைத் தன் உள்ளத்தில் உறைபவரை எதிரில் வீற்றிருப்பவராகக் கண்டு பூஜித்தார்.பிறகு அவர் பாண்டவர்களை நோக்கி அன்பினால் கண்ணீர் பெருகக் கூறலுற்றார்.

அவர் கூறினதாவது, 
"தருமத்தையும் அச்சுதனையும் ஆச்ரயிப்பவர்களாக இருந்தும் நீங்கள் பட்ட கஷ்டம் மிகப்பெரிது. இது காலத்தின் கொடுமை. தருமன் அரசனாகவும் பீமன் கதை ஏந்தியவனாகவும் , அர்ஜுன வில்லாளியாகவும் கிருஷ்ணன் உர்ரதுநியாகவும் உள்ளபோதே விபத்துகள் நிகழ்கின்றனவே?

முனிவர்களாலும் அறிய முடியாத இறைவனின் திருவுள்ளத்தை யாரே அறிவார்? ஆகையால் இதை தெய்வச்சித்தம் என்று உணர்ந்து உங்கள் கடமையை ஆற்றுவீராக."

ஏஷ வை பகவான் சாக்ஷாத் ஆத்யோ நாராயண; புமான்
மோஹயன் மாயயா லோகம் கூடஸ்சாரதி வ்ருஷ்ணிஷு

இந்த கிருஷ்ணன் சாக்ஷாத் பகவான். ஆதிநாராயணன். பரமபுருஷன்.உலகத்தைத் தன் மாயையால் மயக்கி யாதவர்களிடையே சஞ்சரிக்கிறார்.

சிவன் நாரதர் கபிலர் முதலியோர் மட்டுமே இவருடைய உண்மை ஸ்வரூபத்தை அறிவர். அப்படிப்பட்ட இவரை நீங்கள் நெருங்கிய நண்பனாகவும் மந்திரியாகவும் தூதனாகவும் தேரோட்டியாகவும் அல்லவா செய்துகொண்டீர்கள்!

அவர் பற்றற்று எங்கும் சமமாக உறைபவர். ஆயினும் பக்தர்களிடத்தில் அவருடைய கருணையைப் பாருங்கள். உயிரை விடப்போகும் எனக்கும் தரிசனம் அளிக்க அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார். "

அப்போது யுதிஷ்டிரர் பீஷ்மரை பல்வேறு தர்மங்களைப்பற்றிக் கூறுமாறு பிராத்தித்தார் . அதைக்கேட்டபின்னர் யுதிஷ்டிரர் 'கோ தர்ம: சர்வதர்மாணாம் பவத்: பரமோ மத: ', உங்கள் அபிப்பிராயத்தில் எல்லாவற்றிலும் சிறந்த தர்மம் எது என்று கேட்க பீஷம்ர் அதற்கு விடை அளிப்பவராகி 'ஏஷ மே சர்வதர்மாணாம் தரமோ அதிகதாமோ மத: ' இதுதான் எல்லதர்மங்களையும் விட உயர்ந்த விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை உபதேசித்தார். இதைத்தானே கண்ணனும் கீதையில் சர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்றான்!.

பிரகு பீஷ்மர் எதிர்பார்த்த உத்தராயண காலமும் வந்தது.
"எவரிடம் பக்தியுடன் மனதை நிறுத்தி அவருடைய நாமஸ்மரணத்துடன் யோகியானவன் உயிர் நீத்தால் கர்மபந்தத்தில் இருந்து விடுபடுவானோ அந்த கிருஷ்ணன் பிரகாசிக்கின்றமுகார்விந்தத்துடனும் புன்முறுவலுடனும் சதுர்புஜங்களுடனும் என் முன்னேஇருந்து கடாக்ஷித்தருளவேண்டும் என்று கூறி பகவத்த்யானத்துடன் ஜனார்தனனை துதிக்கலானார் . அதுவே பீஷ்மஸ்துதி எனப்படும். அதை அடுத்து பார்க்கலாம்.

இப்போது பீஷ்மரின் ஸ்துதியைப் பார்க்கலாம்.

இதி மதி: உபகல்பிதா வித்ருஷ்ணாபகவதி ஸாத்வதபுங்கவே விபூம்னி
ஸ்வஸுகமுபகதே க்வசித் விஹர்த்தும் ப்ரக்ருதிமுபேயுஷி யத்பவப்ரவாஹ:

ஸாத்வதபுங்கவே-யதுகுல திலகனான
விபூம்னி- பரமாத்மாவான 
ஸ்வசுகம் உபகதே – தன்னில் முழுமையானவனாயினும்
கவசித் – சில நேரங்களில்
விஹர்த்தும் – லீலையின் பொருட்டு 
ப்ரக்ருதிம் உபேயுஷி- ப்ரக்ருதி என்னும் மாயையை கைக்கொண்டு
யத் பவப்ரவாஹ: - இந்த சிருஷ்டியை தோற்றுவிப்பவனும் ஆன
பகவதி-பகவானிடத்தில் 
வித்ருஷ்ணா மதி: -என் ஆசையற்ற மனம் 
இதி உபகல்பிதா – ஈடுபடட்டும்

த்ரிபுவனகமநம் தமால வர்ணம் ரவிகரகௌரவராம்பரம் ததானே 
வபுரலககுலாவ்ருதானனாப்ஜம் விஜயஸகே மதிரஸ்து மே அனவத்யா

த்ரிபுவனகமனம்-மூவுலகையும் கவர்பவரும், 
தமால வர்ணம் –தமால மரம் போன்று கருநீல நிறம் கொண்டவரும்
ரவிகரகௌரவராம்பரம்- சூரியனைப்போல் ஒளிவிடும் பீதாம்பரத்தை தரித்தவரும்
வபுரலககுலாவ்ருதானனாப்ஜம்-சுருட்டை மயிரால் சூழப்பட்ட முகாரவிந்தத்தை உடைய உருவம் கொண்டவரும் 
விஜயஸகே- அர்ஜுனனின் நண்பரும் ஆன கிருஷ்ணரிடத்தில் 
மே மதி: என் புத்தியானது
அனவத்யா-நிர்மலமாக
அஸ்து- இருக்கட்டும்

யுதி துரகரஜோவிதூம்ரவிஷ்வக் கசலுலிதஸ்ரமவார்யலம்க்ருதாஸ்யே
மம நிசித சரை: விபித்யமானத்வசி விலஸத்கவசே அஸ்து 
கிருஷ்ண ஆத்மா

யுதி- யுத்தத்தில் 
துரகரஜோ விதூம்ர விஷ்வக் கச- குதிரைகளின் குழம்பில் இருந்து எழுந்த தூசிநிறைந்த கேசமுடைய 
ஸ்ரமவாரி அலம்க்ருத ஆஸ்யே –வியர்வைத்துளிகள் நிரம்பிய முகத்துடன் 
மம நிசித சரை: -நான் விட்ட கூரிய அம்புகளால் 
விபித்யமானத்வசி- துளைக்கப்பட்ட சருமத்தின் மேல்
விலசத்கவசே – ஒளிவிடும் கவசத்துடன் கூடிய 
க்ருஷ்ணே- கிருஷ்ணனிடத்தில் 
ஆத்மா அஸ்து – என் உயிர் நிலைக்கட்டும்

ஸபதி ஸகிவசோ நிசம்ய மத்யே நிஜபரயோ: பலயோ: ரதம் நிவேச்ய
ஸ்திதவதி பரசை(सैநிகாயுரக்ஷ்ணா ஹ்ருதவதி பார்த்தஸகே ரதிர்மமாஸ்த

ஸகிவசோ-தோழனின் வார்த்தையைக்
நிசம்ய- கேட்டு
நிஜபரயோ: பலயோ:- தமது சேனைக்கும் எதிரி சேனைக்கும்
மத்யே – நடுவில் 
ரதம் – தேரை 
ஸபதி- விரைவில்
நிவேச்ய – நிறுத்தி
ஸ்திதவதி – நின்று
பரசைநிகாயு: - எதிரிப் படையில் உள்ளவர்களின் ஆயுளை 
அக்ஷ்ணா – பார்வையாலேயே 
ஹ்ருதவதி- அபகரித்த 
பார்த்த ஸகே – அர்ஜுனனின் நண்பனான பார்த்த சாரதியினிடத்தில் 
ரதி மம –எனக்கு பக்தி 
ஆஸ்த- இருக்கட்டும்

வ்யவஹிதப்ருதனாமுகம் நிரீக்ஷ்ய ஸ்வஜனவதாத் விமுகஸ்ய
தோஷபுத்த்யா
குமதிம் அஹரத் ஆத்மவித்யயா யஸ்சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து

வ்யவஹிதப்ருதனாமுகம் – அணிவகுத்த சேனையை
நிரீக்ஷ்ய – பார்த்து 
ஸ்வஜனவதாத் – தன் பந்துக்களைக் கொல்வது 
தோஷபுத்த்யா – பாபம் என்ற எண்ணத்தால் 
விமுகஸ்ய – போரிடுவதில் வெறுப்புற்ற அர்ஜுனனின்
குமதிம்- அறியாமையை 
ஆத்மவித்யயா – ஆத்மஞானத்தால்
ய: அஹரத்- எவர் அகற்றினாரோ
பரமஸ்ய தஸ்ய- அந்த பரமாத்மாவின்
சரணரதி: - சரணங்களில் பற்று 
மே அஸ்து-எனக்கு உண்டாகட்டும்

ஸ்வநிகமம் அபஹாய மத்ப்ரதிக்ஞாம் ருதம் அதிகர்த்தும் அவப்லுதோ ரதஸ்ய 
த்ருதரதசரண: அப்யயாத்சலத்கு: ஹரிரிவ ஹந்தும் இபம் கதோத்தரீய:

மத்பிரதிக்ஞாம் – கருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்ற என் பிரதிக்ஞையை 
ருதம் அதிகர்த்தும் – மெய்யாக்குவதற்காக 
ஸ்வநிகமம்- ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் பிரதிக்ஞையை
அபஹாய – கைவிட்டு
ரதஸ்ய- தேரிலிருந்து 
அவப்லுத: - கீழே குதித்து 
இபம் ஹந்தும்- ஒரு யானையைக் கொல்லவரும்
ஹரிரிவ- சிங்கத்தைப்போன்று 
கதோத்த்ரீய: - தன் மேலாடை பறக்க 
த்ருதரதசரண: - தேர்ச்சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு 
சலத்கு: - பூமி நடுங்க 
அப்யயாத்:- விரைவாக ஓடி வந்தாரே !

சிதவிசிக ஹதோ விசீர்ண்தம்ச: க்ஷதஜ பரிப்லுத ஆததாயின: மே
பிரஸபம் அபிஸஸார மத்வதார்த்தம் ஸ பவது மே கதிர்மஹான் முகுந்த:

ஆததாயின: -கொடிய எதிரி ஆகிய 
மே – என்னுடைய 
சிதவிசிகஹத: சரங்களால் அடிக்கப்பட்டு
விசீர்ணதம்ச: - துளைக்கப்பட்ட கவசத்துடன்
க்ஷதஜபரிப்லுத:- உதிரம் பெருக 
மத்வதார்த்தம் – என்னைக் கொல்லும் பொருட்டு
பிரசபம் – விரைவாக 
அபிஸஸார- ஓடி வந்தாரே 
ஸ: முகுந்த: -அந்த முகுந்தன் 
மே மஹான் கதி: என் மேலான கதியாக 
பவது- ஆகட்டும்

விஜயரதகுடும்ப ஆததோத்ரே த்ருதஹயரச்மினி தத் ஸ்ரியேக்ஷணாயே
பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ: யமிஹ நிரீக்ஷ்ய ஹதா: கதா: ஸரூபம்

