POWER OF CHANTING LALITHA SAHASRANAMA !!!
ஒரு பக்தர் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது கண்களில் கண்ணீர் மல்கியது.
"என்னாச்சு?...." சிஸுவின் வேதனைக்கு வடிகாலாக, தாயின் குரல் கேட்டதும், அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டார்.
"பெரியவாதான் எங்களைக் காப்பாத்தணும்! ஆத்துல நிம்மதியா இருக்க முடியலே...பீரோவுல வெக்கற பணம், நகை எல்லாம் எப்டியோ காணாமப் போய்டறது..யாரும் வந்து திருடிண்டும் போகலே; உள்ள இருக்கற வேஷ்டி, பொடவை, காயப் போட்ட துணிமணில்லாம் கண்டபடி கிழிஞ்சு போறது! எல்லாம் ஏதோ துர்சக்தி பண்ற வேலையாத்தான் தெரியறது....மாந்த்ரீகன் ஒர்த்தன்ட்ட போனோம். என்னமோ பரிஹாரம் சொன்னான்...பண்ணியும் ப்ரயோஜனமில்லே ! நாளுக்கு நாள் இன்னும் ஜாஸ்தியாத்தான் ஆறது....காப்பாத்துங்கோ!..." என்று அழுதார்.
மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவா. சற்று தொலைவில் ஒரு பாரிஷதர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கே உரித்தான கைச்சொடுக்கு, அவரை மேற்கொண்டு பாராயணம் பண்ண விடாமல் நிறுத்தியது. அழுது கொண்டு நின்ற பக்தரிடம்,
"போ! போயி அவன் என்ன ஸ்லோகம் படிக்கறான்னு கேளு. நீயும் அந்த ஸ்லோகத்தை ஆயிரந்தடவை ஜபம் பண்ணு!..."
ஓடிப்போய் அந்த பாரிஷதரிடம் "நீங்க பாராயணம் பண்றது என்ன ஸ்லோகம்?..."
"லலிதா ஸஹஸ்ரநாமம்"..
வீட்டுக்குப் போன கையோடு கணவனும் மனைவியுமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றி வைத்து விட்டு, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார்கள். அதி ஆச்சர்யமாக, பீரோவில் காணாமல் போகும் பணம், நகை, கிழிந்து போகும் துணிமணி போன்ற துர் உபாதைகள் சுத்தமாக நின்றே போனது!
"லலிதா ஸஹஸ்ரநாமத்தோட ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அபாரமான மஹிமை உண்டு." என்று பெரியவா சொன்னார். எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ "உரு ஏறத் திரு ஏறும்" என்பதால், பண்ணப் பண்ண அதன் பலன் கைகூடும். "fast track" பலன் உண்டாக, "இதை ஜபம் பண்ணு!" என்று லலிதாம்பிகையே [பெரியவா] சொன்னால், அது உடனே பலனைக் குடுக்கும்.
ஒருமுறை ஒரு குதர்க்கி பெரியவாளிடம் ரொம்ப புத்திசாலித்தனமாக, பெரியவாளையே மடக்குவதாக நினைத்துக் கொண்டு ஒரு கேள்வி கேட்டார்.
"லலிதா ஸஹஸ்ரநாமத்ல, "ஆப்ரஹ்ம கீட ஜனனி" [ப்ரஹ்மா முதற்கொண்டு புழு பூச்சி வரை, எல்லாருக்கும் தாயானவள்] ன்னு வருதே, அப்டீன்னா, மனுஷாள்ள ஏன் அவன் ஒசந்தவன், இவன் தாழ்ந்தவன்..ன்னு பாகுபாடு?" என்று கேட்டார்.
பெரியவா நிதானமாக அவருக்கு ஒரே வரியில் பதில் சொன்னார்.......
"அடுத்தாப்ல, "வர்ணாஸ்ரம விதாயினி" [வர்ணாஸ்ரம தர்மங்களை வகுத்தவள்] ன்னு சொல்லியிருக்கே!.."
குதர்க்கியின் முகம் மறைந்து கொள்ள இடமில்லாமல் தவித்தது.
No comments:
Post a Comment