சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_________________________________
🔔 *பகல் கனவு பலித்து விட்டது!*🔔
__________________________________
கடம் வித்வான் விநாயக் ராம் அவர்களை எல்லோரும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
இவர் பத்மபூஷண் விருதை பெற்றிருக்கிறார்.
கலைமாமணி டி.ஆர் ஹரிசர்மாவின் புதல்வருமாவார்.
கலையின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால், பலரும் பார்க்கக் கூடும் மேடைகளில் ஏறி, தனது பதின்மூன்றாவது வயதிலேயே கடம் வாசிக்க ஆரம்பித்தார்.
கடம் வாசிக்கும் கலையின் மீது, இவருக்கு தெய்வத்திற்கு இணையான பக்தியைக் கொண்டிருந்தார்.
இவரது கலையின் வாசிப்பைக் கேட்டு மெய்மறந்து போவர்கள் எண்ணில்லாதோர். நம் செவிக்கு அவ்வளவு இனிமையைக் கொண்டு வந்து தந்து, ஒரு வித கிரக்கத்தை மனதிற்கு ஏற்படுத்தக் கூடிய, ஆற்றல் இவருக்கு உண்டு என்றால் மிகையில்லை.
இதனாலேயே, கிரேக்க நாட்டின் தலைநகரமான ஏதென்சில் உள்ள மக்கள்கூட, இவரின் கடம் வாசிப்பைக் கேட்டு மயங்கிப் போயிருந்தவர்கள் ஏராளமானோர்.
இதன் காரணமாய், ஏதென்சி இசைப் பிரியர்களால், அங்கேயே பிரமாண்டமான கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.
கடல் கடந்து சென்று, தன் இசையை ரசிக்கும் ஆர்வலர்களை எண்ணி பெருமிதம் கொண்ட விநாயக்ராம், நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டு தேதியும் கொடுத்தார்.
தன்னுடைய இணை வாசிப்புக்கு, வயலின் வித்வாரான எல்.சுப்பிரமணியம் அவர்களையும், தபேலா வித்வாரான ஜாகீர் உசேன் அவர்களையும், மற்றும் உதவியாளர்கள் சூழ ஏதென்ஸ் நகரம் சென்றார்.
விமாணப் பயணம் முடிந்து, ஓய்வறையின் கூடிய ஹோட்டல் ஒன்றில் ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தங்கினார்.
சிறுது ஓய்வு எடுத்துக் கொண்ட விநாயக்ராம், கச்சேரிக்காக சிறு ஒத்திகை செய்யலாமென்று கடம் வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தார்.
அவ்வளவுதான்!
மனம் உடைந்து போனார்!
கடம் வாசிக்கும் பானை உடைந்து சிதறிச் சில்லாகி இருந்தது பெட்டியில். கடம் உடைந்திருந்த நிலையைக் கண்டு, மனம் உடைந்து போனார் விநாயக்ராம்.
கடம்தானே உடைந்திருக்கிறது! இதற்குப்போய் மனம் உடைய வேண்டுமா?' என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
இங்கு இதை நீங்கள் வாசிக்கும் போது, இப்படித்தான் உங்களுக்கும் உணர்வுகள் ஏற்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
இது சராசரி மனிதனின் மனதிற்கு ஏற்படக்கூடிய இயல்பே!.
ஆனால், விநாயக்ராமின் மனம் உடைந்து போனதற்கு காரணம் அதுவல்ல!, கடம் உடைந்து போனதே என்பதைவிட, கச்சேரி வாசிக்க கடத்திற்கு என்ன செய்வது? என்பதனை நினைத்துத்தான் அவர் மனம் உடைந்து போனார்.
ஏதென்சி நகரத்தில் கடம் எல்லாம் கிடைக்காது, அங்கெல்லாம் கடம் வித்வான் கிடையாது! (அது அப்போ, இப்போது எப்படியோ) கடம் நம் தமிழ்நாட்டில்தான் கடம் புணைவிக்கப் படுகிறது.
நாளை கச்சேரி. இன்று கையில் கடம் இல்லை. யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது அவருக்கு.
உடனே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மனைவியிடம் பேசினார்.
மனைவியிடம் விசயத்தை கூறியதால், மனதிலுள்ள கணத்தை கொஞ்சம் குறைத்த மாதிரி இருந்தது அவருக்கு. ஆனால் கடத்தின் மீதிருந்த கவலை மனதைப் பிசைந்துதான் கொண்டிருந்தது.
தன் கணவரின் நிலையைக் கேட்ட மனைவி.....அவருக்கு ஆறுதலாக பேசினாள். கவலை கொள்ளாதீர்கள். எல்லாம் அந்த ஈசன் வேலையாகத்தானிருக்கும்.
அவனே எல்லாத்தையும் பார்த்துக்குவான். நீங்கள் கச்சேரி செய்யும் முனைப்புடனேயே இருங்கள், நானும் காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் சென்று முறையிட்டு வருகிறேன்.
நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் இருங்கள்! என்று கூறி, தொலைபேசியைத் துண்டித்து விட்டு, காமாட்சி அம்மனைத் தரிசிக்க சென்று விட்டாள் விநாயக் ராமின் மனைவி.
அன்று காமாட்சியம்மன் திருக்கோயிலில் ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டம் இருந்தது. உள் புகவே முடியவில்லை அவ்வளவு நெரிசல்.
இருப்பினும் கணவரின் இக்கட்டான நிலையை எண்ணி, கூட்டத்தில் நின்றிருந்து தியாணித்தபடியே இருந்தாள்.
நெடிய நேரத்திற்குப் பின், மனவேண்டுதலை காமாட்சியிடம் சமர்பித்து, தரிசனம் செய்து பிரசாதத்துடன் இல்லம் திரும்பியவள்....
வந்த களைப்பில் அப்படியே சாய்வு இருக்கையில் அமர்ந்த வண்ணம் தூங்கிப் போனாள்.
தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. அதுவும் பகல் கனவு. திடீரென்று எழுந்து அதிர்ந்து, பகல் கனவு பலிக்குமா? என பரபரப்புடனே எழுந்தோடி சென்று கணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.
கணவரிடம் தொலைபேசியில்,.....நம் ரசிகர்களிடம் விசயத்தை கொண்டு சொல்லுங்கள், கடத்திற்கு வழி கிடைக்கும் என்று தனக்கு கனவு வந்ததாகவும், ரசிகர்கள் மூலமாக கடத்திற்கு விடிவு கிடைக்கும் என்றும் தாம் கண்ட கனவை கூறினாள் கணவனிடம்.
நாளை நடக்கப் போகும் கச்சேரிக்காக விநாயக்ராமின் ரசிகர்கள் பலர், ஏற்கனவே விடுதி முன்பு கூடி அவரைக்காண கூடியிருந்தனர்.
மேலும் ரசிகர்கள் பலர், இன்றே ஓய்வு விடுதி முன்பு வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் வந்த விநாயக்ராமின் உதவியாளர்...... நாங்கள் கொண்டு வந்திருந்த கடம் உடைந்திருக்கிறது. வேறு கடம் கிடைக்க வழியிருக்கா பாருங்கள் என்றார்.
அவ்வளவுதான் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு திசையாக விசாரிக்க ஓடிப் போனார்கள்.
கொஞ்ச நேரத்தில் ஓய்வு விடுதிக்கு, கடத்துடன் வந்து சேர்ந்தனர் ரசிகர்கள் சிலர்.
ஏதேன்சில் கடம் எப்படி கிடைத்தது?, என வியந்து ரசிகர்களிடத்தில் கேட்டார் விநாயக்ராம்.
எங்கள் பகுதியில் ஒருவரிடம் கடம் இருப்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்!, கடம் உடைந்து விட்டது என்று நீங்கள் சொன்னதும், எங்கள் பகுதியில் கடம் வைத்திருந்த அவரின் ஞாபகந்தான் முதலில் வந்தது.
எனவே அவரிடம் சென்று விசயத்தைப் கூறி கடத்தைக் கேட்டோம்.
அதற்கு அவர், நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, ஒரு வித்வானிடமிருந்து கேட்டு வாங்கி வந்தது இது.
இந்தக் கடத்தை அவர் ஞாபகமாக பாதுகாத்து வருகிறேன். ஆதலால் இதனைத் தர இயலாது என கூறிவிட்டார் என்றார்கள்.
பிறகு எப்படி கடம் கிடைத்தது?....
கச்சேரி செய்பவர் யாரென்று தெரிந்தால் நீங்களே கடத்தை கொடுத்து விடுவீர்கள் என்று நாங்கள் அவரிடம் கூறினோம்.
அதற்கு அவர்,...கச்சேரி செய்யும் அந்த வித்வான் யார் என்றார்.
நீங்கள் யாரிடம் பரிசாக பெற்றீர்களோ? அவர்தான் இங்கு நாளை கச்சேரி செய்யப் போகிறார் என்றோம்.
அவ்வளவுதான்...கடத்தை பத்திரமாக எடுத்துச் செல்ல தனது காரையும் கொடுத்தனுப்பி, இதில் பத்திரமாக எடுத்துப் போய் அவரிடம் சேர்த்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார் என்றார்கள்.
