Tuesday, June 5, 2018

Sivasailanathar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
-------------------------------------------------------------
*தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:*
(எல்லோரும் தரிசிக்க வேண்டும் என்பதற்காக.........)
_____________________________________
*தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தல தொடர் எண்: (8)*

*வைப்புத் தல அருமைகள், பெருமைகள்:*

*🏜சிவசைலநாதர் திருக்கோயில், அத்தீச்சுரம்:*

*📣குறிப்பு:*
(இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, இன்றும், நாளையும் தொடரும். அடியார்கள் இருநாள் பதிவையும் கவனத்தில் கொண்டு வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
-----------------------------------------------------------
*🌙இறைவன்:* சிவசைலாச நாதர்.

*💥இறைவி:* பரமகல்யாணி.

*🌊தல தீர்த்தம்:* அத்திரி, கடனாநதி.

*📔பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.

ஆறாம் திருமுறையில் எழுபத்தொன்றாவது பதிகத்தில், எட்டாவது பாடல்.

*🛣இருப்பிடம்:*
தென்காசி - அம்பாசமுத்திரம் சாலை வழியில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே சுமார் ஆறு கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆழ்வார் குறிச்சியிலிருந்து கடனா நதி அணைக்குப் போகும் நகரப் பேருந்தில் ஏறிச்சென்று, கல்யாணிபுரம் ;நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தால் கோயிலை அடையலாம்.

பாபநாசம் வைப்புத் தலத்தில் இருந்து கருத்தப்பிள்ளையூர் வழியாக வடக்கே சுமார் பதினான்கு கி.மீ. தொலைவில் சிவசைலம் கோயில் இருக்கிறது.

தென்காசியில் இருந்து கடையம், இரவணசமுத்திரம் வழியாகவும் சிவசைலம் கோயிலுக்குச் செல்லலாம்.

தென்காசியில் இருந்து சுமார் இருபத்தேழு  கி.மீ. தொலைவில் சிவசைலம் கோயில் இருக்கிறது.

*✉ஆலய‌ அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோயில்,
சிவசைலம்,
ஆழ்வார்குறிச்சி அஞ்சல்,
அம்பாசமுத்திரம் வட்டம்,
திருநேல்வேலி மாவட்டம்,
PIN - 627 414

*தொடர்புக்கு:*
நா.சம்புநாதர்.
04634- 241484
சம்புநாத சிவாச்சாரியார்.
94867 78640
(ஆழ்வார் குறிச்சி.)

*☘ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அத்தீச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்.

இப்பதிகப் பாடலில் *ஈச்சுரம்* என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்

🔔நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

🙏கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக!

இத்தலம் வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழ அமைந்துள்ளது.

கருணையாற்றின் கரையில் இவ்வாலயம்  ஐந்து நிலைகளைத் தாங்கியபடி இராஜகோபுரத்துடன் காட்சியைக் கண்டதும், *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டு உள் நுழைந்தோம்.

இத்தலத்தில் மூலவர் மேற்கு நோக்கியவாறு சுயம்பு மூர்த்தியாக சிவசைலநாதர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளதை கண்டு உவகையுடன் முன் வந்து நின்று கைதொழுதோம்.

மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டு நகர்ந்தோம்.

அத்திரி முனிவர் வழிபட்டதால் ஈசனுக்கு அத்திரீசுவரர் என்ற பெயரும் இருக்கிறது.

அடுத்து, அம்பாள் சந்நிதிக்கு சர் சென்றோம். இங்கு அம்பாள் பரமகல்யாணி என்ற திருநாமத்துடன் அருட்காட்சியை தந்த வண்ணம் இருந்தாள்.

இங்கேயும் ஈசனிடம் மனமுருகி பிரார்த்தித்துக் கொண்டதுபோல, பிரார்த்தனை செய்து வணங்கிவிட்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

ஆலயத்தின் உள்பிராகாரத்தில் வருகையில், விநாயகரைக் கண்டு விட்டோம்.

விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, முருகப் பெருமானை வணங்கித் திரும்பினோம்.

இதற்கடுத்து, அறுபத்து மூன்று நாயன்மார்கள், இருக்க, நெஞ்சுக்கு நேராக குவித்த கரங்களோடு வணங்கியபடியே நகர்ந்தோம்.

அடுத்து, தட்சிணாமூர்த்தியைக் கண்டு மனமினிக்க வணங்கி நகர்ந்தோம்.

இதனையடுத்து, நடராஜரின் சந்நிதிக்கு வந்தோம். இவனாடல் நளினத்தைக் கண்டு, சில நிமிடங்கள் மெய்மறந்து நின்றோம்.

தூக்கிய திருவடியையும், திருமுகத்தையும் மாறி மாறி ரசித்து வணங்கி, பிரிய மனமில்லா நிலையில் திரும்பினோம்.

இக்கோவிலில் உள்ள நந்தியின் உருவம் சிறப்பு வாய்ந்தது. முன் காலையூன்றி எழும் நிலையில் உள்ள நந்தி சிற்பக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

தேவலோக சிற்பியான மயனால் தேவேந்திரன் ஆணைப்படி சிற்ப சாஸ்திரங்களின்படி இந்த நந்தி சிலை உயிரோட்டமாக எந்த குறையும் இல்லாமல் வடிக்கப்பட்டதால் அது உயிர் பெற்றது.

எழுவதற்காக கால்களை தூக்கியது. உடனே மயன் ஒரு உளியால் நந்தியின் முதுகில் கீறலை ஏற்படுத்தினார்.

அதன் பிறகே நந்தி அங்கே இருந்தது. மயன் அப்போது ஏற்படுத்திய கீறலின் நுட்பம், இப்போதும் தெரிவதை இன்றும் நாம் காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இப்பெரிய நந்திக்கு திருவிழா நடைபெறுகிறது.

இறைவன் சிவசைலநாதர் தலைமுடியுடன் கூடிய சடையப்பராக இருக்கிறார். சிவலிங்கத்தின் பின்பகுதியில் தலைமுடி இருப்பதைப் போன்ற தோற்றம் காணப்படுகிறது.

பின்புறக் கருவறைச் சுவரில் இருக்கும் சிறிய சாளரம் வழியாக இதைக் கண்டு தரிசிக்க‌ முடிகிறது.

பிருகு, அத்திரி முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு காட்சி கண்டுள்ளனர்.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை இன்றும் சிவசைல மலையில், ஆயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அத்திரி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தீர்த்தத்தின் அருகில் முருகருக்கு ஒரு கோயிலும் அமைந்திருக்கிறது.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை கருணையாற்றுடன் கலந்து சிவசைலம் கோயிலுக்கு வடக்குப் பக்கமாக ஓடி திருப்படைமருதூர் தாமிரபரணி நதியுடன் கலக்கிறது.

ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் பாதையில், ஆழ்வார் குறிச்சி ஊரைத் தாண்டியதும், *சிவந்தியப்பர் கோயில்* என்றொரு கோயில் இருக்கிறது.

சிவசைலநாத சுவாமி கோயிலில் திருவிழா தொடங்கும்போது, கொடி ஏற்றுதல் மட்டுமே அங்கு நடைபெறும். மற்றபடி விழா உற்சவங்கள், தேரோட்டம் முதலிய அனைத்தும் சிவந்தியப்பர் கோயிலில் தான் நடைபெறுகிறது.

சிவசைலத்திலுள்ள உற்சவர் எழுந்தருளி இங்கு தான் தேர்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது.

இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடி ஆடவரும் பெண்டிரும் தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

அம்பாள் பரமகல்யாணிக்கு தனித்தேர் இருக்கிறது. இதனை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கின்றனர் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இவ்வாலயத்தில் தினந்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

*🎡திருவிழாக்கள்:*
பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவமும், ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவமும், சித்திரையில் தீரத்தவாரியும் நடைபெறுகிறது.

*சிறப்பு:*
அத்ரி வழிபட்டு, சிவனின் அருட்காட்சி கிடைக்கப் பெற்ற தலம் இது.

அத்ரி ஆசிரமம் மலைமேல் அணைக்கட்டில் உள்ளது.

ஆலயம் பூஜை காலம் முடிந்த பின்பு, ஈசனைத் தரிசிக்க பிருங்கி முனிவர், வண்டு உருவமெடுத்து, வழிபட்டவர்.

ஆகையால் இங்குள்ள வண்டுகளுக்கும் சதை உண்டு கூறப்படுகிறது.

திருமணத் தடை நிவர்த்தித் தலம் இது. மக்கட் பேறும் கிட்டுதலும் உண்டு.

இங்குள்ள கடனா நதிக்கும், நந்தியம்பெருமானுக்கும் சமஷ்ட உபசாரம் செய்யப்பட்டு நைவேத்தியத்தை தீர்த்தத்தில் கரைத்து விடப்படுகிறது.

தருமை ஆதீன பதினாறாவது பட்டம் சச்சிதானந்த தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரின் அதிஷ்டானம் உள்ளது.

               திருச்சிற்றம்பலம்.

இந்த வைப்புத் தலத்தின் அருமைகள், பெருமைகள், நாளையும் தொடரும்.
______________________________________
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுரம் அமைய உபயம் அனுப்பி விட்டீர்களா?

அனுப்பாதோர் உபயம் அனுப்பி, புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

ஈசனுக்கு, நம்மால் முடிந்த, நம் பொருளாதார சூழ்நிலைக்குத் தகுந்த உபயத்தை அனுப்பி, ஈசனின் புண்ணியத்தை தனமாக்கி, வருங்கால நம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லுங்கள்.

இதுவரை உபயம் அனுப்பிய அனைவருக்கும் 'நன்றி' என்று ஒரு வார்த்தையுடன் முடிக்காமல், ஈசனின் கருணை உங்களுக்கு பிரவாகமாக, ஈசனிடம் விண்ணப்பம் செய்தோம்.

இனியும் இந்தச் செய்தியை அறிந்து உணர்ந்திருந்தவர்கள், தங்களால் இயன்றதை திருக்கோபுரம் அமைய உபயம் அளிக்குமாறு அனைவரின் பாதகமலங்களில் அடியேன் சென்னிமோதி பணிந்துதெழுந்து வணங்கிக் கேட்கிறேன்...

உபயம் அளியுங்கள்!
உபயம் அளியுங்கள்!!
உபயம் அளியுங்கள்!!!

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

*மனம் நினைக்க மகேசன் அருளாவான்!*
*உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!*

உபயம் அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே!

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

பணத்தை வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய முகவரி.

*கைலாஷ் டிரஸ்ட்*
*இந்தியன் வங்கி.*
**கோவில்பட்டி கிளை*
*A/Ç no: 934827371*
*IFSC code: IDIBOOOKO51*
*Branch code no: 256*

நன்கொடை உபயம் செய்பவர்கள், செக்/டி.டி யாகவும் அனுப்பலாம்.

செக்/டி.டி - "கைலாஷ் டிரஸ்ட்" என்ற பெயர் இடவும்.

செக்/டி.டி அனுப்ப வேண்டிய முகவரி:

கைலாஷ் டிரஸ்ட்.
94/207, தனுஷ்கோடியாபுரம் தெரு.
கோவில்பட்டி.
Pin.628 501
தூத்துக்குடி மாவட்டம்.
Cont..98422 63681
-----------------------------------------------------------
*இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் தல அருமை:*
அகத்திய முனிவருக்கு, சீடராகிய உரோமச மகரிஷி சிவமுக்தி வேண்டி சிவபெருமானை வேண்டினார்.

ஈசன் அருளால், அகத்திய முனிவர் உரோமச மகரிஷியை அழைத்து அவர் கையில் ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி நதி தொடங்கும் இடத்தில் வடுமாறு கூறினார்.

அப்படி இந்த ஒன்பது மலர்கள் ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்து வந்தால் உனக்கு முக்திபேறு கிடைக்கும் என்று அருளினார்.

உரோம மகரிஷியும் அவ்வாறே  சிவபூஜை செய்து  முக்திபேறு பெற்றார்.

நவகிரகங்களும் இந்த ஒன்பது ஆலயங்களை வழிபட்டு, அவரவர்களுடைய அருட்சக்தியை பெற்றன.

உரோமச மகரிஷி வழிபட்டு முக்திபேறு பெற்றமையால், இந்த ஆலயங்கள் நவ கைலாயங்கள் எனப் பெயர் பெற்றது.

இந்த நவகைலாங்கள் மிகவும் பழமை வாய்ந்தவை.

இந்த நவ கைலாயங்களில், எட்டாவது தலமாக விளங்குவது *இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில்* ஆகும்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கில், முற்றிலும் அழிவுற்றது.

இதன்பிறகு, கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட் மூலம், நிலம் கையகப்படுத்தி இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் பூமி பூஜை செய்து, இரண்டாயிரத்து பத்தாவது ஆண்டில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வடக்கே காளத்திநாதர் என்றால், இங்கே கைலாசநாதர்.

திருமண, புத்திரபாக்கியம், வியாபாரம், விவசாயம், தொழில் விருத்தி, போன்றவைகளை நிவர்த்தி செய்கிறார் கைலாசநாதர்.

இவ்வாலயத்தில், இராகு, கேது தோஷம், திருமணத் தடை போன்றவைகளுக்குப் பரிகாரமும் செய்யப்படுகிறது.

இவ்வாலயத்தில் பதினாறு பிரதோஷம் பார்த்தால், நினைத்த காரியம் கைகூடும்.

இவ்வாலயத்தில் கண்ணப்ப நாயனார் சந்நிதியும் அமைந்திருக்கிறது.

இங்கு வந்து மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்தால், கணவன் மனைவி ஒற்றுமை கூடும்.

நவலிங்க சந்நிதியில் பக்தர்களே தங்கள் திருக்கரங்களால், அபிஷேகம் செய்து, தோஷ நிவர்த்தி பெறலாம்.

_____________________________________
*திருக்கோபுரத்திற்கு உபயம் அளியுங்கள்!*
*திரும்ப பிறப்பில்லா நிலை பேறு பெறுங்கள்!!*


         திருச்சிற்றம்பலம்.
____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment