ஆதிசங்கரரின் மறு அவதாரமான நம் பெரியவா
என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்
ஸ்ரீலக்ஷ்மினாராயணன் என்ற பக்தர்.
ஸ்ரீலக்ஷ்மினாராயணனின் அப்பா,தாத்தா இவர்கள்
நல்ல நிலைமையில் இருந்தவர்கள்தான்.ஆனாலும்
விதிவசத்தினால் நொடித்தனிலையில் லக்ஷ்மினாராயணன்
மனம் மிகவும் வறுமையின் கொடுமையால் வாடியிருந்தார்.
க்ரோம்பெட் MIT கல்லூரியில் Lab engineer ஆகைருந்த
இவருக்கு மாசம் 108 ரூபாய்தான் வருமானம். இவர் வருவாயில்
18 ஜீவன்கள் காலக்ஷேபம் நடந்தாக வேண்டும். இவர் தந்தையும்
பெரிய உத்யோகத்தில் இல்லை. சில வருஷங்கள் ஸ்ரீமடத்தில்
இவர் அப்பா ஒரு பதவியில் கைங்கர்யம் செய்தது மட்டுமே!
ஆனால் தினந்தோறும் சிவ பூஜையைக் கைவிட்டதில்லை.
வயதான தந்தை, மனைவி குழந்தைகளோடு சொற்ப
வருமானத்தில் அரை வயிறு கஞ்சி சாப்பிட்டுக் காலம்
கடத்தி வந்தார்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ட் டைம்
வேலைகளுக்கும் சென்று வந்தார். ஆனாலும் குடும்பத்
தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால்
கடவுள் நம்பிக்கையே அறவே இல்லாமல் இருந்தார்.
அதனால் கடின சித்தம் கொண்டவராக மாறியிருந்தார்.
தந்தை விடாமல் சிவ பூஜை செய்வது கண்டு''இப்படி
கஷ்டப்படரது உன் ஸ்வாமிக்குத் தெரியவில்லையே பின்
எதற்கு இந்தப் பூஜையெல்லாம்?''என்று கோபப் படுவதுண்டு.
இன்நிலையில் பெரியவா இவரைத் தடுத்தால்கொள்ளவே
மாம்பலம் ராமேஸ்வரம் தெருவில் குடி கொண்டு அருள
வந்தார்.ஆனால் பெரியவா தரிசனத்துக்கு நேரம்
இல்லாததோடு, இவ்வளவு கஷ்டப்படும் நமக்கு அருளாத
இவர் தரிசனம் நமக்கு எதற்கு என்று அப்பாவிடம்
வாதாடவும் செய்வார். ''உன் பெரியவாளை நம்மளைக்
காப்பாத்தச் சொல்லேன்'' என்று அப்பாவிடம்
விதண்டவாதம் செய்வார்.
இவர் எட்டு வயதாக இருந்தபோது பெரியவா இவர்
கிராமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அந்த சமயம்
அப்பாவுடன் தினம் பெரியவா தரிசனத்துக்குப்
போனதுண்டு. பெரியவாளுக்கும் இவர்களுடைய
அன்றைய செல்வச் செழிப்பான நிலை தெரியும்.
அப்பா பெரியவா கைங்கர்யம் செய்திருந்ததால்
மாம்பலம் காம்ப் பில் வாஞ்சையோடு குடும்ப நிலை
பற்றியெல்லாம் விஜாரித்ததோடு, ''நாளை
வெள்ளிக் கிழமை நான் உங்காத்துக்கு வரேன்''
என்று சொல்ல அப்பாவுக்கு அளவிடமுடியா
சந்தோஷம்! பிள்ளை வேலையிலிருந்து வரும்
வரை இரவு காத்திருந்து ''நாளை பெரியவா
ஆத்துக்கு வரார், நீ காலேஜ்லேர்ந்து நேரா
ஆத்துக்கு வந்துடு, வேற வேலைக்குப் போக
வேண்டாம்'' என்று சொன்னார்.
