Friday, July 6, 2018

Brahmapuriswarar temple-thevara Vaippu sthalam

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
______________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக..............)
____________________________________
*தேவார வைப்புத் தல தொடர் எண்: 22*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*🏜பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர்:*
_____________________________________
*🌙இறைவன்:* பிரம்மபுரீஸ்வரர்.

*💥இறைவி:* சுகந்த குந்தளாம்பிகை.

*📖வைப்புத் தல பதிகம் உரைத்தவர்:*
சுந்தரர்.

ஏழாம் திருமுறையில், முப்பத்தொன்றாவது பதிகத்தில், எட்டாவது பாடலில் இத்தலத்தைப் பற்றி குறிப்பு உள்ளது.

*🛣இருப்பிடம்:*
திருவாய்மூர் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்திலிருந்து வடகிழக்கே சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் ஈசனூர் உள்ளது.

எட்டிக்குடியிலிருந்தும் (முருகன் தலம்) ஈசனூர் செல்ல சாலை வசதி உள்ளது.

நாகப்பட்டிணம் - திருத்துறைப்பூண்டி பேருந்து சாலையில் கீழையூரைக் கடந்து மேலை ஈசனூர் என்ற இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் சென்றால், சுமார் இரண்டு கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
மேலை ஈசனூர்
கீழையூர் அஞ்சல்,
திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம், 
PIN - 611 103

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. ஆலயம் மூடியிருந்தால் அருகில் விசாரித்து....கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொண்டு, திறக்கச் சொல்லி தரிசிக்கலாம்.
செல்வகணபதி.
3/161, சிவன் கோயில் தெரு.
மேலை ஈசனூர்.

*☎தொடர்புக்கு:*
எஸ். செல்வகணபதி.
சண்முக சிவாச்சாரியார்.
(சிவாச்சாரியார், கீழையூரிலிருந்து வருகிறார்.)
97863 81382
99438 52180

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள தேசனூர், பாசனூர், நாசனூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

ஈசனூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

🔔தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர் பாசனூர் பர மேட்டி பவித்திர பாவ நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை யமர்ந்த ஈசனூர் எய்தமான் இடையாறு இடைமருதே. 

🙏ஒளிவடிவினனும், தீவினைகள் குறைய நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், நள்ளாறு என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள், தேசனூர், ஆக்கூர், பாசனூர், நாசனூர், நனிபள்ளி, ஈசனூர், இடையாறு, இடைமருது என்னும் இவைகளே 

*🏜கோவில் அமைப்பு:*
நான்கு புறமும் மதிற்சுவருடன் இந்த சிறிய ஆலயம் அமைந்துள்ளது.

உள்ளே செல்ல ஒரு இரும்புக் கம்பி கதவை திறந்து உள் புக வேண்டும்.

உள்ளே திறந்த வேளியில் சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி, சண்டீஸ்வரர் சந்நிதி மற்றும் பைரவர், சூரியன் சந்நிதிகளைத் தவிர வேறு எதுவுமில்லை.

மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்து அருள்கிறார்.

உள்ளே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் பிரம்ம்புரீஸ்வரர் காட்சி அளிக்கிறார்.

சுவாமி சந்நிதிக்கு எதிரே சிறிய மண்டபத்தில் நந்தியெம்பெருமான் இருக்கிறார்.

இதனருகில் பலிபீடமும் இருக்கிறது.

இறைவன் சந்நிதிக்கு வடபுறத்தில் சிறிய மண்டபத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இருக்கின்றன.

இதையடுத்து கிழக்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளது.

ஆலயத்தினுள்ளே வடகிழக்குப் பகுதியில் பைரவரும், சூரியனும் இருக்கின்றனர்.

*ஈசனூர்- மேலை ஈசனூர்.*
அந்தணர் புடை சூழ அமைந்த சதுர்வேதி நல்லூர், தற்சமயம் அந்தணர் இல்லாது திகழ்கிறது.

கிறுஸ்துவர் வசம் கைமாறியிருந்த திருக்கோயில் நிலங்களை, சட்டத்தின் மூலமாக இத்திருக்கோயிலுக்குத் திரும்ப கிடைத்தது.

1985-ஆம் வருடத்தில், சிதிலமாயிருந்த இத்திருக்கோயிலை, நாகை பூவத்தடி கிராமம், ஒரு அறக்கட்டளையின் கீழ் புனரமைக்கப்பட்டு நான்காவது. 

கடைசியாக 2005-ஆம் வருடத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவாய்மூருக்கு வடகிழக்கில் உள்ள ஈசனூரில் சுயம்புத் திருமேனியாய் தருமபுரீஸ்ஸரர் மற்றும் செளந்திரநாயகி அருள்கின்றனர்.

சுந்தரரின் இடையாற்றுப் பதிகத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுகிறார் என்ற கருத்து உண்டு.

கீழையூரைத் தாண்டியுள்ள மேலை ஈசனூரில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் சுகந்த குந்தளாம்பிகை அருள்கின்றனர்.

முன்காலத்தில் இங்கு நான்கு ஈசனூர் ஊர்கள் இருந்ததாம்.

நான்கிலும் இத்தலமே நடுநாயகமாக  விளங்கி வந்திருக்கிறது.

மற்றவை:
கீழ தென்கரை, மற்றும் வடகரை ஈசனூர்.

இன்றும் வடகரை ஈசனூரே, வாடிக்கை என அழைக்கப்படுகிறது.

திருக்குவளைத் தாலுக்காவிலேயே உள்ள பெரிய லிங்கத் திருமேனி மானவர்கள் இந்த பிரம்மபுரீஸ்வரர்.

இவர், மிகவும் தொன்மையானவர். பெரியதானவர். வழவழப்பானவர். இவர் திருமேனியில், வரையப்பெற்ற ரேகைகள் போல அமைப்பு தெரிகிறது.

இவர் மீது, மச்சம் எண்ணெய் செலுத்தும்போது நன்றாக தெரிகிறது.

எட்டுக்குடி வேலவனின் கிழக்கு நோக்கிய திருப்பார்வை இத்தலத்தின் மீது பதிந்திருக்கிறது.

சுந்தரர் இடையாற்றுத் தொகைக் குறிப்புடன், தருமை ஆதீனம் ஞானசம்பந்தன் இதழில் இத்தலக் குறிப்பு உள்ளது.

          திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment