Tuesday, June 13, 2017

Ravana's advice to Lakshmana

Courtesy:Sri.Gs.Dattatreyan

இராவணன் இறக்கும் முன் லட்சுமணனுக்குச் சொன்ன ரகசியங்கள்

இராவணன் உயிர் பிரியும் தருவாயில், ஸ்ரீராமர் தன்னுடைய சகோதரரான லட்சுமணரிடம் "சகோதரா, வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த பிராமணனாகிய இராவணன் ஏட்டில் மட்டுமல்ல தன் வாழ்க்கையிலும் பல பாடங்களைக் கற்றவன். அவனிடமிருந்து நீ உலகத்தினைப் பற்றி அறிய கடவாய்" என்றார். அண்ணனின் சொல்லின்படி லட்சுமணர் இராவணனிடம் சென்றார். இராவணன் லட்சுமணருக்குச் சில ரகசியங்களைக் கூறினான்.

1) தீமைகளை விரைவாக விட்டொழி - தீமைகளை விளைவிக்கும் விஷயங்கள் நம்மை எளிதில் மயக்கிவிடும் இயல்புடையவை. நாம் அத்தகைய தீய விஷயங்களின் பின்னால் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். தீய விஷயங்களின் இயல்பையும் விளைவையும் அறிந்துகொண்டு, தீயனவற்றை முழுவதுமாக கைவிடுவதே நன்று. தீயவை செய்வதால் தீமைகளே விளையும். ஆதலால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் தீய எண்ணங்கள், தீய செயல்கள், தீய சொற்கள், தீய குணங்கள், தீய சிந்தனைகள் என தீமைகளை விளைவிக்கும் அனைத்தையும் விட்டுவிடுதலே சிறப்பு.

2) நன்மைகளை விரைவாக செய்திடு - நன்மைகளை விளைவிக்கும் விஷயங்கள் நம்மை பொதுவாக கவர்வதில்லை. அத்தகைய விஷயங்களில் ஈடுபட நாம் முனைப்பு காட்டுவதுமில்லை. நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி அதைச் செய்ய சொல்பவர்களையும் நாம் செவிக்கொடுத்து கேட்பதில்லை. நல்லவிஷயங்களைச் செய்யாமலிருக்க ஆயிரம் பலமான காரணங்களைக் கூறுகிறோம். நல்லக் காரியங்கள் நன்மைகளை விளைவிக்கின்றன. நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு நன்மை செய்வதால் நாளை நமக்கு நன்மைகள் வந்துசேர்கின்றன. ஆதலால், நன்மைகள் செய்வதில் எந்தவொரு தாமதமும் கொள்ளவேண்டாம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் நல்லவை செய்ய முற்படவேண்டும். நல்லதையே எண்ணவேண்டும், நல்லதையே செய்யவேண்டும், நல்லதையே பேசவேண்டும், நல்லதையே சிந்திக்கவேண்டும், நற்குணங்களைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

"தீமைகள் என்னை எளிதில் கவர்ந்தன. இதனால் தான் நான் இராமபிரானைச் சந்திக்கும் புண்ணிய வாய்ப்பை புறக்கணித்துவிட்டு சீதாதேவியைக் அபகரித்து வந்து கொடிய தீமையைச் செய்துவிட்டேன். இதுதான் என் வாழ்க்கையின் பாடம். இது என் இறுதி வாக்கு. இதை நான் உனக்கு சமர்பிக்கிறேன்."
இதுவே இராவணனின் இறுதி வாக்குகள்.

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்" (குறள் 202)

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிட ஆபத்தானதாக அஞ்சப்பட வேண்டும்

No comments:

Post a Comment