Tuesday, November 21, 2017

Chitrasabhai Kutralam

உ.
சிவாயநம.பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
___________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(45-வது நாள்.)*
____________________________________
         🍁 *சித்திரசபை.*🍁
                   (குற்றாலம்.)
*****************************************
வாருங்கள் இன்றும் நாளையும் சித்திர சபைக்கு அழைத்துச் செல்கிறேன்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
ஆடவல்லான் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான *சித்திரசபை* குற்றாலத்தில் அமையப் பெற்றிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்து வந்த பராக்கிரம பாண்டிய மன்னனால் குற்றால சித்திரசபை கட்டப்பட்டது.

குற்றாலத்தில் நடராஜப் பெருமான் சித்திரசபையில் சித்திர வடிவில் பக்தர்களுக்கு காட்சியருள் புரிந்து வருகிறார்.

சித்திர சபையின் மேற்கூறை முழுமையும் பிரமீடு போல கூம்பு வடிவத்ததில் வடிவமைத்திருக்கிறார்கள்.

இதன்புறத்தை தாமிரத் தகடுகளால் வேயந்திருக்கிறான் பராக்கிரம பாண்டிய மன்னன்.

இந்தச் சித்திர சபையில், கருவறை, அர்த்த மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம், முகத்து மண்டபம், தெப்பகுளம், இத்தெப்பக் குளத்தில் நடுவில் ஒரு திருமண்டபம் ஆகியவை அமையப் பெற்றிருக்கிறது.

இந்தச் சித்திரசபையில் அமையப்பெற்றிருக்கும் கருவறை, அர்த்தமண்டபம் உள்பிரகாரம் மற்றும் வெளிபிரகாரங்களில் மரபு மூலிகைகளைக்கொண்டு வண்ணங்கள் உருவாக்கப்பட்டு, அந்த மூலிகை மையினாலேயே சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கிறார்கள்.

*கருவறை:*
நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை சித்திர வடிவில் அமையப்பெற்று, தெற்குமுகமாக காட்சியருள் புரிந்து வருகிறார்.

திகட்டாத இவரருளை அள்ளி அள்ளி வணங்கிக் கொண்டோம்.

நாடராஜப் பெருமானின் வலப்புறத்தில் பதஞ்சலி முனிவரும், காரைக்கால் அம்மையும், இருக்கப் பெற்றிருக்கிறார்கள். அரிய பெரிய காட்சி இது.

நடராஜப் பெருமானின் இடதுபுறத்திலோ, வியாக்ர பாதர், மணிவாசகர் இருவரும் சேர்ந்து வழிபாடு புரிகின்றனர். நாமும் வணங்கினோம்.

அடுத்து, திருசக்கரம் மற்றும் அஷ்ட சக்திகளை சித்திரங்களாக தீட்டப்பட்டிருப்பதைக் கண்டு மெய்மறந்தோம்.

இதனின் மேலாக லலிதா பரமேஸ்வரியின் உருவம் அமையப்பெற்றிருக்கிறதைக் கண்டு ஆழ்ந்து சிந்தித்து இதன் கலையழகில் மெய்மயங்கினோம்.

இதனருகாக பராசக்தி பீடம் இருக்கக் கண்டோம்.

ஏற்கனவே நெஞ்சுக்கு நேராக கூப்பி நிறுத்திய கைகளை இறக்கிக் கொள்ளவில்லை. வணங்கியபடியே தொடர்ந்து நகர்ந்தோம்.

பராசக்தி பீடத்தின் இருமருங்கிலும், தேவர்களும், முனிவர்களும் பீடத்தை வணங்கிக் கொண்டு நின்றிருந்தனர்.

நாங்களும் பீடத்தை வணங்கிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தோம்.

கருவறைப் பக்கம் வந்தோம். இதனின் மேற்குப்பக்கச் சுவற்றில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காட்சி தீட்டப்பட்டிருந்தது.

பிரம்மா- வேள்வி செய்தார்.

பணிப்பெண்கள் சீர்வரிசை யுடனான தாம்பாளங்களை தாங்கி ஏந்தி இருந்தனர்.

நாட்டிய மங்கைகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

வாத்திய இசையான மேளதாளங்கள் இசையொலியை எழுப்புகின்றனர்.

(சுவற்றில் ஓவியங்கள் நிசப்தமாகத்தான் தெரிந்தன. ஆனால், நம் செவிகளில் கல்யாண ராகவொலி கேட்டன.)

முடிவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை இங்கு வந்து கண்டு மகிழ்ந்து கொண்டோம்.

திருமணக் காட்சிகளைக் கண்டு நகர்ந்து வரும்போது,  மேற்குப் பகுதியில், நடராஜப் பெருமானின் *ஊர்த்தாண்டவம், பத்ரகாளி, தாருகாவனத்து ரிஷி பத்தினிகள், புன்னை மரத்துடனான கிருஷ்ணன், கங்காள நாதர், கண்ணப்ப நாயனார், குறும்பா நாதர், நந்தீசுவரர் போன்றோர்கள் மரச் சிற்பங்களில் உருவாகி பல வண்ணங்களுடன் காட்சிதர* வரிசையாக வணங்கிக் கொண்டோம்.

*அர்த்த மண்டபம்:*
அர்த்த மண்டபத்தின் அருகே வருகை தந்தபோது, இதனின் உட்புற மேற்கு சுவற்றில் சொக்கநாதப் பெருமான் அமர்ந்த நிலையில் அமர்ந்திருந்தார்.

இவரருகே, மீனாட்சி அம்மை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருளுடன் அருட் காட்சி புரிந்தாள்.

இக்காட்சிகளுக்கு அப்பால், திருக்குற்றால நாதரின் தலவரலாற்று அமைப்புகளை சித்திரங்களாக தீட்டியிருப்பதைக் கண்டோம், வியந்தோம், மகிழ்ந்தோம்.

இச்சித்திரங்களுக்கு மேல்புறத்தில் நன்னகரப் பெருமான் வண்ண ஓவியமாகக் காட்சியானார்.

இவருக்கு கீழே, அகத்திய முனிவர், நன்னகரப் பெருமானின் தலையில் கையை வைத்து அழுத்தியது போலதான ஓவியம்.... 

*"சிவ சிவ"* என மனம் கிளர்ந்து, நம் நாவு இசைத்தது. 

*இதுதான்..... அகத்தியர்,  "குறுகுக" "குறுகுக" என பெருமாளை அழுத்த பெருமாள் ஈசனாக மாறிய வரலாறு*

இவ்வோவியத்தைக் கண்டதும், நாமும் பயபவ்யத்துடன்  குறுகக்கூனி பணிந்து வணங்கிக் கொண்டோம்.

எழிலார்ந்த கோயிலமைப்புடன் அக்கோயிலினுள் குற்றாலநாதர் மற்றும் குழல்வாய் மொழியம்மை அமர்ந்த கோலம் சித்திரமாக காணப்பெற்றதை ஆழ்ந்து சிந்தித்து நினைந்து வணங்கிக் கொண்டோம்.

இவ்வோவியக் காட்சிகளுக்கு முன்பாக நந்தி மண்டபம் இருக்க கரத்தை சிரமேற் தூக்கிக் கொண்டோம்.

இதோடு இங்கே அந்தணர்கள் பலர் கொடிக்கம்பத்தை பூஜை செய்வது போன்ற ஓவியக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தோம்.

இதனருகாக, அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மையின் திருக்காட்சியை வணங்கி, ஓவியக்காட்சியை ரசித்துப் பூரித்தோம்.

அடுத்ததாக, இராமலிங்கசாமி, பர்வதவர்த்தினி அம்மனின் திருக்காட்சி சிறப்புடனிருந்ததை மெய்மறந்து திரும்பி திரும்பி வணங்கிச் செல்லலானோம்.

