Thursday, September 21, 2017

Gracing a murderer - Periyavaa

கொலைகாரனை நோக்கி நடந்தார்கள் பெரியவா!

அன்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார் பெரியவா.
சகஜமாய்ப் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று பேச்சை
நிறுத்தி,எழுந்து நின்றார்கள்.''நான் மட்டும் வெளியில்
போய்விட்டு வரேன் யாரும் என்னுடன் வரவேண்டாம்'' என்று
சொல்லிவிட்டு நடந்து வெளியே போய் விட்டார்கள்.
எல்லாருக்கும் அச்சம், திகைப்பு, பெரியவா தனியாப் போறாளே
என்ற விசாரம்.
கொஞ்ச நேரம் கழித்து, பெரியவா திரும்பி வந்ததுதான்
,எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவரை எங்கே
போய் வந்தீர்கள் எனக் கேட்கவா முடியும்?
அவர்களைத் தவிக்க விடாமல் அவரே சொல்ல ஆரம்பித்தார்.
''எங்கே போனேன்னு கவலைப் பட்டீர்கள் இல்லையா? ஒரு
கொலைகாரன் என்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தான்.
அவன் மடத்துக்குள் வந்தால் அவன் பாபமும் உள்ளே வந்து
ஒட்டிக் கொள்ளும்.
ஆனா ,என்னிடம் நல்ல எண்ணத்தோடதான் வந்தான்; அவன்
வருத்தத்தைப் போக்குவேன் என்ற நம்பிக்கையிதான் வந்தான்.
அப்படிப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்வது என் கடமை.
அவனை மடத்துக்குள் வர விடவும் கூடாது;ஆறுதலும்
சொல்லணும் ! அதனாலே நான் மடத்துக்கு வெளியில்போய்
பேசி விட்டு வந்தேன்.அவனைத் தனியே அழைத்துச் சென்று
அவனுக்கு சங்கடம் கொடுக்காமல் ஆறுதலாகப் பேசி
வந்தேன்...''
பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் ,பகவான்
அவனை நோக்கி பத்து அடிகள் வைத்து வருவார் என்பார்கள்.
ஆனால் ஒரு பாவி மனம் திருந்தி,தன்னை நோக்கி ஒரு அடி
எடுத்து வைத்தால் ,தான் நூறு அடிகள் நடந்து சென்று, தன்
கடாக்ஷத்தாலேயே அவனைக் கழுவிட்டு வருவார்கள்
பெரியவா! அடியார்களை ஆட்கொள்வதற்கு!
அருள்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை!
பகவான் நடந்து வருவார் என்பது வழக்கு! ஆனால் பெரியவா
நடந்து சென்றார் என்பது நிஜம்!
ஜய ஜய சங்கரா....

No comments:

Post a Comment