Monday, July 24, 2017

Nandanaar - tirunaalai povaar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
ஆதனூர்.

சிதம்பரம் அருகிலுள்ள  மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார்.

அதிதீத சிவபக்தர் இந்த நந்தனார்.

இவருக்கு வெகு காலமாய் ஒரு தீராத ஆசையொன்று இருந்து வந்தது.

சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்று அவருக்கிருந்த பெரிய ஆசை.

இவருடைய வருமாணப் பொருளாதாரம் மிகவும் குறைவாக இருப்பதும், அவர் சிதம்பரம் செல்ல முடியாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

நந்தனார், அன்றாடம் விவசாயக் கூலி வேலைக்குச் சென்று வருபவர். ஆகையால், நாளை போகலாம், நாளை போகலாம், என்று தள்ளிப் போட்டுக் கொண்டு காலம் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது.

இவர், நாளை போவலாம்  நாளை போவலாம் என்று நாளைத்  தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால் நந்தனாரை *திருநாளைப் போவார்* என்றும் அழைத்தும் வந்தார்கள்.

ஒரு நாள் தன் ஊருக்கு அருகாக இருக்கும் திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயிலுக்கு வந்தார்.

அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருக்கோயிலுனுள் சென்று வர அனுமதியில்லாத காலமது.

எனவே திருக்கோயிலுக்கு வெளியே நின்று, சுவாமியை எட்டி எட்டிப் பார்த்தார். சுவாமியை அவரால் பார்த்து வணங்க முடியவில்லை. 

திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி யிருந்ததாலும், சுவாமியின் முன் நந்திவாகனர் அமர்ந்திருந்ததாலும், நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.

திருக்கோயிலில் கூட்டம் குறையும், அப்போது சுவாமியை பார்த்து வணங்கிவிடலாம் என்று காத்திருந்த நந்தனாருக்கு, மீண்டும் ஒரு ஏமாற்றம்.

ஆமாம், சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம் சிறிது நேரத்தில் குறைந்து போக, நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை. இப்போது நந்திபெருமானின் பின்புறம் மட்டும்தான் தெரிந்தது.

 இந்நிலையையை எண்ணி மனவருத்தத்துடன்.............
*"சிவனே!, உன் திருமுகத்தைக் காண முடியவில்லையே!* என மனமுருகி வேண்டினார்.

நந்தனாரின் நினைவையெல்லாம், பெருமானின் கர்ப்பகிருக வாயிலில் இருக்கும் துவார பாலகர்களின் நினைவுக்கு தோன்றியது.

உடனே இரு துவாரபாலகர்களும் நந்தனாரின் மன வேதனையை பெருமானிடம் சென்று,.............
ஐயனே!"  தங்கள் பக்தர் நந்தனார் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். 

சிவபெருமானும் நந்தனாரின் பக்தி நினைவலையையென்னி, தன் முன்பாக அமர்ந்திருந்த நந்தியை, *சற்று இடப்பக்கமாக விலகியிரு,* எனச் சொன்னார். 

பெருமானின் உத்தரவுபடி நந்தியார் இடதுபுறமாக கொஞ்சம் நகர்ந்தமர்ந்தார். இப்போது சிவலோகநாதரின் திருமுக திருக்காட்சி நந்தனார்க்கு கிடைத்தது.

*(ஆனால் நிறையோர் மனதில் ஒரு வினா இருந்திருக்கும். ஈசன் நேராக நந்தனாரை உள்ளே வரவழைத்திருக்க வேண்டியதுதானே? என்று. அதைவிட்டு ஏன் நந்தியை விலகச் சொன்னாரென்று!")*

அதற்குக் காரணம்! இவ்விதம் நடந்து விட்டிருப்பது, நந்தி விலகியது நமக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான். நந்தி ஏன் விலகியது என்ற கேள்வி நமக்கு எழ வேண்டுமென்பதற்காகத்தான்.நந்தி விலகியதற்குக் காரணம் நந்தனார்க்காக என தெரிய வரவேண்டுமென்பதற்காகத்தான்.

இவ்விதம் நடக்க ஈசனும் ஏன் முடிவெடுத்தாரென்றால்?, நந்தனாரின் பக்தியும் புகழும் வெளிக்கொணர, ஈசனே திருவிளையாடல் நடத்த திட்டமிட்டிருந்தான்.

ஏனென்றால், நீண்ட நாளாய் நந்தனாரின் ஆசையான சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசிக்க வேண்டுமென்று நினைப்பைக் கொண்டிருந்த ஆசையை, சிதம்பரத்தில் திருவிளையாட்டம் செய்து அவருக்குக் காட்சி செய்ய வேண்டுமென்று ஈசனும் முடிவு செய்து வைத்திருந்தார்.

