யோகவாசிஷ்டம் - வைராக்யப்ரகரணம் -7
ராமன் கூறினான்.
"நான் தீர்த்தயாத்திரை செல்கையில் என்மனதில்
இவ்வாறு தோன்றியது.
இந்த நிலையில்லா உலகில் மக்கள் இன்பம் என்று
எதைக் கூறுகிறார்கள்?
எல்லாஉயிர்களும் இறப்பதற்கே பிறக்கின்றன பிறப்பதற்கே இறக்கின்றன.
ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத உயிர்களுக்கு நம் மனமே சம்பந்தத்தைக் கற்பிக்கிறது.
எல்லாமே நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களே. ஆனால் உண்மையில் மனம் என்பதே பொய்யல்லவா? ஆனால் நாம் அதை உண்மை என்று நம்பி மயங்குகிறோம்.
பாலைவனத்தில் கானல் நீரை நாடி ஒடுவதுபோன்றது வாழ்க்கை.
நாம் எவர்க்கும் அடிமைகள் அல்ல. ஆனாலும்
இந்த சரீரத்துக்கும் இந்த்ரியங்களுக்கும் அடிமைப்பட்டே வாழ்கிறோம்.
உண்மை அறியாமல் காட்டுக்குள் வழி தெரியாத வழிப்போக்கனைப் போல் அல்லலுறுகிறோம்.
இந்த்ரிய சுகங்கள் பலம் வாய்ந்த மரங்களை வேரோடு சாய்க்கும் சூறாவளியைப் போல நம்மை நாசம் செய்கின்றன.
இந்த துன்பம் நீங்குவது எவ்வாறு?செல்வம் , மக்கள் இல்லறம் இவை எனக்கு ஒரு சுகத்தையும் கொடுப்பதாகத் தோன்றவில்லை. செல்வம் , வசதிகள் இவை கெடுத்து நற்குணங்களை சீரழிப்பதாகவே உள்ளது.
சங்கிலியில் கட்டுண்ட மதயானையைப் போல் என் மனம் உலக இச்சைகளை வெறுத்து ஆனால் அதிலிருந்து மீள வழி தெரியாமல் தவிக்கிறது.
அறியாமை என்ற கனத்த இருளில் ஆசைகள் வாய்ப்பட்டு , திசை தோறும் விஷய சுகங்கள் என்ற கள்ளர்கள் நம் அறிவை அபகரிக்க , நம்மைக்காப்பவர் யார்?
அடுத்து ராமன் செல்வத்தின் தீமைகளைப் பற்றி சொல்கிறான் .
No comments:
Post a Comment