Tuesday, April 10, 2018

Different shantis at different ages

Ranganatha Vadhyar:
திருநெல்வேலி வேதப்ரம்ஹஸ்ரீ ஆண்டிவாத்யார் எழுதிய சதாபிஷேக புத்தகத்தில் இருந்து.....

சாந்திகள் பலவிதம்:

அநேக சாந்திகள் ஜன்ம நக்ஷத்ரத்தையே பிரதானமாகக் கொண்டு செய்யப்படுகின்றன. 

பிறந்த குழந்தைக்கு ஓர் ஆண்டு நிறையும் ஜன்ம மாஸ ஜன்ம நக்ஷத்திர நாளில் செய்யும் ஆயுஷ்ய ஹோமத்துடன் கூடிய சாந்தி அப்த பூர்த்தி. 

பின்னர் ஒவ்வொரு வார்ஷீக ஜன்ம நக்ஷத்ரம் தோறும் ஆயுஷ்ய ஹோமம், நக்ஷத்ர ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம் ஆகிய ஏதாவதொன்று செய்வது நம் மூதாதையரின் வழக்கமாக இருந்து வந்தது. 

மாதந்தோறும் ஒவ்வொரு ஜன்ம நக்ஷத்ரம் அரிஷ்டகாலம் என்று கூறப்பட்டுள்ளதால், சில சுப காரியங்களை ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்யக்கூடாது என்று விலக்கப்பட்டிருக்கிறது.

 இது போல் ஜன்ம மாதமும் ஜன்ம வருஷமும் அரிஷ்ட காலம். பிரதி மாதம், பிரதி வருஷம் ஜன்ம வருஷம் ஜன்ம நக்ஷத்ரத்தில் நிவர்த்திக்காக சாந்தி செய்ய முடியாவிட்டாலும் கீழ்க்காணும் சில குறிப்பிட்ட சாந்திகளையாவது செய்து கொள்வது நல்லது.

சாந்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்.

1.பீம சாந்தி= 55ஆவது வயது ஆரம்பம்.

2.உக்ரரத சாந்தி= 60ஆவது வயது ஆரம்பம்,

3.ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி= 61ஆவது வயது ஆரம்பம்.

4.பீமரத சாந்தி= 70ஆவது வயது ஆரம்பம்.

5.ரத சாந்தி= 72ஆவது வயது ஆரம்பம்.

6.விஜய சாந்தி= 78ஆவது வயது ஆரம்பம்.

7.சதாபிஷேகம்= 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.

8.ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்)= பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.

9.ம்ருத்யுஞ்ஜய சாந்தி= 85ஆவது முதல் 90க்குள்.

10.பூர்ணாபிஷேகம்= 100ஆவது வயதில் சுபதினத்தில்.

இவற்றில் ஷஷ்டிதமாப்த பூர்த்தி வைபவம், சதாபிஷேகம் ஆகிய இரண்டையும் பலரும் கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment