Monday, July 9, 2018

Mahakaleswarar temple -thevara Vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு.கருப்பசாமி.*
_____________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக............)
___________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்: 23*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*மகாகாளேஸ்வரர் திருக்கோவில், உஞ்சேனை மாகாளம் (உஜ்ஜயினி):*

தற்போது, உஜ்ஜயினி என்று அழைக்கப்படுகிறது.

*🌙இறைவன்:* மகாகாளேஸ்வரர்.

*💥இறைவி:* சங்கரி, ஹரசித்திதேவி.

*📖தேவார பதிகம் உரைத்தவர்:*
அப்போது.

ஆறாம் திருமுறையில்,எழுபதாவது பதிகத்தில், எட்டாவது பாடலில் இந்த வைப்புத் தல குறிப்பு உள்ளது.

*🛣இருப்பிடம்:*
சென்னை புதுடில்லி ரயில் பாதையில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள போபால் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் 170 கி.மீ. தொலைவில் சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் உஜ்ஜயினி அமைந்துள்ளது.

சென்னையில் இருந்து சுமார் 1300 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில்,
உஜ்ஜயினி,
உஜ்ஜயினி அஞ்சல்,
உஜ்ஜயினி வட்டம்,
உஜ்ஜயினி மாவட்டம், மத்தியப் பிரதேசம்,
PIN - 456 001

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 4.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் தொடர்ச்சியாக திறந்திருக்கும். பகலில் கோயில் அடைக்கப்படுவதில்லை.

*☎தொடர்புக்கு:*
ஆலய அட்மினிஸ்டேரர்.
0734- 2557725
0734- 2515844
0734- 2550444
0942509314

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில்
உருத்திரகோடி, பொதியமலை, தஞ்சை, மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், கஞ்சாறு, வெற்றியூர், பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

உஞ்சேனை மாகாளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த போது அருளிச் செய்ததாகும்.

🔔உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைக்காட்டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

🙏உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம். 

*தலப் பெருமை:*
இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன.

அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம், மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம்.

இவற்றில் உஜ்ஜயனி மாகாளம் ஒரு தேவார வைப்புத் தலம். மற்ற இரண்டும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களாகும்.

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களுள் உஜ்ஜயினியும் ஒன்று.

இத்தலத்தின் இறைவன் மகாகாளேஸ்வரர். அம்பாளின் சக்தி பீடங்களில் முழங்கை விழுந்த இடமான இது *மகோத்பலா பீடம்* ஆகும்.

உஜ்ஜயனி இந்திய நாட்டில் பழங்காலத்திலிருந்தே மிகவும் புகழ் பெற்ற ஒரு நகரமாகும்.

புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம்.

தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் உஜ்ஜயினியும் ஒன்று.

துவாபர யுகத்தில் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் பாடம் கற்றதாக வரலாறு.

முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிரமாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் உஜ்ஜயினி விளங்கியது.

விக்கிரமாதித்தனும், அவனது மந்திரி பட்டியும் உஜ்ஜயினி காளியிடம் வரம் பெற்று சாகசங்கள் பல புரிந்தனர்.

நாடாறு மாதம், காடாறு மாதம் என்று இரண்டாயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரிந்த தலம்.

விக்கிரமாதித்தராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.

உஜ்ஜயினியில் மகாகாளர் கோயில் இருப்பது போலவே, மகாகாளி கோயிலும் சிப்ர நதிக்கரையில் உள்ளது.

இக்காளி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது.

விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், இரண்டாயிரம் வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன.

இந்த மகா காளிக்கு *ஹரசித்திதேவி* என்ற வேறு பெயரும் உண்டு.

முக்தி தரும் ஷேத்திரம் ஏழில் இதுவும் ஒன்று. (அவந்திகா)

பூமிக்கு அடியில் குகைக்குள் மகாகாளேஸ்வரர்.

மேல்மட்டத்தில் ஓங்காரேஸ்வரர்.

மூன்றாவதாக, தாரகேஸ்வரர்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா வைபவம் நடைபெறுகிறது.

சிதாபஸ்மம் என்னும் மயானச் சாம்பல் இறைவனுக்குச் சாற்றப்படுகிறது.

ஆதிசங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்த சித்ரா நதிக்கரையில் அமைந்துள்ள தலம்.

இங்கு விக்ரமாதித்தன் ஆண்ட பழைய கோட்டை பாழடைந்த விலையில் இங்கிருக்கிறது.

          திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment