Tuesday, July 11, 2017

Pamban swamigal & Muruga

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *பாம்பன் சுவாமிகள் வணங்கிய சென்னை முருகப் பெருமான்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கந்தப்ப ஆசாரியார் ஒருவரும், மாரி செட்டியார் என்பவொருவரும் சென்னை திருப்போரூருக்கு வந்தனர்.

ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்தே திருப்போரூருக்கு நடை பயணமாய் நடந்து சென்று திருப்போரூர் முருகனை தரிசிப்பதை இருவரும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இப்படித்தான் அன்றைய கிருத்திகை திருநாளன்று நடைபயணமாய் சென்று கொண்டிருந்தனர். 

பயணக் களப்பில் மலையடிவாரத்தின் வேப்பமரக் கூட்ட நிழலில் துண்டு விரித்து படுத்தனர்.

அசந்து தூங்கிய அவர்களின் கனவு வந்தது. அருகேயிருக்கும் புற்றிலிருந்து பாம்பின் வடிவாக முருகப் பெருமான் உருவெடுத்து, மாரி செட்டியார் மார்பில் ஊர்ந்து நின்று, உடலெங்கும் தன் வடிவத்தைக் காட்டி, புற்றுக்கு தான் வந்திருக்கும் விபரத்தையும் கூறி......"தூய அடியவரே! அருகாக யிருக்கும் புற்றில்தான் நானிருக்கிறேன். என்னை எடுத்துச் சென்னைக்கு கொண்டு போ!"...என்றன.

இதே போலக் கனவும் கந்தப்பருக்கும் தெரிந்தது.

 விழித்தெழுந்த இருவரும்  தான் கண்ட கனவை பரிமாறிக் கொண்டனர்.

பின் இருவரும் அருகிலுள்ள புற்றிடம் வந்து , புற்றுக்கூட்டை மலர்த்தினர். அப்போது உள்ளார அழகு வடிவாக முருகப் பெருமான் விக்ரகம்இருப்பது தெரிந்தது.

இருவரும் சேர்ந்து வெளியே தூக்க முனைந்தனர். விக்ரகம் அசையக்கூட மறுத்தது. காரணம் அவ்வளவு பெரிய அளவும் எடையும்.

உடனே முருகப் பெருமானை இருவரும் நினைந்து, "சரவணா!, எங்களால் உன்னை அள்ளியெடுக்க முடியவில்லை. எனவே பிறந்த குழந்தை போல எடையாக இருப்பாயாக!, அப்படியிருந்தால் தான் உன்னைச் சென்னைக்கு எடுத்துச் செல்ல முடியும் என வேண்டினர்.

அடியவர்களுக்கு எப்போதும் இறைவன் செவி சாய்ப்பவனாச்சே! சும்மா இருப்பாரா? மறு நொடியில் குழந்தைப் போல சிறிய உருவத்துடன் மாறியருளினார்.

இருவரும் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வடித்து, நா தழுதழுக்க  *"அரோஹரா அரோஹரா"* என்று தொழுது முதலில் விக்ரகத்தை வணங்கிப் பின் வெளியே தூக்கினர். 

 தூளி போல துண்டினால் கட்டி முருகனை அதில் வைத்து முதுகில் சுமந்து  இருவரும் ஆளாளுக்குக் கொஞ்ச தூரமாய் நடந்து சென்னைக்குச் சென்றனர்.

வழியில் பக்கிம்ஹாம் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அதே நேரம் இடியுடன் கூடிய பெரிய மழையும் பொழித்தன. என்ன செய்வதென இருவரும் தெரியாமல் விழித்தனர்.

அப்போது அசரீரியாக *தைரியமாய் வெள்ளத்தில் இறங்குங்கள்* என கேட்டது.

மாரி செட்டியார் முருகப் பெருமானின் விக்ரகத்தை முதுகில் தாங்கியும், அவருக்குப் பின்னால் முருகப்பெருமானைப் பாதுகாப்பாய் அனைத்தபடி கந்தப்ப ஆசாரியும் இறங்கி நடந்தனர்.

சில அடிகளே சென்றிருக்க, வெள்ளம் தம்மை மூழ்கடிக்கும் நிலையிருந்ததை இருவரும் உணர்ந்தனர்.

அப்போது பெரும் ஓசையுடன் கூடிய சூறாவளியொன்று தங்கள் மீது பிரவாகப் போவது என்பதை உணர்வதற்க்குள்........இருவரும் எதிர் கரையில் இருந்தனர். 

அப்போதும் பக்கிம்ஹாம் கால்வாயில் வெள்ளம் ஓடிக் கொண்டுதானிருந்தது. இடியுடன் மழை பெய்து கொண்டுதானிருந்தது. 

ஆனால் கடந்து வந்த விதம் தான் அவர்களிருவருக்கும் தெரியாது ஆனந்தமாய் விழித்தனர்.

முருகப்பெருமானுடன் திருவான்மியூர் வழியாக மயிலாப்பூரை வந்திருந்த போது நடு நள்ளிரவாகி விட்டது.

இனி பயணத்தைத் தொடர முடியாது என உறுதி செய்து , மயிலை குளக்கரை அருகேயுள்ள தென்னைக் கூட்ட திடலில் தூளியான துண்டினை அவிழ்த்து முருகப் பெருமான் விக்ரகத்தின் போர்த்தி விட்டு தாங்களும் கண் அயர்ந்தனர்.

அந்நேரம் அந்தணர் வேடங் கொண்ட ஒருவர்,  விபூதி, உருத்திராட்சம், காது குண்டலங்கள்,  சடையுடனும் கையில் பிரம்பொன்றுடனும், தூங்கிய இருவரையும் தட்டி எழுப்பி,.....

என்ன இது! இப்படியா தூங்குவது!, எழுந்திருங்கள்; விடிவதற்குள் உங்கள் இடம் சென்று விடுங்கள் என எச்சரிக்கை செய்தார்.

தடாலென இருவரும் எழுந்திரிக்க  யாவொருவரையும் காணவில்லை. தங்களுக்கு திரும்ப வந்தது கனவே என்றாலும் ,உணர்ந்து கொண்டதை அவர்களால் அலட்சியம் செய்ய விரும்பாமல் பயணத்தைத் தொடர்ந்தனர்.

குறிப்பிட்ட இடம் அடைந்து முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்தனர். 

பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் நடந்த உண்மைச் சம்பவம் இது.

இம்முருகப் பெருமானை *பாம்பன் சுவாமிகள்,* *வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,* *வள்ளலலாரான ராமலிங்க அடிகளார் சுவாமிகள்,* போன்றோர் தரிசித்து வணங்கியுள்ளனர்.

தருமமிகு சென்னை கந்த கோட்டத்தில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமார சுவாமி எனும் திருநாமத்துடன் அருள் புரிகிறார்.

              கந்தா சரணம்!
              கதிர்வேலவா சரணம்!!
              முத்துக்குமாரா சரணம்!!!

         திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment