இறைவனை உணர இளம்
வயதிலேயே முயற்சிக்க வேண்டும் என்று தாங்கள் கூறுவது ஏன்?'' சீடர் ஒருவர் கேட்டார்
''வெண்ணெய் எடுப்பவர்கள், சூரிய
உதயத்திற்கு முன் தயிர் கடைவர்.
அப்படிச் செய்தால்தான் வெண்ணெய் இளகாமல் பந்து போல் திரண்டு வரும்.
வெயில் ஏறஏற வெண்ணெய் இளகி ஓடும். திரண்டு வராது.
அதைப் போலத்தான் பக்தி. இளமையிலேயே அதில் ஈடுபட வேண்டும். முதுமை வரவர உலக
விவகாரத்தில் மனம் சிக்கி உருகிவிடும்!''
சொன்னார் மஹா பெரியவா! 🙏
No comments:
Post a Comment