Thursday, August 16, 2018

Srimad Bhagavatam skanda 1 adhyaya 2 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1அத்தியாயம் 2 தொடர்ச்சி

சூதர் , எல்லா சாஸ்திரங்களுக்கும் சாரமானது எது என்ற முதல் கேள்விக்கு பதிலுரைக்கிறார்

ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: யாத: பக்தி: அதோக்ஷஜே 
அஹைதுக்யப்ரதிஹதா யயா ஆத்மா ஸம்ப்ரசஸீததி( பாக. 2.6)

மனிதர்களுக்கு மேலான தர்மம் பகவானிடத்தில் பக்தியே . அஹைதுகம் , எதையும் எதிர்பார்க்காத , அப்ரதிஹதம், எல்லா இடையூறையும் நீக்குவதான பக்தியினால் ஆத்மா தெளிவடைகிறது.

வாசுதேவரிடத்தில் பக்தி ஏற்படுமானால் அது விரைவில் வைராக்யத்தையும் ஞானத்தையும் உண்டாக்கும்.

எந்த தர்மம் நன்கு அனுஷ்டிக்கபப்ட்டதாயினும் பகவத் கதைகளில் ஆர்வம் உண்டாகவில்லையேல் அது வீண் ஸ்ரமமே ஆகும்.

நான்கு புருஷார்த்தங்களில் தர்மம் என்பது மோக்ஷத்தின் பொருட்டே அனுஷ்டிக்கப்பட வேண்டும், காமத்திற்காக அல்ல. அதாவது பலனைக் குறித்து செய்யப்படும் தர்ம காரியங்கள் மோக்ஷத்திற்கு விலக்கானவை.

அதேபோல அர்த்தம் (பொருள் ஈட்டுவது) என்னும் புருஷார்த்தம் தர்மத்தின் பொருட்டே இருக்கவேண்டும். காமத்தின் பொருட்டல்ல.
அப்படி என்றால் காமம் என்ற புருஷார்த்தம் எதைக் குறிகிறது என்ற கேள்வி எழும். அதற்கு சூதர் விடை கூறுகிறார்.

தஸ்மாத் ஐகேன மனஸா பகவான் ஸாத்வதாம் பதி:
ச்ரோதவ்ய: கீர்த்திதவ்ய;ச த்யேய:பூஜ்ய: ச நித்யதா 
வேறு எந்த ஆசைகளும் இன்றி ஒருமனப்பட்ட எண்ணத்துடன் பக்தர்களின் பதியான பகவானை ச்ரவணம் , கீர்த்தனம் , தியானம் பூஜை இவைகளால் ஆராதிக்க வேண்டும்.

ஆகவே எல்லா தர்மங்களும் பகவத் ப்ரீதிக்காகவே செய்யப்படவேண்டும் .

பகவத்கதைகளில் ஆர்வம் எப்படி உண்டாகும்? 
புனிதமான இடங்களுக்குச் செல்வதால் மகான்களின் தரிசனம் கிட்டும். அவர்களின் உபதேசங்களையும் ப்ரவசனங்களையும் கேட்பதால் பகவத் கதைகளில் ஆர்வமும் பகவானிடத்தில் பக்தியும் உண்டாகும். தன் கதையைக் கேட்பவர்களின் இதயத்தில் பகவான புகுந்து அங்கு உள்ள கேட்ட வாசனையைப் போக்கி விடுகிறான்.

பித்யதே ஹ்ருதயக்ரந்தி: ச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா:
க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவ ஆத்மனி ஈச்வரே (பாக. 2.21)

'பித்யதே ஹ்ருதயக்ரந்தி: ச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா:
க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே ,' என்பது உபநிஷத் வாக்கியம்..
இதன் பொருள், பகவானை மனதில் கண்டுவிட்டால் இருதயத்தில் உள்ள முடிச்சுக்கள் அவிழ்கின்றன . எல்லா சந்தேகங்களும் போய் விடுகின்றன. எல்லா கர்மங்களும் நசித்து விடுகின்றன.,

இதயத்தில் முடிச்சு என்பது இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் கர்ம வாசனைகள். அதனால் பல சந்தேகங்கள்,(இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பது உள்பட) எழுகின்றன. அந்த இறைவனே நம் உள்ளத்தில் குடிகொண்டுவிட்டால் நம் கர்மங்களே நசித்துவிடுகின்றன,பிறகு ஏது சந்தேகமும் இடையூறுகளும்?

அடுத்து அவதாரங்களைப்பற்றி கூறுகிறார் .


No comments:

Post a Comment