Thursday, September 7, 2017

Nellaiyappar & Kantimathi temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
☘ *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி* ☘
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*🌺 *நெல்லை மாவட்ட சிவத் தலங்கள்.*🌺
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
                *(1)*
🌻 *அருள்மிகு நெல்லையப்பரும், அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.* 🌻
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*இறைவன்:* அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்.

*இறைவி:* அருள்தரும் காந்திமதியம்மை.

*தலவிருட்சம்:* மூங்கில்.

*தீர்த்தம்:* பொற்றாமரை தீர்த்தம் (சுவர்ணபுஷ்கரணி), கரிஉருமாறித் தீர்த்தம், 

*வெளியிலிருக்கும் தெப்பத் தீர்த்தம்:* சந்திரபுஷ்கரணி, சிந்துபூந்துறை இதனுடன் சேர்த்து மொத்தம் முப்பத்திரண்டு தீர்த்தங்கள்.

*ஆகமம்* காமிக ஆகமம்.

*இசைக்கருவி ஒலிப்பு:* சாரங்கி.

*இருப்பிடம்:*
திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இத்திருக்கோயில், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மி. தொலைவிலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டு கி.மி தொலைவிலும் அமைந்திருக்கிறது.

திருநெல்வேலி மாநகரின் அனைத்து பகுதியிலிருந்தும் நகரப் பேருந்துகளும், மாவட்டத்தின் இதர முக்கியப் பகுதிகளிலிருந்தும் புறநகர் பேருந்து வசதிகளும் உள்ளன.

*இத்தலத்தினை முன்னர், வழங்கப்பட்டு வந்த புராணப் பெயர்கள்:*
இறைவன் அம்மையோடு இவ்விடம் வந்து உகந்து வீற்றிருப்பதின் காரணமாய்- *பேர்அண்டம்*

ஊழிக்கால முடிவில் அனைத்தும் அழிந்தொழிந்து போனபோதும் இத்தலம் அழியாது இருந்ததனால் *பிரளயச்சிட்டம்.* (அனவரதம்).

ஐந்து எழுத்து ஓசை எங்கும் பரவி நிறைந்திருந்தமையால்- *தென்காஞ்சி.*

இங்கு அம்பிகை தவம் இயற்றியும், சிவத்தைப் பூசித்து வந்ததனாலும், இறைவனை மணம் புரிந்தமையாலும்- *சிவபுரம்.*

பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் ஆகியோர் இங்கு வந்து வணங்கி மகிழ்ந்திருந்த தலமானதால்- *திருமூர்த்தி புரம்.*

இந்திரனின் வாகண ஐராதாவதம யானை இங்கு வந்து வணங்கி நின்றிருந்ததால்- *இபபுரி.*

திருமால் ஆமை கொண்டு இங்கு பூஜை செய்ததால்- *கச்சபாலயம்.*

பிரம்மன் சிவபூஜை இயற்றிவந்ததனால்- *பிரம்மபுரம்.*

இத்தலத்தில் எப்போதும் மேன்மையான தர்மங்கள் தொடர் நிலைகொண்டே வந்திருப்பதால்- *தரணிசாரம்.*

பிரம்மனுக்கு விஷ்ணு இத்தலம் வந்து அருள் புரிந்ததனால்- *விட்டு தலம்.*

மேலான நற்கதி போகம் முதலானவைகளை இத்தலம் வருவதாலும், கம்பை நதிக் காமாட்சி அருளிமையாலும்- *தென்காஞ்சி காமகோட்டம்.*
மஞ்சள்
சகல சித்திகளையும் அடைய வல்ல ஸ்தலமாக, இத்தலம் இருப்பதின் காரணமாய்- *சகல சித்தி ஆலயம்.*

மேலும் இத்தலத்தை,
(கோவில் கல்வெட்டுக்களில் இருக்கும் பெயர்கள்.) *வேணுவனம், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம்.* 

*புராணச் சிறப்பு:*
திருநெல்வேலி தலம் மிக மிக விசேட சிறப்புக்குண்டான தலம்.

அம்மை தான் படைத்த உலகத்தைக் காக்கும் பொருட்டு இறைவனை வேண்டி நினைந்து தவம் மேற்க் கொண்டு அவன் அருளை உலகம் உய்யுதலமாகுமாறு நடந்த தலம்.

உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி, இறைவனிடம் இரு நாழிகள் நிறையும் நெல்லைப் பெற்றுக் கொண்டு, வேணுவனம் வந்து, அவ்விடத்தில் *முப்பத்திரண்டு அறங்களை* வளரச் செய்து, கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து, நெல்லைநாயகனது திருவருட் கோலக்காட்சி எய்து மணந்தருளினர். 

*காந்திமதி வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள்:*
1.வறியவர்களுக்கு உணவும், தங்குமிடம் அமைத்தாலும்.

2.மகப்பேற்றுக்கு உதவிடுதல்.

3.கல்விகற்போர்க்கு ஊக்கப்படுத்துதல்.

4.பிள்ளைகள் தத்து எடுத்து வளர்த்தல்.

5.தண்ணீர் பந்தல் அமைத்தல்.

6.அடியார் தங்குமிடம் எழுப்புதல்.

7.சிறார்களுக்கும், வயதாணோர்க்கும் தின்பண்டம் கொடுத்தல்.

8.மங்கலப் பொருளான கண்ணாடி வழங்குதல்.

9. காமச்சத்திரம் (கல்யாணமண்டபம்) அமைத்தல்.

10. தாயற்ற சேய்களுக்குப் பால் வழங்குதல்.

11. கண்ணுக்கு மருந்து வழங்குதல்.

12.ஆதரவற்றவர்களுக்கு அண்ணம் வழங்குதல்.

13. தலைக்கு தேய்க்க எண்ணெய் வழங்குதல்.

14. ஆறு வகை சமயத்தினருக்கும் உணவளித்தல்.

15. சிறைச் சோறு வழக்கில்.

16. மந்தைக் கல் நிறுத்துதல்.

17. திருக்குளம் வெட்டுதல்.

18. சோலைகளை உருவாக்குதல்.

19. மாற்றார் துயர் துடைத்தல்.

20. அணாதைப் பிணம் சுட்டுவைத்தல்.

21. ஏழைகளுக்கு ஆடை வழங்குதல்.

22. விலங்குகளுக்கு தீனி வழங்குதல்.

23. காதோலை (காதணி) தருதல்.

24. பிச்சை இடுதல்.

25. மருத்துவரை உருவாக்குதல்.

