Wednesday, June 20, 2018

Ashtapadi 18 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 18

அஷ்டபதி 18
சகி ராதையிடம் கண்ணன் தானே வந்த பின்பு அவனை போகச்சொன்னது தவறு என்று கூறுகிறாள். இது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்யும் தவறு.

பகவானை வேண்டிக்கொண்ட பின்னும் நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால் அவனை வெறுத்து ஒதுக்கி விடுகிறோம். நம் கர்மவினைப்படிதான் எல்லாம் நடக்கும் ஆனால் அவன்தான் நமக்கு ஒரே துணை என்பதை மறந்து விடுகிறோம்

. குருவானவர் நம்மை சரியான வழியில் திருப்பி விடுகிறார். நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நான் எனது என்ற அகந்தையை விட்டு அவனை சரணடையச் சொல்கிறார்.

1. ஹரிரபிஸரதி வஹதி மதுபவனே 
கிமபரம் அதிகசுகம் சகி புவனே

ஹரி: - ஹரி
அபிஸரதி – உன் சங்கேத இடத்தில் இருக்கையில் 
மதுபவனே – தென்றல் காற்று 
வஹதி-வீசுகையில்
கிம் அபரம்- வேறு எது
அதிசுகம் – இதைவிட மேலான சுகம் 
புவனே – உலகில்( பவனே என்பது பாடபேதம். இங்கு புவனே என்பதுதான் பொருத்தமாக இருக்கிறது)

மாதவே மாகுரு மானினி மானம் அயே (த்ருவபதம் )

அயே மானினி-துடுக்கான பெண்ணே 
மாதவே – மாதவனிடத்தில் (மா என்றால் லக்ஷ்மி, தவ என்றால் பதி, லக்ஷ்மீப்தியே உன்னைத்தேடி வரும்போது)
மா குரு மானம் – கௌரவம் பார்க்காதே

2.தாலபலாதபி குரும் அதிஸரஸம்
கிம் விபலீ குருஷே குச கலசம் ( மாதவே_)

தாலபலாதபி-பனம்பழத்தை விட 
குரும்- பெரிய 
அதிஸரஸம் – ஸ்ருங்கார ரசம் நீரம்பிய 
குச கலசம்- கலசம் போன்ற மார்பை 
கிம்- ஏன் 
விபலீ குருஷே - வீணாக சுமக்கிறாய்

3.கதி ந கதிதம் இதம் அனுபதம் அசிரம்
மா பரிஹர ஹரிம் அதிசய ருசிரம்(மாதவே)

அதிசய ருசிரம்- அதிசய மநோஹரமான 
ஹரிம்- ஹரியை
மா பரிஹர – அலட்சியம் செய்யாதே என்று
இதம் – இதை 
அசிரம் அனுபதம் – மீண்டும் மீண்டும் 
கதி கதிதம்- எவ்வளவு தரம் சொல்லி இருக்கிறேன்

4. கிமிதி விஷீதஸி ரோதிஷி விகலா
விஹஸதி யுவதிஸபா தவ ஸகலா(மாதவே)

கிமிதி-எதற்காக ( செய்வதையும் செய்துவிட்டு) 
விகலா- வீணாக 
விஷீதஸி- புலமபிக்கொண்டும்
ரோதிஷி –அழுதுகொண்டும் இருக்கிறாய்
யுவதிஸபா -மற்ற யுவதிகள் கொண்ட
தவ ஸகலா- உன் நட்புவட்டம்
விஹஸதி – உன்னைப்பார்த்து சிரிக்கிறது.

5. ஸஜலநளிநீதல சீதல சயனே
ஹரிம் அவலோகய ஸபலய நயனே (மாதவே)

ஸஜலநளிநீதல சீலித சயனே-நீருடன் கூடிய குளிர்ந்த தாமரை இதழ் மேல் இருப்பவனாக 
ஹரிம் –ஹரியை 
அவலோகய- பார்.
ஸபலனயனே –உன்கண்கள் பெற்ற பயனாக.

6. ஜனயஸி மனஸி கிம் இதி குரு கேதம் 
ச்ருணு மம வசனம் அநீஹிதபேதம் (மாதவே)

மனஸி- மனதில் 
கிம் இதி- எதற்கு 
குருகேதம் – மிகுந்த துக்கத்தை 
ஜனயஸி- உண்டுபண்ணிக் கொள்கிறாய்? 
அநீஹிதபேதம் – உங்களுக்குள் பேதத்தை விரும்பாத 
மமவசனம் – என் வார்த்தையை 
ச்ருணு- கேள்

7. ஹரிருபயாது வதது பஹுமதுரம் 
கிமிதி கரோஷி ஹ்ருதயம் அதிவிதுரம் (மாதவே)

ஹரி: - ஹரி
உபயாது- வரட்டும் 
பஹுமதுரம் – மிகவும் இனிமையாக 
வதது- பேசட்டும்
கிமிதி- ஏன்
ஹ்ருதயம் – உன் இதயத்தை 
அதிவிதுரம் – கடுமையானதாக 
கரோஷி- செய்து கொள்கிறாய்?

8.ஸ்ரீ ஜயதேவ பணிதம் அதி லலிதம்
ஸுகயதி ரஸிகஜனம் ஹரிசரிதம்( மாதவே )
ஸ்ரீ ஜயதேவ பணிதம் -ஸ்ரீ ஜெயதேவருடைய கூறப்பட்ட 
அதிலலிதம்- மிகவும் அழகான
ஹரிசரிதம்- ஹரியின் சரிதம் . 
ரஸிகஜனம் –ரசிகர்களுக்கு 
ஸுகயதி- சுகத்தைக் கொடுக்கிறது.




No comments:

Post a Comment