Monday, August 20, 2018

Srimad bhagavatam skanda 1 adhyaya 16/17 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

ஸ்ரீமத்கபாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 16/17

அத்தியாயம் 16. 
பரீக்ஷித் அரசாண்டபோது சப்தத்வீபங்களையும் ஜெயித்து தன் ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தான். ( இந்த த்வீபங்களைப்பற்றி விரிவாக பின்னொரு ஸ்கந்தத்தில் காணலாம்.

அவன் தன் முன்னோர்களையும் கிருஷ்ணனையும் பற்றி அறிந்து தீவிர கிருஷ்ணா பக்தனாக ஆனான். .ஒரு சமயம் அவன் குருக்ஷேத்ரம் சென்றபோது ஒரு அதிசயத்தைக் கண்டான்.

அத்தியாயம் 17
பரீக்ஷித் ஒரு பசுவும் ஒரு காளைமாடும் நிற்பதைக்க்கண்டான். அந்த காளைமாட்டுக்கு ஒரு கால் மட்டுமே இருந்தது. அந்தப்பசு கன்றை இழந்து கண்ணீர் பெருக நின்றது. அங்கு ஒரு மனிதன் ராஜ உடையுடன் காளையை அடித்துக்கொண்டும் பசுவை உதைத்துக்கொண்டும் இருந்தான்.

அந்த காளை மாடுதான் தர்மம் . அந்தப் பசுதான் பூமி. அந்த மனிதன்தான் கலிபுருஷன். கண்ணபிரான் சென்றுவிட்டதை நினைந்தும் தர்மமாகிற காளை தன் கால்களை இழந்தது பற்றியும் கலிபுருஷன் உலகை ஆக்ரமித்ததால் வரகூடும் கேடுகளைப் பற்றியும் வருந்தி பூமியாகிற பசு கண்ணீர் விட்டு அழுதது.

அப்போது அங்கு வந்த பரீக்ஷித் அந்த பிராணிகளை துன்புறுத்தும் மனிதனைக்கண்டு அவனைக் கொன்று விடுவதாக மிரட்டினான். அந்தப் பசுவும் காளையும் சாதாரண மிருகங்கள் அல்ல என்று உணர்ந்து அவைகளை நீங்கள் யார் ,உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினது யார் என்று கேட்க,

காளை வடிவத்தில் இருந்த தர்மம் கூறிற்று. 
"எங்களுக்கு இந்த நிலையின் காரணம் புரியவில்லை.

கேசித் விகல்பவாஸனா ஆஹு: ஆத்மானம் ஆத்மன: 
தைவம் அன்யே பரே கர்மஸ்வபாவம் அபரே ப்ரபும் 
அப்ரதர்க்யாத் அனிர்தேச்யாத் கேஷ்வபி நிஸ்சய: 
அத்ரானுரூபம் ராஜர்ஷே விமர்ச ஸ்வமநீஷயா

இதன் பொருள். 
விகல்பவாஸனா கேசித் – விகல்பம் பேசும் சிலர் 
ஆத்மானம் ஆத்மனா- தம் நிலைக்குத் தாமே காரணம் என்கின்றனர். 
அன்யே தைவம்- இன்னும் சிலர் விதியே காரணம் என்கின்றனர். 
பரே கர்மஸ்வபாவம் – இன்னும் சிலர் கர்மாவினால் ஏற்பட்டது என்கின்றனர். 
அப்ரே ப்ரபும்- மற்றவர் இறைவனே காரணம் என்கின்றனர். 
அப்ரதர்க்யாத் – ஊகிக்க முடியாததும் 
அனிர்தேச்யாத் –விவரம் கூற முடியாததுமான ஏதோ ஒன்றுதான் காரணம் என்பது
கேஷ்வபி – இன்னும் சிலரின்
நிஸ்சய: - கருத்து. 
ராஜ்ர்ஷே – ராஜரிஷியே 
அத்ர- இதில் 
அனுரூபம் – பொருத்தமானதை 
ஸ்வமநீஷயா – உங்கள் அறிவினால் 
விமர்ச- ஆராய்ந்து கொள்ளுங்கள்."

இங்கு வேதாந்தம், நியாயம் சார்வாகம், மீமாம்சம், சாங்க்யம் ஆகியவற்றின் கொள்கைகள் குறிப்பிடப்படுகின்றன.

