Wednesday, June 6, 2018

Ashtapadi 11 in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

அஷ்டபதி 11

அஷ்டபதி 11
சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்

1.ரதிஸுகஸாரே கதமபிஸாரே மதன மனோஹர வேஷம் 
ந குரு நிதம்பினி கமனவிலம்பனம் அனுஸர தம் ஹ்ருதயேசம்

ரதிசுகஸாரே- காதல் விளையாட்டுக்காக 
அபிஸாரே- குறிக்கப்பட்ட இடத்திற்கு
கதம்- சென்றிருக்கும்
மதனமநோஹரவேஷம் –காமனைப்போல் அழகான உருவத்துடன் உள்ள
ஹ்ருதயேசம்- உன் உள்ளத்தில் குடிகொண்ட 
தம் – அந்த கண்ணனை
அனுஸர – பின் தொடர்ந்து செல்
.நிதம்பினி- அழகான இடுப்பை உடையவளே 
கமனவிலம்பனம் – செல்வதில் தாமதம் 
ந குரு செய்யாதே 
.

தீரஸமீரே யமுனாதீரே வஸதி வனே வனமாலீ கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ (த்ருவபதம்)

வனமாலீ – வனமாலை தரித்தவனாய்
கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ- கோபியருடன் விளையாடுவதில் இச்சை கொண்ட கண்ணன் 
தீரஸமீரே- மென்மையான காற்று வீசும்
யமுனாதீரே – யமுனையின் தீரத்தில் 
வஸதி – இருக்கிறான்.

2.நாமஸமேதம் க்ருதக ஸங்கேதம் வாதயதே ம்ருதுவேணும்
பஹுமனுதே அதனு தே தனுஸங்கதபவனசலிதம் அபி ரேணும்.( தீரஸமீரே)

ம்ருது வேணும்- மதுரமான புல்லாங்குழலை 
நாமஸமேதம் க்ருதகசங்கேதம் –உன்பெயரைச்சொல்லி கூப்பிடுவதுபோன்ற பாவனையில்
வாதயதி- வாசிக்கிறான்.
தி – உன்னுடைய 
தனுஸங்கத பவனசலிதம் – உன் மேனியைத்தழுவிய காற்றினால் கொணரப்பட்ட 
ரேணும் அபி – மண்துகளைக்கூட 
அதனு பஹுமனுதே – மிகவும் மேலானதாக நினைக்கிறான்

3. பததி பதத்ரே விசலிதபத்ரே சங்கித பவதுபயானம் 
ரசயதி சயனம் ஸசகிதநயனம் பச்யதி தவ பந்தானம் .( தீரஸமீரே)

பததி பதத்ரே- ஒரு பறவை உட்காரும்போது 
விசலிதபத்ரே – இலைகள் சலசலக்கையில்
சங்கித பவதுபயானம் – நீ வருகிறாயோ என சந்தேகித்து 
ரசயதி சயனம்- உனக்கு மஞ்சத்தை விரிக்கிறான். 
ஸசகித நயனம் – கண்களில் எதிர்பார்ப்புடன்
தவ பந்தானம் – நீவரும் வழியை 
பச்யதி- பார்க்கிறான்

4. முகரம் அதீரம் த்யஜ மஞ்ஜீரம் ரிபும் இவ கேளிஷு லோலம் 
சல சகிகுஞ்சம் ஸதிமிர புஞ்சம் சீலய நீலநிசோலம் ( தீரஸமீரே)

கேலிஷு லோலம்- காதல் விளயாட்டில் அசைந்து
முகரம் அதீரம்-மிகவும் சப்தம் செய்யும் 
மஞ்ஜீரம்- உன் காற்சலங்கையை 
ரிபும் இவ – எதிரி என்று நினைத்து
த்யஜ- கழற்றிவிடு. 
ஸதிமிரபுஞ்சம் – அடர்ந்த இருளான 
குஞ்சம் – கொடிவீட்டிற்கு
நீல நிசோலம் - கருப்பு நிறமுள்ள வஸ்திரத்தை
சீலய – உடுத்திக்கொள்
சல சகி- செல் தோழி
அவள் செல்வதை யாரும் அறியாதிருக்கும் பொருட்டு இந்த அறிவுரை.

5. உரஸி முராரேருபஹிதஹாரே கன இவ தரளபலாகே 
தடிதிவ பீதே ரதிவிபரீதே ராஜஸி ஸுக்ருதவிபாகே ( தீரஸமீரே)

ஸுக்ருதவிபாகே – உன்னுடைய நற்கர்மபலனாக 
தரள பலாகே - சலிக்கும் கொக்குகள் போன்ற 
உபஹித ஹாரே –மலைகளால் அலங்கரிக்கப்பட்ட 
கன இவ முராரே: உரஸி- கறுத்த மேகம் போன்ற ஹரியின் மார்பில்
பீதே – பொன்வண்ணமான நீ 
ரதிவிபரீதே – காதல் மேலிட்டு
தடித் இவ -மின்னலைப்போல் 
ராஜஸி-பிரகாசிக்கிறாய்

6. விகளிதவஸனம் பரிஹ்ருதரஸனம் கடய ஜகனம் அபிதானம் 
கிஸலய சயனே பங்கஜ நயனே நிதிம் இவ ஹர்ஷநிதானம் ( தீர ஸமீரே )

பங்கஜநயனே- ப்ங்கஜலோசனனாகிய கண்ணனிடம்
கிஸலயசயனே – தளிர்களால் ஆன மஞ்சத்தில்
பரிஹ்ருத ரஸனம்- ஒட்டியாணம் அற்ற 
விகலித வசனம் – தளர்ந்த உடையுடன் 
ஜகனம் அபிதானம் –இடை ஆபரணம் அற்ற உன்னை 
ஹர்ஷநிதானம் – பெரும் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய 
நிதிம் இவ –பெரும் நிதியைப் போல
கடய- சமர்ப்பிப்பாயாக.

6.ஹரிரபிமாநீ ரஜனிரிதாநீம் இயமபி யாதி விராமம்
குரு மம வசனம் ஸத்வரரசனம் பூரய மதுரிபுகாமம்(தீரஸமீரே )

ஹரி: - கிருஷ்ணன் 
அபிமாநீ- பெருமை கொண்டவன் 
இதாநீம் – இப்போது 
இயம் ரஜனி: அபி- இந்த இரவும் 
யதிவிராமம்- - முடிவை அடையப் போகிறது.
குரு மம வசனம் – என்சொல் கேட்பாயாக
ஸத்வரரசனம்- இது விரைவில் பயனை அளிக்கும் 
மதுரிபுகாமம் – கண்ணனின் ஆவலை பூர்த்தி செய்.

8.ஸ்ரீஜயதேவேக்ருத ஹரிசேவே பணதி பரம ரமணீயம் 
ப்ரமுதிதஹ்ருதயம் ஹரிமதிஸதயம் நமத ஸுக்ருதகமநீயம் (தீரஸமீரே )

ஸ்ரீஜயதேவே –ஸ்ரீஜயதேவரால்
க்ருத ஹரி சேவே- ஸ்ரீ ஹரியின் சேவையாக 
பணிதம் – இது செய்யப்பட்டது. 
பரமரமணீயம் – மிகவும் அழகிய 
ப்ரமுதிதஹ்ருதயம்- மனதுக்கு ஆனந்தத்தைக்கொடுக்கும்
அதிஸதயம்- .மிகவும் தயை உள்ள 
ஸுக்ருதகமநீயம் –நற் கர்மாவின் பலனாக உள்ள
ஹரிம் – ஹரியை 
நமத – வணங்குவீர்.




No comments:

Post a Comment