26. வண்ணாரை ஏற்பாடு செய்தல்.

27. நாவிதரை ஏற்பாடு செய்தல்.

28. நோயாளிக்கு மருந்து கொடுத்தல்.

29. உணவு சமைக்கூடம் அமைத்தல்.

30. உயிர்காப்பு ஏற்படுத்தல்.

31. துன்புறுத்தும் காளையை விடுவிக்க முனைப்பிடுதல்.

32. பசுவுக்கு தீவனம் வைத்தல்.
***************************************
இறைவன், சிவனும் சக்தியுமாய் இலங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருளினர்.

உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு காந்திமதி அன்னை கமலபீட  நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டாள்.

உயிர்களோடு இரண்டறக் கலந்து சிவமாந்தன்மைப் பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்திற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது போன்றவைகள் நடந்த திருவிளையாடல்கள் நடைபெற்று மேன்மை கொண்ட தலமிது.

*நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்:*
சிவபெருமானின் நிவேதனத்திற்காக வேதசர்மா எனும் அந்தணச்சான்றோர் பிச்சை எடுத்து வந்து நெல்லை உலர்த்தி வைக்கப்பட்டிருந்த போது, எதிர்பாரதவிதமாய் மழை பெய்தது. 

மழை வெள்ளம், நெல்மணிகளை இழுத்துச் சென்று விடுமோ? என அஞ்சிய அவர், இறைவனை நினைந்து இறைஞ்சினார்.

இவரின் இறைஞ்சலுக்கு, உலர வைத்திருந்த நெல்மணிகள் மீது மழைவெள்ளம் படியாதவாறும்,  வழிந்து வந்த மழை நீரும்,  உலர்ந்து கொண்டிருந்த நெல்மணிகளை வேலிபோல அணைகாத்தும்,  ஒதுங்கி வழிந்தோடச் செய்தான் இறைவன்.

இறைவனுக்குரிய நெல்லை, நீர் இழுத்துப் போகாமல் வேலியாக நின்று காத்தமையால், *நெல்வேலி* நாதர் எனப் பெயர் கொண்டார்.

இச்சம்பவம் நடந்த இத்தலத்திற்கு *திருநெல்வேலி* என்னும் பெயரும் உண்டாயிற்று.

*"என்னை யொருபொருட்டாக வித்திறஞ் செய்தே-அருளாற் றுன்னீ யெங்கு மழையிருண்டு சொரிந்திடவு நனையாமல் செந்நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாட்டாலுனக்கு மன்னுபெயர் நெல்வேலி நாதனென்று வழங்கினால்"*

இறைவனிடம் சரண் புகுந்த உள்ளங்களே நெல், இறைவனிடம் சரண் புகுந்தால் பாவபெருமழை வந்தழிக்க முயன்றாலும், ஈசன் நம்மை காத்தருள்வார் என்ற பேருண்மையை இத்திருவிளையாடல் உணர்த்தியிருக்கின்றது.

            திருச்சிற்றம்பலம்.

*இன்னும் நாளை வ(ள)மும்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌸 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌸
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🍁 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 🍁
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹 *அருள்மிகு நெல்லையப்பரும், அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.* 🌹
               *(2-ஆம் நாள்.)*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

*வேனுவனத் திருவிளையாடல்:*
நான்மறைகளும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டினான்.

எனவே வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க இறைவன் லிங்கமாய் அமர்ந்தான் என்றுதான் தலபுராணம் எடுத்துறைக்கிறது.

மூங்கில் காட்டினூடே பாற்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்கிற அன்பனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறி விட்டுப் பாலைத் தன்மேல் கவிழச் செய்தார்.

மூங்கில் தடுக்கி பால் கொட்டியதால் அவனால் மூங்கில் புதரை வெட்டினார்.

வெட்டுப்பட்ட இடத்திலிருந்து *வேணுவனநாதராகத்* தோன்றி அருளினார்.

தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கீர்த்தியுடைய கங்காளநாதரின் பிச்சாடன மூர்த்தி கோலமும் பெருமை கொண்டவை.

இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவர் இட்ட சாபம் நீங்க உதவிய *'கரிஉருமாறிதீர்த்தம்'* அமைந்ததும் பெரும் சிறப்புடையவை.

சைவ ஆகமங்கள் இருபத்தெட்டில் காமிக ஆகமப்படி அமைந்த இத்திருக்கோயில் மிக மிக அழகுடையவை.

*காலசம்ஹார மூர்த்தி ஸ்வேத கேதுவிற்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல்:*
ஸ்வேத கேது என்கிற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு வந்தான்.

அனுதினமும் சென்று நெல்லையப்பரை பல் பூஜித்து வந்தான். 

வாரிசு இல்லாத அவனுக்கு அவனது அந்திமக்காலம் நெருங்கின.

இதையறிந்திருந்த அரசன் இறைவனது ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்த வண்ணமிருந்தான். 

அந்நேரம் காலன் என்பவன் அரசனை ஆட்கொள்ள, அந்த பாசமானது இறைவன் மீதும் படிந்து விழுந்தது.

நடந்தவைகளைக் கண்டு இறைவன் காலனைக் காலால் கடிந்தார். 

இறைவனும் அரசனைப் பார்த்து....நீ.மனம் வருந்திமாள வேண்டாம்!". எனக்கூறிட....அதற்கு அரசன் தானே இஷ்டப்பட்டு முக்தியடையவும் என்றிட....அதற்கு இறைவன்,  அருள் பாலித்த திருவிளையாடல் இத்தலத்தில்தான் நடந்தன.

*"கூற்றுதைத்த நெல்வேலி"* என்கிற பெரியபுராணத்திலுள்ள  பாடல் வரிகள் மூலம் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வை பதிந்திருக்கிறார்.

இத்திருக்கோயிலின் சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் இந்த காலசம்ஹாரமூர்த்தியின் கோலழகு புடைப்புச் சிற்பமாக சுப்பிரமணியர் சந்நிதி அருகாக செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டால் மெய்மறந்து நிற்போம்.

இந்த திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திர தினங்களில் சிவலிங்க பூஜை செய்து பஞ்சமூர்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதி உலாவரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

*"இந்தவா றிரங்கிச் சுவேதா*
*முனிவனிடம் புதறிருச் செவிபடலும்*
*நந்தி குழையன் முந்த*
*முப்புரங்கண்டுங் கிடவுருத்தெழுவது போன்*

*சுந்தர் மூலலிங் கத்தினூடு*
*தோன்றினான் வெகுளியுந் தோன்ற*
*வந்த முன்னின்ற வந்தகன் என்னை*
*மார்புறக் காலினா லுதைத்தான்"*

அப்பர், சம்பந்தர் போற்றும் காலாரிமூர்த்தியின் கதை இறைவனை அண்டினோர்க்கு மரண பயமில்லை என்பதை உணர்த்துவதாகும்.

