Tuesday, June 12, 2018

Ashtapadi 15 in tamil

courtesy:Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 15

அஷ்டபதி 15
ராதை கண்ணன்யாரோ ஒருவளுடன் இன்புற்றிருபப்தால் தான் வரவில்லை என்று எண்ணி தான் அவனோடு இருக்கையில் நிகழ்ந்த எல்லா செயல்களும் இன்னொரு பெண்ணிடமும் நடப்பதாக எண்ணித் துயருறுகிறாள்.

1.ஸமுதிதமதனே ரமணீவதனே சும்பனவலிதாதரே 
ம்ருகமத திலகம் லிகதி ஸபுலகம் ம்ருகமிவ ரஜநீகரே

ஸமுதிதமதனே – காதல் மேலீட்டால் 
சும்பனவலிதாதரே – முத்தமிடப்பட்ட உதடுகளுடன் கூடிய
ரமணீவதனே –அழகியின் முகத்தில்
சபுலகம் – புளகாங்கிதனாய் 
ரஜநீகரே ம்ருகமிவ- சந்திரனில் காணப்படும் மான் பிம்பத்தைப்போல் 
ம்ருகமத திலகம் – கஸ்தூரி திலகத்தை 
லிகதி- இடுகிறான்

ரமதே யமுனாபுலினவனே விஜயீ முராரிரதுனா (த்ருவ பதம்)
விஜயீ முராரி:-வெற்றிபெறுபவனான கண்ணன் 
அதுனா- இப்போது
யமுனாபுலினவனே – யமுனையின் மணற்பாங்கான வனத்தில்
ரமதே – களிக்கிறான்.

2.கனசயருசிரே ரசயதி சிகுரே தரளித தருணானனே
குரபககுஸுமம் சபலாஸுஷமம் ரதிபதிம்ருககானனே (ரமதே)

தரளிததருணானனே – அசையும் அழகிய முகத்தில்
கனசயருசிரே - –கருத்தமேகம் போல் அடர்ந்த 
ரதிபதிம்ருககானனே – மன்மதன் என்ற மான் சஞ்சரிக்கும்காடுபோன்ற 
சிகரே- அவளுடைய கூந்தலில்
சபலாஸுஷமம்- மின்னல்,போன்ற 
குரபககுஸுமம் –சிவந்த மலரை 
ரசயதி- சூடுகிறான்

3. கடயதி ஸுகனே குசயுகககனே ம்ருகமதருசிரூஷிதே 
மணிஸரம் அமலம் தாரகபடலம் நகபதசசிபூஷிதே (ரமதே)

ம்ருகமதருசிரூஷிதே – கஸ்தூரியின் வாசம் கொண்ட
நகபத சசிபூஷிதே - அவனுடைய நகங்கள் பட்டு பிறைச்சந்திரன் உள்ளதுபோல் தோன்றிய
ஸுகனே குசயுகககனே- அவளுடைய அகன்ற ஆகாயம் போன்ற ஸ்தனங்களின் மேல் 
தாரகபடலம் - நக்ஷத்திரக் கூட்டங்கள் போன்ற
மணிஸரம் அமலம்- அழகிய முத்துமாலையை 
கடயதி-அணிவிக்கிறான்

4.ஜிதபிஸசகலே ம்ருதுபுஜயுகளே கரதல நளிநீதளே
மரகதவலயம் மதுகரநிசயம் விதரதி ஹிம சீதலே (ரமதே)

ஜிதபிஸசகலே – தாமரைத்தண்டை மிஞ்சிய 
ஹிமசீதலே- குளிர்ந்த
ம்ருதுபுஜயுகளே –மிருதுவான புஜங்களை உடைய 
கரதலநளிநீதலே –தாமரை ஒத்த அவள் கரங்களில் 
மதுகரநிசயம் – வண்டு சூழ்ந்தாற்போல் உள்ள 
மரகதவலயம் – பச்சைக்கல் வளையை
விதரதி – அணிவிக்கிறான்.

5. ரதிக்ருஹஜகனே விபுலாபகனே மனஸிஜகனகாஸனே 
மணிமயரஸனம் தோரணஹஸனம் விகிரதி க்ருதவாஸனே(ரமதே)

விபுலாபகனே – அகன்ற 
மனஸிஜகனகாஸனே – மன்மதனின் தங்கசிம்மாசனம் போன்ற 
ரதிக்ருஹஜகனே –காதல் க்ருஹமான அவள் இடுப்பை
க்ருதவாஸனே- இருப்பிடமாகக் கொண்ட 
மணிமயரஸனம்-பொன்மணிகளைக் கொண்ட ஒட்டியாணம் 
விகிரதி – உடைந்து சிதறுகிறது. (கண்ணன் பிடித்து இழுப்பதால்)
.
6. சரண கிஸலயே கமலாநிலயே நகமணிகணபூஷிதே
பஹிரபவரணம் யாவகபரணம் ஜனயதி ஹ்ருதி யோஜிதே (ரமதே )

கமலாநிலயே ஹ்ருதி யோஜிதே- ஸ்ரீதேவி குடிகொண்ட மார்பில் வைக்கப்பட்ட 
நகமணிகணபூஷிதே- சிவந்த மணிகள் போன்ற நகங்களுடைய
சரண கிஸலயே-அவளுடைய தளிர்போன்ற பாதத்தில்
பஹிரபவரணம் – மேல்பூச்சாக 
யாவகபரணம் – செம்பஞ்சுக்குழம்பை 
ஜனயதி- பூசுகிறான்.

7.ரமயதிசஸுப்ருசம் காமபி ஸுத்ருசம் கலஹலதரஸோதரே 
கிம் அபலம் அவசம் சிரம் இஹ விரஸம் வத சகி விடபோதரே (ரமதே)
கலஹலஸோதரே – அந்த வஞ்சகமான கண்ணன்
காமபி ஸுத்ருசம் – வேறு ஒரு பெண்ணை 
ஸுப்ருசம் ரமயதி- மிகவும் சந்தோஷப் படுத்துகையில் 
சகி- சகியே
கிம் ஏன்
இஹ –இங்கு
விடபோதரே - கொடிவீட்டில் 
அபலம்- வீணாக 
சிரம் – நெடு நேரம்
விரஸம்-பலனின்றி 
அவஸம்- இருக்க வேண்டும்.

8. இஹரஸபணனே க்ருதஹரிகுணனே மதிரிபுபத சேவகே
கலியுகசரிதம் ந வஸது துரிதம் கவிந்ருப ஜயதேவகே (ரமதி)

இஹ- இங்கு
ரஸபணனே – சுவைமிக்க
க்ருத ஹரிகுணனே- ஹரியின் சிறப்பை கூறி
மதுரிபுபதசேவகே- ஹரியின் பதம் துதிக்கும்
கவிந்ருப ஜயதேவகே- கவிராஜரான ஜெயதேவருக்கு 
கலியுகசரிதம் – கலியுகத்தின் இயல்பான 
துரிதம் –துன்பங்கள் 
ந வஸது- இல்லாமல் இருக்கட்டும்.


No comments:

Post a Comment