எப்போதோ, யாருக்கோ, கொடுத்த கடம், தக்க நேரத்தில் தனக்கு வந்து சேர்ந்த அதிசயத்தை நினைத்து, விநாயக்ராமின் விழிகளில் கண்ணீர் ஒழுக நின்றபடி திரண்டு இருந்தது.
அந்தக் கண்ணீர்த் துளிகளில் காமாட்சியம்மனின் திருமேனித் திருவுருங்கள் நிழலாடியது.
பகல் கனவு பலித்து விட்டது!
நல்ல எண்ணத்துடன் நாம் செய்யும் செயல் யாவும், அது கடைசியில் நல்ல பலனைத்தான் கொண்டு வந்து தரும்.
அதுவும், ஈசனுக்கென்று தொண்டைச் செய்துவிட்டால், நாம் நிம்மதியைத் தொலைக்க வேண்டியதே வராது.
எமன்கூட துர்மரணத்திற்கு வர அனுகமாட்டான். நமக்குக் கிடைத்த இப்பிறப்பை, தொண்டுகள் உதவிகள் உபயங்கள் என பல செய்து, புண்ணியத்தை சேர்த்து வைத்து, பிறவாநிலையைப் பெற முயல்வோமாக!
ஒரு ரசிகன் ஒரு வித்வானிடம் கடம் கேட்கிறானென்றால்,.... அந்த ரசிகர் மீதும், கலையின் மீதும் எவ்வளவு மரியாதையும் பக்தியும் வைத்திருந்தால், விநாயக்ராம் கடத்தை கொடுத்திருப்பார்.
கேட்டோர்க்கெல்லாம் கொடுத்துவிட விநாயக்ராம் என்ன கடம் வியாபாரியா?
நல்வினை நினைப்பயனை அவர் நினைத்தனால்தான், அவருக்கு, பின்விளைவுக்கு நற்பேறு கிடைக்கச் செய்தது.
விநாயக்ராமின் மனைவியார் காமாட்சியம்மன் முன்பு வேண்டுதல் வைத்தாரே!, என் கணவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று.
அவ்வாறு அவர் வேண்டுதலுக்காக மட்டும் இறைவன் கடத்தை கிடைக்கச் செய்யவில்லை. ஈசன்மீதும், அடியார்கள் மீதும் அந்த அம்மையார் கொண்டிருந்த தொண்டுதான் ஏதேன்சி நகரத்தில் கடம் கிடைக்கச் செய்தது. இறைவன் இந்த கலியில் மறைந்திருந்துதான் அருளுவான்.
இறைவன் அப்போதைக்கு அப்போதே கணக்கிற்கு ஐந்தொகை போட்டு வைத்து விடுவான்.
தமிழ்நாட்டில் எப்போதோ கொடுத்த கடம்------, *இது முன் நல்வினை.*
எவ்வளவோ காலம் கழிந்து, ஏதென்சில் கடம் கிடைக்கிறது-----, *இது எதிர் நல்வினை.*
முன் நல்வினை செய்யின், பின் எதிர்வினை நல்லதே நல்கும்!,
இதைத்தான்.....முற்பகல் செய்யின், பிற்பகல் தானாகும் என்பது இதுதான்.
முன் நல்வினை செய்யாதார்க்கு, எதிர்வினை பிறவு நிலையைத்தான் திரும்பத் தரும்.
மறுபடி பிறப்பு,..... மறுபடி இறப்பு,.... திரும்ப பிறப்பு...இப்படி இப்பிறவி எப்போது முடிய?, திரும்ப அதுவும் என்னதாக பிறப்போமோ நமக்குத் தெரியாது.
சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த பிறவி சரியா அமையவில்லை. அடுத்த பிறவியில் வீடு வாசல் என்று சந்தோஷம் கொண்டு வாழப் பழகுவேன் என்று!
எப்படி மானிட பிறவி வரும்? இந்த பிறவியில் புண்ணியமே செய்யவில்லை! திரும்ப மானிடமாய் எப்படி பிறப்போம்?.
பன்றியோ, நரியாகவோ கூட இருக்கலாம்.
எனவே அடியார்களுக்கு உதவிடல் வேண்டும்!
நாதியற்றோர்க்கு உதவி செய்தல் வேண்டும்!
ஆலயத் தொண்டு செய்ய வேண்டும்!
ஹோம காரியங்களில் கலந்திடல் வேண்டும்!
தொண்டு நிறுவனங்களுக்குச் சென்று வர வேண்டும்!
வருமானத்தில் ஒரு சிறு உபயத்தை, ஆலத்திற்கோ ஆலய புரணமைப்புக்கோ அளிக்க வேண்டும்!
இதனால் புண்ணியம் தனமாகும். எதிர்காலத்தில் நம் பிள்ளைகளை அது காக்கும்!
No comments:
Post a Comment