Monday, June 4, 2018

Ashtapadi part 9 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam



அஷ்டபதி 9

அஷ்டபதி 9
சகி ராதையின் நிலையை மேலும் வர்ணிக்கிறாள். ராதையின் வேதனை பகவானோடு இணையத்துடிக்கும் பக்தனின் நிலையை ஒத்ததாகும். ஆழ்வார்களின் நாயக நாயகி பாவத்தை வர்ணிக்கும் பாசுரங்களும் மீரா போன்ற மற்ற பக்தர்களின் பாடல்களும் இதற்கு உதாரணம்.

1. ஸ்தனவிநிஹிதமபி ஹாரம் உதாரம்
ஸா மனுதே க்ருசதனுரிவ பாரம் 
ராதிகா தவ விரஹே கேசவ(த்ருவபதம்)

ஸ்தனவிநிஹிதம் –மார்பில் அணிந்துள்ள 
ஹாரம் உதாரம் – மெல்லிய ஹாரத்தை 
க்ருசதனு: - உன்னைப்பிரிந்ததால் மெலிந்த உடலுடைய
ஸா- அவள் 
பாரம் இவ- பெரும் சுமை போல 
மனுதே - -எண்ணுகிறாள்.
கேசவ- கேசவா
தவவிரஹே- உன்னைவிட்டுப் பிரிந்துவருந்தும் 
ராதிகா- ராதை

2.ஸரஸம் அஸ்ருணம் அபி மலயஜபங்கம் 
பச்யதி விஷம் இவ வபுஷி ஸசங்கம் (ராதிகா)

வபுஷி- உடலில் 
அஸ்ருணம் – குளிர்ச்சியாகவும்
ஸரஸம்- மிருதுவாகவும் உள்ள
மலயஜபங்கம் – சந்தனப்பூச்சை
(சந்தனமரங்கள் பெரும்பாலும் மலையமலையில் காணப்படுவதால் குழைத்த சந்தனம் மலயஜபங்கம் என்று குறிப்பிடப்படுகிறது.பங்கம் என்றால் சேறு. ராதை வெறுப்பினால் சேறு என்று கருதுகிறாள் )
விஷம் இவ ஸசங்கம் – விஷமோ என்ற சந்தேஹத்துடன் 
பச்யதி- பார்க்கிறாள். (அது எறிவதுபோல் உணர்ந்ததினால் )

3.ச்வஸித பவனம் அனுபமபரிணாஹம் 
மதன தஹனம் இவ வஹதி ஸதாஹம் (ராதிகா)

அனுபமபரிணாஹம் –நீண்ட பெருமூச்சுடன் கூடிய 
ச்வஸித பவனம்- தன் மூச்சுக்காற்றை
மதனதஹனம் இவ – காதல் தீயைப் போல் 
ஸதாஹம் வஹதி- சுடுவதாக உணர்கிறாள்

4.திசி திசி கிரதி ஸஜலகணஜாலம் 
நயனநளினம் விகலித நாலம் (ராதிகா)

விகளிதநாலம்- தண்டில்லாத 
நயனநளினம் – தாமரை போன்ற அவள் கண்கள் 
திசி திசி – எல்லாதிக்குகளிலும்
ஸஜலகணஜாலம்- கண்ணீர் துளிகளை 
கிரதி- இறைக்கிறது. (ஏனென்றால் நீ வருகிறாயா என்று எல்லா திசையிலும் பார்ப்பதால்.)

5. த்யஜதி ந பாணிதலேன கபோலம் 
பாலசசினம் இவ ஸாயம் அலோலம் (ராதிகா)

பாணிதலேன கபோலம் – கன்னத்தில கையை
ந த்யஜதி-வைத்து விடுவதே இல்லை. எப்போதும் கன்னத்தில் கை வைத்து கவலையுடன் இருக்கிறாள்.
அது எப்படி இருக்கிறது என்றால் 
ஸாயம் – மாலையில் ( இரவு தொடங்குதன் முன்) காணப்படும்
பாலசசினம் அலோலம் இவ – ஒளி மங்கிய பிறைச்சந்திரன் போல இருக்கிறது, 
கை முகத்தை பாதி மறைப்பதால் பிறைச்சந்திரனுக்கு ஒப்பிடப்படுகிறது.

6. நயனவிஷயம் அபி கிசலயதல்பம் 
கணயதி விஹித ஹுதாசவிகல்பம் (ராதிகா)

கிசலய தல்பம் -இளம்தளிர்களால் ஆன சயனத்தை 
நயனவிஷயம் அபி- பார்த்தால் கூட
ஹுதாச விகல்பம் – நெருப்பால் ஆனதோ என்று
கணயதி- எண்ணுகிறாள். 
தாமரை மலர்களை போல இளம்தளிர்களால் ஆன சயனத்தை காதல்வயப்பட்ட மங்கையர் நாடுவர். அது கூட அவளுக்கு குளிர்ச்சியைத்தருவதற்கு பதில் நெருப்பு போல் தெரிகிறதாம்.

7. ஹரிரிதி ஹரிரிதி ஜபதி ஸ காமம் 
விரஹவிஹித மரணேவ நிகாமம் (ராதிகா)

. விரஹவிஹித மரணேவ- பிரிவாற்றாமையால் உயிர் துறப்பவள் போல 
நிகாமம் – விடாமல் 
ஹரிரிதி ஹரிரிதி – ஹரி ஹரி என்று
ஸகாமம்- காதல் வயப்பட்டவளாய் 
ஜபதி – ஜபித்துக்கொண்டு இருக்கிறாள் 
உயிர் துறக்கும்போது ஹரி நமத்திக் கூறினால் அடுத்த பிறவியிலாவது அவனை அடையலாம் என்று எண்ணுபவள் போல.

8.ஸ்ரீஜயதேவ பணிதம் இதி கீதம் 
சுகயது கேசவபாதம் உபநீதம்(ராதிகா)
ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதமானது கேசவன் பாதாரவிந்தத்தை அடைந்தோர்க்கு ஆனந்தம் அளிக்கட்டும்.



No comments:

Post a Comment