.இந்த வார்த்தைகளில் இருந்து பரீக்ஷித் பேசினது தர்ம தேவதையே என்று உணர்ந்தான். ( வ்ருஷ என்றால் தர்மம் என்றும் ஒரு பொருள். )

பரீக்ஷித் கூறியது. 
" தவம், தூய்மை ,, தயை, சத்யம் என்ற நான்கு கால்கள் உனக்கு க்ருதயுகத்தில் இருந்தன. தவம் அகந்தையாலும், தூய்மை பற்றினாலும் , தயை ஆசையினாலும் அழிக்கப்பட்டுவிட்டன., இப்போது சத்யம் என்ற ஒரே பாதத்துடன் இருக்கிறாய். இந்த கலிபுருஷன் அதையும் அழிக்க விரும்புகிறான். இந்தப்பசுவாகிய பூமி கண்ணன் மறைவிற்குப்பிறகு ஆதரிப்பார் இல்லாமல் கண்ணீர் விடுகிறது.

அதர்மத்தின் உருவாகிய இந்த கலியை நான் அழிப்பேன் என்று வாளை ஓங்கினான். கலி புருஷன் காலில் வீழ்ந்து மன்னிகஆம்படி வேண்ட பரீக்ஷித் வேள்வியால் பகவானை ஆராதிக்கும் பிரம்மவர்தமாகிய இந்த உலகத்தில் இருக்ககூடாது என்று கூற கலிபுருஷன் தான் வசிக்க ஒரு இடத்தைக் குறிப்பிடுமாறு வேண்ட பரீக்ஷித் , சூது குடி, வ்யபிசாரம் கொலை இவை எந்குள்ளதோ அங்கு காலியானவன் வசிக்கலாம் என்று கூறினான்.

இன்னும் ஒரு இடத்தை கலி வேண்ட பரீக்ஷித் அவனுக்கு பொன்னை இருப்பிடமாக அளித்தான் . கலி புருஷன் மகிழ்ச்சி அடைந்தான் அதிலிருந்துதான் எல்லா தீமைகளும் தொடங்கின .ஏனென்றால் பொன்னாசைதான் மற்ற நான்கு தீமைகளுக்கும் வழி வகுக்கிறது. பணத்தின்மேல் ஆசை இயலாதவர் எந்த தீயவழிக்கும் போக மாட்டார்.

கலிபுருஷன் யுக தர்மப்படி அவன் கடமையை செய்வதால் அவனை கொல்லாமல் விட்ட பரீக்ஷித்திடம் கலியானவன் பிற்காலத்தில் அவனுடைய சேஷ்டையைக் காண்பிக்க அதன் விளைவாக பிராம்மண சாபம் அடைந்து ஸ்ரவசங்க பரித்யாகம் செய்து சுகரால் பாகவத் உபதேசம் பெற்று கங்கைக்கரையில் உயிர் நீத்தான்..

பாகாவதம் கூறுகிறது.
நானுத்வேஷ்டி கலிம் சம்ராட் ஸாரங்க இவ ஸாரபுக்
குசலானி ஆசு ஸித்யந்தி நேதராணி க்ருதானி யத். 
சமராட்- ராஜாவான பரீக்ஷித்
கலிம்- கலியை 
ஸாரபுக்- பூவில் உள்ள தேனை க்ரஹிக்கும் 
ஸாரங்க இவ- தேனியைப்போல ( கலியிடம் உள்ள ஒரு நல்ல குணத்தினால்) 
ந அனுத்வேஷ்டி- பகைக்கவில்லை. அது என்னவென்றால் கலியுகத்தில் 
குசலானி க்ருதானி - நல்ல செயல்கள்
ஆசு – உடனே ( எண்ணிய மாத்திரத்திலேயே)
ஸித்யந்தி -பலனளிக்கின்றன 
ந இதராணி- மற்றவை அப்படி அல்ல. ( செய்தபிறகே பயன். ) 
அதாவது நாம் நல்லதை எண்ணினாலே புண்ணியம் என்று பொருள்.

கலி ஸாது என்று ஒரு வாக்கியம் இருக்கிறது. ஏனென்றால் மற்ற யுகங்களில் பகவானை அடைய தவம் யோகம் போன்ற கடினமான வழிகள் இந்த யுகத்தில் இல்லை . நாமசங்கீர்த்தனமே போதும்.,




No comments:

Post a Comment