Thursday, March 1, 2018

Kollikaadu saneeswarar temple

Courtesy:Sri.JK.Sivan

யாத்ரா விபரம் J.K. SIVAN

பொங்கு சனி ஞாபகம்....

ஒரு கதை. அக்னி பகவான் சிவனை வழிபட்டதால் அந்த க்ஷேத்ரம் அக்னிபுரி . தமிழில் கொள்ளிக்காடு. அக்னி சூரியனையும் அவர் மனைவிகள் உஷாதேவியையும், சாயா தேவியையும் ''நீங்கள் கொள்ளிக்காடு சென்று சிவனை வழிபட்டு ஆசி பெறுங்கள்'' என்று சொல்ல, அவர்கள் அனைவரும் சிவனை வழிபட்டு வேண்ட உஷாதேவிக்கு யமதர்மனும், சாயா தேவிக்கு சனிஸ்வரனும் பிறக்கிறார்கள். .

சனிக்கு வருத்தம். ''என்ன இது அக்ரமமாக இருக்கிறதே. பூலோகத்தில் ஜனங்கள் படும் துயரம், துன்பத்துக்கெல்லாம் என் தலை உருள்கிறதே'' என்று அக்னீஸ்வரரை வேண்டுகிறார் சனி பகவான்.

''அப்பனே, சனிஸ்வரா , நீ ஒரு கிரஹம். யாருக்கும் வஞ்சனை இல்லாமல் உனது கடமையை செய்பவன். இங்கே நீ இரு. இந்த அக்னிபுரி இனி பொங்குசனி அருள்கின்ற க்ஷேத்ரம் ஆகட்டும் .இங்கு வரும் பக்தர்களுக்கு உன்னால் நல்லதே நடக்கட்டும் '' என்கிறார் சிவன் ' நிறைய . அதற்குப் பிறகு கேட்கவேண்டுமா? அக்னிபுரி எனும் திருக்கொள்ளிக் காட்டுக்கு அநேக வண்டிகள் பறந்து செல்கின்றன. நானும் சமீபத்தில் அங்கு சென்று பொங்கு சனியை தரிசனம் செயது பிரார்த்தனை செய்து கொண்டதை பற்றி தான் ஒரு யாத்ரா விபரத்தில் எழுதினேனே.

இந்த ஆலயத்தில் வடமேற்கே சனீஸ்வரன் சந்நிதி. வழக்கமாக கோவில்களில் அந்த இடத்தில் மஹாலக்ஷ்மி இருப்பாள். எனவே தான் வாரி வழங்குகிறார் சனீஸ்வரன்.பொங்கு சனி. வழக்கமாக இருக்கும் வில் அம்பு, சூலம், சாட்டை இல்லாமல் இங்கே சனீஸ்வரன் கையில் கலப்பை. கலப்பை ஏர் உழும் கருவி. வளமை , செழிப்பின், சின்னம்.

வடகிழக்கே பைரவர். சனியின் குரு. இப்போது புரிகிறதா ஏன் குரு பார்வைக்கு குருப்பெயர்ச்சிக்கு கூட்டம் ஏன் அம்முகிறது என்று ?

லட்சுமி கடாக்ஷம் வந்து போகும். யாரும் நிலையாக பெறமுடியாது. குபேர சம்பத்து அப்படியல்ல. அதை சனீஸ்வர பகவான் ஒருவன் தான் தரமுடியும். திருநள்ளாறு அதிசயங்கள் பற்றி தான் நிறைய படிக்கிறோமே.

செங்கல்பட்டில் கோதண்டராமர் கோவிலில் ஒரு ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கிறது. அங்கே சனீஸ்வரனை தனது காலின் கீழ் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார் ஆஞ்சநேயர். ஏனென்றால் ராம காரியமாக ஆஞ்சநேயர் சென்றுகொண்டிருக்கும்போது சனீஸ்வரன் அவரை பிடிக்க வருகிறான்.

''நீ அப்புறம் வா நான் பிடிபடுகிறேன். உன் கடமையை நீ செயகிறாய் . நான் என் கடமையை இப்போது முக்கியமாக செய்த்துக்கொண்டிருப்பதால் பிறகு வாயேன்'' -- ஆஞ்சநேயர்.

''இல்லை இப்போதே என் கடமையை நான் செய்யவேண்டுமே '' - சனீஸ்வரன்

''சரி நீ என்னை பிடித்துக்கொள் நானும் என் வேலையை செயகிறேன். நீ என்னை பிடித்தாலும் நான் உன்னை பிடித்தலும் பிடிப்பு ஒன்று தானே'' என ஆஞ்சநேயர் அவனை வாலால் சுருட்டி கட்டி தூக்கிக்கொண்டு பறக்கிறார்.

''என்னை விட்டு விடப்பா '' நான் அப்புறம் வருகிறேன் என்று சனீஸ்வரன் சொல்ல,
''இல்லை, ஒரேயடியாக என்னை பிடித்து விட்டுப்போ. இன்ஸ்டால்மென்டில் வேண்டாம் '' என்று ஹனுமான் சொல்ல,
சனீஸ்வரன் போகாமல் இருக்க தனது காலடியில் மிதித்துக்கொண்டிருப்பது போல் அந்த விக்கிரஹம் அபூர்வமாக உள்ளது. அங்கே சென்றால் நீங்கள் ஆஞ்சநேயர் சனி இருவரையும் தரிசிக்கலாம்.

நேற்று திருநள்ளாற்றில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. எனவே இதை பற்றி எழுத தோன்றியது.



Image may contain: outdoor
No automatic alt text available.
Image may contain: sky and outdoor

No comments:

Post a Comment