Wednesday, November 15, 2017

Subramnya swami temple, Puliangudi

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
                  *49*
*நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புளியங்குடி.*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*இறைவன்:* அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி.

*தல தீர்த்தம்:* ஷண்முக தீர்த்தம்.

*தல விருட்சம்:* அரசமரம்.

*ஆகமம்:* கெளமாரம்.

*தல அருமை:*
பிற்கால பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான பூலின் பாண்டியன் காலத்தில் உருவாக்கப்பட்டதால், இவ்வூரை பூலியன்குடி அழைக்கப்பட்டு, காலப்போக்கில் புளியங்குடி என் மருவியதாயின.

புளியமர வனத்தில் குடியேற்றம் கண்டதால் இவ்வூர் புளியங்குடி என அழைக்கப்படலாயிற்று என்றும், பளியன் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததால் பளியன்குடி என அழைக்கப்பட்டு பின்னர் புளியங்குடி என்றானதாகவும் கருத்துக்கள் நிலவின.

சுமாராக நானூறு ஆண்டுகளுக்கு முன்பு புதுவை (புளியங்குடி) தலபுராணத்தில் *முத்துவிடுகவிராயர்* மதுரையிலிருந்து பூலியன் என்ற பாண்டிய மன்னன் வேட்டைக்கு வந்தான்.

அவன் இவ்விடத்தை அடைந்து இங்கிருந்த புளியங்காட்டை அழித்து நகரை உருவாக்கினான்.

அதற்கு புளியங்குடி என பெயர் வைத்து இத்திருக்கோயிலையும் அமைத்து வழிபாடு செய்தான்.

இதைபதினாறாவதான பூலியன் நகர் கண்ட சருக்கத்தில் காணப்பேறுகிறது.

புளியங்குடியின் மேற்கு பகுதி மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதி ஆகும்.

மலையாறு பாய்ந்து வளம் கொழிக்கும் பகுதி இது. 

இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உருவாவதற்கு முன்பு மணக்காவுடையார் என்கிற சாஸ்தா கோயிலாக இருந்திருக்கிறது.

அதன்பின்பு, மலையடிவாரத்தில் இப்போதைய திருக்கோயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தில் அருள்மிகு சந்திரசேகரர் விசாலாட்சி அம்பிகை ஆகிய தெய்வ மூர்த்தங்கள் வழிபடு தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இங்கு முருகப்பெருமான் பால பருவத்தில் குடிகொண்டு பக்தர்களுக்கு வேண்டியன வேண்டிய வண்ணம் வழங்கி அருள் செய்கிறான்.

*சிறப்பு:*
சிவனும் முருகனும் ஒன்றே. முருகப்பெருமானின் ஆலயங்கள் குமார் தந்திர நூல்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டு நம் முன்னோர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

சிறப்புமிகுந்த புளியங்குடி பாலமுருகன் திருக்கோயில், சைவத்தின் பிரதிபலிப்பானது.

சிவனும் முருகனும் வேறு வேறு அல்ல என்று ஒன்றுபடுத்திக்காட்டச் சான்று கூறும் திருத்தலமாக விளங்குவது சிறப்பினும் பெரும் சிறப்பாகும்.

அதாவது அரு உருவமாய் அமைந்த சிவலிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றன.

மூலம் பரம்பொருளான முருகன் சிவனே என்பதை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது இத்தலத்தின் சிறப்பு.

*பூஜை காலம்:*
கால சந்தி, காலை 8.30 மணிக்கு,
உச்சிக் காலம், காலை 11.30 மணிக்கு,
சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு,
அர்த்தசாமம், இரவு 8.00 மணிக்கு.

*நடை திறப்பு காலம்:*
காலை 6.00 மணி முதல் 11.45 மணி வரைக்கும்,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம்.
ஆடி கார்த்திகை.
கந்த சஷ்டி.
திருக்கார்த்திகை.
நவராத்திரி.
தைப்பூசம். (தேர்த்திருவிழா)
பங்குனி உத்திரம். (தேர்த்திருவிழா)

*இருப்பிடம்:*
மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தென்காசிக்கு வடக்கில் சுமாராக இருபத்தெட்டு கி.மி. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.

புளியங்குடி பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் முக்கால் கி.மி. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்திருக்கிறது.

மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் எந்த நேரமும் பேருந்து வசதி உள்ளது.

அருகில், சங்கரன்கோவில், கடையநல்லூர் தொடர் வண்டி நிலையம் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
புளியங்குடி,
திருநெல்வேலி-627 855

*தொடர்புக்கு:*
04636 235077

     முருகனுக்கு அரோகரா!
     கந்தனுக்கு அரோகரா!!
     வேலனுக்கு அரோகரா!!!

           திருச்சிற்றம்பலம்.

நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு சொக்கலிங்க சுவாமி திருக்கோயில், சிந்தாமணி.*

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment