Friday, June 8, 2018

About Mahabalipuram temple in Perumpanaatru padai

Courtesy:Sri.Balasubramanan Vaidyanathan
மல்லை கடற்கரைக் கோவில்

வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங்குழை
இரை தேர் மணிச்சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடற் செல்லாது
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த 
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனின் பைபயத் தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லைப் போகி...

நீர்ப்பெயற்று (மல்லையின் சங்ககாலப்பெயர்) பற்றி பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்

குடிநீர் சேகரிக்கும் துறையில் வண்டல் மண்ணில் விளையாடும் மகளிர் நீரில் விளையாடத் தங்கள் பொற்குழைகளைக் கழற்றி வைத்துச்சென்றனர். மீன்கொத்திப்பறவை அதை இரையென எண்ணி எடுத்தது. அதைப்பறவைகள் புலம்பும் பனைமர மடலுக்கு எடுத்துச்செல்லாமல் கேள்வி அந்தணரின் கர்மாவைச் செய்த வேள்வித்தூணின் மீது வைத்தது. அது யவனர்களின் அன்னவிளக்கின் மேலிருந்த ஒளி போலவும், விடியலில் தோன்றும் மங்கலான விண்மீன் போன்றும் விளங்கிய நீர்ப்பெயற்று எல்லையை அடைந்து....

No comments:

Post a Comment