திருக்கடையூரில் இறைவன் நிகழ்த்தியது, பிறக்கும் போதே இறப்பின் நாளை தெரிந்துகொண்டே பிறந்த இளைஞனுக்காய் காலனை உதைத்த திருவிளையாடல்.

ஆனால், இத்தலத்தில் இறைவன் நிகழ்த்தியது, முதுமையடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்கும் இருந்த பக்தனை மரண பயத்திலிருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல் இது.

எனவே, திருக்கடையூரைக் காட்டிலும், அன்னை அறம் வளர்த்தவளாகி அரனை மணந்து அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இத்திருத்தலத்தில் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் ம்ருத்யுஞ்ஜய மஹா வேள்வி ஆகியவை செய்வது சாலச் சிறந்தது.

*இன்னும் நாளையும்... வ(ள)ரும்.*

            திருச்சிற்றம்பலம்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌺 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!* 🌺
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌹 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 🌹
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌸 *அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.* 🌸
             *(3-ஆம்நாள்.)*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔

*இலக்கியச் சிறப்பு:*
-------------------------------------
*"சீர்சான்ற நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவை"* எனும் மதுரைக் காட்சி வரிகளுக்கு சாலியூர் எனப் பொருள் கொள்கிறார் திரு.உ.வே.சாமிநாத ஐயர்.

திருநெல்வேலிக்கு சாலியூர் எனும் பெயர் உண்டு என திருநெல்வேலித் தல புராணத்திலும், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழும் எடுத்துரைக்கிறது.

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய மூன்றாம் திருமுறைப் பதிகத்திலும், சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய ஏழாம் திருமுறைப் பதிகத்திலும், மற்றும் பன்னிரண்டாம் திருமுறைப் பதிகத்திலும், திருவிளையாடற் புராணத்திலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் இருக்கப் பெறுவதை காணமுடியும்.

மேலும் அழகிய சொக்கநாதப் புலவர் எழுதிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிலும், பகழிக்கூத்தர் எழுதியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இத்தலம் பற்றி பாடப்பெற்றிருக்கிறது.

திருநெல்வேலி தலபுராணத்தை நெல்லையப்பர் பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். இந்நூல் ஆறாயிரத்து எண்ணூற்று தொன்னூற்று ஒன்று செய்யுள்களை அடக்கியவை.

*தேவார மூவர் முதலிகளின் பார்வையில் நம் திருநெல்வேலி:*
இத்திருக்கோயிலை சைவசமய குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் எழுந்தருளி தமிழ்வேதம் பாடிப் பரவியிருக்கின்றார்கள்.

ஆனால், திருஞானசம்பந்தப் பெருமான் அருளித் தந்த *"மருந்தவை மந்திரம்"* என்று தொடங்கும் பதினோரு பாடல்கள் அடங்கிய திருப்பதிகம் மட்டும் கிடைத்திருக்கிறது.

(சம்பந்தர் தேவாரம்||| 92-103) தேவார மூவரில் முதல்வரான திருஞானசம்பந்தர் (திருஞானசம்பந்தர் புராணம், பெரியபுராணப் பாடல்886-ம் 887), திருநாவுக்கரசர் (திருநாவுக்கரசர் புராணம், பெரியபுராணப் பாடல் 410) ஆகியோர்கள் இத்திருத்தலத்தில் குழந்தை எழுந்தருளியதை தெய்வச் சேக்கிழார் எழுதிய *திருத்தொண்டர் புராணம்* என்ற பெரிய புராணத்தில் காணப்பெறலாம்.

*"பற்றார்தம் புரங்கள்மலைச் சிலையால் செற்ற*
     *பரமனார் திருப்புத்தூர் பணிந்து போற்றி*
*புற்றாகும் பணிபூண்ட புனித னார்தம்*
    *பூவனத்தை புக்கிறைத்து புகழ்ந்து பாடிக்*
*கற்றாரும் தொழுதேத்தும் கானப் பேரும்*
     *கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்*
*குற்றாலம் குறும்பலாக் கும்பிட் டேட்டிங்*
       *கூற்றுதைத்தார் நெல்வேலிக் குறுகி னாரே"*.......பெ. பு- 886

*"புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்*
     *புரிசடையார் திருப்பதிகள் பலவும் சென்று*
   *நண்ணி இனி தமர்ந்தங்கு நயந்து பாடி*
*நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்*
     *விண்ணவரைச் சென்றுந்தான் இலங்கை செற்ற*
*மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்*
   *திண்ணியபொற் தடக்கை இராமன் செய்த*
*திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்".* 
 பெ.பு.- 887

*"அங்குறைந்து கண்ணுதலார் அடிசூடி அகன்றுபோய்ப்*
      *பொங்குதமிழ்த் திருநாட்டு புறம்பனைசூழ் நெல்வேலி*
*செங்கண்விடை யார்மன்னுந் திருக்கானப் பேர்முதலா*
      *எங்குநிகழ் தானங்கள் எல்லாம்புக் கிறைஞ்சுவார்".* பெ.பு-410

*"நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ்*
     *பல்வேறு பதிப்பிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார்*
*வில்வேட ராய்வென்றி விசயனெதிர் பன்றிப்பின்*
    *செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து"* பெ.பு.-108

*கலைச்சிறப்பு*
மதுரை திருக்கோயிலை விட இத்திருப்பெருங்கோயி லை, சிற்பக் கலையின் சிரம் எனலாம்.

இக்கோவிலுக்கு ஐந்து கோபுரங்களோடான பெரியதிருக்கோயில்.

ஊருக்கு நடுநாயகனாக எண்ணூற்று ஐம்பது அடிநீளத்தையும், எழுநூற்று ஐம்பத்து ஆறு அகலமுடையதையும் கொண்டு, பரந்து விரிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன.

இறைவன் சந்நிதி கோபுரத்தை விட, இறைவி சந்நிதிக் கோபுரம் மிக அழகு வாய்ந்தவை.

*(அதற்காக, ஈசனின் கோபுரம் அழகு குறைவு என நினைத்தல் கூடாது.)*

திருக்கோயிலுக்குள் சென்று அங்கிருக்கும் பொற்றாமரைத் தீர்த்தக் கரையில் நின்று அம்மையின் திருக்கோபுரத்தைப் பாருங்கள். அம்மையின் திருக்கோபுரக் கம்பீரத்தை நீங்கள் உணர்வீர்கள்.

