Tuesday, September 5, 2017

Saalaikumara swamy temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
             *(8-வது நாள்.)*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு சாலைக்குமாரசுவாமி திருக்கோயில்.*🌷
             *திருநெல்வேலி.*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*இறைவன்:* அருள்மிகு சாலைக்குமாரசுவாமி.

*இறைவி:* அருள் தரும் வள்ளி தெய்வானை.

*தீர்த்தம்:* சிந்துபூந்துறை.

*தல விருட்சம்:* வேங்கை மரம்.

*ஆகமம்:* கெளமாரம்.

*தல வரலாறு:* ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து எட்டாம் ஆண்டு திருச்செந்தூர் கோயிலிருந்து ஆறுமுக நயினார் திருமேனி டச்சுக்காரர்களால் தூக்கிச் செல்லப்பட்டு கடலில் போடப்பட்டது.
(இது ஒரு சிலை கடத்தல் சம்பளமாக நடந்து, பின் சிலையைக் கடலில் இடப்பட்டது ஒரு கதை பெரிய கதை.)

வடமலையப்ப பிள்ளை என்பவர் மேற்படி திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும் பொருட்டு, ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்து மூன்றாம் ஆண்டு குறுக்குத்துறையில் திருவுருவம் செய்து சிந்துபூந்துறையில் திருக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் இளைப்பாறுவதற்காக அத்திருவுருவச் சிலையை இறக்கி வைத்தனர்.

அந்தச் சமயத்தில் திருச்செந்தூர் கடலில் சிலை இருப்பதை, வடமலையப்பர் கனவில் வந்து முருகன் கூறினார்.

சிலை, கடலில் இருக்கும் செய்தி கிடைத்ததினால், புதிதாகச் செய்யப்பட்ட இத் திருமேனியை இறக்கி வைத்த இடத்தில் (குறுக்குத்துறையில்) நிர்மாணித்தனர்.

பாளையங்கோட்டைச் சாலை வழியாக அமைந்துள்ள படியால், *'பாளையஞ்சாலைக் குமரன்'* எனப் பெயர் பெற்று மெய்யன்பர்களுக்கு முருகன் அருள்பாலித்துக் கொண்டு வருகிறார்.

*சிறப்பு:*
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வழிபாட்டின் மூலம் பெறும் பயன்களை இக்கோயிலை வழிபடுவதன் மூலம் பெறலாம்.

இத்திருக்கோயிலில் கிழக்கு முகமாக மூலவர் சந்நிதியும், தெற்கு முகமாக சண்முகர் சந்நிதியும் அமைந்துள்ளன.

முன் மண்டபத்தில் சித்தி விநாயகர் சந்நிதியும் அதையடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் அமையப் பெற்றுள்ளனர்.

இத்திருக்கோயிலின் கருவறையில் உள்ள அருள்மிகு சாலைக்குமாரசுவாமி மூலவரை பார்த்தவாறே அருள்மிகு வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இரண்டு அம்பாள்களும் அருள்பாலித்து வருகின்றனர்.

மூலவர் சந்நிதியில் முகூர்த்த நாள்களில் அதிக அளவில் திருமணம் நடைபெறுகிறது.

இத்தலத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு மழலைச் செல்வமும், மற்றும் பதினாறு வயது செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம்,
வருஷாபிஷேகம்,
விநாயகர் சதுர்த்தி,
கந்த சஷ்டி,
திருக்கார்த்திகை,
பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்புடையன. 

*பூஜைகள்:*
தினமும் ஐந்து கால பூஜை நடக்கிறது.

*விசுவரூபம்*-காலை 5.45 மணிக்கும்,

*காலசந்தி* - காலை 7.00 மணிக்கும்,

*உச்சிகாலம்*- காலை 11.30 மணிக்கும்,

*காலரட்சை*- பகல் 5.30 மணிக்கும்,

*அர்த்தசாமாம்*- மாலை 9.30 மணிக்கும் நடைபெறும்.

*இருப்பிடம்:*
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு மிக அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

*முருகனின் ஆறு முகங்களும் குண்டான தத்துவங்கள்:*

1.உலகிற்கு குற்றமில்லாத ம்ம் விளங்குதற் பொருட்டு பல கிரகங்களையும் தோற்றுவிப்பதற்க்காக....... *அழகு.*

2.துதி செய்யும் அன்பர்களுக்கு அவர்கள் வேண்டும் வரங்களை கொடுப்பதற்காக....... *அன்பு.*

3.வேதம் சொல்பவர்களுக்கு யாகங்களிலே தீங்கு வராதபடி பாதுகாத்தருள்வது......... *அருள்.*

4.வேதாகமங்களிலே மறைந்துள்ளவற்றை ஆராய்ந்து போதித்து சந்திரனைப் போன்று திசைகள் அனைத்திற்கும் வெளிப்படுத்துவது...............
*ஞானஒளி.*

5.பகைவர்களை வதைத்து போர்க்களத்தில் வேள்வியை வேட்பு............ *வீரம்.*

6.வள்ளியம்மையுடன் மகிழ்ச்சியைப் பொருந்திய படி.... *வாழ்வு.*

      முருகனுக்கும் அரோகரா!
      அப்பனுக்கும் அரோகரா!!

*நாளை...அருள்மிகு கைலாசநாதசுவாமி திருக்கோயில். கைலாசபுரம், திருநெல்வேலி சந்திப்பு.*

          திருச்சிற்றம்பலம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்கு தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment