Monday, July 10, 2017

donation of food - Annadhaanam

#அன்னதானம்

அன்னதானத்தின் அவசியத்தைப் பற்றி சொல்லாத மதங்களோ, மஹான்களோ இல்லை. அன்னதானத்தைப் பற்றி மகான் சீரடி சாய்பாபா 

"நீங்கள்அனைவரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதீர்கள். 

உங்கள் கைகளால் தரும் அன்னதானத்தால்தான் உங்கள் தலையெழுத்து நன்றாக அமையும்".

கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே.

ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். 

உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். 

அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராது" 
- என்றார் மகான் சீரடி சாய்பாபா..

பசியோடிருக்கும் ஒருவனுக்கு நிரைய, அவன் விரும்பிய உணவு வகைகளையெல்லாம், அவன் போதும் -போதும் என்று சோல்லும்வரை உண்பித்தாலும்............. 10 மணி நேரம் கழித்தோ, 12 மணி நேரம் கழித்தோ அவனுக்குப் மீண்டும் பசிக்கவே செய்யும். 

பசி என்பது பல பெரியோர்கள் சொல்லியுள்ளவாறு ஒரு பிணியேயாகும்.

அதனால்தான் ஔவையார் 

"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது. " - என்றார்.

நிலையான பிரம்மம் ஒன்று இருக்க இன்னொரு பிரம்மம் ஒன்று இருக்கிறது என்றால் அது பசி மட்டுமே.

வயிறு சாப்பிடாமல் மனம் சமாதானம் அடையாது.

அதனால் தான் ஒருவரது மரணத்திற்குப் பிறகும் பித்ரு போஜனம் அல்லது படையலுக்கு நம் சமூகத்தில் முக்கியத்துவம் தருகிறோம்.

ஆதலால் நண்பர்களே, அன்னதானம் செயவதை நம் வாழ்வின் கடமையாக ஏற்போம். நம்மால் முடிந்த அளவுக்குப் பசி்ப்பிணியாற்றுவோம்.

ஓம் ஸ்ரீசாயிராம்.

No comments:

Post a Comment