Thursday, July 5, 2018

Viswanathar temple- thevara vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி*
_______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக.....‌.............)
_____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்:21*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*விசுவநாதர் திருக்கோயில், இறையான்சேரி, (இரவாஞ்சேரி.)*
_____________________________________
*🌙இறைவன்:* விசுவநாதர்.

*💥இறைவி:* விசாலாட்சி.

இத்தேவார வைப்புத் தலமான
இறையான்சேரியை, தற்போது இரவாஞ்சேரி என அழைத்து வருகின்றனர்.

*📖தேவார வைப்புத்தலப் பாடல் உரைத்தவர்:* அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், நான்காவது பாடலில் கூறியுள்ளார்.

*🛣இருப்பிடம்:*
திருவாரூர் - கீவளூர் (கீழ் வேளூர்) சாலையில் சென்று, நீலப்பாடி என்ற ஊரை அடைந்து, இடப்புறமாக திரும்பினால், மூன்று கி.மி. தொலைவில், தபால் ஆபீசும், மாரியம்மன் கோயிலும் இருக்கும்.

இந்த இடத்திலிருந்து வலப்புறம் செல்லும் சாலையில் சென்றால், (எ)இரவாஞ்சேரியை அடையலாம்.

அக்காலத்தில் *இறையவன் சேரி* என வழங்கப்பட்டு தற்ப்போது எரவாஞ்சேரி எனப்படுகிறது.

*கோயில் அமைப்பு:*
இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது.

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின்
கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.


இவ்வூரின் மையத்தில் உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன், பெருமாள் கோயில்கள் இரண்டுக்கும் நடுவில் துர்க்கை கோயில் பெரியதாய் அமைந்துள்ளது.

இது போன்றதொரு அமைப்பு வேறு ஊர்களில் காண இயலாது.

எரவாஞ்சேரி எனும் பெயர் கொண்ட ஊர்கள் பல அமைந்துள்ளன என்றாலும் ஆதி சக்தி எனப்படும் துர்க்கை கோயிலின் இருபுறமும் மாலும், சிவனும் இருப்பது சிறப்பு.

இறைவன் சந்திரசேகரர் இறைவி பார்வதி இருவரும் கிழக்கு நோக்கி தனி கருவறைகளில் அருள் தருவதனை தரிசிக்கலாம். 

வலத்தில், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரும் கிழக்கு நோக்கிய சிற்றாலயங்களில் இருக்கின்றனர்.

இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் சண்டேசர் வடகிழக்கில் இருந்தருளுகிறார்.

மேற்கு நோக்கிய தனி மண்டபத்தில் ஒரு லிங்கம் அம்பிகை, பைரவர், சனி ஆகியோர் உள்ளனர்.

வளாகத்தின் தென் புறத்தில் சிறிய பெருமாள் கோயிலும் அதை ஒட்டி அனுமன் சன்னதியும் உள்ளன. 

பெரிய விமானத்துடன் துர்க்கை ஆலயம், கையில் சங்கு சக்கரம் கொண்டு இருக்கும் விஷ்ணு துர்க்கை வடிவம் கொண்டவளின் சன்னதி உள்ளது.

அனைத்து விழாக்களும் மக்களின் பங்களிப்போடு நடைபெறுகிறது.

கோயிலின் பின்னால் பெரிய தாமரை குளம் உள்ளது.

இதற்கு பெருமாள் குளம் என பெயர் இதில் இறப்புக்கு நீர் எடுத்துச் செல்வர். ஆனால், இறப்பு சடங்கு முடித்து இங்கு குளிக்க மாட்டார்கள்.

தெற்கில் சிவன் குளம் இருக்கிறது. இதில் நீர் எடுக்க மாட்டார்கள். ஆனால், சடங்கு முடித்து குளிக்கிறார்கள்.

*சிறப்பு:*
கருவறையில் குட்டையான மிகச் சிறிய சிவலிங்க பாணத்துடன் ஈசன் அருளாட்சி தருகிறார்.

இத்தேவார வைப்புத் தலம், விஸ்வநாதர் ஆலயம், விசாலாட்சி சமேதராய் அப்பர் பெருமானின் ஷேத்திரத் திருத்தாண்டகத்தில் இடம் பெற்றுள்ளது.

இக்கோயிலைக் கவணித்துக் கொள்ளும் குருக்கள், கீவளூருக்கு மேற்கே, ஐந்து கி.மி. தொலைவில் சிதம்பரேஸ்வர் கோயிலையும் சேர்த்துக் கவணித்து வருகிறார்.

*பூசைகள்:*
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடந்து வருகின்றது.

குருக்கள், குறுமணாங்குடியிலிருந்து வருகிறார்.

அத்திப்புலியூர்த் தலத்தையும் இவர் கவணித்து வருவதால், தொடர்பு கொண்டு தரிசிக்கச் செல்லவும்.

*தொடர்புக்கு:*
ஜீ.சட்டநாத குருக்கள்.
97519 40321
04366- 276184

            திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment