ராமாவதாரம்
दशरथस्य मनसः भक्ति कर्मज्ञानेति भार्याः |
धर्मार्थकाममोक्षेति पूत्रेषु धर्म: रामो परमप्रिय: ||
दशरथः दशेन्द्रियवशगः कर्मरूपिण्याचोदित:|
धर्मरूपिणं रामं राज्यात् निष्कासितवान् ||
धर्मानुसृतः लक्ष्मणः लक्ष्मिसंपन्नः |
मोक्षार्थं कामः शत्रुघ्नः भरतप्रियानुज:||
தசரதஸ்ய மனஸ: பக்திகர்மஞாநேதி பார்யா:
தர்மார்த்தகாமமோக்ஷேதி புத்ரேஷு தர்ம:ராமோ பரமப்ரிய:
தசரத: தசேந்த்ரியவசக: கர்மரூபிண்யாசோதித:
தர்மரூபிணம் ராமம் ராஜ்யாத் நிஷ்காஸிதவான்
தர்மானுஸ்ருத: லக்ஷ்மண: லக்ஷ்மிசம்பன்ன: |
மோக்ஷார்த்தம் காம: சத்ருக்ன: பரதப்ரிய||
தசரதஸ்ய- தசரதன் என்ற மனத்திற்கு
பக்திஞானகர்ம இதி- பக்தி, ஞானம் கர்மம் என்ற
பார்யா: - மனைவிகள்
தர்மார்த்தகாமமோக்ஷேதி- தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்ற புத்ரேஷு-பிள்ளைகளில்
தர்ம:- தர்மம் ஆகிய
ராம:- ராமன்
பரமப்ரிய: - மிகவும் பிரியமானவன்
தசரத:- தசரதன்
தசேந்த்ரியவசக:- இந்த்ரியங்களின் வசத்தில் அகப்பட்டு
கர்மரூபிண்யா – கரம்த்தின் உருவான கைகேயியினால்
சோதித:தூண்டப்பட்டு
தர்மரூபிணம்- தருமத்தின் உருவான
ராமம் – ராமனை
ராஜ்யாத்- ராஜ்ஜியத்தில் இருந்து
நிஷ்காஸிதவான் – வெளியேற்றினான்
தர்மானுஸ்ருத: -தர்மத்தை (ராமனை) பின்பற்றினான்
லக்ஷ்மண: லக்ஷ்மணன்
லக்ஷ்மிசம்பன்ன: - அவன் அர்த்த ஸ்வரூபன் அதாவது கைங்கர்ய மாகிற செல்வத்தை உடையவன்
மோக்ஷார்த்தம் காம:- காமம் அல்லது ஆசை மோக்ஷத்தை பின்பற்றியே அதனால்
சத்ருக்ன: - சத்ருக்னன்
பரதப்ரிய:- பரதனை நேசித்தான்
விளக்கம்
தசரதன் என்றால் பத்து ரதங்களை உடையவன் அல்லது பத்துரதங்களை ஒரே சமயத்தில் யுத்தத்தில் சமாளிப்பவன் என்பது பொருள். இது பத்து இந்த்ரியங்கள் உடைய மனிதனைக் குறிக்கிறது. அவனுடைய மனைவிகளில் கௌசல்யா பக்தியையும் சுமித்ரா ஞானத்தையும் கைகேயி கர்மத்தையும் குறிக்கின்றனர்.
தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என்பவை அவனுடைய நான்கு பிள்ளைகள். இதில் ராமர் தர்மம், லக்ஷ்மணன், அர்த்தம் , சத்ருக்னன் காமம் , பரதன் மோக்ஷம்.
இது எப்படி என்றால் வால்மீகி சொல்கிறார், 'ராமோ விக்ரஹவான் தர்ம:', ராமன் தர்மத்தின் உருவே என்று. தர்மத்தின் ஆணிவேர் வேதத்தில் உள்ளது. வேதத்தின் பொருள் பரமாத்மா அதாவது ராமன்.
'லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பன்ன: ' அதாவது கைங்கர்யம் என்ற செல்வத்துடன் கூடியவன். அர்த்தம் என்றால் பொருள். அது தர்மத்துடன் கூடியே அதாவது தர்மத்தின்படி ஈட்டப்பட்டே இருக்க வேண்டும். அதுதான் லக்ஷ்மணன்
எப்போதும் ராமனுடன் இருப்பதன் உட்பொருள்.
பரதன் முமுக்ஷுத்வம் அதாவத் மோக்ஷத்தில் நாட்டத்தை காண்பிக்கிறான்.
சத்ருக்னன் ஆகிய காமம் அல்லது ஆசை மோக்ஷத்தைக் குறித்தே இருக்க வேண்டும். அதனால் சத்ருக்னன் பரதனை பின்பற்றுகிறான்.
தசதரதன் ஆகிய மனம் ஞானமாகிய கௌசல்யையை விட்டு இந்த்ரியங்கள் வசப்பட்டு காம்ய கர்மம் ஆகிய கைகேயியின் தூண்டுதலால் தருமத்தை கைவிடுகிறது. இதனால் ராமனாகிய தர்மம் ராஜ்யத்தில் இருந்து வெளியேறுகிறது. சுமித்திரை ஞானத்தின் ஸ்வரூபம். ராமனைப் பிரிய மனம் இன்றி தசரதன தவிப்பது மனிதனின் மனசாட்சி எவ்வாறு தருமத்தைக் கைவிட தயக்கம் காட்டுகிறது என்பதாகும். முடிவில் ஆசைவயப்பட்டு மனம் தருமத்தைக் கைவிட்டு நாசத்தை அடைகிறது.
இதையே கீதையில் 'த்யாயதோ விஷயான் பும்ஸ: சங்கஸ்தேஷு உபஜாயதே' என்ற ஸ்லோகத்தில் பகவான் ஆசைவயப்பட்டு மனிதன் உலகவிஷயத்தில் பற்றுக்கொண்டு எவ்வாறு முடிவில் நாசம் அடைகிறான் என்பதை கூறுகிறார். 'ஸ்ம்ருதி ப்ரம்சாத் புத்தி நாச: புத்திநாசாத் விநச்யதி.' புத்தி தர்மத்தை விட்டு நாசம் அடைகிறது.
(ராமாவதாரம் தொடரும்)
.
.
No comments:
Post a Comment