Friday, April 13, 2018

Narasimha avatar

படித்ததில் பிடித்தது :
சிங்கம் என்று நினைத்தாலே நமக்கு என்ன தோன்றும்? பயங்கர உருவத்தோடு இருக்கும்; வாய் பிளந்திருக்கும்; பிடரி சிலிர்த்திருக்கும்; கண்கள் எரிதழலைப் போல இருக்கும் ; நாக்கைச் சுழற்றினாலே பிராணிகள் உயிர்போய்விடும் என்றுதானே உடனே நினைக்கிறோம்? இல்லை! இல்லை! பிரியங்கரமான உருவம். நரசிம்மப் பெருமானுடைய உருவம் அழகானது இது ஒரு ஆழ்வாரின் கோணம்..

ஒரு குழந்தை கூப்பிட்டால் வரவேண்டிய அவசியம் பகவானுக்கு இல்லையே? அப்படி ஓடோடி வந்ததுடன், அவன் கைகாட்டிய இடத்தில் 'பிரஹ்லாத வரதனாய்'க் காட்சி அளித்தானல்லவா? இவர் எங்கேயோ காண்பிக்க அவர் எங்கேயோ தோன்றவில்லை! பிரஹ்லாதன் என்ற சிறுவன் எங்கு கைகாட்டினானோ, அதே இடத்தில் தோன்றினார்!

இன்னும் ஒரு அழகும் உள்ளது.

சேராத இரண்டை சேர்த்த பெருமை! அதாவது, மனிதனும் சிங்கமும் ஒன்றிணைந்த திருக்கோலம்.
ஒவ்வொரு அவதாரத்துக்கும் இப்படி தனிச்சிறப்பு உள்ளது. மத்ஸ்யாவதாரத்துக்குத் தனிச்சிறப்புள்ளது. கூர்மாவதாரத்துக்குத் தனிச் சிறப்புள்ளது. அதேபோல் இப்போது நாம் அனுபவிக்கப்போகும் நரசிம்மாவதாரத்துக்கும் தனிச்சிறப்புள்ளது. மற்ற எந்த அவதாரத்தையும்விட இதில் உள்ள தனிச்சிறப்பு, இது நமக்கென்று ஏற்பட்ட அவதாரம். எப்போதும் அடியவர்களுக்குக் கதை கதையாக வேதாந்த அர்த்தங்களாக சொல்லிக் கொண்டுபோனால், பிரயோஜனம் கிடையாது. எனக்கு அதில் ஏதாவது இருக்கிறதா என்றுதானே முதலில் கேட்போம்! நான் வெளிவருவதற்கு ஏதாவது உண்டா என்றுதானே கேட்போம்!
ஆக, பத்து அவதாரங்களிலே நமக்கென்று ஏற்பட்டிருக்கும் அவதாரம் நரசிம்மாவதாரம்.

இந்த அவதாரத்தின்போது, பகவான் எழுந்தருளியிருந்தது வெகு குறைவான நேரம். ஒரு முஹூர்த்தகாலம்தான் பகவான் இருந்திருக்கிறார். அதற்குள்ளே பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்ரஹித்தார்; ஹிரண்ய கசிபுவை முடித்தார்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

என்று கண்ணன் கீதையிலே சாதித்தாற்போலே, மூன்று பிரயோஜனங்களையும் நரசிம்மர் முடித்தார். பகவான் அவதரிக்கிறான் என்று சொன்னாலே, அது இந்த மூன்று பயன்களுக்காக!

No comments:

Post a Comment