Wednesday, April 25, 2018

Story of nandanar

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
__________________________________
         *தையா.....தக்கா!*
__________________________________
சிவனடியார்களில் மிக மிக உயர்வாகப் போற்றப் படுபவர்களில் நந்தனாரும் ஒருவராவார்.

வாழ்நாளில் சிதம்பரமே செல்லாதிருந்த இவருக்கு, எப்படியாவது சிதம்பரம் சென்று சிதம்பரத்து ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட வெகு நாளைய கனவாகவே கண்டு வந்தார்.

ஆலயத் தொண்டு செய்து கொண்டிருந்த நந்தனார், சிதம்பரம் சென்று நடராஜர் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து உருகினார்.

இதற்கு நந்தனாரின் குலம் தடையாக இருக்கவே, *நாளை போகலாம்!, நாளை போகலாம்!!* எனச் சொல்லி சொல்லியே ஆலயத் தொண்டும் அடியார் தொண்டும் செய்து  கொண்டிருந்தார்.

நந்தனாரும், வயலே பிரதானம், அடியார் தொண்டே கதி, என்று இருந்தாலும், அவர் மனம் முழுக்க முழுக்க சிதம்பரம் நடராஜர் பெருமான்தான் ஆடல் புரிந்தவண்ணமிருந்தார்.

வயல்களிலிருந்து களத்திற்கு கொண்டு வந்து தான் சேமித்த நெல்மணிக்குவியல்களைத் திரும்பிப் பார்த்தார்.

அந்த நெல்மணிக் குவியல்கள்கூட அவருக்கு சிவலிங்கமாகத் தெரிந்தது.

க்ஷவீதியோரங்களில் காணப்பட்ட விருட்சங்களும்கூட, அதன் கிளைகள் விரிந்து பிரிந்து, நந்தனாரின் கண்களுக்கு றசிதம்பரம் நடராஜர் ஆடல்போல் தெரிந்தது.

தெரிந்ததோ, இல்லையோ?, அக்கிளைகள் யாவையும், நடராஜப் திருமேனியையே நினைந்து கொண்டிருந்த நந்தனாருக்கு, மரக்கிளை பிரிவுகள், நடராஜனின் ஆடல் நளினமாகவே தோன்றியது.

இதுதான் உண்மை. ஏனெனில், நந்தனாரின் பக்தியை, இறைவன் நந்தனார் மீது உளவுப் பார்வை செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

நந்தனாரும் சிதம்பர நடராஜப் பெருமானின் நினைவிலிருந்து விடுபடவே இல்லை.

ஒருநாளிலிருந்து ஒருநாள்சிதம்பரம் நடராஜப் பெருமானைக் காணும் ஆவல் கூடிக் கொண்டே இருந்து வந்தது.

இதனால் நந்தனார், சிதம்பரம் எப்போது போகப் போகிறாய்? என்று கேட்போரிடம்.... *நாளை போகலாம்* என்று கூறி  கூறிக் கொண்டே இருந்தார்.

நந்தனாரைப் பார்ப்பவர் யாவரும், நீ சிதம்பரம் எப்போது செல்வாய்? எனக் கேட்காதவரே இல்லை.

அப்படி கேட்போரிடம் நந்தனார், *நாளை போகலாம் நாளை போகிறேன்* என்பார்.

ஒரு நாள், சாலையில் நந்தனார் நடந்து போய்க் கொண்டிருந்தார்.

நந்தனார் நடந்து சென்று கொண்டிருக்கும்போதே, அவர் நினைவலைகளில், சிதம்பரம் நடராஜப் பெருமானின் திருமேனி எவ்விதம் இருக்கும்? நாம் அவரைக் காணும்போது எவ்விதம் கைதொழுவோம் என கற்பனைகளில் உழன்றவாறே நடந்தார்.

அப்போது, இவரெதிரே மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான் ஒருவன்.

வண்டிக்காரன் நந்தனாரைக் கண்டு கைகாட்டி *ஏ...உன்னைத் தான்..!* என நிறுத்தினார்.

சிதம்பர நடராஜப் பெருமானின் திருமேனிகளை நினைத்துக் கொண்டே நந்தனார் சென்றது, வண்டிக்காரன் கூவியழைத்து நந்தனாரின் காதில் விழவில்லை.

மீண்டும் மாட்டுவண்டிக்காரன் *ஏ..உன்னைத்..தான்!* என கத்தினான்.

இப்போது நந்தனார் மாட்டுவண்டிக்காரனை திரும்பி பார்த்தார்.

சிதம்பரம் போகும் வழி இதுதானா? எனக் கேட்டான்.

*சிதம்பரம்* என்று வண்டிக்காரன் கேட்டது நந்தனாரின் காதில் தேனாக  விழுந்தது.

அவ்வளவுதான்.......

மாட்டுவண்டியையும், வண்டிக்காரணையும் கண்டு ஓடிவந்தார் நந்தனார்.