இங்கிருக்கும் பொற்றாமரைத் தீர்த்தத்தில் இறைவனே *நீர்* வடிவமாகவும், பிரம்மன் *பொன்மலராகவும்* பூத்த புண்ணிய தடாகம் என்று நிலவி வந்தவையாகும்.

இங்கிருக்கும் மகாமண்டபத்தில் நாயக்கர் கால சிலை வடிவங்களாக அமைந்துள்ள வீரபத்திரன், அர்ஜூனன், பகடைராஜா ஆகியோர்கள் சந்நிதி வாயிலில் அணிசெய்து அலங்கரிக்கிறார்கள்.

வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைத்திருக்கிறார்கள்.

பெண்மைக்கு எடுத்துக்காட்டாக, குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி தனியாக தூணொன்றினை அழகு செய்கிறாள்.

நீங்கள் இத்திருக்கோயிலுக்குச் செல்ல நேரும்போது, அங்கிருக்கும்  பிராகாரங்களின் மேற்கூறையை அன்னாந்து நோக்குங்கள்.

அதில் அர்ஜூனனின் உடன்போக்கு, சேவல் சண்டை, பன்னிரண்டு ராசிகளின் சக்கரக் குறியீடுகள் போன்ற இன்னும் ஏராளமானவைகள் மேற்கூறையில் செதுக்கியிருப்பதைப் பார்த்து மிரண்டு போவீர்கள். அதில் அவ்வளவு கலைநயம் விளைந்து இருக்கிறது என்பதை காணப் பெறுவீர்கள்.

இத்தலம் இருந்த இடத்தில் காமதகனம் நடந்துவிடப்பட்ட இடமாதலால், ஆங்காங்கு இருக்கின்ற தூண்களில் *ரதி,மன்மதன்* சிற்பங்கள் தோன்றச் செய்திருக்கின்றனர்.

இன்னும் முக்கிய இடமொன்றான தாமிரசபையில் இறைவனின் ஆடல் திருநடனத்தை, தேவர்குழாமெல்லோரும் சேர்ந்து தரிசிக்கும் மரச்சிற்ப வேலைப்பாடுகள் அரிய பெரிய கலைநயம் பொதிந்தவைகள்.

சுவாமி சந்நிதியின் மேல் பக்கமுள்ள ஆறுமுகநயினார் சந்நிதியில் ஆறுமுகன் மயில்மீதமர்ந்திருப்பது ஒரே திருக்கல்லாலானவை.

இன்னொரு சிறப்பு, மயில்மீதமர்ந்திருக்கும் ஆறுமுகனின் ஆறு திருமுகத்தையும் வலம் வந்து பார்த்து வணங்கும் முறையில் நிறுவப் பட்டிருக்கிறது.

சந்நிதியின் முன்பாக மகாமண்டபத் திருத்தரையின் மீது, கோவில்பட்டி பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி என்பவரால் வடிவமைக்கப்பட்ட *தாளச்சக்கரம்* அமைந்திருக்கிறது.

இத்தாளச்சக்கரம் இசைக்கலைஞர்களுக்கு பெரிதும் பயண்படக்கூடியவை.

சுவாமி சந்நிதி அறுபத்துமூவர் சந்நிதியில் இராவணன், கயிலை மலையை பெயர்த்தெடுக்கும் காட்சி, யாழில் இசைபாடுகின்றதுபோல் உள்ள சிற்பங்கள் உங்கள் மனதை மிகவும் மயக்கும்.

சுவாமி சந்நிதியின் மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கமாக இருக்கும் சுவற்றில்,..... இராவணன் மலையை பெயர்த்தெடுக்கும் காட்சியைப் பார்த்த அம்பிகை,......பயந்து மிரண்டு சுவாமியைத் தழுவுறும் சுபாவத்துடனான சிற்பத்தை அவசியம் பாருங்கள், ரசியுங்கள், வணங்குங்கள், பக்திப் பாங்கை விளையுங்கள்.

*உனை நினையும் மனந்தந்தாய் போற்றி!*

       திருச்சிற்றம்பலம்.

      *இன்னும் வ(ள)ரும்.*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை. கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌺 *பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!* 🌺
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌹 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 🌹
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌸 *அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.* 🌸
             *(4-ஆம்நாள்.)*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இத்திருக்கோயிலுனுள் மொத்தம் ஏழு மண்டபங்கள் இருக்கின்றன அவைகள்.....
-------------------------------
🌷1 *ஆயிரங்கால் மண்டபங்கள்:1*🌷
இத்தலத்திலிருக்கும் ஆயிரங்கால் மண்டபம் என்ற பெயர் கொண்ட மண்டபத்திற்கு ஆயிரம் தூண்கள் உண்டு.

ஐப்பசி மாதம் *திருக்கல்யாண விழா* இம்மண்டபத்தில்தான் நடக்கும்.

இம்மண்டபத்தின் நீளம் ஐநூற்று இருபது அடி. அகலம் நாயன்மார்கள் எண்ணிக்கையை கொண்டவை.(அறுபத்து அடி கொண்டவை.)

பிரெஞ்சு உத்தர நாளன்று செங்கோல் கொடுக்கும் நிகழ்ச்சி இம்மண்டபத்தில் அதிவிமரிசையாக தொடர்ந்து நடந்து வருகின்றது.

இம்மண்டபத்திலிருக்கும்  உச்சிஷ்ட கணபதியாக அமர்ந்தருளி காட்சிதருவது, காந்தத்தை இரும்பு ஈர்ப்பது போன்று, அவர் அழகு இருக்கும் தோற்றம் நம்மை ஈர்த்து ஈர்த்து அவரைத் திரும்பப் பார்க்க வைக்கும். அவ்வளவு அழகு கொண்டவர் இந்த உச்சிஷ்ட கணபதி.

மேலும், ஐப்பசி திருக்கல்யாணமும் இந்த மண்டபத்தில்தான் நடக்கிறது.

அந்த மண்டபத்தில், கீழ்ப்பகுதியில் (🐢) ஆமை ஒன்றினால் தாங்கிக்கொள்ளப்படுவது போன்ற வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளதை காணப் பெறுங்கள்.

அதாவது, மகாவிஷ்ணுவே 🐢 ஆமை வடிவம் தாங்கி வந்து ஈசனைப் பூசிப்பதாய் ஐதீகம்.(கச்சபாலயம்)

🌷2 *ஊஞ்சல் மண்டபம்:*🌷
இந்த ஊஞ்சல் மண்டபமானது, தொன்னூற்று ஆறு தூண்களை கொண்டு நிமிர்ந்து நிற்கிறது.

*(ஏன்? நூறு தூண்களை நிறுவியிருக்க வேண்டியதுதானே? அதில் என்ன நான்கு குறைவாக நிறுவியிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது அப்படித்தானே!)*

தத்துவங்கள் தொன்னூற்று ஆறு. அந்த தொன்னூற்று ஆறு தத்துவங்களை உள்ளடக்கியதை எடுத்துக்கூறவே தொன்னூற்று ஆறு தூண்களை நிறுவியிருக்கிறார்கள்.

திருக்கல்யாண வைபவம் மகிழ்ந்து முடிந்துவுடன் சுவாமியும் அம்மனும் ஊஞ்சலில் ஆடிய நிகழ்வு நடந்தேறும். பார்க்க பார்க்க மெய்சிலிர்த்துப் போவோம்.

அடுத்ததாக ஆடி மாதத்தில் வளைகாப்புத் திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறும். அந்நேரம் கட்டுக்கடங்காத கூட்டம் விலகாது கூடிநிற்கும்.

கூட்டம் இல்லாமல் சுவாமிசமேதர்களை தரிசிப்பதை ஒன்றும் பெரும் பாக்கியமாய் கருதிவிடக்கூடாது. கூட்டத்திலும் கூட்டமாக கூடநின்று,  உங்கள் உள்ளம் நெகிழ இறைவன்​ இறைவியை தரிசிக்க வேண்டும்.  அப்போது, அவன் அருட்பார்வைகளை கூட்டத்திலிருக்கும் அத்தனை பேர்மீதும் அவன் பிரவோகிப்பான். 

அதனால்தான் அத்தனை  பெண்களும் அவன் அருட் பார்வைக் கணைகளை எதிர்பார்த்து ஏங்கிக் காத்திருக்கிறார்கள்.

இந்த வகையில் பெண்கள் கொஞ்சம் உயர்வானவர்களே!, காரணம், நம் வீட்டுப் பெண்கள் இறைவன் அருட்பார்வைக்குக் காத்திருக்கும் போது, நம்மில் இந்த (ஆண்கள்) அவ்விடத்தில் பொறுத்து இருப்பதில்லை.

இந்த மண்டலத்திலிருக்கும் யாளி சிலைச் சிற்பங்களைக் காணும் போது, *இவைகள் உயிருள்ளவரை யோக?* என நம் மனதிற்குத் தோன்றும்.

இந்த ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் திருபிறவிப் பெருமாள் பிள்ளையன் என்பவரால், கி. பி.ஆயிரத்து அறுநூற்று முப்பத்தைந்தாம் வருடத்தில் கட்டுவித்துக் கொடுத்தார்.

🌷3 *சோமவார மண்டபம்.*🌷
கருவறை சுவாமியின் வடபக்கத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது.

இங்கு,கார்த்திகை சோமவார நாளினில், இங்கு வைத்துத்தான் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழ்த்துகிறார்கள்.

சமீபத்திலிருந்து தற்சமயம் வரை, நவராத்திரி 
விஷேச பூஜையை இங்கு வைத்துத்தான் நடத்தி வருகின்றனர்.

இம்மண்டபத்திற்கு எழுபத்தெட்டு தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் அதன் கம்பீரத்தை காட்டுகின்றது.
*(எழுபத்தெட்டு தூண்கள் இதற்கான தத்துவம் தெரியப்படவில்லை. ஒருவேளை இட அமைப்புக்குத் தகுந்தவாறு தூண்களை நிறுவியிருக்கலாம்.)*

🌷4 *சங்கிலி மண்டபம்* 🌷

சுவாமிதிருக்கோயிலையும், அம்மன் திருக்கோயிலையும்  இம்மண்டபம் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயர்.

இம்மண்டபத்தை திருவடமலையப்ப பிள்ளையன் அவர்களால் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்தேழாம் வருடத்தில் கட்டுவிக்கப்பட்டது.

மற்ற மண்டபத் தூண்களை விட  வித்தியாசமாக, இம்மண்டபத்தூண்களில், *காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன் மற்றும் அர்ச்சுனன் சிற்பங்கள் நம்மை மிரட்டுகிறது.*

🌷5 *மணி மண்டபம்.*🌷
இம்மண்டபத்தின் நடுவினில் பெரியதான மணியொன்றை தொங்கவிட்டிருக்கின்றனர்.

அதனால் இம்மண்டபத்தை மணிமண்டபம் என்பர்.

இம்மணிமண்டபம் *நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது.* ஒரே கல்லில் சுற்றிச் சுற்றிப் பல சிறுதூண்கள் உள்ளன.

ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு வாத்தியொலியை இசைக்கும்.

தூண்கள் தோறும் ஸ்வரங்கள் வேறுபட்டு மாறி வேறாக ஒலிக்கும்.

மரக்கட்டையில் மான்கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான சரியான ஸ்வரம் வரும். 

இதில் மொத்தம் நாற்பத்தெட்டு சிறிய தூண்கள் உள்ளன.

இத்தூண்களின் தன்மையை அறிந்த ஆய்வாளர்கள்,...இவை தமிழ்நாட்டில் இசைத் தூண்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில்  *காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை* என கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

🌷 *வசந்த மண்டபம்* 🌷
இம்மண்டபத்தில் கோடைகாலங்களில் வசந்த விழா யாவும் இங்குதான் நடக்கும். அதனால் *வசந்த மண்டபம்.* 

இம்மண்டபத்தைச் சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டிருக்கும். இந்தச் சோலைவனத்துடன் கூடிய மண்டபத்தை திருவேங்கிட கிருஷ்ணமுதலியார் அவர்களால் ஆயிரத்து எழுநூற்று ஐம்பத்தாறாம் வருடத்தில் கட்டுவிக்கப்பட்டது.

🌷 *சிந்து பூந்துறை தீர்த்த மண்டபம்.*🌷
இம்மண்டபத்தில் வைத்துத்தான் முக்கியமான தீர்த்தவாரிகள் அனைத்தும் நடத்தி வருகின்றனர். இம்மண்டபத்தைத் தைப்பூச மண்டபம் என்றும் கூறுவர். 

