Thursday, June 7, 2018

Avahanti homam

நன்றி திரு. சர்மா சாஸ்திரிகள்.

ஆவஹந்தீ ஹோமத்தை பற்றி ஒரு சில விவரங்களை இங்கு தற்போது பார்ப்போமே.

" ஆவஹந்தீ விதன்வானா,,,,,," என்ற மந்திரத்தை அனுசரித்து ஹோம மந்திரங்கள் வருவதனால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.

மிகவும் ஸ்ரேஷ்டமானது இந்த ஆவஹந்தீ ஹோமம்.

யஜுர்வேத தைத்ரோபநிஷத்தில் முதல் பிரஸ்னமான 'சீக்ஷாவல்லீ' எனும் பிரதம உபநிஷத்தில் இந்த ஹோமத்திற்கான மந்திரங்கள் வருகின்றன.

* பிரஹ்மசாரிகள இந்திரிய நிக்ரஹமுள்ளவர்களாகவும், 
* வேதம் முதலிய வித்யை பிரஹ்மச்சாரிகள் தன்னிடத்தில் எந்தவிதமான தடங்கல் இல்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும்,
* நல்ல பிரஹ்மச்சாரிகள், வித்யார்த்திகள், எல்லா இடங்களிலிருந்தும் வரவேண்டும்,

* அப்படி வரும் வித்யார்த்திகளுக்கு அன்னபானாதி வஸதிகள் கிடைப்பதன் மூலம் வித்யாப்யாஸம் தடங்கல் இன்றி தொடர வேண்டும் எனவும் பிரார்தித்து ஆச்சார்யார் செய்யும் ஹோம மந்திரங்கள் இதில் உள்ளன.

அது மாத்திரம் அல்ல.

* வேதம் படிக்கும் பிரஹ்மச்சாரி குழந்தைகளுக்கு மேதா சக்தி அதிகரிக்க இந்த ஹோமத்தில் விசேஷ மந்திர பாகங்கள் உள்ளன.

* ஐஹிக சுகங்கள் இதில் வேண்டப்பட்ட போதிலும் ஆமுஷ்மிகமான மோக்ஷ சாம்ராஜ்யம் வரை ஆவஹந்தீ ஹோமத்திற்கு பலனாக சொல்லப்பட்டுள்ளது.

ஹோம ஆரம்பத்தில் ஜபம்:
ஆவஹந்தீ ஹோமத்திற்கு அங்கமாக ஹோமத்தின் ஆரம்பத்தில் " யஸ்சந்தஸாம்ருஷபோ...." எனும் மந்திரம் ஜபம் செய்வது சிஷ்டாச்சாரத்தில் உள்ளது.

இந்த மந்திர பாகத்தில் பல பிரார்த்தனைகள் புஷ்டியாக உள்ளதை காணலாம். அவைகள் என்ன என்று இங்கே சுருக்கமாக பார்ப்போம்:

* என்னுடைய சரீரமானது ஜபம், ஹோமம், ஞானாப்யாசம் முதலியைவைகளுக்கு அனுகூலமாக இருக்கவேண்டும். 
* என்னுடைய காதுகளால் நான் நல்லதுகளை நிறைய கேட்க வேண்டும். 
* பிரணவத்தைக் கொண்டு அதாவது பிரணவ உபாஸனையினால் நான் பரமாத்மாவை அறிய அருள் புரிய வேண்டும் ..

என்பது போலான நிறைய பிரார்த்தனைகளை இந்த ஜபத்தில் காணலாம்.

இந்த ஹோமத்தில் குறிப்பாக கவணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு சக்தி வாய்ந்த ஆவஹந்தீ ஹோமத்தை விதிப்படி செய்வதற்கு தேவைப்படும் திரவியங்களோ அல்லது ரித்விக்குகளின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு. ஆனால் பலன்களோ மிக அதிகம்.


No comments:

Post a Comment