Monday, May 28, 2018

Muruga bhakti -spiritual story

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி*
____________________________________
☘ *பிடிக்க ஓடு,..பிரகாரத்தைச் சுத்து....*☘
_____________________________________
ஒரு கிராமத்தில் முருகையா, தண்டபாணி என்ற நண்பர்கள் வசித்தனர்.

இவர்களுக்கு மாடு மேய்ப்பதே தொழில்.

இங்குள்ள முருகன் கோயில் முன்பு இருக்கும் மைதானத்தில் மாடு மேய்ப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

முருகையா மட்டும் காலையில், கோயிலுக்குப் போய் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவான்.

தண்டபாணியோ, கோயிலுக்கு அருகில் கூட  செல்வதில்லை.

புதன்கிழமையான அன்று கோயிலில் ஏனோ, பக்தர்கள் கூட்டம் குறைவாகயிருந்தது.

முருகையா, மேய்த்துக் கொண்டிருந்த பசுக்கன்று ஒன்று திடீரென துள்ளிக் குதித்து ஓடிவிளையாட ஆரம்பித்தது.

சாலையில் போகிற வண்டிகளில் முட்டி விழுந்து விட்டால், ஆபத்தாகி விடுமே என பயந்த முருகையா, அதைப் பிடிக்க எழுந்தோடிப் போனான்.

இவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கன்று திசைமாறி ஓட ஆரம்பித்தது.

எதிர்பாராத விதமாக கோயிலுக்குள் நுழைந்து விட்டது. கன்றைப் பற்றியிழுக்க‌ முருகையா வரும் கோயிலுக்குள் உள் புகுந்து விட்டான்.

பிரசாதத்துக்காக கூட கோயிலுக்கு போகாத முருகையா, இன்று தான் முதன் முதலாக கோயிலுக்குள் நுழைந்திருக்கிறான்.

கன்றைப் பிடிக்கப் பாய்ந்தான். அது பயந்து பாய்ந்து பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி நாலுகால் பாய்ச்சலில் ஓடியது.

முருகையாவும் விடாது துரத்தியோடினான்.  ஆனால், அது சிக்கவில்லை.

இப்படியாக பதினோறு முறை பிரகாரத்தைச் சுற்றியது. இப்படி சுற்றி முடித்த கன்றுக்கு களைப்பு ஏற்படவே, இந்த நேரத்தில் கன்றைப் பிடிக்க முருகையா அருகில் நெருங்கினான்.

அதுவரை நின்றிருந்த கன்று, மறுபடியும், பாய்ந்தோடி கருவறைக்குள் ஓடி முருகனின் பின்னால் போய் நின்று கொண்டது.

முருகையாவோ முருகன் முன்னால் வந்து நின்றான். சிறுதுளி முருகனையே பார்த்தவன், உள்ளே போக அவனுக்கு விருப்பமில்லை.

வெளியே வந்து ஒளிந்து நின்று கொண்டான். ஒரு வழியாக கன்று வெளியே வரவும் அதைப் பிடித்துக் கொண்டான்.

கயிறை நன்றாகப் பிடித்திழுத்தபடி மந்தைவெளிக்கு வந்து கட்டிப் போட்டான்.

இப்போது, கோயில் பிரசாதப் பொங்கலை சாப்பிட்டு முடித்த தண்டபாணி, கோயிலுக்கு எதிராக இருந்த தீர்த்தக்குளத்தில் கையை அழம்பினான்.

தீர்த்தக் கரையை விட்டு வெளியேறி கையை உதறினான் தண்டபாணி. அவன் கையில் படிந்திருந்த தீர்த்தத் துளிகள் முருகையன் தலையில் சிறிதளவு பட்டுவிட்டது.

இதன்பிறகு பல காலங்கள் கடந்து போய்விட்டது. இவர்கள் இருவரும் மரணத்தை தழுவியிருந்தனர்.

எம தூதர்கள் எமன் முன்னால் கொண்டு வந்து இவர்கள் இருவரையும்  நிறுத்தினர்.

சித்ரகுப்தன் அவர்களின் பாவ புண்ணியக் கணக்கைப் படித்து வாசித்தான்.

தர்மராஜா! இந்த முருகையா பிரசாதத்துக்காக மட்டுமே முருகன் கோயிலுக்குப் போயிருக்கிறான். ஆனால், இந்த  தண்டபாணியோ இதைக்கூட செய்யவில்லை.

இவர்கள் இருவரையும் நரகத்திற்கு அனுப்பி விடட்டுமா? என்றான்.

எமதர்மராஜா வேண்டாமென்று கூறிவிட்டு...............

சித்ரகுப்தா அவசரப் படாதே! இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும் படி முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது என்றார். 

ஆச்சரியமாக இருக்கிறதே! இவர்களுக்கு சொர்க்கமா?.

ஆம் சித்ரகுப்தனே! இந்த முருகையா கோயிலுக்கு வழிபாட்டுக்கென வராவிட்டாலும், கன்று குட்டியைப் பிடிக்கிற சாக்கில், பதினோறு தடவை கோயில் பிரகாரத்தை வலம் செய்து விட்டான்.

கருவறை முன்னாலும் நின்று, முருகனின் கருணை பொழி முகத்தை பார்த்து விட்டான். 

அந்த தண்டபாணியனவன், தினமும் கோயில் குளத்தில் கைகழுவி விட்டு, கையை உதறும்போது தீர்த்தம் முருகையன் தலையில் பட ஏதுவானான்! அறியாமல் செய்தாலும், இவையும் புண்ணியச் செயல்களே! 

இதற்காக கருணாமூர்த்தியான கந்தன், இவர்களை சொர்க்கம் அனுப்பச் சொல்லியுள்ளார்..*

No comments:

Post a Comment