விஜயரதகுடும்ப- அர்ஜுனனின் தேரில் வாசம் செய்யும் 
ஆததோத்ரே- சாட்டையை கையில் பிடித்துள்ள 
த்ருதஹயரச்மினி- குதிரைக்கக்டிவாளத்தை இன்னொரு கையில் பிடித்துள்ள 
தத் ஸ்ரியேக்ஷணாயே- பார்க்க அழகியவராயுள்ள
யம்- எவரை 
இஹ- இங்கு 
நிரீக்ஷ்ய –பார்த்து 
ஹதா: உயிர் விட்டவர்கள் 
ஸரூபம் – சாரூப்ய முக்தியை 
கதா: -அடைந்தார்களோ 
பகவதி- அந்த பகவானிடத்தில் 
முமூர்ஷோ:- இறக்கும் தருவாயிலுள்ள
மே- எனக்கு 
ரதி: அஸ்து- பக்தி இருக்கட்டும்

லலிதகதிவிலாஸ வல்குஹாஸ ப்ரணயநிரீக்ஷண கல்பிதோருமானா: 
க்ருதமனுக்ருதவத்ய: உன்மதாந்தா: ப்ரகருதிமகமன் கில யஸ்ய கோபவத்வ:

கோபவத்வ: - கோபியர் 
லலிதகதிவிலாஸ – அழகிய நடை 
வல்குஹாஸ – மலர்ந்த 
ப்ரணயநிரீக்ஷண சிரிப்பு- காதல் பார்வை 
கல்பிதோருமானா: - இவைகளால் ஈர்க்கப்பட்டு 
யஸ்ய – எவருடைய 
க்ருதமனுக்ருதவத்ய:-செயல்களை பின்ப்றி
: உன்மதாந்தா: - காதல் வயப்பட்டவர்களாக 
ப்ரகருதிமகமன் கில – அவருடன் இரண்டறக் கலந்தார்களோ

முனிகணந்ருபவர்யஸம்குலே அந்த:ஸதஸி யுதிஷ்டிரராஜசூய ஏஷாம்
அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ மம த்ருசிகோசர ஏஷ ஆவிராத்மா

முனிகணந்ருபவர்யஸம்குலே – முனிவர்கள் அரசர்கள் கூட்டத்தில் 
அந்த:ஸதஸி – சபையின் நடுவே 
யுதிஷ்டிரராஜசூயே – யுதிஷ்டிரரின் ராஜசூயயாகத்தின்போது
ஏஷாம் அர்ஹணம்- அவர்கள் எல்லோருடைய பூஜையை 
உபபேத – ஏற்றுக்கொண்ட
ஈக்ஷணீய: - தரிசனத்திற்குகந்த 
ஆவிராத்மா- ஆத்மாவின் ஆத்மாவான அவர் 
மமத்ருசிகோசர: - என் கண்முன் நிற்கிறார்

தம் இமம் அஹம் அஜம் சரீரபாஜாம் ஹ்ருதி ஹ்ருதி 
திஷ்டிதம் ஆத்மகல்பிதானாம் 
பிரதித்ருசம் இவ நைகதாஅர்கம் ஏகம் 
ஸமதிகதோ அஸ்மி விதூதபேத மோஹ: 
.
அஜம்- பிறவியற்றவராய்
ஆத்மகல்பிதானாம் – தான் சிருஷ்டித்த 
சரீரபாஜாம் - சரீரம் உள்ளவர்களின் 
ஹ்ருதி ஹ்ருதி- இதயம் தோறும்
திஷ்டிதம் – உறைந்து 
அர்கம் ஏகம் – ஒரே சூரியன் 
ப்ரதித்ருசம் – ஒவ்வொரு கண்ணிலும்
ந ஏகதா இவ-பலவாகத் தோன்றுவது போல உள்ள 
தம் இமம் இந்த பகவானை 
அஹம்- நான் 
விதூதபேத மோஹ: - வேற்றுமை மயக்கம் நீங்கியவனாக 
ஸமதிகதோ அஸ்மி-நன்கு அடைந்தவன் ஆகிறேன்

இவ்விதம் கூறிய பீஷ்மர் க்ருஷ்ணனிடம் தன்னை ஒடுக்கி மூச்சை நிறுத்தி பிரம்மத்தில் கலந்தார்.

.



No comments:

Post a Comment