அடுத்ததாக பதினைந்து  வடிவங்களுடன் விநாயகனும், பதினாறு வடிவங்களுடன் முருகனும், மற்றும் மகாகணபதி பெரியதிருவுருவத்துடனான சித்திரங்களைக் கண்டு பிரமித்தோம்.

அர்த்த மண்டபத்தின் தெற்கு பக்கம் வந்தபோது, இதனின்  சுவற்றில் மீனாட்சி அம்மை எண்திசைக் காவலர்களை  வென்ற காட்சிகளை ஓவியமாக உயிரூட்டியிருந்தார்கள்.

அடுத்ததாக அர்த்த மண்டபத்தின் உத்திரப் பகுதியில் ஏராளமான மரச்சிற்பங்கள் அழகு செய்தன. 

எதை எதை எவ்வளவு நேரம் பார்க்க.....? காணக் காணத் திகைப்பே இல்லை. 

பார்க்க பார்க்க கண்கள் இனிப்பை உணர்த்தின.

இந்த மரச்சிற்பங்களில், திருமால்,
தட்சிணாமூர்த்தி,
கரிவுரித்த பெருமாள், உமாதேவி,
சரபேஸ்வரர்,
அக்னி வீரபத்ரர்,
நான்கு தலைகளுடனான பிராமி,
மன்மதன்,
கணபதி,
அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர்,
முருகன் வள்ளி, தெய்வானை,
ரிஷிகள்,
மோகினி உருவங்கள், மற்றும் சங்கரநாராயணர் மரச்சிற்பங்களில் பிறந்து வர்ணங்களில் மலர்ந்து நம்மை வணங்கச் செய்தார்கள்.

இவ்வளபேருடனான அர்த்தமண்டபம், பேரழுகு பொருந்தி வியக்க வைத்துக் கொண்டிருந்தது.

இவற்றையெல்லாம் கண்டு ஆனந்தித்து அர்த்தமண்டபத்தின் வலப்புறத்தின் வெளிச்சுவர் பக்கமாய் வந்திருந்தோம்.....

இந்தச் சுவற்றினில் மதுரையில் நடந்த அறுபத்து நான்கு திருவிளையாடற் புராணத்தையும் ஓவியமாய் காட்சியாக்கியிருக்கிறார்கள்.

இதோடு அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்களயும் ஓவியமாக தீட்டியிருப்பதைக்கண்டு கண்டு ஆனந்தித்தோம்.

*நாளையும், சித்திர சபையின் வர்ணம் தீட்டப்படும்.*

            திருச்சிற்றம்பலம்.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

அடங்கல்விடைமேல் வருவார் ஆசைதீர கொடுப்பார்.
உ.
சிவாயநம.பதியும் பணியே பணியாய் அருள்வாய்
*கோவை கு.கருப்பசாமி.*
___________________________________
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(46-வது நாள்.)*
____________________________________
         🍁 *சித்திரசபை.*🍁
                   (குற்றாலம்.)
****************************************
இன்றுடன் சித்திர சபையின்  பதிவுப் பயணம் மகிழ்ந்து நிறைகிறது.
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

*சித்திர சபையின் உள் பிரகாரம்:*
உட்பிராகத்தில் இடதுபுறமாக செல்லும்போது,.....................ஆறுமுக நயினார், தடாதகை,
சோமசுந்தரர்,
திருஆலவாய் முருகன் வள்ளி தெய்வயானையுடன்,
அஷ்ட துர்க்கைகள்,
வாலி சம்ஹாரம்,
அக்னி வீரபத்திரர்,
திருப்புடைமருதூர் கோயிலின் கஜேந்திர மோட்சம்,
குற்றாலருவியின் மூல தேனருவி,
செண்பகாதேவி அருவி,

மேலும், குற்றாலநாதருடன் குழல்வாய்மொழியம்மை ரிஷப வாகனத்தில் வீதியுலா வரும் காட்சி,

கைலாயத்தை இராவணன் தன் கையால் தூக்கும் காட்சி,

மதுரையில் கால்மாறி நடனமாடிய நடராஜப் பெருமானின் *சந்தியா தாண்டவம்,*

ஹிரண்ட சம்ஹாரம்,
சாஸ்தா,
பதினெட்டாம்படி கருப்பசாமி,

அஷ்டபைரவர்,
இலஞ்சி முருகன் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் காட்சியுடன் சைவ சமயக் குரவர்களின் உருவங்களும் ஓவியங்களாக அருளிக்கொண்டிருந்தன.

