Sunday, May 28, 2017

sivavakkiar sidhar

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                     *(27)*
🍁 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
     🍁 *சிவவாக்கியர்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சித்தர்களுள் தலை சிறந்தவர்களாகக் கருதப்படும் இவர் தாயுமானவர், பட்டிணத்தார் ஆகியோரால் பாராட்டப் பெற்றவர்.

பஞ்சாட்சர உண்மையையும், அதன் வகைகளையும், சிவனையும், ராமனைப் பற்றியும் மிக அழகாகச் சொல்லி இருப்பவர்.

*"சிவாயம் என்ற அட்சரம்*
*சிவன் இருக்கும் அட்சரம்*
*உபாயம் என்று நம்புவோர்க்கு*
*உண்மையான அட்சரம்*
*கபாடம் அற்ற வாசலைக்*
*கடந்து போன வாயுவை*
*உபாயம் இட்டு அழைக்குமே*
*சிவாயம் அஞ்சு எழுத்துமே"*
               -(சிவ வாக்கியரர் பாடல்)

சங்கரக் குலத்தில் தை மாதத்தில் மக நட்சத்திரத்தில் பிறந்தவர் சிவவாக்கியர்.

பிறக்கும் போதே " சிவ சிவ" என்று சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே பிறந்ததால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயர்.

இளம் வயதிலேயே மகா தத்துவத்தையும், காலத் தத்துவத்தையும் நன்கு உணர்ந்த சிவவாக்கியர் மன்மதனையும் வெல்லும் வடிவழகோடு திகழ்ந்தவர்.

பதினெண் சித்தர் மரபில் வந்த ஒரு குருவை நாடி வேத நெறிகளைப் பயின்றார். அவைகள் அவருக்கு உடன்படாமல் போகவே தம் கருத்துக்களுக்கு விளக்கம் தர தகுந்த ஒரு குருவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

இந்நிலையில் காசியின் பெருமை பற்றி பலர் சொல்லக் கேட்டு அங்கு செல்ல வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று சிவவாக்கியருக்கு.

உடனே புறப்பட்டு விட்டார் காசியைத் தரிசிப்பதற்கு. அக்காலத்தில் காசியில் ஒரு சித்தர் வசித்து வந்தார். செருப்புதைப்புதான் அவருடைய தொழில். ஒருவரின் கால்களைப் பார்த்தே அவரவர்க்குத் தகுந்தபடி காலணியை செய்து கொடுப்பது அவர் வழக்கம். மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்தும் பிராணாயாம வித்தை பயின்றவர் அவர்.

அவரது வித்தையைப் பார்த்து பாராட்டுபவர்கள் சிலர். தொழிலைப் பார்த்து பழிப்பவர்கள் சிலர். உண்மை உணர்ந்தவர்கள் அவரைப் போற்றினர். விவரமறியாத பலர் அவரை இகழ்ந்தனர்.

சித்தரோ பாராட்டுதலைக் கேட்டு மனம் மகிழவும் இல்லை. பழிச் சொல்லைக் கேட்டு மனம் குன்றவும் இல்லை. தமக்கு ஏற்படும் புகழ்ச்சி, தாழ்ச்சி எதையும் ஏற்றுக் கொள்ளாமல் அதை அலட்சியம் செய்து, நல்ல குணங்கள் நிறைந்தவராகக் காணப்பட்டவரின் சிந்தனை முழுவதும் ஒரு நல்ல சீடனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இச் சித்தரின் பெருமைகள் காசிக்கு வந்திருந்த சிவவாக்கியர் காதுகளுக்கும் எட்டியது. அவரை எப்படியும் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் அவர் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கு போனார்.

தன் இருப்பிடம் தேடி வந்த சிவவாக்கியரை அன்புடன் வரவேற்றார் சித்தர். சிவவாக்கியருக்கு அவரைப் பார்த்ததும் தமக்குள் ஒரு ஈர்ப்பு சக்தி ஏற்பட, அவருக்கு அருகில் போய் நெருங்கி நின்றார்.

ஒரு பலகையைப் போட்டு அதன் மேல் உட்காரும்படி சொன்னார் சித்தர்.

சித்தரின் பார்வையில் இருந்த கனிவு, பேச்சில் இருந்த இனிமை, உச்சரிப்பில் இருந்த அன்பு, இவை அனைத்தும் சிவவாக்கியரை எளிதில் கவர அப்பலகையில் அமர்ந்தார் அவர்.

பலகையில் அமர்ந்த உடனேயே அவருக்கு ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. மிகப் பெரிய ஞான விளக்கின் அருகில் இருப்பதுபோல் தோற்றம்! சொல்ல முடியாத ஒரு ஆனந்தத்தை அனுபவிப்பதுபோல் ஓர் உணர்வு.

சிவவாக்கியருக்கு அவர் ஒரு மகாயோகியாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

சிவவாக்கியரை மேலும் கீழுமாகப் பார்த்த சித்தர் தம் ஞானத்தைப் பெறுமளவிற்கு சிவ வாக்கியருக்கு பரிபக்குவம் இருக்கிறதா என்று அறிய விரும்பினார்.

சிவ வாக்கியர் செருப்பு தைக்கும் தொழில் செய்து சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய தங்கையான  கங்காதேவியிடம்.கொடுத்து விடு...என்று சொன்னவர், தன் பக்கத்தில் இருந்த பேய் சுரைக்காய் ஒன்றை சிவவாக்கியரிடம் தள்ளி, "இதோ இந்தப் பேய்ச்சுரைக்காய் ஒரே கசப்பாய் இருக்கிறது. வரும் போது இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வர முடியுமா உன்னால்?" என்று கேட்டார்.

சித்தர் தரிசனத்திலே தன்னையே இழந்து விட்ட நிலையிலிருந்த சிவவாக்கியர் தன்வயப்பட்ட நிலையில் மறுப்பு  எதுவும் சொல்லாமல் சித்தர் தந்த காசையும், பேய்ச்சுரைக்காயையும் எடுத்துக் கொண்டு கங்கையை நெருங்கினார். கங்கையில் இறங்கித் தண்ணீரைத் தொட்டார்.

மறுநிமிடம் சுற்றிச் சுழன்று வெள்ளம் பெருக்கெடுத்தோடும் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்கரம் ஒன்று வெளியில் வந்தது. அவரிடம் நீட்டியது கையை. சிவவாக்கியர் அக்கையில் காசை வைக்க உடனை அந்தக் கை வளையோசையுடன் தண்ணீரில் மறைந்தது.

இதனைக் கண்டு எந்தவித அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ கொள்ளாத சிவவாக்கியர் தான் கொண்டு வந்திருந்த பேய்ச்சுரைக்காயை நீரில் கழுவிக் கொண்டு போய் சித்தரை வணங்கி அவரிடம் கொடுத்தார்.

சிவவாக்கியரின் பக்குவ நிலையை மறுபடியும் சோதித்துப் பார்க்க விரும்பிய சித்தர்  புன்முறுவல் ததும்ப, *"சிவவாக்கியா!...* நான் அவசரப்பட்டு விட்டேன். என் தங்கை கங்கா தேவியிடம் நீ கொடுத்த காசு எனக்குத் திரும்ப வேண்டுமே?" என் தங்கை மிகவும் வைதீகமானவள். அவள்  இதோ இந்தத் தோல் பைத் தண்ணீரிலும் தோன்றுவாள். நீ அங்கே கொடுத்த காசுகளை இங்கேயே கேள்!. அவள் கொடுப்பாள்!" என்று சிவவாக்கியரைத் தூண்டினார்.

சிவவாக்கியரும் எந்த வித சலனமுமின்றி அதன்படியே கேட்டார். சித்தர் செருப்புத் தொழிலுக்காக வைத்திருந்த அந்தத் தோல் பையிலிருந்து வளையல் அணிந்த அதே கை வெளியே வந்து சிவவாக்கியர் கைகளில் காசைக் கொடுத்துவிட்டு மறுபடியும் தோல் பையில் மறைந்தது. அப்போதும் சிவவாக்கியர் ஒரு சிறிதும் ஆச்சர்யபடவில்லை. 

அதைக் கண்ட சித்தரின் உள்ளம் மகிழ்ந்தது. தன் சீடன் பரிபக்குவம் அடைந்து விட்டான் என்று தீர்மானித்து எனக்கேற்ற மாணவன் கிடைத்து விட்டான் என்று அன்போடு சிவவாக்கியரைத் தழுவி ஆசீர்வதித்தார்.

இருப்பினும், கங்கையில் வளைக் கையில் காசை வைக்கும்போதும் சரி, தோல் பையில் வளைக்கையில் காசை வாங்கும்போதும் சரி,அந்த ஸ்பரிசத்தால் ஒரு கணம் சிவவாக்கியர் மேனி சிலிர்த்ததை உணர்ந்த சித்தர் சிவவாக்கியருக்குப் பெண்கள் விஷயத்தில் உள்ள ஆசை முற்றிலும் போய்விடவில்லை என்பதை உணர்ந்திருந்தார்.

அந்தப் பேய்ச்சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் எடுத்து சிவவாக்கியரிடம் நீட்டிய சித்தர் "அப்பா, சிவவாக்கியா!... முக்தி நிலை சித்திக்கும் வரை நீ சில காலம் இல்லறத்தில் இரு. இந்த இரண்டையும் கலந்து எந்தப்பெண் உனக்குச் சமைத்துத் தருகிறாளோ அவளை நீ திருமணம் செய்து கொள்"  என்று கட்டளையிட்டார்.

தன் மனதுக்குள் இத்துணைக் காலம் இருந்த மனக்குறை அது தான். தனக்குள் இல்லற நாட்டம் ஏற்பட்டிருப்பதை அவர் எவ்வாறு அறிந்தார்? இது வரை வியப்பே ஏற்படாதிருந்த சிவவாக்கியருக்கு இப்போது முதன் முதலாக வியப்பு ஏற்பட்டது.

குருவின் பாதம் தொட்டு வணங்கி அவர் தந்த பொருட்களோடு சிவவாக்கியர் அங்கிருந்து புறப்பட்டார். சென்ற இடமெல்லாம் குரு உபதேசப்படி தவம் செய்தார். தவஞானம் பெற்றார். அவர் நாவில் சரஸ்வதி நடனமாடினாள். தானறிந்த, அனுபவித்த அற்புதமான விவரங்களை எல்லாம் பாடல்களாகப் பாடத் தொடங்கினார். தத்துவப் பாடல்கள் மூலம் மக்களுக்கு அறிவுரை சொல்லி வழிகாட்டினார்.

ஆண்களில் பலர் அதை அலட்சியம் செய்தனர். பெண்களில் சிலரோ சிவவாக்கியர் வாக்கை கவனிக்காமல் இளமையும் அழகும் ததும்பும் அவர் உடம்பிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்தினர்.

சிவவாக்கியர் அவர்களிடம் இதோ இந்த மணலையும், பேய்ச் சுரைக்காயையும் யார் சமைத்துத் தருகிறார்களோ அவர்களை நான் திருமணம் செய்து கொள்வேன். மறுக்க மாட்டேன் என்று சொல்லி தன்னிடம் இருந்த மணலையும் சுரைக்காயையும் காட்டினார்.

இளமையும், அழகும் நிரம்பிய சிவவாக்கியரை ஆவலோடு நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஓடிப் போனார்கள்.

*"ஐயயோ! நான் மாட்டேன்மா!*
*ம்....ம்ம்....ம்ம்ம் என்னாலையும் முடியாதும்மா!* இன்னொரு பெண்ணும் ஓடினாள்.

*இது.. அவமானம்..மா...நானும் மாட்டேன்மா...* இப்படியே எல்லாப் பெண்களும் ஓடவும் ஓடிஒளியவும் செய்தார்கள்!
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
                 *(28)*
🌿 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌿
-------------------------------------------------------------------
      🌿 *சிவவாக்கியர்.* 🌿
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
இந்த மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்துத் தருபவராகளை நான் திருமணம் செய்து கொள்வேன் என சிவவாக்கியர் கூறவும்,,,,,, அவரை விட்டு தூர ஓடி ஒழிந்தனர்.

*இது நடக்கிற காரியமா?* இது பெண்களை அவமதிக்கிற செயலும் கூட ஏளனம் செய்தனர்.

எண்ணத்தில் தூய்மை இருந்தால் எதுவும் நடக்கும். இல்லையென்றால் இப்படி எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டு சிவவாக்கியர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அறிவுத் தீ மூட்டப்பட வேண்டுமானால் அதற்கு அறிவார்த்தமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். யார் அந்தக் கேள்விக்குரிய விடையைத் தருவது?....

பலர் அவரைச் சித்தர் என்றனர். ஒரு சிலரோ பித்தர் எனாறனர். இன்னும் சிலரோ சிவவாக்கியருக்கு புத்தி பேதலித்து விட்டது என்றே முடுவு கட்டினர்.

சிவவாக்கியரைப் பார்த்ததும் அவசரம் அவசரமாக தங்கள் பாதையை வேறு வழிக்கு மாற்றினர். இதையெல்லாம் லட்சியம் செய்யாமல் சிவவாக்கியர் தன் வழியே போய்க்கொண்டிருந்தார்.

ஒரு நாள் பகல் வேளையில் சிவவாக்கியர் நரிக்குறவர்கள் வசுக்கும் பகுதியில் நுழைந்தார். அப்போது அங்கிருந்த கூடாரம் ஒன்றில் இருந்து வெளியில் வந்த கன்னிப் பெண் ஒருத்தி சிவவாக்கியரைக் கண்டாள். கண்டதும் அவளுள் ஓர் உள்ளுணர்வு தூண்ட அவரை வணங்கி ஒதுங்கி நின்றாள்.

"பெண்ணே! வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா?" என்று கேட்ட சிவவாக்கியரிடம்...........


 அப்பெண் பணிவாய் சொன்ன பதில்; "சுவாமி!... தாங்கள் யாரென்று தெரியவில்லை. என் பெற்றோர்கள் இப்போது வீட்டில் இல்லை. அவர்கள் மூங்கில் வெட்டப் போயிருக்கிறார்கள். அதை வெட்டிப் பிளந்து கூடை, முறம் செய்து விற்றுப் பிழைப்பதுதான் எங்கள் தொழில். தங்கள் கட்டளை எதுவாக இருந்தாலும் நான் அதை நிறைவேற்றி வைக்க சித்தமாயிருக்கிறேன்."

"சாப்பிட்டுப் பல நாளாயிற்று. எனக்குப் பசி தாங்கவில்லை. இதோ என்னிடம் இருக்கும் பேய்ச்சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் சமைத்து எனக்கு உணவு போட முடியுமா.....உன்னால்?" என சிவவாக்கியர் கேட்டார்.

சிவவாக்கியர் இப்படிச் சொன்னதும் அவள் மற்ற பெண்களைப் போல் அவரை ஏளனம் செய்து ஒதுங்கி ஓடவில்லை.  இது நடக்கக் கூடியதா?... என்று நினைக்கவும் இல்லை. 

முனிவர் சொல்கிறார். அவர் சொல்படி நடப்பது நம் கடமை.  நடப்பது எதுவாயினும் நடக்கட்டும் என்று ஒப்புக் கொண்டு சிவவாக்கியரிடமிருந்து அவைகளைப் பெற்றுக் கொண்டு போய் சமைக்கத் தொடங்கினாள். 

என்ன ஆச்சர்யம்! அவள் உலையிலிட்ட அடுத்த நிமிடமே மணல் அருமையான சாதமாகவும், சுரைக்காய் ருசிமிகுந்த உணவாகவும் உருவானது.

சமையலை வெகு விரைவில் இனிதே முடித்த அவள் வெளியில் வந்து, 'சுவாமி!, உணவு தயாராகி விட்டது. சாப்பிட வாருங்கள்.என்று பணிவுடன் அழைத்தாள். சிவவாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள்.

சிவவாக்கியருக்கு ஆச்சர்யம்....'இப்படியும் ஒரு பெண்ணா?... ஒரு வார்த்தை கூட ஏன்?... எதற்கு?....என்று கேட்காமல்....எதிர்த்தும் பேசாமல் சொன்னதைச் செய்து முடித்து விட்டாளே.... இவள்தான் நம் குருநாதர் சொன்ன பெண் என்று எண்ணியவராய் உள்ளம் குளிர உணவு உண்ட சிவவாக்கியர் அதன்பிறகு அங்கேயே ஓர் ஓரமாக உட்கார்ந்தார்.

அந்த சமயம், காட்டிற்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அவள்  பெற்றோர்கள் திரும்பி வந்து விட்டனர். சிவவாக்கியரைப் பார்த்ததும் யாரோ ஒரு தவமுனி தங்கள் வீட்டிற்கு வருகை புரிந்திருப்பதைக் கண்டு பயபக்தியுடன் அவரை வணங்கி, "சுவாமி! தங்களின் பாதம் ஏழை எங்களின் குடிசையில் பட நாங்கள் என்ன தவம் செய்தோமோ!" என்று சொல்லி அவரது பதிலை எதிர்பார்ப்பது போல் கைகுவித்து நின்றார்கள்.

சிவவாக்கியர் அவர்களிடம், "அப்பா, நான் இப்போதுதான் இங்கு உணவு உண்டேன். தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடினேன். உயர்ந்தவர்களோ என்னை ஏளனம் செய்து ஒதுக்கி விட்டார்கள். நீங்கள் எல்லாம் உள்ளத்தால் உயர்ந்தவர்கள். பொறுமையில் சிறந்தவளான உங்கள் குலப் பெண்ணோ நான் சொன்ன  கட்டளையை மறுப்பேதும் சொல்லாமல் நிறைவேற்றி விட்டாள். நான் அவளை என் வாழ்க்கைத் துணைவியாக அடைய விரும்புகிறேன். அவளை ஏனக்கு மணமுடித்துக் கொடுப்பதும், கொடுக்காததும் உங்கள் விருப்பம். இதில் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்" எனக் கூறி முடித்தார்.

குறவர்களும், "சுவாமி தங்களைப் போன்றவர்களுக்கு எங்கள் குலப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பது நாங்கள் செய்த புண்ணியமே. இருந்தாலும் தாங்கள் எங்களுடனே தங்கியிருப்பதாக இருந்தால்....எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை" என்று தங்கள் நிபந்தனையைக் கூறினர்.

சிவவாக்கியர் இதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டார். அங்கேயே அவர்கள் குலவழக்கப்படி திருமணம் நடந்தது.

இல்லறத்தை ஏற்றுக் கொண்டாலும் சிவவாக்கியரின் தவம் நின்று விடவில்லை. அவருடைய தவத்திற்கு அவர் மனைவியும் துணையாக நின்றாள். சிவவாக்கியர் குறவர்களின் குலத்தொழிலையும் கற்றுக் கொண்டார்.

ஒரு நாள் சிவவாக்கியர் மூங்கில் வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றார். அங்கே பருத்த மூங்கில் ஒன்றை வெட்டியபோது, வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாகத் தங்கத் துகள்கள் சிதறி விழ ஆரம்பித்தது.

மேலும் மேலும் வெட்டப்பட தங்கத்துகள்கள் அதிகமா வெளிப்பட்டது. 

இத் தங்கத் துகள்களைக் கண்டதும் சிவவாக்கியரின் மனம் துணுக்குற்றது.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(30)*
☘ *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* ☘
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""","""""""""""""""""
       ☘ *சிவவாக்கியர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
தளிர்த்திருந்த கீரையினை பிடிங்கிக் கொண்டிருந்தார் சிவவாக்கியர்.

அப்போது வானவெளியில் கொங்கண சித்தர் சென்று கொண்டிருந்தார். சிவவாக்கியரின் பெற்றிருக்கும் தவ ஒளி, கொங்கணவரை பூமியை குனிந்து பார்க்கச் செய்தது. அது நேரம் சிவவாக்கியர் வானவெளியை பார்த்தார். இருவரும் ஒருவரையொருவர் கண்களால் தழுவிக் கொண்டு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர்.

இதன் பிறகு அடிக்கடி கொங்கணர் சிவவாக்கியரைக் கண்டு வர ஆரம்பித்தார்.

கொங்கணசித்தர் சிவவாக்கியரை ஒவ்வொரு முறை பார்க்க வரும் போது, சிவவாக்கியர் மூங்கிலை உடைப்பதும் முறம் கூடைகளை பின்னுவதுமாக இருந்தார்.

தங்கம் பெறும் யுக்தியைப் பெற்றிருக்கும் இந்த சிவவாக்கியர் ஏன் வறுமையில் உழல்கிறார் என எண்ணிய கொங்கணர், சிவவாக்கியர் வீட்டில் இல்லாத நேரம் சென்று, அவரின் மனைவியை அழைத்து, "தாயே!, உபயோகமற்ற தூர்ந்த இரும்புகள் இருந்தால் கொண்டு வா தாயே! என்றார்.

சிவவாக்கியரின் மனைவியோ வீட்டினுள் சென்று எல்லாமிடமும் தேடி, கொங்கணவரிடம் கொடுத்தாள்.  கொங்கணர் இரும்புகளை தங்கமாக மாற்றி அவளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்து போனார்.

வீடு வந்து சேர்ந்த சிவவாக்கியரிடம் அவர் மனைவி, கொங்கணவர் வந்தது முதல் நடந்த விபரங்களை எல்லாவற்றையும் சொல்லி தங்கத்தைக் கணவர் முன்பு வைத்தாள்.

சிவவாக்கியர் அவற்றைக் கையால் தொட மறுத்து, *"அம்மா....இது ஆட்கொல்லி நோய்க் கிருமி* இதை உடனே எடுத்துப் போய் பாழும் கிணற்றில் போட்டு விடு என்றார்.

பதி சொல் தட்டாத அப் பதிவிரதை, அத்தங்கத்தை எடுத்துப் போய் கிணற்றுக்குள் வீசியெறிந்து விட்டு வீடு திரும்பினாள்.

பகல் நேரம்...உச்சியில் சூரியன் தகித்துக் கொண்டிருந்தது. அப்போது சிவவாக்கியரின் மனவலையில்......ஒரு வேளை தன் மனைவியின் விருப்பத்தின் பேரிலே அந்தத் தங்கம் உருவாக்கப்பட்டிருக்குமோ? என்ற எண்ணம் தோன்றியது.

ஒரு கல்லின் மேல் சிறுநீர் கழித்து விட்டு, அதன்பிறகு மனைவியை அழைத்தார். அவள் வந்ததும், "தேவி....அந்தக் கல்லின் மேல் தண்ணீரைக் கொட்டு என சொன்னார்.

அவள் தண்ணீரை எடுத்து வந்து அந்தக் கல்லின் மேல் ஊற்றினாள். தண்ணீர் பட்ட அந்தக் கல் குபு குபுவென புகையை கக்கியது. 

புகை ஆரவாரம் அடங்கியதும் பக்கத்தில் வந்து கல்லைப் பார்த்தனர். அந்தக்கல் தங்கப் பாளமாக மாறிவிட்டிருந்தன.

சிவவாக்கியர் தன் மனைவியிடம், வேண்டுமானால் இதை எடுத்துக் கொள் என்றார்.

குறவர் குடியில் பிறந்த அந்த குலமகள், அத்தங்கத்தைக் கையால்கூட தொட மறுத்தாள். "சுவாமி!...எனக்குத் தங்களின் மாறாத அன்பு இருந்தால் அதுமட்டுமே போதும்! இந்தத் தங்கம் எனக்கு பெரிதன்று!...தாங்கள் எனக்குச் சொல்லிவிட்டிருந்தது போல..... *இது ஆட்கொல்லிக் கிருமி* யே என கூறிவிட்டாள்.

சிவவாக்கியர் மனம் மகிழ்ந்து மனைவியைப் பாராட்டினார். குருநாதர் கட்டளைப்படியே இல்லறம் மேற் கொண்டிருப்பதில் சிவவாக்கியருக்கு நிறைவாக இருந்தது. இல்லறம் நல்லறமாகத் தொடர்ந்தது. 

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                   *(29)*
🌼 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌼
====================================
🌼 *சிவவாக்கியர் சித்தர்.*🌼
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
வனத்தில் பருத்த மூங்கிலொன்றை வெட்டயபோது, வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிப் பொடியாகத் தங்கத் துகள்கள் சிதறி வெளி வந்து விழுந்தன.

இறைவா!, சிவபெருமானே!..என்ன சோதனை இது?...நான் உன்னிடம் கேட்பதெல்லாம் முக்தியைத்தானே! அதை எனக்கருளாமல் இப்படியான பொருளாசையை காட்டித்தரலாமா?......

செல்வங்கள் கூடியிருந்தால் கவலைகள் கரைகட்டி நிற்குமே?...என இறைவனிடம் முறையிட்டுவிட்டு ஓடிப்போய் தூரத்தில் நின்று கொண்டு உதிர்ந்தெழும் கங்கத்துகள்களைப் பார்த்தார்.

சிவவாக்கியரின் புலம்பலையும், அச்சத்தையும் கண்டு என்னமோ ஏதோ என்று அங்கு ஓடிவந்த சில நரிக்குறவ இளைஞர்கள் என்ன....ஏது....என்று விசாரிக்க,.......

அதற்கு சிவவாக்கியரோ பதட்டத்துடன், "அதோ அந்த மூங்கில் புதரிலிருந்து மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லி புறப்பட்டு வருகிறது. அதைப் பார்த்துத்தான் பயந்து பின்வந்து நிற்கிறேன்" என்றார் உதிர்ந்து வரும் தங்கத்துகள்களைக் காட்டி..

கூடியிருந்த அத்தனை பேரும்.......சிவவாக்கியரைப் பார்த்து....இவன் சரியான பைத்தியக்காரன். போலும்!, இவன் வாழத் தெரியாதவனாவான்!, என மனதிற்குள் சொல்லிக் கொண்டு,....."ஆமாம்....ஆமாம்...இது ஆட்கொல்லிதான். நீங்கள் இங்கு இருந்தால் அது உங்களைக் கொன்று போட்டுவிடும். உடனே இங்கிருந்து போய் விடுங்கள்" என்று சிவவாக்கியரை அவ்விடத்தை விட்டு விரட்டினார்கள். அவரும் அவ்விடத்தை விட்டு அகழ்ந்து சென்று விடுகிறார்.

சிவவாக்கியர் போனதும், அங்கிருந்த கூட்டத்தினர் அனைவரும், மூங்கில் புதர்க்கு வந்து தெறித்து விழுந்த தங்கத்துகள்களை மூட்டை மூட்டையாய் கட்டி அட்டி போட்டனர். வெகுநேரமாய் தங்கத்துகள்களை சேகரித்ததில் இரவாகிப் போனது. இந்த இரவில் காட்டிலிருந்து வெளியேறிச் செல்ல முடியாததால், வேறு வழியின்றி இரவு முழுவதையும்  காட்டில் கழித்து விட்டு விடிந்ததும் கிளம்பலாம் என தீர்மானித்து காட்டிலே தங்கி விட்டனர்.

பசியின் காரணமாய் இரண்டு பேர்கள் மூட்டையை பாதுகாப்பதென்றும், இரண்டு பேர் ஊருக்குள் சென்று சாப்பிட்டு விட்டுமற்றவர்க்கு சாப்பாடு வாங்கி வருவது 
எனவும் முடிவு செய்தனர்.

அதன்படி இரண்டு பேர் கிராமத்திற்கு போய் வயிறார சாப்பிட்டு விட்டு மற்றவர்க்கு உணவை வாங்கிக் கொண்டு வந்தனர். வரும் வழியிலிலே இருவரின் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது.

ஏன் ? நாம் நால்வரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்? இருப்பதை நாம் இருவர் மட்டும் எடுத்துக் கொண்டால் என்ன? என இருவரும் முடிவு செய்து வாங்கிவந்த உணவில் விஷத்தை கலந்து விதைத்து வனத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அங்கோ தங்கமூட்டைக்கு காவலிருந்த இருவரும் வேறு விதமாக கணக்குப் போட்டு வைத்திருந்தனர். 

மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று கொன்டு, உணவெடுத்துக் கொண்டு வந்த இருவரையும் கொன்று போட்டு விட்டு, "ஒழிந்தார்கள் பங்குக்குண்டானவர்கள்!, என சந்தோஷம் கொண்டார்கள் மீதமிருந்த அந்த இருவர்கள்.

பின், வாங்கி வரப்பட்ட உணவை இருவரும் உண்டனர். அவ்வளவுதான்... விஷம் வெற்றி கொண்டது. மீதமிருந்த இருவரும் இறந்தனர்.

ஆக தங்கத்தின் மீது கொண்ட மோகத்தால் நால்வரும் மாண்டனர். எமன் அவர்களை அழித்தான். 

மறுநாள் பொழுதில், வழக்கம் போல் வனத்திற்கு மூங்கில் வெட்ட வந்தார் சிவவாக்கியர். அங்கே இறந்து கிடந்த நான்கு பேரையும் கண்டார். 

அட அற்ப மானிடர்களே! இதைத்தான் முன்னமே சொன்னேனே?....கேட்டீர்களா?...இந்த ஆட்க்கொள்ளி உங்களைக் கொன்று போட்டுவிட்டது பார்த்தீர்களா?...என வருந்தி விட்டு மூங்கில் வெட்ட நகர்ந்து சென்றார்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌸 *சிவமய அருளான சித்தர்கள் தொடர்.* 🌸
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      🌸 *சிவவாக்கியர்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிவவாக்கியர் முறம் முடைந்து கொண்டிருந்தார். 

சிவனடியார்கள் சிலர் அவருகே வந்து...."சுவாமி,...உங்களால் எங்களுக்கு ஒரு காரியம் கூடவேண்டும் என ஏக்கமாக கேட்டனர்.

கேளுங்கள்!......

*சித்தர்கள் தரிசனம் கோடி பாவங்ககள் நாசமாகுமாமே!*அதனால் எங்கள் பாவங்கள் ஒழிந்தொலைய, உங்களைப்போல சித்தரொருவரை  தரிசித்து வணங்கிக் கொள்ள விழைகிறோம். ஏற்றுக் கொணர்வீர்களாக! என வேண்டினார்கள்.

சிவவாக்கியர்க்கு இவ்வடியார்களின் எண்ணக்குமுறல் எண்ணவென்று உணரப் பெற்றார். 

ஐயா!...அடியார்களே!,,,சித்தர்கள் தெய்வமயமானவர்கள். அவர்களை நீங்கள் பார்க்க நினைப்பது, காணக்கிடைக்கக்கூடியதாக தெரியவில்லை. நீங்களோ ஆசாபாசங்களுடன் உழன்றழைகிறீர்கள். இவ்வாசைகளுடன் நீங்கள் பார்க்க நேர்ந்தாலும், அவர்கள் செய்யச் சொல்லும் செயல்பாட்டை உங்களால் கடைப்பிடிக்க முடியாதே!... அதைத் தவறாகப் பட்டால், அவர்கள் சாபம் கொடுத்து விடுவார்கள். ரிஷிகள், முனிவர்கள் சாபத்திற்குக் கூட விமோசனம் கேட்டுப் பெறலாம்! ஆனால் சித்தர்களின் சாபத்திற்கு விமோசனமே கிடையாது.....என்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்கள் சித்தர்களை தரிசிக்க விரும்புவதெல்லாம் அவர்கள் செய்யும் சித்துவிளையாட்டைக் காண்பதற்காகத்தான். மேலும் தங்கம் உருவாக்குதல் அறிந்து, அதனைக் கொண்டு உலக வறுமையனைத்தையும் ஒழிக்க விழையப் போகிறோம் என்றார்கள் அவர்கள்.

சிவவாக்கியருக்கு இவர்களின் நோக்கம் தெளிவாக புரிந்து போனது. இறைவனையும் அவனால் படைக்கப்பட்ட பஞ்சபூதங்களையும் உள்ளபடி உணர்ந்த சிவவாக்கியருக்கு அவர்களது உள்ளத்தில் உள்ளது தெரியாமல் போகுமா?...........

"ஐயா!,...உங்களைப் போன்றவர்கள் அதிகம் பேர்கள் வந்து தங்கரகசியத்தை அறிய முற்படுவதினால்தான், சித்தர்கள் உங்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.

மேலும்.... தங்கமே... தங்கமே......
என்று, தங்கத்தின் மீது மோகப்பட்டவர்களிடம் தங்கம் அடைக்கலமாகாது. மீறினால் கெடுதல்தான் மிகுந்து,  குடும்பம் பிரிவினை ஏற்படும். ஒற்றுமையான குடும்பம் குலையும்.  வழக்கு ஏற்பட்டு அலைவர். நிறைய பாவங்கள் கணக்கிலேற்றப்படும். களவு இகழ்வு நிலை உறுதிப்படும். இவையெல்லாம்  சாதாரணமாக நடக்கும். இந்தப் பாவங்களுக்கெல்லாம் நீங்கள் ஆட்படுவீர்களென எண்ணியே சித்தர்கள் உங்களுக்குக் காணப்படுவதில்லை என்றார்.

