Wednesday, June 27, 2018

Ashtapadi 21 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 21
1.மஞ்சுதர குஞ்சதள கேளிஸதனே 
விலஸ ரதிரபஸஹஸிதவதனே

மஞ்சுதர குஞ்சதள கேளிஸதனே-அழகிய கொடிவீடாகிய உங்கள் சந்திக்கும் இடத்திற்கு
ரதிரபஸஹஸிதவதனே-கண்ணனை சந்திக்கும் ஆவல் நிரம்பிய சிரித்த முகத்துடன் 
விலஸ- செல்வாயாக

ப்ரவிச ராதே மாதவசமீபம் (த்ருவபதம்)

ராதே – ஹே ராதே 
மாதவசமீபம் – மாதவனின் அருகில் 
பரவிச- பிரவேசிப்பாயாக.

(குரு முராரே மங்கள சதானி என்ற வாக்கியம் சாதரணமாக த்ருவபதத்துடன் சேர்த்து பாடப்படுகிறது. ஆனால் மூலத்தில் இது கடைசி சரணத்தில்தான் வருகிறது. அதனால் அதன் பொருள் அப்போது கூறப்படும்.)

2.நவபவதசோகதள சயனஸாரே 
விலஸ குசகலசதரள ஹாரே ( ப்ரவிச)

நவபவதசோகதள சயனஸாரே-இளம்அசோக தளிர்களால் ஆன சயனத்தில் 
குசகலசதரள ஹாரே - குசகும்பங்களின் மீது புரளும் ஹாரம உடையவளே
விலஸ- இன்புறுவாயாக.

3.குஸுமசய ரசிதசுசிவாஸ கேஹே
விலஸ குஸுமசுகுமாரதேஹே (ப்ரவிச)

குஸுமசய ரசிதசுசிவாஸ கேஹே -மலர்கள் நிறைந்த சுகமான வாசஸ்தலத்தில் 
குஸுமசுகுமாரதேஹே- மலரைப்போல் ம்ருதுவான் தேஹம் உடையவளே
விலஸ-இன்புறுவாயாக.

4. ம்ருது சல மலயவனபவன ஸுரபிசீதே 
விலஸ மதனசரநிகர பீதே (ப்ரவிச)

மதனசரநிகர பீதே – மன்மதனின் சரத்திற்கு பயந்தவளே
. ம்ருதுசலமலயவனபவன ஸுரபிசீதே – மலயபர்வதத்தின் சந்தனவனத்திலிருந்து மெல்ல தவழும் தென்றலால் குளிர்ந்து மணம் வீசும் அந்த இடத்தில்
விலஸ- இன்புறுவாயாக.

5.விததபஹுவல்லி நவபல்லவகனே 
விலஸ சிரம் அலஸபீன ஜகனே (ப்ரவிச)

அலஸபீனஜகனே –இடுப்பின் பாரத்தால் மந்தமான் நடை உடையவளே
விததபஹுவல்லி நவபல்லவகனே -பலவித கொடிகளின் தளிர்கள் நிறைந்த இடத்தில் 
விலஸ- இன்புறுவாயாக

6. மதுமுதித மதுபகுல கலிதராவே 
விலஸ குஸுமசரஸரஸபாவே (ப்ரவிச)

குஸுமசரஸரஸபாவே – காதலால் பீடிக்க்ப்பட்டவளே 
மதுமுதித மதுபகுல கலிதராவே- தேனுண்ட வண்டுகளின் ரீங்காரத்துடன் கூடிய அந்த இடத்தில்
விலஸ- இன்புறுவாயாக

7. மதுரதரபிகநிகர நினதமுகரே 
விலஸ தசனருசி ருசிரசிகரே (ப்ரவிச)

தசனருசி ருசிரசிகரே-அழகிய பற்களின் ஒளியை உடையவளே
மதுரதரபிகநிகர நினதமுகரே—குயில்கள் கூவுவதால் மதுரமான் ஒலியை உடைய அந்த இடத்தில் 
விலஸ- இன்புறுவாயாக

8 விஹித பத்மாவதீ ஸுகஸமாஜே
குரு முராரே மங்கள சதானி 
பணதி ஜயதேவகவிராஜராஜே ( ப்ரவிச)

ஜயதேவ கவிராஜராஜே –ஜெயதேவராம் கவிகளின் சக்ரவர்த்தியானவர்
விஹிதபத்மாவதீ ஸுக ஸமாஜே – பத்மாவதியின் அனுகூலமான அருகாமையில் 
பணதி- இதைக் கூறினார்.
முராரே- ஹே முராரி 
மங்கலசதானி குரு- சர்வமங்களத்தையும் செய்வாயாக.





No comments:

Post a Comment