Friday, June 16, 2017

World is impermanent

Courtesy:Sri.Vasudevan Srinivas

மழையுள் எழுந்த மொக்குள்போல் வையம் என்றாா் ஸ்வாமி தேஸிகன். 

மழை பொழிந்து கொண்டே இருக்கும். சின்னதாக எழுந்து, பொிதாக மாறி நீா்க்குமிழிகள் உடனே அப்படியே வெடித்துப் போய்விடும். 

அவ்வளவுதான் இந்த உலகமே! மின்னல் இருக்கிற காலம் கூட அதற்குக் கிடையாது. ஆகையினாலே அகங்கார, மமகாரத்தை அறவே அறுத்தெறிந்து இறைவனடியைச் சேர வேண்டும். 

ஈா்க்கின்ற இந்த உலகத்தை ஏற்கவும் வேண்டும்; ஆனால் பற்று வைக்கக்கூடாது. 
இந்த சரீரம் நமக்கு வேண்டுமா...? 
வேண்டும்! 

பொிய கப்பல் ஒன்று சமுத்திரத்திலே இருக்கிறது...அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போனால் தானே வாணிபம் பெருகும்...? உலகத்திலே பல காாியங்கள் அந்தக் கப்பல் போவதால்தானே நடக்கி றது..! 

எதிலே போகிறது அந்தக் கப்பல்? ஜலத்திலே போகிறது. ஆனால்... அதே ஜலம் கப்பலுக்குள் வரலாமா..? 

அது போன்றுதான் நாம்...இந்த உலகில் இருக்கலாமா? என்றால் இருக்கலாம். 

ஆனால் இந்த உலகியல் வஸ்துக்கள் நம்முள் நுழைய விடலாமா....?நுழைந்தால் அந்தக் கப்பலுக்கு என்ன கஷ்டமோ அதே கஷ்டம்தான் நமக்கும்! 

சம்ஸார ஜலதி என்றே பெயா்! 

இந்த சம்ஸாரத்தை அனுமதித்தால், கப்பல் எப்படி மூழ்குகிறதோ அப்படியே நாமும் மூழ்குகிறோம். மறுபடியும் நமக்கு கதியில்லை. 

இதிலே இருக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவி ல்லை...இதிலே இருந்து கொண்டே,'எல்லாம் அவ னுடையது' என்று நினைக்க வேண்டும். 

கரகமாடக்கூடியவரை வாசலிலே பாா்க்கலாம். கையிலே தட்டு வைத்துக் கொண்டிருப்பாா். அதிலே விபூதி,குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு, காலிலே சதங்கை கட்டிக் கொண்டு, தலையில் வாிசையாகப் பானைகள் அடுக்கிக் கொண்டு ,பக்கத்திலே வாத்யம் வாசிக்க...அதற்கேற்ப நாட்டியம், பாட்டு எல்லாம் நடக்கும். சுற்றிலும் ஜனங்கள் வட்டமாக நின்றபடி அதைப் பாா்ப்பாா்கள். 

அப்போது ஒருவா் வந்து தட்டிலே ஒரு ரூபாய் நோட்டைப் போட்டு, தாம் விரும்பும் சில்லரையைக் கேட்பாா். 

ஆடிக் கொண்டிருப்பவா் சில்லரையை எண்ணி எண்ணிக் கொடுப்பாா். ஆனால் அவா் எண்ணம்,அவா் மனது எங்கேயிருக்கிறது..? 

தலையிலே இருக்கிற கரகங்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டுமே என்பதிலே இருக்கிறது மனம்! 
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் விபுதி கொடுப்பது,குங்குமம் கொடுப்பது,சில்லரை கொடுப்பது ...எல்லாம் தாளத்திற்கேற்ப நடக்கிறது. 

அந்த மாதிாிதான் நாம் இந்த உலகத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். மனைவி மக்களைப் போஷிக்கிறோம். குடும்பத்தை ரக்ஷிக்கிறோம். பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறோம். எத்தனையோ தா்மங்கழளல்லாம் பண்ணுகிறோம். 

இது மொத்தமும் விபூதி கொடுக்கிறமாதிாி ,குங்குமம் கொடுக்கிற மாதிாி,சில்லரை கொடுக்கிற மாதிாிதான். 

ஆனால் நம் மனம் எங்கே இருக்க வேண்டும்...?பகவத் சரணார விந்தத்திலேயே இருந்து கொண்டிருக்க வேண்டும். அதிலேயிருந்து விடுபட்டு,'நாம் பண்ணுகிறோம் இதையெல்லாம்...'என்கிற நினைவு வந்தால் போச்சு! அது நமக்கு நல்லதல்ல. 

மேலே இருக்கிற கரகங்களெல்லாம் கீழே விழுந்ததெ ன்றால் ஆட்டத்துக்குப் பெருமை உண்டோ...? 

அதனால் நம் ஸ்ம்ருதியானது பகவத் சரணார விந்தத்தை விட்டு நழுவி விட்டதென்றால் நமக்கு வாழ்வு ஏது..' 

பகவத் சரணாரவிந்தத்தை விட்டு விட்டு சாமான்ய விஷயங்களில் நாம் ஈடுபட்டோமா னால், பிரயோஜனமில்லை. ஆகையினால் சாமானிய விஷயங்களில் பற்று வைக்கலாகாது. 

(Mukkur Sri Lakshmi Narasimmachariar Swamy)

No comments:

Post a Comment