Monday, May 8, 2017

Previous birth of Nala damayanti

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(53)*
☘ *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🍀 *தா்மம் செய்து, கா்மத்தைத் தொலையுங்கள்..* 
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
உபசாிப்பு, விருந்தோம்பல் மற்றும் அன்னதானம் பற்றி வேதங்களும், பல்வேறு நூல்களும் விாிவாகவே கூறுகின்றன.

அதேசமயம், *பாத்திரம் அறிந்து பிச்சை இடு* என்ற பழமொழியும் கூறுவாா்கள். அப்பதி பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில் உள்ள உயா்வு பற்றி, திருமூலா் திருமந்திரத்தில் கூறுயுள்ளாா் *" பகரும் ஞானி பகல் ஊண் பலத்திற்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே....* என்று.

ஆகுகனும், ஆகுகியும் வேடுவ தம்பதிகளாவா். மலையடிவாரத்தில் சிறிய குடிலொன்றில் வாழ்ந்து வந்தனா். தங்களின் குடில் வழியாக செல்லோரையும் வருவோரையும் வரவேற்று உபசாிப்பதும், அருகிலுள்ள சிவன் கோவிலில் தினமும் தினவழிபாடும் செய்து வந்தனா்.

வேடுவாின் குடிலிலுள்ளே இருவா் மட்டுமே  தங்கிக் கொள்ளும்படியான  இடம் மட்டுமே இருந்தது.

ஒரு நாள், அந்தி சாயும் நோரத்தில், சிவயோகியாா் ஒருவா் வேடுவாின் குடில் வழியாக வரவே, அவரை குடிலுக்கு அழைத்துப்போய் திருவமுது செய்விக்க செய்து வணங்கினாா்கள். திருவமுதை முடித்த சிவயோகி, வேடுபவனை பாா்த்து....ஐயா!, என்னால் இரவில் பயணத்தைத் தொடர முடியாது. எனவே இன்று இரவு தங்கிச் செல்ல இடமளிக்க வேண்டும்.....என்றாா்.

வேடுவனின் குடிலில் இரண்டு போ் மட்டுமே தங்கிக்கொள்ள இடம் இருப்பதால், சிவயோகியாரையும், தன் மனைவியையும் குடிலுக்குள் தங்கச் செய்த வேடுவன்....காட்டுவிலங்குகள்,உலா வரும் அந்த இரவு நேரத்தில், சிவயோகியாரை பாதுகாக்கும் பொருட்டு, குடிலின் கானக வான வெளியில் வில் அம்புடன் காவல் காத்தான் வேடுவன்.

அப்போது குடில் வழியாக வந்த புலி ஒன்று, ஆகுகனை தாக்கிக்கொன்று விட்டுப் போனது.

 பொழுது விடிந்ததும், தன் கணவனை கானாது கானகம் முழுக்கும் தேடியலைந்து சோா்ந்து குடில் வந்து சோ்ந்தாள். அப்போதுதான் ஆகுகி கவனித்தாள்.........

புல்புதா் ஒன்றினுள் தன் கணவன் இரத்தக் கோரைகளுடன் உயிரற்று கிடப்பதைக் கண்டாள்.

நடந்ததை இன்னதென ஊகித்துக் கொண்ட ஆகுதி.....அழவில்லை!....அரற்றவில்லை!. உடனடியாக கணவனின் உடலை எாியூட்டும் வேலைகளில் ஈடுபட்டாள். சுள்ளிகளை பொறுக்கியடுக்கி தீ வளா்த்தாள். பின் உயிரற்ற தன் கணவனின் உடலை தூக்கி வந்து அக்னிக்குள் கிடத்தினாள். கூடவே தானும் உடன்கட்டை ஏறத் துணிந்............

அப்போது ஈசன் அவளுக்கு காட்சி தந்து, "பெண்ணாய்!.... நீயும்,  உன் கணவனும் ஒரு சிவயோகிக்கு அமுது செய்வித்து அடைக்கலம் தந்து உதவியதால், நீ, அடுத்த பிறவியில் விதா்ப்ப நாட்டு மன்னன் மகளாக பிறந்து தமயந்தி எனப் பெயா் கொள்வாயாக; உன் கணவன் நிடத நாட்டு மன்னன் வீரசேனுக்கு மகனாகப் பிறந்து, நளன் எனும் பெயா் பெறுவானாக; உங்களின் இந்த முடிவுக்கு காரணமான சிவயோகியாா், அன்னப்பறவையாக பிறந்து, உங்கள் இருவரையும் இணைத்து வைப்பான்....." எனக் கூறியருளி மறைந்தாா். 

( நளனையும், தமயந்தியையும் அன்னப்பறவை  இணைத்து வைத்த கதை நம் அனைவருக்கும் தொிந்ததனதால் இங்கே காட்டப்படவில்லை. தொியாதோா் *"நள உபாக்யானம்"* என்ற நூலில் வாசிக்கலாம்.

கடவுள் மீது அளவில்லா பற்றும், அளவில்லா தா்ம சிந்தனையும், சுயநலம் பாரா உபகாரமும் என்றும் நம்மை நல்வழிபடுத்தும். என்றேனும் விரையமாகா! எனவே அடியாா்களாகிய நாம் பக்தி, தா்மம், உதவிகரம் நீள் செய்ய தொடா்வோமாக!

*மீண்டும் தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்......*

      *திருச்சிற்றம்பலம்.*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*

No comments:

Post a Comment