சாலையில் இருபுறங்களிலும் தெரிவதெல்லாம் எல்லாத்திலும் மூவரிகளில் வெள்ளிய விபூதி தரித்த காட்சியாய் நந்தனாரின் கண்களுக்குத் தென்பட்டது.

சாலையில் ஓரத்தில் பூத்திருந்த பூசனிக்காய்களில் தெரியும் வரிகள்கூட, அவருக்கு மூவிரலால் விபூதி தரித்தனபோல் தெரிந்திருக்கிறது.

வெள்ளிய விபூதி தரித்ததை போலக் கண்ட அனைத்தும், விபூதி தரித்த அடியார்கள் போல எண்ணம் கொண்டார்.

வண்டிக்கு அருகில் வந்துவிட்ட நந்தனாருக்கு, வண்டிக்காரனை *குருநாதா! குருநாதா!!* என முழங்கி வணங்கினார்.

வண்டியைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்கினார்.

அவர் மனத்தில் நிறைந்திருந்தது என்னவோ சிதம்பரம் நடராஜப் பெருமானே என்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஆனால் இங்கு இப்போது இவ்வளவு கழிப்புடன் அவர் இருப்பது எந்த நிலையிலோ நமக்குத் தெரியல.

வணங்கி மகிழ்ந்தபடி மாட்டுவண்டியை சுற்றி வந்தவர், திடீரென்று வண்டிக்காரனைப் பார்த்து நின்ற படி.........

*தையா தக்கா!....., தையா தக்கா!.... தை.....* என நடனமாடினார்.

வண்டிக்காரனுக்கு ஒன்றும் புரியாமல் நந்தனாரின் செய்கைகளை பார்த்தபடி இருந்தார்.

நந்தனார் *தையா தக்கா, தையா தக்கா'* என நடனமாட, நடனமாட....அவர் கண்களில் கண்ணீர் பெருகியொழுகியது.

நடராஜப் பெருமானின் மீது, நந்தனார் எவ்வளவு ஈரம் வைத்திருந்தார் என்பதை இவரது கண்களின் ஒழுகும் கண்ணீர் கூறியது.

ஆக... நந்தனார், சிதம்பரம் சென்று நடராஜ பெருமானை வணங்க, இறைவன் அருளியது இதற்குப் பிற்பாடுதான்.

அதற்கு முன்பே, சிதம்பர நடராஜரை தரிசித்த நிகழா நிகழ்வுகளை, நிகழ்ந்த நினைவுகளாய் நினைத்து வாழ்ந்தவர் இந்த நந்தனார்.

ஏதோ கற்பனைக்காக, அடியேன் இதை பதிந்ததாய் யாரும் நினைக்க வேண்டாம்.

ஊத்துக்காடு வேங்கிட சுப்பையர் பாடிய பாடலை அச்சுத்தாளில் இக்குறிப்புகளைக் கண்டேன். அதைத்தான் இங்கு வரைந்தேன்.

சிதம்பரம் என்று ஒரு தரம் சொன்னதுமே, இருந்த இடத்திலிருந்தே மனதால் சிதம்பரம் வரை சென்று வணங்கி வந்தவர் இந்த நந்தனார்.

இன்று நாம் எவ்விதம் இருக்கிறோம்?

எவ்விதம் ஈசன்மீது பக்தி செலுத்துகிறோம்?

எந்த நிலையான தன்மையில், நம் ஆலய வணக்கம் இருக்கிறது?

திருபுண்கூரில் நந்தனார் வெட்டிய திருக்குளம், கோயிலுக்குப் பின்புறம் இருக்கின்றது. ஆலயம் செல்லும்போது இதை ஒரு முறை சென்று பாருங்கள்.

இதில், ஈசன் மீது இவர் வைத்திருந்த பாசம் எவ்வளவு என்பது தெரியும்.

ஆனால், நாம் இறைவனிடம் வேண்டுவது எல்லாம், நல்லது மட்டுமே நடக்கனும், கேடு எதுவும் வேண்டாம் என வேண்டுவோம்.

எந்த நாயன்மார்களும் தமக்கென எதுவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டது இல்லை.

இறைவன், நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான அன்பையும் பக்தியையுந்தான். 

இனிமேயாயினும் அந்த பக்தியில் கடையொழுகுவோமாக!

*தையா தக்கா, தையா தக்கா* என்று இன்று அடியேனும் கொஞ்சம் ஆடிக் கொண்டேன்.

நான் ஏன்? தையா தக்கா தையா தக்கா என்று ஆடினேன் என நினைக்கிறீர்களா?

ஆமாம்! ஆடினேன் உண்மைதான்.

ஏனெனில், அடியார் கூட்டம் பெருகவும், சைவம் பெருகவும் முனைப்பெடுத்து வரும்போது.....

சில வருடங்களாக அடிகளாராக்க முனைந்தவர்களில், ருத்ராட்சத்தை அனியத் தயங்கிய ஒருவர் இன்று ருத்ராட்சம் கேட்டு கொண்டு வரச்செய்து  அணிந்து கொண்டார்.

*தையா தக்கா, தையா தக்கா*

         திருச்சிற்றம்பலம்.
__________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment