Monday, June 4, 2018

Thiruvannamalai temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்கச் செல்வதற்காக..........‌..)
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் அல்லாத வைப்புத் தல தொடர் எண்:(5)*

*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தலம்:*

*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*

*ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில், அணி அண்ணாமலை, திருவண்ணாமலை:*
----------------------------------------------------------
*🌙இறைவன்:*  பெயர்ஆதி அருணாசலேஸ்வரர்.

*💥இறைவி:* ஆதி அபீதகுஜாம்பாள்.

*🌴தல விருட்சம்:*

*🌊தல தீர்த்தம்:*

*தேவாரம் உரைத்தவர்:*
அப்பர்.

நான்காம் திருமுறையில் அறுபத்து மூன்றாவது பதிகத்தில்,முதலாவது பாடல், மற்றும்

நான்காம் திருமுறையில் அறுபத்து மூன்றாவது பதிகத்தில், நான்காவது பாடல்.

*🛣இருப்பிடம்:*
தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும் திருவண்ணாமலை செல்லப் பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தும் திருவண்ணாமலைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

*ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஆதி அருணாசலேஸ்வரர் திருக்கோயில்,
அடி அண்ணாமலை,
திருவண்ணாமலை அஞ்சல்
திருவண்ணாமலை மாவட்டம்.
PIN - 606 601

*🌸ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00  மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செல்லும் பொழுது, வருண லிங்கம் கோயிலை அடுத்து அணி அண்ணாமலை திருக்கோயில் அமைந்துள்ளது.

மக்கள் அடி அண்ணாமலை திருக்கோயில் என்று அழைக்கின்றனர்.

இக்கோயில் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருக்கிறது.

அணி அண்ணாமலை வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

அப்பர் பதிகத்தின் 5, 7, 8, 9-வது பாடல்களிலும் அணி அண்ணாமலை தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

திருவண்ணாமலை அடிவாரச் சுற்று பதினான்கு கி.மீ நீளம் கொண்டவை. இதில் எட்டு கி.மீ தூரத்தில், அணிஅண்ணாமலை இருக்கிறது. இதனை அடியண்ணாமலை என்றும் கூறுவர்.

அளவான கோயில். முழுவதும் கருங்கல் ஆன திருப்பணி. சுவாமி, அம்பாள் சந்நிதிகள் இரண்டும் கோயிலின் உள்ளே, அருகருகே இருக்கிறது.

இங்கு, வாகன மண்டபத்தை அடுத்தாற் போல் காரைக்காலம்மையார், விநாயகர், சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திலகவதி, பாலகணபதி மற்றும் மூன்று சிவலிங்கங்கள் உள்ளிட்ட பல மூர்த்தங்கள் இருக்கின்றன.

அம்பாள் சந்நிதியை தனியே வலம் வரக்கூடிய அமைப்பில் இருக்கிறது.

இருவரின் சந்நிதிகளும் கிழக்கு பார்த்தபடி அமைந்துள்ளன.

திருவண்ணாமலையை வலம் வருதல் பெரும் புண்ணியம். கார்த்திகைப் பெருவிழாவின்போது ஆயிரக்கணக்கோர் வலம் வருவர். அப்போது அணிஅண்ணாமலையையும் தரிசித்துச் செல்வர்.

*ஓதிமாமலர்கள் தூவி* என்ற திருநேரிசைப் பதிகத்தை, திருநாவுக்கரசு நாயனார், இங்கு பாடியதாக, சில ஆய்வாளர் கூறுவார்.

மாணிக்கவாசக சுவாமிகள், *திருவெம்பாவை* யை இவ்விடத்தில் இருந்துதான் பாடினார் என்பர்.

அவர் இருந்து பாடியதாக கூறப்படும் இடத்தில், அவருக்கென ஒரு தனிச் சிறு கோயில் இருக்கிறது. அங்கே உள்ள கல்வெட்டில் இச்செய்தியை காணமுடிகிறது.

இவ்விடத்தில் மலைவாழ் மக்கள், தேனும், தினைமாவும் விற்பனை செய்கிறார்கள்.

இங்கு இயற்கையின் எழில் காட்சி கண்களை மிகவும் கவரும். *அருவி பொன் சொரியும் அண்ணாமலை* என்ற தேவார சொற்றொடரின்படி, பொன் கொழிக்கும் மலையின் வீழ் அருவிகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகே அழகு.

மலையை வலம் வருதலும், இக்கோயிலை தரிசிப்பதும் தவறாமல் செய்து வருபவர்கள் பல ஆயிரக்கணக்கில் உளனர்.

*சிறப்பு:*
இரண்டு புராணப் பிண்ணனிகளோடு கூடிய தலம்.

ஒன்று, பிரம்மா விஷ்ணு அடிமுடி தேடிய வரலாற்றுக் குறிப்போடு சம்பந்தப்பட்ட தலம். இது கந்த புராணத்தில் குறித்துள்ளன.

மற்றொன்று, பிரம்மா திலோத்தமை மீது மோகம் கொண்டதால் பெற்ற சாபம் சம்பந்தப்பட்ட வரலாற்றுத் தலம்.

சித்தபிரமை, பிரம்மஹத்தி தோஷம், மற்றும் முன்வினை தீர்க்கும் தலம்.

இத்தலத்தில் மன அமைதி, கல்வி மேம்பாடு, மற்றும் செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுகிறது. மேலும் இங்கு வேண்ட மக்கட் பேறு வாய்க்கப் பெறுவர்.

இத்தலத்தில், இன்றும் திருமணம் ஆன பின்பு இந்த ஊரைச் சுற்றியுள்ளவர்கள், சுமார் நாற்பது கி.மீ தூரத்தில் இருந்து மலையை வலம் வந்து மாவிளக்கு போட்டு குலதெய்வத்தையும் வழிபட்டு வருகின்றனர்.

தீப விழாவின்போது இங்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


🔔ஓதி மா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர் மழுப்படையினானே ஆதியே அமரர் கோவே அணி அணாமலையுளானே நீதியால் நின்னை அல்லால் இனி நினையுமா நினைவு இலேனே.

🙏பார்வதிபாகனே, மேம்பட்ட சோதியே, கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே, மழுப் படையை ஏந்தியவனே, ஆதியே, தேவர்கட்குத்தலைவனே, அழகிய அண்ணாமலையில் இருப்பவனே, உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றி நினையேன். . பைம்பொனே பவளக்குன்றே பரமனே பால்வெண்ணீறா

🔔செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க அம்பொனே கொழித்து வீழும் அணி அணாமலையுளானே என்பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே.

🙏பசிய பொன்னே! பவளமலையே, மேம்பட்டவனே! பால் போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே, உன்னைத் தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன். 

          திருச்சிற்றம்பலம்.

தேவார வைப்புத் தலங்களில் நாளைய தலப்பதிவு *விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், அன்னல்வாயில்.*

இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர உயர்வதற்க்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

இராஜபதியில் கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரம் அமைவதற்கு  கடந்த இரு வாரங்களாக அடியார்களிடம் பதிவுடன் சென்று யாசகம் கேட்கிறேன்.

சிலர் உபயம் அளித்திருக்கிறார்கள். சிலர் அனுப்புவதாய் கூறியிருக்கிறார்கள். 

அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

படித்து, உபயம் அளியுங்கள்.
அடியார்களே!, பக்தர்களே, பொதுஜனங்களே! ஆலய கோபுர வளர்ச்சிக்கு அவசியம் உபயம் அளியுங்கள்!

பணம் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*

_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*
_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment