Thursday, June 28, 2018

Ashtapadi 22 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 22
ராதை கண்ணன இருக்கும் இடம்போய் அவனைக் காண்கிறாள். இது அவள் கண்ட கண்ணனின் வர்ணனை. ஜீவன் ஈஸ்வரனை நாடும்போது அவன் எவ்வளவு சந்தோஷிக்கிறான் என்பதைக் கூறும் அஷ்டபதி . "அப்பா! கடைசியில் என்னிடம் வந்தாயா! என்று கூறுவது போல் அவன் அகமும் முகமும் மலர்ந்து காணப்படுகிறான்.

1. ராதாவதன விலோகன விலஸித விவிதவிகாரவிபங்கம் 
ஜலநிதிம் இவ விதுமண்டலதர்சன தரளித துங்க துரங்கம்
ராதாவதன விலோகன விலஸித- ராதையின் முகம் கண்டு பூரிப்படைந்து
விவித விகார விபங்கம் – அதைப் பலவகையால் வெளிப்படுத்துகின்றவனாக 
விதுமண்டல தர்சன தரளித துரங்கம்- சந்திரனைக் கண்டு ஆர்ப்பரிக்கும்ஜலநிதிம் இவ- கடல போல் உள்ளவனை

ஹரிமேகரஸம் சிரம் அபிலஷித விலாஸம் 
ஸா ததர்ச குருஹர்ஷவசம்வத வதனம் அனங்கவிகாஸம்( த்ருவபதம்)

சிரம் அபிலஷித விலாசம்- நெடுங்காலமாக எதிர்பார்த்த அபிலாஷை உடையவனாய் 
குருஹர்ஷவசம்வத வதனம்- மிகுந்த மகிழ்ச்சியை உள்ள முகத்துடன்கூடிய
அனங்கவிகாஸம்- மன்மதனே போன்றவனும் 
ஏகரஸம்- அவளையே மனதில் கொண்டவனுமான 
ஹரிம்- ஹரியை 
ஸா ததர்ச – அவள் கண்டாள்

2..ஹாரம் அமலதர தாரம் உரஸி தததம் பரிரம்ப்யவிதூரம் 
ஸ்புடதர பேனகதம்பகரம்பிதம் இவ யமுனாஜலபூரம் (ஹரிமேகரஸம்)

உரசி- மார்பில்
ஸ்புடதர பேனகதம்பகரம்பிதம்- வெண்மையான நுரைகள் கூட்டத்துடன் கூடிய 
யமுனாஜலபூரம் இவ – யமுனையின் நீர்ப்பெருக்கைப்போல உள்ள 
பரிரம்ப்ய விதூரம்- கழுத்தைச் சுற்றி வெகு நீளமான 
அமலதரதாரம்- பரிசுத்தமான முத்துக்களால் ஆன
ஹாரம் – ஹாரத்தை 
தத்தம் – தரித்துக் கொண்டிருப்பவனும் ஆன (ஹரியை)

3. சியாமள ம்ருதுல கலேவரமண்டலம் அதிகதகௌரதுகூலம்
நீல நளினம் இவ பீதபராக படல பரவலயிதமூலம் (ஹரிமேக)

நீலநளினம்- நீலத்தாமரையில்
பீதபராக படல பரவலயிதமூலம் இவ-மஞ்சள் மகரந்தம் சுற்றினாற்போல் 
சியாமள ம்ருதுல கலேவரமண்டலம்- கருத்த அழகிய மேனியில்
அதிகதகௌரதுகூலம்- மஞ்சள் பட்டடை அணிந்தவனாக (ஹரியை)

4. தரள த்ருகஞ்சல சலன மநோஹர வதனஜநிதரதிராகம் 
ஸ்புடகமலோதர கேலித கஞ்சன யுகமிவ சரதிதடாகம் (ஹரிமேக) 
சரதி தடாகம் –சரத் காலத்தில் தடாகத்தில் 
ச்புடகமலோதர – மலர்ந்த தாமரையின் உள்ளே 
கேலித கஞ்சனயுகம் இவ- விளையாடும் கருங்குருவிகளைப்போல் 
தரள த்ருகஞ்சல சலன மநோஹர-இங்கும் அங்கும் சலிக்கும் கண்பார்வையுடன்
மனோஹரவதன ஜனிதரதிராகம்- பெருகும் காதலுடன் கூடிய அழகியமுகத்தை உடையவனான ( ஹரியை)

5. வதனகமலபரிசீலன மிலித மிஹிரஸம குண்டலசோபம்
ஸ்மிதருசிகுஸும ஸமுல்லஸிதாதரபல்லவக்ருதரதிலோபம்(ஹரிம்)
வதனகமலபரிசீலன மிலித-ககமலமுகத்தை நன்கு பார்க்கும்வண்ணம் சூரியனின் கிரணங்களைப்போல் உள்ள அழகிய குண்டலம் உடையவனும்
ஸ்மிதருசிகுஸும ஸமுல்லஸிதாதரபல்லவக்ருதரதிலோபம்-தளிர் போன்ற இதழில் புன்னகை என்ற மலர் காதலைத்தூண்டுவதாக உள்ள (ஹரியை)

6.சசிகிரணச்சுரிதோதரஜலதர சுந்தரஸகுசும கேசம்
திமிரோதிதவிது மண்டலநிர்மல மலயஜதிலகநிவேசம் (ஹரிம்)

சசிகிரணச்சுரிதோதரஜலதர- நிலவொளியில் பிரகாசிக்கும் மேகம் போன்ற
சுந்தர ஸகுஸுமகேசம் – அழகிய மலர்களுடன் கூடிய கேசத்துடன்
திமிரோதிதவிது மண்டலநிர்மல- இருளைபிளந்து உதிக்கும் நிலவைப்போன்ற
மலயஜ திலகநிவேசம்- சந்தனதிலகத்தை உடையவனுமான (ஹரியை)

7.விபுலபுலகபர தந்துரிதம் ரதிகேளிகலாபி: அதீரம்
மணிகணகிரண சமூஹசமுஜ்ஜவல பூஷணஸுபகசரீரம் (ஹரிம்)

ரதிகேளிகலாபி:- காதல் விளையாட்டை எதிர்பார்க்கும்
அதீரம்- சஞ்சலத்துடன் கூடியவனும் 
விபுலபுலகபர தந்துரிதம்- புளகாங்கிதம் அடைந்தவனும் 
மணிகணகிரண சமூஹசமுஜ்ஜவல- அணிந்துள்ள ஆபரணங்களின் ஒளிக்கிரணங்களால் 
பூஷணஸுபகசரீரம்- அலங்கரிக்கப்பட்ட தேஹத்தை உடையவனுமான (ஹரியை)
8.ஸ்ரீஜயதேவ பணித விபவ த்விகுணீக்ருத பூஷணபாரம் 
ப்ரணமத ஹ்ருதி விநிதாய ஹரிம் ஸுசிரம் ஸுக்ருதோதய ஸாரம் (ஹரிம்)

ஸ்ரீஜயதேவ பணித விபவ- ஸ்ரீ ஜெயதேவரால் சிறப்புடன் கூறப்பட்டு
த்விகுணீக்ருத பூஷணபாரம்-இருமுறை ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்ட
ஸுக்ருதோதயஸாரம் – புண்யங்களின் சாரமான 
ஹரிம்- ஹரியை 
ஹ்ருதி விநிதாய – ஹ்ருதயத்தில் நிறுத்தி
ப்ரணமத- வணங்குங்கள்

No comments:

Post a Comment