காலம் வந்தது. 
சிதம்பரத்திற்கு நந்தனார் வந்தார். 
அவரால் திருக்கோயிலுக்குள் செல்ல முடியாதகையால், *"நடராஜப் பெருமானே!* உன் *தரிசனம் எனக்கு கிடைக்குமா?* என்ற மன வேதனையைத் தாங்கிக் கொண்டு, திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி சுற்றி வந்தார். 

இரவு நெருங்கும் வேளையில் நந்தனார்க்கு களைப்பு வர, கோயிலின் மதில் சுவரருகில் அமர்ந்திருந்தவர் அப்படியே தூங்கிப் போனார்.

நந்தனாரின் மனவலைவுக்குள் கனவாக வந்த ஈசன், *"நந்தா வருத்தம் கொள்ளாதே!* என்னை நீ காணப் போகிறாய்!. நெருப்புடத்தில் புகுந்தெழுந்து என்னைக் காண்பாய்! எனச் சொல்லி கனவைக் கலைத்து மறைந்தார்.

உடனே மறுபடியும், தில்லைவாழந்தணர்கள் கனவிலும் தோன்றி, அக்னி வளர்த்து என் அன்பன் நந்தனை, அக்கினிக்குள் உட்புக அழைத்து வாருங்கள்! அவனுக்கு உயிர் நீங்காதிருக்கச் செய்வோம் என்றார்.

தில்லைவாழந்தணர்களும் நந்தனாரைத் தேடிக் கண்டு ஈசனின் கனவு நிகழ்வைக் கூறி திருக்கோயிலுக்குள்அழைத்து வந்தனர். நந்தனார் மனம் நெகிழ்ந்தார்.

நடராஜப் பெருமான் முன்பு அக்கினியை தில்லைவாழந்தணர்கள் உருவாக்கினார்கள். 

நந்தனாரை அக்கினியினுள் புக கூறினார்கள். நந்தனாரும் அக்கினினுள் உட் பிரவேசம் செய்தார். கூடவே தில்லைவாழந்தணர்கள் நந்தனாரைக் காணும் பொருட்டு, அக்கினியின் இட, வல புறமாகச் சென்று முன் வந்தனர். 

நந்தனாரைக் காணவில்லை.

நடராஜப் பெருமானைப் பார்த்து வணங்கியெழுந்தார்கள் தில்லைவாழந்தணர்கள் அனைவரும். 

என் அன்பன் நந்தன் என்னோடிருக்கிறான் என்று நடராசப் பெருமான் கூறினான்.

ஆமாம்!, நந்தன் நடராஜனோடு இரண்டறக் கலந்துவிட்டிருந்தான்.

பக்திக்கு குலம் தேவையில்லை.
அந்தக் காலத்திலேயே அதை வென்றெடுத்த நாயன்,  நம் நந்தனார் நாயனார் ஆவார். 

தீவிர பக்தி இருந்தால், அவரை தன்னைக் காண வழிகாட்டுவார். இல்லைத் தன்னைத் தேடியோடி வருவார்.

அடியாராகிய நாம் கோவிலுக்கு போகிறோம். கும்பிடுகிறோம். அவ்வளவுதான். இது அதிதீத பக்தி அல்ல. அவன் நம்மைக் காணனும்னு எவ்வளவு நாம் எதிர்பார்க்கிறோமோ? அதற்குண்டான அளவுக்கு நம்மில் பக்தியின் சாரமில்லை. 

நந்தனார்க்கு பொருளாதார நிலை சரியில்லாததால் நாளை போகலாம் நாளை போகலாம் என நினைந்து கொண்டிருந்தார். 

நமக்கோ,  எல்லா நிலையும் சீராக இருந்தும் ஆலயத் தொழுகையை நாளைக்கு நாளைக்கு என தள்ளி வைக்கிறோம். பிறகெப்படி?

போர்க்குணம் போலிருக்க வேண்டும். மனதில் அழுக்கு ஆசை கோபம் வெறி மோகம் ஒழிந்திருக்க வேண்டும். எவ்வளவு வருமாணம் பெறுகிறோமோ, அதற்குத் தகுந்த ஆலயத் தொண்டுக்கு உதவ வேண்டும். வசதியற்ற பக்தர்கள் அடியார்களுக்கு கடன்பெற்றேனும் உதவி நல்கிடல் வேண்டும். இதெல்லாம் காலம் பாராது செய்து வருமோவாயின், கிடைத்த இப்பிறவிப் பயனை நல்ல பயனையாக அடைய முடியும்.


      திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள். இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment