Tuesday, August 14, 2018

Kasi kumbhabishekam

மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !!!
இந்தக் கலியுகத்தில் ஆஞ்சநேயப் பெருமான் 
செய்த மகா அற்புதம். !!!!
உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான்.
கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.
இந்தியாவில் மத்திய ப்ரதேசத்தில் இருக்கின்ற ரத்தலம் என்ற ஊரிலே உள்ள காளிகா மாதா கோவிலிலே நடந்த அற்புதம் இது.
ஒரு முறை (ஏப்ரில் 2011) ல் , மகான் ஒருவர் ஸ்ரீ ராமாயண சரித்திரத்தை இக்கோயிலில் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். .
அப்போது, அங்கு ஒரு வெண்குரங்கு வந்தது .
முதலில், அங்கு, பாடிய பாடகர்களின், பாடலைக் கேட்டது. !!!
பின், அக்குரங்கு, ஸ்ரீ ராமன் புகழ் பாடிய மகானின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது.
இக் காட்சியை கண்டு அங்குள்லவர்கள் பரவசமடைந்தனர்.
பிறகு , அவ்வெண்குரங்கு, ஸ்ரீ ராமன் புகழ் பாடிய மகானை கட்டித்தழுவியது.!!!
இதன் பின், அக்குரங்கு, மேடையில் வைக்கப்பட்டிருந்த படத்தில், பவித்திரமாகிய ஸ்ரீ ராமனுடைய பாதங்களை பூஜித்தது. !!!!
இந்தியா முழுவதும் வெண்குரங்குகள் , ஆஞ்சனேயர் ஸ்வாமியின் அவதாரமாக கருதப்படுவதால், அங்கு கூடியிருந்த வர்கள், ஆஞனேயர் ஸ்வாமியே அங்கு வந்து எல்லோரையும் அனுக்ரஹித்ததாகக் கருதி பக்திப் பரவசமடைந்தனர்.
உருகி நின்று ஸ்ரீ ராமன் புகழை கேட்கின்ற காட்சி, .
ஸ்ரீ ராமன் புகழ் பாடிய மகானை ஆசீர்வதிக்கின்ற காட்சி
ஸ்ரீ ராமன் புகழ் பாடிய மகானை கட்டித்தழுவுகின்ற காட்சி
பவித்திரமாகிய ஸ்ரீ ராமனுடைய பாதங்களை பூஜிக்கின்ற காட்சி ஆகியவைகளைப் பாருங்கள் !!!!
கண்டு களித்து ராமன் புகழையும், ஆஞனேயர் புகழையும் பாடி மகிழுங்கள்.
எங்கெல்லாம் ஸ்ரீ ராமன் புகழ் பாடப் படுகின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயப் பெருமான் உருகி நின்று கேட்பார் என்பதற்கு இதைவிடஆதாரம் வேண்டுமா?

No comments:

Post a Comment