Wednesday, December 6, 2017

Poonal - Sacred thread

Courtesy:https://www.facebook.com/permalink.php?story_fbid=1898644333720959&id=1644991735752888

நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேர்ந்தது அதில் நமது தென்னாச்சாரிய வைஷ்ணவர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள பிராமண சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் கலந்து கொண்ட ஒரு விழா

அதில் என்ன விசேஷமென்றால் ஒரு ல்ல ஶ்ரீவைஷ்ணவர் மற்றும் அவருடன் சேர்ந்த இருவர் தங்களதுயக்ஞோபவீதத்தால் ஒரு குறிப்பிட்ட டைவெளிகளில் தனது முதுகை சொரிந்து கொண்டிருந்தார் எனக்கு தெரிந்து அந்தசெயல் அன்னிச்சை செயலாகவே நடைபெற்று கொண்டிருந்தது

அவர் அருகில் இருந்த ஶ்ரீவைஸ்ணவர் தனது யக்ஞோபவீத்த்தில் வாத்தியக்காரன் வாத்தியத்தில் ஒரு கயிறு கட்டி சிலடாலர்கள் போன்றவறை மாட்டியிருப்பது போல் ஊக்கு சாவி என சில வேண்டாத சமாச்சாரங்களை மாட்டி இருந்தார்.

இதேபோல் ஒரு நல்ல ஓரளவு எல்லோர்க்கும் தெரிந்த இளமையான தோற்றமுடைய உபன்யாசகரும் தனதுஉபன்யாசத்திற்கிடையே இவ்வாறு செய்வதையும் கண்டுள்ளேன்

சில தவறான செயல்களுக்கு நாமே இடம் கொடுக்க கூடாது என்பதற்க்காகவே இந்த பகிர்தல்.

வேதத்தில் விஜயஞானம் நன்கு உள்ளவர்கள் தான்


"யக்ஞோபவீதம் பரமம் பவீத்ரம் ப்ரஜாபதே யத்ஜகஸம் புரஸ்தாத்

ஆயுஸ்யம் யரக்யம் ப்ரதிமுஞ்ச சுப்ரம்

யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜஹ:"

 

அப்படி முதுகை சொரிவதும் மேலும் அதில் எந்தவித பொருட்களையும் கோட்ஸ்டாண்ட் மாதிரி மாட்டிக்கொள்கூடாது .அதுவும் அவரை போன்றவர்களே இப்படி செய்வது இளைஞர்களுக்கு ஒரு தவறான முன் மாதிரி

அதாவது யக்ஞோபவீதம் என்னும் இந் பூணுல் அந்த பரமனைவிட பவித்ரமானது (புனிதமானதுஇதை அணிபவனுக்குஆயுஸ் பலம் தேஜஜ் எல்லாம் கூடும்

உங்களுக்கும் பூணுலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு விளக்கம் கேள்வி பதிலாக


கேள்வி-:பூணூல் பிராமணர்கள் மட்டுமே அணிய வேண்டியதா?

பதில்: இல்லைஇந்து தருமத்தினைப் பின்பற்றும் அனைவரும்ஜாதி மத பால் வேறுபாடு இன்றி அணியப்படவேண்டியது பூணூல்வேத காலத்தில் அப்படியே அனைவரும் அணிந்திருந்த னர் என்கிறது பல நூல்கள்


கேள்வி-2 பூணூல் ஏன் இன்று பிராமணர்களிடையே மட்டுமே அணியும் வழக்கமாக இருக்கிறது?

பதில்: இது தற்காலத்தில் ஈவெரா ஏற்படுத்திய குழப்பத்தால் ஏற்பட்ட நிலைபிராமணர்களை இழிவு டுத்த வேண்டிஅவர்களின் புனிதமான அடையாளமாக கருதப்பட்ட குடுமி க்ஞோபவீதம் ( நமது பூணுலுக்கு பெயர்ஆகியவற்றைஅறுத்தும் அடித்தும் உதைத்தும் அவர்களது தெய்வங்களை செருப்பால் அடித்தும் செருப்பு மாலைகளை அணிவித்தும்அசிங்கப்படுத்தியதும் அதற்க்கு அன்றய ஆளும் அரசும் அதன் வழிவந்த க்களும் மறைமுகமாக ஊக்கமளித்ததுவந்ததும் மற்றவர்கள் பூணுலை தங்களது உடம்பிலிருந்து கழட்ட காரணமானதால் அப்படி ஒரு தோற்றம்

பிராமணர்கள் பள்ளி ஆசிரியராகவும்நிறைய வேதமோதுபவரகளாகவும் ன்மீக இறைப்பணியிலும் இருந்தகாரணத்தால் அந்த அந்தணர்கள் ஈவெராவினால் விழைந்த குழப்பத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நமதுபாரம்பரியத்தை இன்னும் இறந்த பாரம்பரியமாக மியூசியம் சென்று விடாமல் காப்பாற்றி நம்மை இன்றும் பூணுல்அணிபவர்களாக இருக்கும் டி பார்த்துக் கொண்டனர்.

சில இடங்களில் இன்றும் செட்டியார்ஆசாரியார் மண்பானை செய்பவர் என பிராமணரல்லாதவர்களும் பூணூல்அணிகின்றனர்.

மற்றபடி எல்லாவகையினரும் தங்கள் வீட்டு விசேடகாலங்களில் அதாவது திருமணம் அல்லது அபர காரிய காலங்களில்இன்றும் ஒரு பூணுலை சம்பிரதாயமாகஅணிந்தே செய்கின்றனர்.


கேள்விபூணுல் என்பது வெறும் நூலை மூன்றாக இனைத்து ஒரு முடிச்சு போடுவது தானே?

பதில்: பூணுல் என்பது வெறும் நூல் அல்ல அதை செய்வது என்பதே விசேடமான ஒன்று நான் சிறுமியாகசுமார் 10-15 வயதுஇருந்தபோது எங்கள் ஊர் அம்பிமுத்தா மற்றும் குட்டிமுத்தா வாத்யார்கள் மற்றும் அம்பாசமுத்திரம்தெய்வநாயகன் ஸ்வாமி ( கிருஷ்ணன் கோவில் கைங்கர்ய ஸ்வாமிஆகியோர் பஞ்சை வாங்கிவந்து ராட்டில் நூல்திரித்து தக்களி என்னும் ஒரு கம்பில் நூலை கோரத்து அந்த நூலை வலது கையில் விரலில் மாட்டி வைத்துக்கொண்டுதங்களது வலது தொடையில் தக்களியை வைத்து வேகமாக தேய்த்து விடுவர் அது வலது கையில் விரலில்தொங்கியவாறு நூல் பம்பரம் போல் வேகமாக சுழலும் அந்த சமயங்களில் வர்களது மனம் காயத்ரி மந்திரத்தைஉச்சாடணம் செய்யும் தக்களி வேகம் குறையும் போது மீண்டும் தொடையில் வைத்து தேய்த்துவிடுவர் இப்படிஅவர்களுக்கு நேரம் கிட்டும் போதெல்லாம் காலை மாலை என சுமார் ஒருமணி நேரம் தக்களியில் நூல் நூற்பர் இப்படிநூற்ற நூலை மட்டுமே (அதாவது தக்களி மூலம் காயத்ரியை உச்சாடனம் செய்து நூற்ற நூலை மட்டுமேஉபயோகித்துமுப்புரியாக்கி பிரம்ம முடிச்சு ( ஸ்மார்த்தர்கள் ருத்ர முடிச்சு என்பர்மூலம் இணைத்து அதற்க்கு பின்பும் மந்திரத்தை(காயத்திரியை) உரு ஏற்றி ஒரு ஓலை பெட்டியில் சுவாமி சன்னதி அல்லது தீட்டு படா இடங்களில் பத்திரமாக வைப்பர்.

மறந்தும் வீட்டு பெண்குழந்தைகளை திருமணமாகாதவர்களை எக்காரணம் கொண்டும் பூணுலை எடுத்து தரசொல்லமாட்டார்கள்

பூணுல் என்பது சாதாரண நூல் அல்ல ஒரு மந்திர ஆயுதம்

இன்று ஒரு சிலரிடம் மட்டுமே மேலே சொன்னது போன்ற மந்திர ஆயுதம் கிட்டுகிறது .

மற்றபடி இன்று அதிகமாக மேலே குறிப்பிட்டது போல் நூற்க்கபடாமல் தமிழகத்தில் சௌராஷ்டிர சமூகத்தைசேர்ந்தவர்களால் தங்களது தரியில் நூற்க்ப்பட்டு அவர்களால் யாரிக்கப் பட்ட பூணுலை கடைகளில் வாங்கிஉபயோகிக்கப்படுகிறது.

எனவே தான் அது வெறும் நூலாக தெரிகிறது.

அப்படி வாங்குவது இன்றய கால கட்டத்தில் தவறல்ல ஆனால் அப்படி வாங்கிய பூணுலை நம் வீட்டில் வந்துபுண்யாகவாசனம் செய்வித்து அல்லது சாளக்கரம திருமஞ்சண தீர்த்தால் ப்ரோசணம் செய்து 16 தர்பையை கையில்வைத்துக் கொண்டு அதன் நுனிகளால் பூணுலை தொட்டுக் கொண்டு ஒரு 54/108 காயத்ரி மந்திரத்தை உச்சாடனம் செய்துபின் ஒலை பெட்டியில் அதனை எடுத்து தீட்டுபடாமல் பத்திரபடுத்தி பின் உபயோகிக்கலாம் அல்லது வேண்டியவர்களுக்குவாழை இலை துணுக்குகளில் சுற்றி கொடுக்கலாம்


கேள்வி-:பூணூல் வெறும் அடையாளம் மட்டும் தானா அல்லது அதில் விசேடமான அர்த்தம் உள்ளதா?

பதில்: பூணுல் என்பது மூன்று நூலால் (முப்புரிஅமைந்து ஒரு முடிப்பில் முடிந்தாக அமைப்பில் காணப்படும் இந்தமுடிப்பு பிரம்ம முடி என்று அழைக்கப்படும்பிரிக்கவே முடியாத முடிப்பு எனச் சொல்லப்படும் என தெரிவித்தேன்.

முடிக்கப்பட்ட இந்த மூன்று நூல் கயிறுகள் உபநயனத்தின் போது மந்திர பூர்வமாக தகப்பனார் குருவாக இருந்து வாத்யார்மூலம் ஒரு நல் நாளில் சுப முகூர்த்தத்தில் ப்ராமண புருஷகுழந்தைகளுக்கு ஒற்றைபடை வயதில் அதாவது 7 வயதுக்குள் அணிவிக்கப் படும் ஒரு வைபோகம்.

எதற்கென்றால் அவர்களால் தப்பிக் முடியாதமூன்று பிரிக்கமுடியாத சமூகபந்தங்களையும்அவர்கள் அதற்குச்செய்நன்றி காட்டவேண்டி கடமையையும் அந்த ப்ராமண குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கே.


"சௌத ஸ்மார்த்த விகித நித்யகர்ம அனுஷ்டான யோக்யதா சித்யர்தம்

பிரும்மதேஜ அஅபிவிருத்தியர்தம்"


என்ற சங்கல்பத்தின் படி அதாவது அவர்கள் அவர்களுக்கான நித்ய கர்மாவை செய்யும் யோக்கியதையை பெற வேண்டி

நித்ய கர்மா என்றால் என்ன?

அதாவது பூணூலின் முதல் நூல்(புரி)

வேதம்உபநிடம்வாழ்வியல் நெறிதருமங்களை உபதேசித்த பல்வேறு ரிஷிமுனிவர்கள்ஆசிரியர்களுக்குச்செலுத்தப்பட வேண்டிய நன்றியை மறக்காமல் நினைவு படுத்துவதுகுருபரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டியநன்றியைக் குறிப்பது.

