Wednesday, June 20, 2018

Dakshinamurthy ashtakam sloka 3 in tamil

Courtesy:Sri.Chidambaresa Iyer    
   2
                                                                ஸ்ரீ ராம ஜயம்

                                              ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி  அஷ்டகம்--3
இப்பொழுது இந்த அஷ்டகத்தின் மூன்றாவது சுலோகத்துக்கு வருவோம் : அது

"யஸ்யைவ  ஸ்புரணம் ஸதாத்மகம்  அஸத் கல்பார்த்தகம் (kalpaarthagam) பாஸதே
ஸாக்ஷாத்  தத்வமஸீதி வேத வசஸா யோ  போதயத் ஆச்ரிதான்
ய: ஸாக்ஷாத் கரணாத் பவேன் ந புனராவ்ருத்தி :  பவாம்போ நிதொவ்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே  ."
பொருள் :
'ஸத் ' மற்றும்  'அஸத்'  என்று இரண்டு  "உள்ளன. 'ஸத்' என்பது நிஜமாகவே
உள்ளதாகும். 'அஸத்' என்பது நிஜமில்லாதது, ஆனால் உள்ளதுபோல் தோன்றுவது.
எப்படி சாதாரண சிப்பி  வெள்ளி போல் காண்கின்ற தோ அது மாதிரி. பக்கத்தில்
வந்து கையில் எடுத்துப்பார்க்கும்பொழுது  அது சிப்பி தான்  வெள்ளியி ல்லை
என்பது நன்றாகத்தெரிந்து விடும். அவ்விரண்டைப்பற்றி இங்கு ஸ்ரீ
பகவத்பாதர்கள் சொல்கிறார்கள். ஸத்துக்கு இரண்டு குணங்கள் உள்ளன
--இருப்பது மற்றும் பிரகாசிப்பது என்று. அசத்துக்கு 'இருப்பது' என்பது
இல்லை. அதன் பிரகாசமும் க்ஷணிகமானதுதான், சிப்பி போன்று. (சிப்பியின்
பிரகாசம் வெள்ளியினுடையது இல்லை . சிப்பியில் காணப்படும் வெள்ளியின்
பிரகாசம் தற்காலிகமானதே தான். )
எதிலிருந்து, 'ஸத்தின் ' ஸ்புரணம்  ஏற்படுகிறதோ, ஆத்மகமான (ஆத்ம
சம்பந்தமான) எது எவரிடமிருந்து ஸத்தாக  ஸ்புரிக்கிறதோ  ( ஸத் என்ற
உண்மையானதும்,  உள்ளதுமான பொருளின் அறிவு , தானாக ப்பார்த்தோ, பிறர்
சொல்லியோ, அல்லது பிறரிடமிருந்து கேட்டோ, அல்லது புத்தகத்தில் படித்தோ
ஏற்படுவதில்லை. ஸ்புரணத்தால்  தான் ஏற்படுகிறது, ஸ்புரணம் என்றால் என்ன?
ஒருவருடைய மனதில் தானே தோன்றுவது  ஸ்புரணம்  என்று சொல்லப்படுகிறது.
.இந்த ஸ்புரணம் பரம்பொருளின் க்ருபையால்தான் ஏற்படும். பிரும்மா விற்கு
உலகத்தின் ஸ்ருஷ்டியை எப்படி செய்ய வேண்டுமென்பது, அவருடைய ஹ்ருதயத்தில்
ஏற்பட்ட, ஸ்புரணத்தால்  தான் ஏற்பட்டது என்று  ஸ்ரீ பாகவதத்தில் முதல்
ஸ்லோகத்தில்  சொல்லப்பட்டிருக்கிறது. "தேனே  பிரும்ம ஹ்ருதா " என்று
வியாசர் எழுதுகிறார். )
இந்த ஸ்லோகத்தில், அஸத்தினுடைய பாஸம் (பிரகாசம்) கல்பார்த்தகமானது
என்கிறார்.அதாவது தானாகக்கல்ப்பிக்கப்பட்டது ( கற்பனை யினால்  ஏற்பட்டது-
நினைத்துக்கொள்ளப்பட்டது) என்கிறார்.
எவர் வேத வாக்கைப்பிரமாணித்து, ஸாக்ஷாத்தாக 'நீ தான் அந்த ஸத் " என்று
எவர் தன்னை ஆச்ரயித்தவர்களை போதிப்பிக்கிறாரோ, எதை ஸாக்ஷாத் கரித்தால் ,
(இந்த) பவ சாகரத்தில் புனர் ஜன்மம் ஏற்படாதோ  , அந்த குரு மூர்த்தியான,
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி ஸ்வாமிக்கு என் நமஸ்காரம்.
இவ்வாறு இந்த  ஸ்லோகம் முடிகிறது.

No comments:

Post a Comment