Monday, July 2, 2018

Ashtapadi 23 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 23

அஷ்டபதி 23
ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.
1. கிஸலயசயனதலே குரு காமினி சரணநளின விநிவேசம் 
தவபதபல்லவவைரிபராபவம் இதம் அனுபவது ஸுவேசம்

காமினி – பிரியமானவளே 
கிஸலயசயனதலே- தளிர்களால் ஆன சயனத்தில் 
சரணநளின விநிவேசம்-உன் மெல்லிய பாதத்தை வைப்பாயாக. 
இதம்- இந்த சயனம் 
தவபதபல்லவ வைரிபராபவம்- எதிரியாகிற தளிர்போல் உள்ள உன்பாதத்தால் தோல்வியை 
அனுபவது- அனுபவிக்கட்டும்

க்ஷணம் அதுனா நாராயணம் அனுகதம் அனுசர ராதிகே (த்ருவபதம்)

அனுகதம் – உன்மேல் அன்பு கொண்ட
நாராயணம் – நாராயணனாகிய என்னை 
க்ஷணம் அதுனா- இந்த நொடியில் 
அனுஸர- அனுசரித்து நடந்துகொள்.

2. கரகமலேன கரோமி சரணம் அஹம் ஆகமிதாஸி விதூரம்
க்ஷணம் உபகுரு சயநோபரி மாம் இவ நூபுரம் அனுகதிசூரம் (க்ஷணம்)

விதூரம் – மிக தூரம் 
ஆகமிதா அஸி- நடந்து வந்துள்ளாய் 
கரகமலேன – கமலம் போன்ற ( மிருதுவான) கரங்களால் 
கரோமி சரணம் – உன் பாதங்களை பிடித்து விடுவேன்.
மாம் இவ – என்னைப்போல 
நூபுரம் அனுகதி சூரம்- உன்னைத் தொடர்பவையான உன் காற்சிலம்புகளுக்கு
சயனோபரி- இந்த மஞ்சத்தின்மேல் 
க்ஷணம் - சிறிது நேரம் 
உபகுரு- உபகாரம் செய் ( அதாவது ஓய்வு கொடு)

3.வதனஸுதாநிதிகலிதம் அம்ருதம் இவ ரசய வசனம் அனுகூலம் 
விரஹம் இவ அபநயாமி பயோதரரோதகம் உரஸி துகூலம் (க்ஷணம்)

வதனஸுதாநிதிகலிதம்- உன் முகமாகிற சந்திரனிலிருந்து பெருகும்
அம்ருதம் இவ – அமிர்தத்தைப்போல்
அனுகூலம் வசனம் – இனிய சொற்களை
ரசய- கூறு. 
உரஸி பயோதரரோதகம்- உன் மார்பில் இறுக்கும் 
துகூலம் இவ – கச்சையைப்போல 
விரஹம்- உன் விரகத்தை 
அபனயாமி – போக்குகிறேன்.

4. ப்ரியபரிரம்பண ரபஸவலிதம் இவ புலகிதம் அதி துரவாபம்
மதுரஸி குசகலசம் விநிவேசய சோஷய மனஸிஜதாபம் (க்ஷணம் )

ப்ரியபரிரம்பண ரபஸவலிதம் இவ- அன்புடன் தழுவுதலை எதிர்பார்த்து 
புலகிதம் அதி துரவாபம்- மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ள 
குச்சகலசம்- உன் குசகும்பங்களை 
மதுரஸி – என் மார்பின்மேல் 
விநிவேசய- வைத்து
மனசிஜதாபம்- உன் மன்மத தாபத்தை 
சோஷய – அகற்றிவிடு

5.அதரஸுதாரஸம் உபநய பாமினி ஜீவய ம்ருதம் இவ தாஸம்
த்வயி விநிஹிதமனஸம் விரஹாநலதக்தவபுஷம் அவிலாஸம் (க்ஷணம்)

அதரஸுதாரசம் – உன் இதழமுதத்தை 
உபநய – தந்து 
பாமினி – பிரியமானவளே 
த்வயி விநிஹிதமனஸம்- உன்னிடம் மனதை வைத்து விரஹாநலதக்தவபுஷம்- உன் பிரவு என்கிற நெருப்பால் எரிக்கப்பட்ட உடலுடன்
அவிலாஸம்- வாடி 
ம்ருதம் இவ- உயிர் போவதைப்போல் உள்ள 
தாஸம்- தாசனான என்னை 
ஜீவய- உயிர்ப்பிப்பாய். 
-
6. சசிமுகி முகரய மணிரசனாகுணம் அனுகுணகண்ட நிநாதம் 
ஸ்ருதியுகளே பிகருதவிகலே மம சமய சிராத் அவஸாதம்

சசிமுகி –சந்திரமுகி 
மணிரசனாகுணம்- உன் ஒட்டியாணத்தின் மணிகளின் சப்தத்திற்கு 
அனுகுண கண்ட நிநாதம் – ஒப்பான உன் குரல் 
முகரய – ஒலிக்கட்டும்
பிகக்ருத விகளே- குயில்களின் கடோரமான ஓசையால் (விரஹத்தை உண்டாகுவதால்) 
அவஸாதம்- புண்பட்ட 
மமஸ்ருதியுகளே- என் காதுகளை
சமய- சரிப்படுத்து

7. மாம் அதிவிபலருஷா விகலீக்ருதம் அவலோகிதும் அதுனா இதம் 
லஜ்ஜிதம் இவ நயனம் தவ மீலதி விரம விஸ்ருஜ ரதிகேதம் (க்ஷணம்)

அதிவிபலருஷா மாம் விகலீக்ருதம்- கோபத்துடன் பார்த்து என்னை கலக்கமுறச்செய்த 
இதம் தவ நயனம் –இந்த உன் கண்கள் 
அதுனா- இப்போது 
அவலோகிதும் – பார்ப்பதற்கு 
லஜ்ஜிதம் இவ – வெட்கமுற்றது போல 
மீலதி – மூடுகிறது,
விரம- அது வேண்டாம் 
ரதிகேதம்- காதலில் குழப்பத்தை 
விஸ்ருஜ- விட்டுவிடு

8.ஸ்ரீஜயதேவபணிதம் இதம் அனுபத நிகதிதமதுரிபுமோதம்
ஜனயது ரஸிகஜநேஷு மனோரமரதிரஸபாவவிநோதம் (க்ஷணம்)

ஸ்ரீஜயதேவபணிதம் இதம்- ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதம் 
அனுபத நிகதிதமதுரிபுமோதம்- ஒவ்வொரு பதத்திலும் கண்ணனின் ஆனந்தத்தை வர்ணிக்கிறது. 
ரஸிகஜநேஷு – இது ரசிகர்களுடைய
மனோரமரதிரஸபாவவிநோதம்- ஸ்ருங்காரரஸ ரசனையை
ஜனயது- உண்டாக்கட்டும்.

No comments:

Post a Comment