குருவுக்கு மற்றும் பெருமாளுக்கு நித்ய திருவாராதனம் செய்தல்

பூணூலின் இரண்டாம் நூல்(புரி)

தான் தோன்றக் காரணமான தனது முன்னோர்களைவளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும் அவர்க்குச் செய்ய வேண்டியநன்றிக்கடனையும் நினைவு படுத்துவதுகுலப்பரம்பரைக்கு ஒரு நபர் செலுத்தவேண்டிய நன்றியைக் குறிப்பது.

அவர்களின் நித்ய திருவாராதனத்தில் உதவுவது மற்றும் அவ்ர்கள் மறைவுக்கு பின் ச்ரார்த்த காரியங்கள் செய்வது

பூணூலின் மூன்றாம் நூல்(புரி)

தான் வாழ உதவும் தேவதைகளான (இயற்கைநீர்நிலம்காற்று,சூரியன்ஆகாயம்எனும் பஞ்சபூதமாகிதேவதைகளுக்கு ஒரு நபர் செலுத்த வேண்டிய நன்றியை நினைவு படுத்துவது.

இயற்கையை காப்பாற்றுதல் மற்றும் பிறருக்காக அக்னிமூலம் பிரார்த்தனைகள் ஹோமங்கள் செய்விப்பது

இதுவே முப்புரியின் தத்துவம்

பூணுலை மந்திர பூர்வமாக தருத்தபின் எப்பொமுது மாற்றவேண்டும்?

இந்தமந்திராயுதம் நூல் பிரிந்தாலோ அல்லது மிகவும் அழுக்காகி தன் நிறத்தை இழந்தாலோ அல்லது தவறுதலாகஅறுந்து விட்டாலோ யாரேனும் அறுத்து விட்டாலோ

மாதா பிதா கர்மா திவச நாட்களிலோ பங்காளி மற்றும் சீதக தீட்டு ழிந்த பின்போ

யாரையேனும் இறுதியாத்திரை நேரத்தில் தோள் தூக்கி ஏழப் பண்ணியிருந்தாலோ ஒரு வாத்யார் மூலம் மறுபடியும்மந்திரம் சொல்லி அணிந்து கொள்ளலாம்.

அவசியம் வருடம் ஒருமுறை வரும் ரிக்உபாகர்மா காலத்தில் கண்டிப்பா அணைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும்

அதாவது சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் என்று இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு வேதத்திற்குமர வ்வொரு நட்சத்திரம் மாறி மாறி ந்தாலும் ருக் வேதம்தான் முதன்மையாகஇருப்பதினால் அந்த நட்சத்திர நாளையே ஆவணி அவிட்டநாளாக அதாவது அந்நாளையே எல்லோரும் உபாகர்மா என்றுபெயர் வைத்து விட்டார்கள்.

ஏன் அன்று மட்டும் எல்லோரும் மாற்ற வேண்டும்?

அதாவது இந்த உபாகர்மா அன்று தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து

உத்தராயண ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும்தர் சாஸ்திரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில் தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டுஆவணி அவிட்டஉபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை நீக்குவதற்கும்மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்குகாயத்ரீ ஜபம் செய்ய வேண்டும் என்றுசொல்லப்பட்டு இருக்கிறது.

அப்படியானால் காமோகார்ஷீத் ஜெபம் என்பது எதற்க்கு?

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து முடிக்காததற் கான பரிகாரமாக "காமோகார்ஷீத்ஜபம்சொல்லப்பட்டு இருக்கிறது.

இன்றய காலத்தில் பலரும் தமது வீட்டிற்க்கேவாத்தியாரை வரவழைத்து பூணூலைமட்டும் புதிதாக மாற்றிக்கொள்கிறார்கள்மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும் அங்கு டமில்லாமல் போய் விடுகிறது.

ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக் கொள்வது முக்கியமாக இருந்தாலும்பூணூலை மாற்றிக் கொள்வதுஎதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே முக்கியம்.

பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை.

பூணூலை மாற்றிக் கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய் கொள்ள வேண்டும்.

ஆகவே ஆவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம்அதை ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு"காமோர்கார்ஷீத்ஜபம் செய்வது போன்றவைகள்.

அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம் வரும்.

ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர  சித்தி இருந்தால்தான் வேதாரம்பம் ஸ்திரமாக இருக்கும்.

அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை றுநாள் வைத்து இருக்கிறார்கள்.

பலரும் அறியாமையால் பூணூல் போட் முதல் வருஷத்தில்தான் காயத்ரீ ஜபம்காயத்ரீ ஹோமம் முதலியவைகள்என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தைபாராயணம் செய்யச் சொல்லி இருக்கிறது.

ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று மட்டுமாவது ஆயிரம் காயத்ரீ மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும்செய்ய வேண்டும்.

மேலும் இதன் புனிதம் கருதி பெரியோர்கள் அல்பசாந்தி ( உடல் கழிவு வெளியேறும் சமயம்நேரங்களில் பூணுலைமாலையாக போட்டுக்கொண்டு பின் அதனை வலது காதில் சுற்றிக்கொண்ட பின் செல்லவேண்டும் க்காரணம்கொண்டும் யக்ஞோபவீதம் நாபிக்கு கீழ் வரக்கூடாதுஅல்பசாந்தி முடித்து கை கால்களை மீண்டும் அலம்பி வாயைகுறைந்தது ஒரு மூன்று முறையாவது நன்கு கொப்பளித்த பின்பு பழையபடி அணிய வேண்டும்.

பின் ஏன் பெரியதாக செய்ய வேண்டும் சிறியதாக செய்யலாமே என்றால் கூடாது அதற்க்கும் ஒர் அளவுகோல் உள்ளதுஅதன் நீளம் அதிகமென்றால் அதை நாபியளவுக்கு சுருக்கிபொள் வேண்டும்.

நியாயமாக யக்ஞோபவீதம் சாதாரணவேளைகளில் பகலில் கழுத்தை சுற்றிதான் இருக்கவேண்டும் என்பர்.கோவில்கல்யாணம் போன்ற

நல்ல மற்றும் அபர காலங்களில் மட்டும் அதனை தோள்களில் மாற்றிக்கொள்வர்இதை இன்று யாரும் செய்வதில்லை.பல பெரியவர்கள் கூட.

இன்றும் சில பெரியவர்கள் இரவில் கழுத்தை சுற்றி இரண்டாக போட்டுக் கொண்டே தூங்குவர்அதிலும் புதிதாகமணமான பையனுக்கு இந்த அறிவுரையை கண்டிப்பாக கூறுவர்

இந்த காலத்தில் இதனை பெரும் பாலானோர் கடைபிடிப்பதில்லை

அக்காலத்தில் அனைவரும் பூணல் பூண்டுள்ளனர்.. அவரவர்களின் தன்மைக்கு ஏற்ப மந்திர பூர்வமாகவோ அல்லதுசத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட சபதமும் அல்லது சத்தியபிரமாணம் எடுத்து அணிவர்.

நாம் தவறான வழியில் போகும் எண்ணத்தை கட்டுபடத்த சாட்சியாக உடலில் இருந்து பூணுல் நம்மை தடுக்கிறது..

சிலர் செய்வது போல் முதுகை சொறிந்து கொள்வதற்கோ அல்லது தேவையான ஊக்கு சாவி மாட்டவோ அல்ல பூணல்..

யஞ்யோபவீதம் பரமம் பவித்ரம்..இதன் அர்தம் இப்போது தெரியும் தானே!!

தினமும் காயத்ரி மந்தரம் ஜெபம் செய்வோம் நலன் பல பெறுவோம்.

ஜெய் ஶ்ரீராம்!!

No comments:

Post a Comment