Tuesday, June 13, 2017

Sivaraman of Kanchi mutt - Periyavaa

"தன்னை 'கட்டிக் கொண்டவர்களை' பெரியவாள்
ஒருபோதும் கைவிட்டதில்லை"

(சிவராமனே சாட்சி)
.
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து
போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள்.
உள்ளூர்ப் பயணம் ஆனதால் மேனா-பல்லக்கு
உப்யோகப்படுத்தவில்லை.

தெருவில் ஏழெட்டுச் சிறுவர்கள், கண்ணாமூச்சி
விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால்,
நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த
வழியே வந்து கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை.

கண்களை மூடிக்கொண்டு, மற்றப் பையன்களில்
ஒருவனையாவது தொட்டுவிட்டுத் தான் கண்திறக்க
நிலையில் இருந்த பையன், அப்படியே பெரியவாளைக்
கட்டிக்கொண்டு விட்டான்!.

யாரோ ஒரு பையனை கட்டிக்கொண்டுவிட்ட களிப்பில்,
தான் ஜெயித்துவிட்ட வெற்றிக்களிப்பில்,
உற்சாகமாகக் கூச்சலிட்டான்.

கண்ணைத் திறந்து பார்த்தால்....ஜகத்குரு!

நடு நடுங்கிப் போய்விட்டான்.பேச்சு வரவில்லை.
தொண்டர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு துவம்சம்
செய்யத் தயாராகி விட்டார்கள்.

பெரியவர்கள் எல்லோரையும் அடக்கினார்கள்.

பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடிக்
கொண்டிருந்த நண்பர்களில் ஒருவனைக் கூட
கண்ணில் காணவில்லை.

பெரியவாள் கேட்டார்கள்; "உன் பேரென்ன?"

"சி...சிவ..ராமன்..."

"பயப்படாதே என்னையே கட்டிண்டுட்டே..
மடத்திலேயே தங்கிவிடு.."

மடத்துப் பணியாளர்களில் ஒருவனாகி விட்டான்.
ஒருவனாகி விட்டார் - சிவராமன்.

அவரை காசியாத்திரைக்கு அழைத்துக்கொண்டு
போனார்கள் பெரியவாள். பின்னர் பெரியவாளுக்கு
பிக்ஷை பக்குவம் செய்யும் கோஷ்டியில் சேர்ந்தார்.
அத்தனை சுத்தம்! கடைசிவரை அதே கைங்கரியம்.

அடுத்த ஜன்மா கிடையாது.

தன்னை 'கட்டிக் கொண்டவர்களை பெரியவாள்
ஒருபோதும் கைவிட்டதில்லை.

சிவராமனே சாட்சி.

No comments:

Post a Comment