இரசவாத வித்தைத் தனங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்கம் உருவாக்குதல் செய்யலாம் என்று தப்புக் கணக்குப் போட்டு வந்தவர்கள், சிவவாக்கியர் முன்வந்து, அவர் தந்த அறிவுரைகளைக் கேட்டு தலை குனிந்து நின்றார்கள்.

அன்பானவர்களே! எனவே உங்களின் பொன்னாசையை ஒழியுங்கள். பொருளாசையை அழியுங்கள். சித்தத்தை சிவன்பால் வையுங்கள். இவ்விதமாகும்போது, நீங்களே தங்கமாக மாறியிருப்பீர்கள்! இதுதான் தங்கத்தை நாடசிறந்த சுலபவழி என அவர்களுக்கு மீண்டும் உபதேசத்தருளி அவர்களை அனுப்பி வைத்தார்.

ஞான மார்க்கத்தில் திகழ்ந்த சித்தரான சிவவாக்கியரைத் தேடி நாளும் புதிய புதிய சீடர்கள் வந்த வண்ணம் இருந்தனர். 

அவரிடம் சேர்ந்தவர்கள் திரும்பத் திரும்ப இரசவாத வித்தை செய்ய விரும்புவதிலேயே ஆர்வம் காட்டினார்களே தவிர ஆன்மார்த்தமான அறிவைத் தேடிப்பெற எவரும் முன்வரவில்லை.

தேடி வந்தவர்கள் எல்லாம், அவரிடம் ஞானம் தேடுவதை விட தங்கத்தைத் தேடுவதற்காகத்தான் வந்து சேர்ந்தனர். இச்செயல் சிவவாக்கியர்க்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கியது.

இந்நிலையில் சிவவாக்கியரை சந்திக்க கொங்கணவர்க்கு ஆவல் உண்டானது. அப்போது சிவவாக்கியரின் சீடர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. வரும் கொங்கணவரை சந்தித்து இரசவாதம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினர்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த சிவவாக்கியர் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டார். தங்கத்தின் மீது எவரொருவர்க்கு பற்றில்லாதிருக்குமோ, அவர் உருவாக்கும் இரசவாதந்தான் சித்தியாகும். சித்தர்கள் பலரும் இரசவாதம் அறிந்தவர்கள்தான்.  அவற்றையெல்லாம் பற்றி தாமறிந்த அனுபவங்களை இந்த பிரபஞ்சத்துக்கக் காணிக்கையாக்கி விட்டுப் போயிருக்கின்றனர்.

யோக நெறியில் நின்று இரசவாதம் செய்பவர்கள் தேவர்களுக்கு நிகர் நிகர் அவர்களே! அத்தகைய தவ வலிமையும், யோகநெறியும் உடைய சித்தபெருமான்களுக்குத்தான் இரசவாதம் சித்தித்து வந்தது. மேலும் அவர்கள் கண்களுக்கு மட்டுந்தான் தென்படுவார்கள்.

பற்றற்ற சித்தர்களுக்கு அந்த சித்தியினால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். தமது கடுந்தவத்தாலும் யோகத்தினாலும் பெற்ற சித்திகள் அனைத்தையும் பலவீனமான மனிதர்களுக்கே அர்ப்பணம் செய்துள்ளனர்.

சித்தரைப் போல் நாம் மேன்மை நிலை அடைய விரும்புகிறோமா?, அல்லது பலவீன மனிதர் நிலையே போதும் என நினைக்கிறோமா?.

சிவவாக்கியர் இறைவனது எண்ணத்தில் ஆழ்ந்தார். உள்ளம் உருகியது. தன் அனுபவங்களை.எல்லாமா பாடல்களாக ஆக்கினார். சிவவாக்கியரால் உருவான அப்பாடல்கள் அனைத்தும் சிவவாக்கியம் என அழைக்கப்பட்டது.

சிவவாக்கியர் கும்பகோணத்தில் சித்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் பெளர்ணமி நாட்களில் கும்பகோணத்தில் அவர் சமாதி பூஜை நடைபெற்று வருகிறது.

ஞானத்தை அடைவதற்காகத் தவம் மேற்கொண்ட சிவனடியார் ஒருவர் தவம் முடிவதற்குள் இறந்து போய் விட்டார். அவர்தான் சிவவாக்கியராக வந்து பிறந்தார் என்ற ஒரு வரலாறும் பேசப்படுவதுண்டு.

இத்துடன் சிவவாக்கியர்.தொடர் மகிழ்ந்து நிறைந்தது


No comments:

Post a Comment