*வெளிப் பிரகாரம்:*
வெளிப் பிரகாரத்தில் கங்காளநாதரின் இருபுறத்திலும் துவாரபாலகர்களின் ஓவியங்கள் காண்போரை பிரமிக்க வைத்து அருள்கனிவான முகபாவனையுடன் காட்சி தந்தார்கள்.

நவக்கிரகங்களையும் ஓவியமாக காணக் கிடைத்தோம்.

அடுத்து, நடராஜரின் ஊர்த்தாண்டவ நடனத்தைப் பார்த்து, அப்படியே மெய்மறந்து அவ்விடத்தை விட்டகழாது பெருமானையை உற்று நோக்கிக் கொண்டிருந்தோம்.

ஆலயத்தின் அனைத்து சபாக்களிலும் எழுந்தருளுவித்த திருமேனியுடனான அதே அந்நடனக் கோலத்துடனே, இங்கும் சித்திரசபையில் ஓவியங்களாக ஆடிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கு பின்னால் வந்த பக்தர்கள் நகரக்கூற, மெய்மறந்த நிலையிலிருந்து நாம் விடுபட்டு நடராஜப் பெருமானை கண்களால் பணிந்தழுது ஆனந்தத்துடன் நகர்ந்தோம்.

அடுத்து, தேவர்களும், முனிவர்களும் பாற்கடலை கடைந்த நிலை.......

மோகினியாவள் தேவர்களுக்கு அமுதம் அளித்தக் காட்சி........

பத்ரகாளியம்மானாக பயத்துடனான அருள்கணிந்த முகத்துடன்.........

அடுத்து, முருகக் கடவுள் சந்திர முகத்துடன்......

அம்முருகன், சூரபத்மனுடன் போரிட்டக் காட்சி......

மற்றும் சூரபத்மன், சிங்கமுகசூரன், தாகாசூரனாக கோலம் கொண்ட காட்சிகள் அணியணியாய் தீட்டப்பட்டிருந்தன.......

பார்வதி, இராமர் இராவணனுடன் போர் செய்தல், குறவன் குறத்தி போன்ற ஓவியங்கள் வரிசையாய்......

*சபாபதி மண்டபம்:*
சித்திரசபைக்கு மேலும் அழகூட்டின சபாபதி மண்டபம்.

பிரமிடு கூம்பு வடிவ தாமிரத்தில் கூரை வேய்ந்த நீள் சதுர வடிவில் அமைந்திருந்தது சபாபதி மண்டபம்.

இந்த மண்டபத்தின் சுவற்றுப் பகுதிகளும், கூரைப் பகுதியும், மரத்தாலான சட்டங்களால் இழைத்து அதில் வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன.

ஒருபுற வரிசைக்கு ஏழு கல் தூண்கள். எதிர்புற வரிசைக்கும் ஏழு கல் தூண்கள் என மொத்தம் பதினான்கு கல் தூண்கள் அணியழகு செய்கின்றன.

இம்மண்டபத்தின் தூண்களில் பதினாறு பட்டைகளுடன் ருத்ர வடிவங்களாய் காணக்கிடைக்கின்றன.

இம்மண்டபத்தின் தென்கிழ மூலையில் இருக்கும் தூண் சட்டத்தில், இம்மண்டபம் அமைக்க பயன்படுத்தப்பட்ட அளவுகோல் வெளியே எடுக்க முடியாத நிலையில் வைக்கப்பட்டிருப்பதை அங்கிருந்தோர் காட்டி விளக்கினார்கள். மிக பிரமிப்பாக இருந்தது.

*முக மண்டபம்:*
இம்முகமண்டபம் கல்லால் அமைந்திருந்தன.

இம்மண்டபத்தின் இருபுறமும் நடனத்தால் மிளிர்கின்றன உருவங்கள் இருக்கின்றன.

இந்நடன உருவங்கள், இம்மண்டபத்திற்கு வருவோரை வரவேற்கும் வகையில் அமைத்திருந்தார்கள்.

வாயில் கதவுகள் ஒவ்வொன்றிலும் பன்னிரு சதுரங்களாக பிரித்துக் காட்டி, ஒவ்வொரு சதுர கட்டங்களில்  மர சிற்பங்களாக மிளிரச் செய்திருந்தார்கள்..

இந்த மரச்சட்டங்களில்........ சக்தி பீடம்,
பாலூட்டும் பார்வதியம்மை,
கண்ணன்,
தட்சிணாமூர்த்தி,
ஏகபாதமூர்த்தி,
வீரபத்திரர்,
முருகன்,
கணபதி,
மீனாட்சி,
கஜேந்திர மோட்சக் காட்சி,
ரிஷபாருடர்,
கங்காளர்,
இராவண அனுகிரகமூர்த்தி,
விஷ்ணு,
காலனை காலால் உதைத்த ஈசன்,
போன்ற இறை உருவங்கள், அரச உருவங்கள், புராணச் சிற்பங்கள் போன்றவைகளைக் காணக் கண்கள் போதாதவை.

*பூஜைகள்:*
சித்திரசபையில் இருக்கும் மூலவருக்கு [நடராசர் ஓவியம்] அனுதினமும் இருகால பூஜைகள் தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

நடராசப் பெருமானுக்கு நிவேதினமாக *சுத்தான்னம்* வழக்கமாக படைக்கப்பட்டு வருகிறார்கள்.

ஐப்பசி மாதம் முதலாம் தேதியிலும், சித்திரை மாதம் முதலாம் தேதியிலும், மேலும் மார்கழி திருவாதிரை என்று ஆண்டுக்கு மூன்று முறை திருவிழாக்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாக் காலங்களில்  உற்சவர் நடராஜ திருமேனியை சித்திர சபையில் எழுந்திருப்பு செய்கிறார்கள்.

அப்போது அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

மூலவரான நடராஜப் பெருமானுக்கு [ஓவியம்] எதிர்திசையில் அமைக்கப்பட்ட ரசக்கண்ணாடியில் தெரியும் மூலவரின் பிம்பத்திற்கு அபிஷேக நீர் தெளிக்கப்படுகிறது. (ப்ரோட்சணம்)

இச்சித்திர சபையின் உள்ளும் புறமும் இடைவெளியேயில்லாது மரபு மூலிகைகளினால் ஓவியங்களை கண்கவர் வண்ணங்களால் தீட்டப்பட்டிருக்கும் இச்சித்திர சபைக்கு ஒரு முறை வருகை செய்வீர்களாக!

இதில், கலைத்திறன், அறிவியல்திறன், தொழில்நுட்பத்திறன் என அனைத்தும் ஒருங்கே பொதிந்து கிடக்கிறது.

இம்மரபு மூலிகை ஓவியங்களை அழியாமல் காப்பது மட்டும் நம் கடமையல்ல!, இங்கு சென்று ரசிக்கவும் வணங்கவும் செய்வதும் நம் கடமையாகும்.

*வாருங்கள் சித்திர சபைக்கு!*

*அகத்தியர் குறுகுக அழுத்திய குற்றாலத்திறைவன் உங்களுக்கருளுவானாக!*
           திருச்சிற்றம்பலம்.

நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்களில் நாளைய தலப்பதிவு *அருள்மிகு இலஞ்சிக் குமாரர் திருக்கோயில், இலஞ்சி.*


         திருச்சிற்றம்பலம்.

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

அடங்கல்விடைமேல் வருவார் ஆசைதீர கொடுப்பார்.

No comments:

Post a Comment