Monday, July 10, 2017

Wearing bhasma on forehead

திருநீற்றின் ரகசியம்:

ஒருவன் விதவிதமாக கிழிந்த ஆடைகளை அணிந்தால் நம் நவீன சமூகம் ஏளனம் செய்வதில்லை....

ஆபாச ஆடைகள் அணிந்தாலும் நம் நவீன சமூகம் ஏளனம் செய்வதில்லை....

பல நிறங்களில் தலைமுடியை மாற்றி அலைந்தாலும் நம் சமூகம் ஏளனம் செய்வதில்லை....


கிறிஸ்தவர்கள் சிலுவையை அணிந்து அலைந்தால் நம் சமூகம் ஏளனம் செய்வதில்லை....

இஸ்லாமியர்கள் பர்தா அணிந்து அலைந்தால் நம் சமூகம் ஏளனம் செய்வதில்லை....

வைணவர்கள் நாமம் அணிந்து அலைந்தாலும் நம் சமூகம் ஏளனம் செய்வதில்லை....

ஆனால் ஒரு சைவன் நெற்றி நிறைய திருநீறை அணிந்தால் தினமும் ஏன் இந்த சமூகம் இப்படி நம்மை மோசமாக ஏளனம் செய்து வதைக்கிறது?

வீட்டில் தொடங்கி.... நண்பர்கள் , அலுவுலகம், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும்...எங்கும் சிரிப்பு, அவமதிப்பு....

"த்தோ...போறாரு பாரு சாமியாரு....!"

"இத பாரு டா பண்டாரம் வருது...!"

"நீ என்ன கோயில் ஆண்டி யா....!"

"கேவலமா இருக்கு...அழிச்சு தொல அத மொதல்ல...!"

"இது என்ன கோலம் ?...இப்படி உன்ன பாக்குறதுக்கா இவ்வளவு தூரம் படிக்க வெச்சோம்? "

"நீ என்ன சன்னியாசி யா?"

"உனக்கென்ன பைத்தியமா புடிச்சு இருக்கு....?"

இப்படிபட்ட வார்தைகளை கேட்டு மனம் வருந்தி அடியார்கள் மனதில் நீங்காமல் குடி கொண்டிருக்கும் ஈசனிடம் கேட்டேன்...

"நாயன்மார்களும், மாணிக்கவாசகரும், சேக்கிழாரும், தாயுமானவரும், வள்ளலாரும் போற்றி வளர்த்த சைவத்திர்க்கும் திருநீறு அணியும் சைவர்களுக்கும்...இது தான் கதியா...இறைவா?"


அதற்கு சிவ பெருமான் "இந்த உலகம் உன்னை எப்படி அழைக்கிறது? மீண்டும் சொல்...!" என்று கேட்டான்...


நான் "சாமியார், ஆண்டி, பண்டாரம், சன்னியாசி, பித்தன் என்றெல்லாம் அழைக்கிறார்கள்... இறைவா !" என்றேன்


இறைவன் இன்முகத்துடன் சொன்னான் "என் இனிய அன்பனே...மகனே...கேள்...சாமியார், ஆண்டி, பண்டாரம், சன்னியாசி என்று சமூகம் உன்னையும் உன்னை போன்றவரையும் தான் அழைக்கும்...மற்ற சமயத்தினரை சாமியார் என்றெல்லாம் அழைக்காது...ஏனென்றால் சிவன் ஒருவனே இறைவன்...அவனை வணங்கி திருநீறு அணிபவரே உண்மையான அடியார்கள்...பக்தர்கள்...நான் எங்கும் இருப்பவன்...சிவனடியார்கள் மனதில் நிறைந்தும்...மற்ற சமூகத்தினர் மனதில் மறைந்தும் இருக்கிறேன்...நானே இந்த சமூகத்தினர் மனதில் இருந்து உன்னை சாமியார், ஆண்டி, பண்டாரம், சன்னியாசி என்றும்...சுந்தரன் எனக்கு அளித்த பட்டத்தை உன்னுடன் பகிரவே பித்தன் என்றும்...சொல்லி மகிழ்ந்தேன்...இவை அனைத்தும் என் அன்பர்களுக்கு நான் அளிக்கும் அன்பான பட்டங்களே...!" என்றான்...


மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வடித்தேன்....ஆயிரம் உறவுகள் வந்தாலும் ஈசன் அன்புக்குi இணையில்லை என்று உணர்ந்து பெறுமையுடன் தினமும் திருநீறு அணிவோம் அன்பர்களே...!
இவன் 
அண்ணாமலையில் இருந்து 
ஆறுமுகம்.இரா
9884995203

🙏🏻

No comments:

Post a Comment