திருவிழாக்கள் தோறும் ஈசனும் ஈஸ்வரியும் எழுந்தருள்வதற்கான உள்ள, பல வாகனங்களும் வேறெங்கும் இருக்காது, இங்கே காணும் வாய்ப்பு மிக அழகு.

இம்மண்டபத்தை, சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையவர்களால் கட்டுவிக்கப்பட்டதாகும்.

              திருச்சிற்றம்பலம்.

*இன்னும் வ(ள)ரும்.*

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.*🌷
             *( 5-வது நாள்.)*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
🍁 *பஞ்ச ரதங்கள்:*🍁
இத்திருக்கோயிலின் சுவாமித் தேர் தமிழ்நாட்டிலேயே மூன்றாவதாக பெரிய தேராகும்.

ஆயிரத்து ஐநூற்று ஐந்தாம் ஆண்டில் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.

ரத வீதிகள் அரியநாயக முதலியாரால் வகுக்கப்பட்டது.

அந்த பெரிய தேரின் எடை நானூற்று ஐம்பது டன்.

இத்தல பஞ்சமூர்த்திகளுக்கும் தேர் உண்டு.

மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்புத்தேர் பவனிவரும்.

தமிழ்நாட்டிலேயே வேறெந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான மரச்சிற்பங்கள் கொண்ட அம்மன் தேர் இத்திருக்கோயிலில் உள்ளது.

அருள்தரும் காந்திமதி அன்னை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிரசபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

சபைகளில், சிதம்பரம் பொற்சபையில் *ஆனந்தத் தாண்டவமும்*, திருவாலங்காடு ரத்ன சபையில் *ஊர்த்துவ தாண்டவமும்*,மதுரை வெள்ளியும் பலத்தில் *சுந்தரத் தாண்டவமும்*, திருக்குற்றாலம் சித்திர சபையில் *அசபா தாண்டவமும்* புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமிர சபையில் *பிரம்ம தாண்டவம்*எனப்படுகின்ற ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது.

உற்சவ மூர்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவர் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அப்பர் பெருமானின் *"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்"* என்கிற பாடலுக்கு இலக்கணமாய் *அக்னி சபாபதி* என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜர் சந்நிதியையும் இத்தலத்தில் காணவேண்டிய ஒன்று.

இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தலம்.

இத்தலத்திற்கு இரட்டைக் கருவறைகள்.

ஒன்று- *வேணுவனநாதர்.*
மற்றொன்று- *நெல்லை கோவிந்தர்.*

இத்தலத்தில் முத்துசாமி தீட்சிதர், இறைவி மீது ஹேமாவதி இராகத்தில் அமைத்த *'காந்திமதிம்'* எனும் பாடலைப் பாடியுள்ளார்.

இத்தலத்தில், தை அமாவாசையன்று பத்ரதீபமும் (பத்தாயிரம் விளக்குகள்), ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று இலட்ச தீபமும் வழக்கமாக ஏற்றப்பட்டு வருகிறது.

பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்சமயத்தில் மணி மண்டபத்தில் *தங்க விளக்கு*, மற்றும் இரண்டு வெள்ளி விளக்குகளும் மற்றும் இவ்விளக்குகளைச் சுற்றி எட்டு தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.

நீத்தார் கடன்களை (பித்ருகர்மா) சரிவர செய்யாதவர்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின் போது, இங்கு வந்து தீபமேற்றினால் குடும்பத்திற்கு பீடிக்கப்பட்டிருந்த சாபங்கள் ஏதேனும் இருப்பின், அச்சாபங்கள் விலகி அவர்களின் வாழ்க்கை செம்மை பெறும்.

ஆகவேதான் இந்நிகழ்வுகளை கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் என்பவர் இத்திருக்கோயிலில் ஏற்படுத்தித் தொடரச் செய்தார்.

இத்தலத்தில், ஆறுமுக நயினார் சந்நிதியில் *வித்யா சக்கரம்* என்று ஒன்று நிறுவப் பட்டிருக்கிறது. 

கல்வியில் மேன்மைப்பட்டு வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த வித்யா சக்கரத்திற்கு ஹோமம் செய்ய மேன்மை உயர்படும்.

இத்தலத்தில், இல்லற வாழ்வில் கணவன் மனைவி இடையே நிலவ வேண்டிய கருத்தொற்றுமையை வலியுறுத்தும் விதமாக, இவ்வாலயத்தில் இறைவனுக்கு உச்சிகால பூஜைக்கான நிவேதனம், இறைவி சந்நிதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு, அர்ச்சகர்களால் எடுத்துச் செல்லப்பட்டு இறைவனுக்கு நிவேதிக்கப்படுகிறது.

இறைவியே, இறைவனுக்காக உணவு தயாரித்து எடுத்துச் சென்று படைப்பதாக இதனின் ஐதீகம்.

பங்குனி திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில் உடையவர் லிங்கம் எனப்படும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளும் திருமணமான பெண்களின் கணவர் நீண்ட ஆயுள் பெற்று அப்பெண்கள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர் என்பது ஐதீகம்.

இத்தலத்தை, புனர்பூச நட்சத்திரக்காரர்கள் சென்று வழிபட வேண்டிய உண்ணத தலம்.

              திருச்சிற்றம்பலம்.

         *இன்னும் வ(ள)மும்.*
🙏🏾🌻🍀🌷🌸🌼💐🌹🌿🌺☘🍃🍁
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.*🌷
             *( 6-வது நாள்.)*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌺 *தாமிர சபை. (திருநெல்வேலி.)*🌺
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ஆடல் பெம்மானின் பிரம்ம தாண்டவம்.*
*அழகு படிமத்தின் உச்சமாய் தாமிர சபையில்.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அருள்தரும் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிரசபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பஞ்ச சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் *ஆனந்தத் தாண்டவமும்,* திருவாலங்காடு ரத்ன சபையில் *ஊர்த்துவ தாண்டவமும்,* மதுரை வெள்ளியம்பலத்தில் *சுந்தரத் தாண்டவமும்,* திருக்குற்றாலம் சித்திர சபையில் *அசபா தாண்டவமும்* புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படுகின்ற *ஞானமா நடனம்* செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது.

*புராணச் சிறப்பு:*
மூர்த்தி, தீர்த்தம், தலப்பெருமை உடைய சைவம் தழைத்தோங்கும் திருநெல்வேலியில் தாமிரசபைதனில், பெருமான் ஞானமயமான நடனம் செய்த காட்சியினை ஞானமாதவத்தை உடைய சூதமுனிவர் எடுத்துரைத்தார்.