''எதுக்காக அவர் நம்மாத்துக்கு வரணும்'' என்று
அலக்ஷியமாகக் கேட்டுவிட்டு சென்றுவிட்டதோடு,
மறு நாள் காலேஜ்லேர்ந்து வீட்டுக்கு வராமல்
பார்ட் டைம் வேலைக்கும் சென்றுவிட்டார்.
தெய்வம் குறிப்பிட்டபடி அவர் அகத்துக்கு மறு
நாள் நுழைந்துவிட்டது! சாக்ஷாத் மாஹாலக்ஷ்மி
போன்று அங்கு வந்து பூஜை அறையில் ஸ்ரீசக்ரத்தை
அந்த வீட்டுப் பூஜா க்ருஹத்தில் வைத்து, அனைவரையும்
ஆசீர்வதித்து அளவில்லா ஆனந்தம் அடையச்
செய்தார்!
ஆதங்கம், கோவத்துடன் தாந்தை இவர் வருகைக்கு
காத்திருந்தார்.
''மஹா பாவி..இப்படியா அலக்ஷ்யம் செய்வே, எப்படிப்பட்ட
மஹான் நம் அகத்துக்கு வந்திருக்கா, நான் நேத்து
அத்தனை சொல்லியும் எத்தனை திமிர் இருந்தா
இப்படிப் பண்ணுவே'' என்று அடக்க மாட்டாத
கோபத்துடன் கத்தினார்.லக்ஷ்மினாராயணன்
நெஞ்சமும் அன்று அந்த சுடு சொற்கள் கேட்டு மனம்
கரைந்து கண்களில் நீருடன் உரங்கச் சென்றுவிட்டார்.
மறு தினம் அப்பா தன் மகனின் நிலைமையைக் குற்ற
உணர்வுடன் பெரியவா சன்னிதியில் முறையிட்டார்.
''அவனை நாளைக்கு அழைச்சிண்டு வா""
ஞாயிறன்று லக்ஷ்மி நாராயணனுக்குப் பெரியவா
தரிசனத்தைத் தவிர்க்க இயலவில்லை.
பூஜை முடிந்து எல்லாருக்கும் தீர்த்த ப்ரஸாதம்
வழங்கிக் கொண்டிருக்கும்போது இவரும் வேண்டா
வெறுப்பாக அப்பாவுடன் க்யூவில் போய் நின்றார்.
இவர் முறை வந்த போது தீர்த்தம் கொடுக்காமல்
சைகையால் ஒரு பக்கம் தள்ளை நிற்குமாறு
சைகை செய்தார் பெரியவா.
மத்தவாளுக்குத் தீர்த்தம் வழங்கியபடியே
இவரிடம் பேச ஆரம்பித்தார் ''என்னை
ஞாபகம் இருக்கா மண்டு''என ஆரம்பித்தார்.
எட்டு வயசில் பெரியவா தரிசனத்தின் போது
மண்டு என்று கூப்பிட்டது அப்போது ஞாபகம்
வந்தது.
''ஆமா அப்பா என்னவோ சொல்றாரே..நீ ஏன்
இப்படி இருக்கே?''
''சரி நீ எங்கே வேலை பண்றே , எத்தனை
மணிக்கு வரே?''
மெதுவாக தன் நிலை பற்றிச் சொன்னார்.
ஏன் நாங்க இப்படி கஷ்டப்படறோம்?''
''கர்மம் டா ''
அதுவரை எதிர்த்து ஒன்ரும் சொல்லாதவர்
''அப்படின்னா?'' என்று எதிக் கேள்வி கேட்டார்.
''கர்மான்னா என்னன்னா கேக்கறே? அதைச்
சொன்னாலும் புரியாது,சொல்லவும் தெரியாது''
ஆதி சங்கர பகவத் பாதாள் குழந்தையா பிக்ஷை
எடுக்கச் சென்ற போது ஒரு அம்மாவாத்து வாசல்லே
நின்று பவதி பிக்ஷாம் தேஹி'' என்று கேட்டார்.
அன்று த்வாதசி. வீட்டில் ஒரு மணி அரிசி இல்லை பிக்ஷயிட
ஆனால் ஒரு காய்ந்த நெல்லிக் கனி மட்டும் இருந்தது.
வேறு வழியில்லாமல் குழந்தை சங்கரனுக்கு அதனை
பிக்ஷையிட்டாள் அந்த அம்மா.குழந்தை சங்கரன்
;;இந்த அம்மா இவ்வளவு கஷ்டப்படறா, ஆனால்
இருந்த ஒரு நெல்லிகாயையும் எனக்கு பிஷை போட்டுவிடாள்.
''அம்மா மஹாலக்ஷ்மி இவள் தரித்ரத்தை கர்மவினையானாலும்
நீ போக்கிவிடம்மா'' என்று கனகதாரா ச்லோகத்தைப் பாட
தங்க நெல்லிகனியாகவே மழை பொழிந்தது! லோகமாதா காலைப்
பிடிச்சுக்கோ..அம்பாளை உங்காத்தில் கொண்டு வெச்சுருக்கேன்,
அவளைக் கெட்டியா புடிச்சுக்கோ..தாயாட்டமா உன்னைக்
காப்பாத்துவா..''
இப்படியாக1 1/2 மணி நேரம் தீர்த்தம் கொடுத்துக் கொண்டே
அருளாசி வழங்கினார் பெரியவா!
(எத்தகைய பாக்யம்!)
அப்போதும் லக்ஷ்மி நாராயணனுக்கு நம்பிக்கை இல்லை.
ஆனால் அவர் மனைவி மரைமுகமாக கனகதாரா
ச்லோகத்தைப் பெரியவா உபதேசம் செய்ததாகவே
நினைத்தால். ஆனால் இவர் அதை லக்ஷ்யம் செய்யவில்லை.
மூன்று வாரம் சென்ரது. ஒரு நாள் வழக்கம் போல்
10 மணிக்கு வீடு திரும்பியவர் சட்டையை மட்டும்
கழற்றிவிட்டு கைகால் கூட அலம்பாமல் கனகதார
ஷ்லோகத்தைச் சொல்ல ஆரம்பித்தார்!
ஆடுத்த நாளே அதன் மகிமை தெரிந்தது! ஆதி சங்கரரின்
அவதாரமான பெரியவா உபதேசம் செய்ததாச்சே!
ஆடுத்த நாள் இவர் மேலதிகாரி அயல் நாடு யுனிவர்சிடிக்கு
வேலை மாற்றம் ஆகி சென்ரார். விமான நிலையத்தில்
ஒரு கவரை இவரிடம் கொடுத்து.அதை டைரக்டரிடம் கொடுக்குமாறு சொன்னார்.
எப்போதும் போல் அலக்ஷியமாக அந்தக் கவரை தூக்கி எறிந்துவிட்டு
மூன்றாம் நாள் அந்தக் கவரை டைரக்டரிடம் கொடுத்து தயக்கத்துடன்
நின்றார்.
கவரைப் பிரித்துப் படித்த டைரக்டர் ''உட்காருங்கள்..உங்களைப் பற்றி
இந்திரன் சந்திரன் என்றெல்லம் அந்த அயல் நாட்டுக்காரர் எழுதியிருக்கார்;
உங்க சம்பளத்தைஎட்டு மடங்கா உயர்த்தச் சொல்லி எனக்கு ஆர்டர்
போட்டிருக்கார்'' என்று இவரை திகைக்கச் செய்தார்.
ஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹம் அன்றிலிருந்து கொட்ட
ஆரம்பித்துவிட்டதாம்!
மஹாலக்ஷ்மி கொட்டு கொட்டுன்னு கொட்றா! என்ரு இவர்
பூரிக்கும் அளவுக்கு இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி
ஒரு எலெக்ரானிக் உபகரணத் தொழில் செய்து இவரை
கோடீஸ்வரராக ஆக்கிவிட்டது!!
ப்ரத்யக்ஷ பரமேச்வரன் சாக்ஷாத் ஆதி சங்கர அவதாரம் நம் பெரியவா!
ஜய ஜய சங்கரா......
No comments:
Post a Comment