*"மாய வாழ்வை அறுத்து வாழ்வளிக்கும் மன்னனாகிய எம்பெருமான் திரிபுரம் எரித்து ஆடிய நடனத்திலும் உயர்ந்த நடனத்தை ஆடியருளினார்.

செந்தமிழ் பாடலுக்கு அரசியாகிய வடிவுடை அன்னை,வேணுவனத்தில் படர்ந்த செவியுடன் அடர்ந்த சடையும் கொண்டு பெருமானின் திருநடனம் காட்சி காண வேண்டி நின்றாள்.

அம்மையின் தேன்மொழிக்கு இசைவுற்ற ஈசன், வேணுவனத்தில் எம்பெருமான் எழுந்தருளினார்.

பூதகணங்களின் தலைவனாம் பாணுகம்பனின் தலைமையில் ஆயிரக்கணக்கான வாங்கைகளும், சங்குகளும், பேரிகைகளும் முழங்கின.

அகத்தியர் யாழ் வாசித்தார்.

நாரதர் தம்புராவை மீட்டினார்.

பூதகணங்கள் சுருதிகூட்டி இன்னிசை முழங்கினார்கள்.

தேவர்கள் பூமழை பொழிந்தனர்.

இவ்வளவதிர்வலைக்கிடையில், இவ்வுலக உயிர்கள் உய்யும் பொருட்டு, வேய்வனத்துத் தாமிர சபைதனிலே திருநடனம் புரியலானார்.

முயலகன் மீது ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலை எட்டுத்திசைக்கும் வீசி ஆடினார்.

படர்சடை படபடவென்று ஆடியது.

கங்கையும் ஆராவாரித்து ஆடினாள்.

பிறைச்சந்திரன் சுழலற்சியுடன் ஆடி வலம் வந்தான்.

அரவங்கள் ஊர்ந்தாடின.

இவர்களோடு ஈசனின் காதிற்குழைகளும் ஆடின.

அணிந்திருந்த அணிகலங்களும் சேர்ந்து ஆடிக் கொண்டன.

கனல் ஆடியது........

பத்மாட......................

அண்டமெல்லாமும் ஆட.........

எம்பெருமான் திருநடனம் செய்து ஆடினார். இல்லை!....இல்லை!...அருள்செய்தார்.....!!!!!!

பிரம்மா...எழுந்து வணங்கினார்.......

திரும்ப திருமாலும் வணங்கெழுந்தார்........

இந்திரன், சூரியன், சந்திரன் வணங்கியபடியே நின்றிருந்தனர்.

பூதக்கணங்கள், முனிவர்கள், இசைவித்தகர்கள், மற்றும் பூமியிலுள்ள அனைவரும் வந்தனையோடு சிரமேல் கை குவித்து நின்றிருந்தனர்.

அப்போது, தாமிரசபை நாதன்- அன்னையை நோக்கி அமுதென மொழியொன்றை உரைத்தார்.

*"அருள்தரும் வடிவன்னையே உம்மோடு எப்போதும் பிரியாது இவ்வேணுவனந்தனிலும், தாமிரசபைதனிலும் வீற்றிருக்கும் பெருமை பெற்றோம்"* என்றார்.

இவ்வாறு விற்கருவி செய்வதற்கேற்ற நீண்ட மூங்கில் வனத்தை உடைய தாமிர சபைதனில் நடனஞ் செய்த காட்சியினை விரித்துரைத்தார் சூதமுனிவர்.

             திருச்சிற்றம்பலம்.

*இன்னும் வ(ள)ரும்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🌹*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*🌹
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.* 💐
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌷 *அருள்மிகு நெல்லையப்பரும் அருள்தரும் காந்திமதி அம்மனும் தொடர்.*🌷
             *( 7-வது நாள்.)*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

🌺 *தாமிர சபை. (திருநெல்வேலி.)*🌺
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*திருவாதிரைத் திருநடனம்.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
இந்தத் திருநடனக் காட்சி ஒவ்வொரு ஆண்டும் தாமிர சபையில் மார்கழி மாதத் திருவாதிரை நன்னாளில் வெகு விமரிசையாக நடந்தேறி வருகிறது.

நடராஜப் பெருமானின் ஐந்தொழிலையும் தனித்தனியாகச் செய்யும் தாண்டவங்களையும்,அவற்றை அவர் இயற்றிய இடம் பற்றியும் *திருப்பத்தூர் புராணத்தில்* நீங்கள் அறியப்படலாம்.

*"தாமிர சபையில் தேவதாருவன நெல்வேலி*

*ஆம்பிர பலதலத்தில் ஆற்றதும் முனிநிருத்தம்"* என இருக்கிறது.

இதுதான் படைத்தல் தொழிலைக் கூறும் தாண்டவமாகும்.

இந்தத் தாமிர சபையினில், அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் இரண்டாவது திருச்சுற்றில் தெற்குப் பார்த்த வண்ணம் அமைந்திருக்கிறது.

கல்லாலான பீடத்தின் மீது, மரத்தாலான மண்டபத்தை நிருத்தப் பட்டு, இதனின் மேற்கூறையில் தாமிரத் தகடுகளால் பதிக்கப்பட்டுள்ளன.

பிரமிடுபோல கூம்பு வடிவத்தில் தோற்றம் உடையவை இவை.

தாமிர சபையின் பின்புறமாக சந்தன சபாபதி சந்நிதி அமைந்துள்ளது.

இங்கே மூலவராக நடனத் திருக்கோலத்தில் சந்தன சபாபதி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

இவரின் திருநடனம் தை, வியாக்கியானம், பதஞ்சலி, காரைக்கால் அம்மையார் ஆகியோர் கண்டுகளிக்கின்றனர்.

சந்தன சபாபதி கண்களும் பூசப்படும் சந்தனமானது, சித்திரைத் திருவோணம்,ஆனி உத்திரம், ஆவனி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தி, மார்கழித் திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தி ஆகிய ஆறு சந்தர்ப்பங்களில் களையப்பட்டு புதியதாக மீண்டும் பார்க்கப்படுகிறது 

தாமிரசபையில் எழுந்தருளியிருக்கும் சந்தன சபாபதிக்கு ஆறு அபிசேக நாட்கள் நடக்கின்றன.

1.மார்கழித் திருவாதிரை--உஷத்கால பூசை.

2.மாசி-சுக்ல பட்ச சதுர்த்தி-- காலசந்தி பூசை.

3.சித்திரை-திருவோணம்-- உச்சிகால பூசை.

4.ஆனி-உத்தர நட்சத்திரம்-- சாயங்கால பூசை.

5.ஆவணி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- இராத்திரி சந்தி பூசை.

6.புரட்டாசி-சுக்கிலபட்ச சதுர்த்தி-- அர்த்தயாம பூசை.

தாமிர சபையின் முன்புறமான இல்லாதான் ஒரு மண்டபம் இருக்கிறது. 

இம்மண்டபத்தின் மேற்கூறையானது, வளைவான ஆர்ச் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்கள் எவைகளையும் பயன்படுத்தப்படாமல் முட்டுக் கொடுத்து நிறுவியிருக்கிறார்கள்.

இம்மண்டபத்தின் தூண்களின் கீழ்புறம் அமைந்துள்ள யானை சிற்பங்கள்தான் இம்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன.

மார்கழித் திருவாதிரைத் திருநாளில் தாமிர சபைக்கு எழுந்தருளும் உற்சவரான தாமிரசபாபதியின் திருநடனம் இம்மண்டபத்தில் வைத்துத்தான் நடைபெறுகிறது.

இந்தத் திருநடனக் காட்சியினை மகாவிஷ்ணு மத்தளம் வாசிப்பது போலவும், மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி முதலான இறைவர்களோடு சேர்ந்து, பதஞ்சலி, வியாக்கியானம் ஆகிய முனிவர்களும் தரிசிப்பதைப் போன்று புடைப்புச் சிற்பங்களாக இம்மண்டபத்திலிருக்கும் தூண்களில் உளிகொண்டு உயிரூட்டம் கொடுத்துள்ளனர்.

திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகிய இவ்விரண்டு நாட்களும் சிவபெருமானின் தனிச்சிறப்பான நாட்களாகும்.

திருக்கார்த்திகைத் திருநாள் சிவபெருமான் பேரொளிப் பிழம்பாய் தோன்றி அருளிய திருநாளாகும்.

இப்பிழம்பு  அருவுருவத் திருமேனியைக் குறிக்கும்.

உருவத் திருமேனி கட்புலன் ஆவலோடு தீண்டவும் வாய்ப்புடையது.

ஆனால்,நெருப்பினை காண்பதல்லாமல் தீண்ட இயலாது.

உருவத்திருமேனியினின்று உருவாக முதற்கண் தோன்றிய திருவுருவு கூத்தபெருமானார் திருவுருவே!

அஃதொன்றே திருவருள் மேலிட்டால் இடையீடின்றி இயற்றியருளும் எழில் மிக்க திருத்தொழில்கள் ஐந்தினுக்கும் உரிய திருமேனியாகும்.

அத்திருமேனியைக் குறிக்கும் திருநாள் திருவாதிரை யாதும். ஆதலால், இந்நாளே உலகத் தோற்றத்தின் பொன்னாளாகும்.

திருவாதிரை நாளில் தாமிர சபையின் முன் உள்ள கூத்தபிரான் சந்நிதியில் ஒரு பசு நிறுத்தப்படும்.

இந்தச் செயல் சிவபெருமான் மீண்டும் படைத்தலாகிய சிருஷ்டித் தொழிலைக் மேற்கொள்வது ஆன்மாக்கள் பொருட்டே என்பதை உணர்த்துவதாகும்.

அப்புக்குட்டி காரானாக இருப்பது, திணிந்த இருள் போன்ற ஆணவ மலத்தில் அழுத்திய நிலையுடையன ஆன்மாக்கள் என்பதைக் குறிப்பதாகும்.

இறைவன் சந்நிதியில் அப்பசுவின் முகம் காட்டப்படாமல் அதன் பின்புறம் காட்டி நிறுத்தப்படுகிறது.

இறைவன் திருவடி இன்பத்தை விரும்பாமல் உலக இன்பத்தையே விரும்பிச் செல்லும் ஆன்மாக்களின் நிலையை இது குறிக்கிறது.

சந்நிதியில் இறைவன் அருளிய அருட்பேராக கருநிறச் சாந்து வழங்குகிறார்கள்.

உயிர்களுக்கெல்லாம் இறைவன் மலச் சார்பாகிய உலக வாழ்வைத் தந்துகொண்டிருக்கிறான் என்பதே இதைக் குறிப்பதாகும்.

மலத்திலே அழுந்திக் கிடக்கும் உயிர்களுக்கு ஈசன் தனுகரணம் முதலியவைகளை படைத்துக்கொடுத்தல் களிப்பைத் தரும்.

ஆதலால், இக்குறிப்பை உணர்த்தவே களி உண்ணத் தரப்படுகிறது.

தாமிர சபையின் மேற்கூரையில் மரத்தாலான எண்ணற்ற சிற்பங்கள் இருக்கின்றன.

அடுத்தமுறை நீங்கள் இவ்வாறு செல்ல நேரும்போது, ஆடவல்லானை அண்ணாந்து பார்த்தபிறகு, இவன் சபையின் மேற்கூறையையும் நோக்குங்கள்.

தாமிர சபையில் நடுநாயகமாக அமைந்துள்ள கல் பீடத்தில் வைத்து நடத்தப் படுகிறது.

ஆடல் வல்லானின் திருநடனக் காட்சியினை கூரையின் முதல் அடுக்கில், இறைவனின் திருமூர்த்தங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

அடுத்திருக்கும் இரண்டாவது அடுக்கில் முனிவர்கள் நிறைய வர்கள் பார்த்து ரசிப்பது போல் இருக்கின்றன.

இந்த மரச்சிற்பங்களில் இதர திருநடன சபைகளின் சிற்பங்களும் உருவாக்கியிருக்கிறார்கள்.

கண்ணப்ப நாயனார் தனது ஒரு காலால் சிவலிங்கத்தின் கண்ணை மிதித்துக் கொண்டு குறுவாளால் தன் கண்ணைக் கொட்டும் காட்சியினையும், இதை சிவ பெருமான் தடுக்கும் காட்சியும் அற்புத சிற்பமாக செதுக்கியிருக்கிறார்கள்.

*ஆலயத் தொடர்புக்கு:*
அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்,
திருநெல்வேலி டவுன், 
திருநெல்வேலி-627 006.
தொலைபேசி-0462 2339910


      திருச்சிற்றம்பலம்.

இத்துடன் அருள்மிகு நெல்லையப்பரும், அருள்தரும் காந்திமதி அம்மனும் சிறப்புகள் மகிழ்ந்து நிறைந்தது.

*நாளை..அருள்மிகு சாலைக்குமாரசுவாமி திருக்கோயில் திருநெல்வேலி வ(ள)ரும்.* 

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment