Monday, April 3, 2017

Toe ring - metti of Goddess Lakshmi

courtesy:http://www.srikainkaryasri.com/2017/03/03/maha-vathsalya-vaibhavam/

மஹா வாத்ஸல்ய வைபவம்———————————————————–

தாயாரின் மெட்டி வைபவம்

————————— ——————ஞானா நந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் |ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே ||

———————

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய : கவிதார்ர்க்கிககேஸரீ |

வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி ||

————————————-

1. "மெட்டி " என்பது ஒரு அணிகலன். ஸுமங்கலிகளுக்கு இருக்கவேண்டிய ஆறு மங்கலப் பொருள்களில் ஒன்று. அவற்றில் முதலாவது, மெட்டி.2வது , கைவளை . 3 வது, மூக்குத் திருகு . 4 வது திருமங்கல்யம் .5 வது நெற்றியில் திலகம். 6 வது, கூந்தலில் புஷ்பம் (அல்லது கண்களில்மை என்றும் சொல்வர் .

2. திருமங்கை ஆழ்வாரின் திவ்ய சரிதத்தைப் பார்த்தோமானால், அவருக்கு

அனுக்ரஹம் செய்ய சங்கல்பித்த பகவான், திருமணக்கோலத்தில்

ஸேவை சாதித்து, நீலன் (திருமங்கை மன்னன் ), ஸ்ரீவைணவர்களின்

ததீயாராதனச் செலவுக்காக, பகவானின் திருவாபரணங்களைக்கொள்ளையடிக்க

(திருட) பகவானின் திருவடியில் இருந்த கால்விரல் மோதிரம் என்றும்,

கணையாழி என்றும், மெட்டி என்றும் சொல்லப்படுகிற திருவாபரணத்தைப்

பகவான் திருவடியிலிருந்து கையால் கழட்டமுடியாமல், தன் பற்களால்

கடித்து இழுத்ததும் , ஆழ்வாருக்குப் பகவான் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை

உபதேசித்ததும் ,வைணவர்களுக்கு மிகவும் தெரிந்த உள்ளத்தைக் கொள்ளை

கொள்கிற நிகழ்ச்சி .

3. நாம் இப்போது அநுபவிக்கப் போவது, பிராட்டியின் "மெட்டி"

அமரகோசம் , பிராட்டியைப் பற்றிச் சொல்லும்போது,

"லக்ஷ்மி : பத்மாலயா பத்மா

கமலா ஸ்ரீ : ஹரிப்ரியா

இந்திரா லோகமாதா மா

நமா மங்கள தேவதா

பார்கவி லோகஜனனி

க்ஷீர ஸாகர கந்யா ——-"

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகிறது. இவள் மங்கள தேவதை.

இந்த மங்கள தேவதை "மெட்டி"யை அணிந்து மெட்டியை அனுக்ரஹிக்கிறாள்

4.சோழதேசத்தில் ஆழ்வார் மங்களாசாசனம் செய்த சில திவ்ய தேசங்களில்

உத்ஸவ மூர்த்தியான பிராட்டிக்கு, "மெட்டி " உள்ளது. இந்தமாதிரியான

திவ்யதேசம் ஒன்றில், கைங்கர்யம் செய்யும் பாஞ்சராத்ர ஆகம அர்ச்சகர் ஒருவர் .

உத்ஸவமூர்த்தியான தாயாருக்கு, அர்க்யம் , பாத்யம் சமர்ப்பிக்கும்போது

திருவடிகளில் " மெட்டியைத் " தரிசித்து உபசரிப்பார்.

ஒருசமயம், பாண்டிய தேசத்தில், அவருக்கு ஒரு திவ்யதேச கைங்கர்யம்

கொஞ்சநாட்களுக்குக் கிடைத்தது.

திருமஞ்சன சமயம்—-பெருமாள், உபயநாச்சிமார்களை எழுந்தருளப்பண்ணினார்.

க்ரமேண பூர்வாங்க கர்மாக்களைச் செய்து, அர்க்யம் ,பாத்யம் சமர்ப்பிக்கும்போது ,

உபயநாச்சிமாரான தாயாரின் திருவடிகளில் , "மெட்டி " ஸேவை சாதிப்பதைக்

கண்டு, ஆச்சர்யப்பட்டார். ஏனென்றால், இந்த திவ்ய தேசத்தில் உத்ஸவத்தாயாருக்கு,

திருவடியில் மெட்டி இல்லை என்று சொல்லியிருந்தார்கள். அர்க்யம்

சமர்ப்பிக்கும்போது , மெட்டியை சேவித்தவர் , மயங்கி விட்டார்.

"மெட்டி தேவி"யின் திருவிளையாடல் இது.

5. பிராட்டியின் "மெட்டி"யைப்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பது, "வாக் யஜ்ஞம் "

மெட்டியின் திருவுருவைத் த்யாநிப்பது, சேவிப்பது, திருக்கல்யாண குணங்களைச்

சொல்வது "கீர்த்தன யஜ்ஞம்". முமுக்ஷூக்கள் பிராட்டியை முன்னிட்டு, பகவானை

சரணம் அடையும் முன்பாக, பிராட்டியின் திருவடி மெட்டியில் சரணாகதி செய்வது,

" சரணாகதி யஜ்ஞம் "

6. மங்களம் பகவான் விஷ்ணு :

மங்களம் மதுஸுதன :

மங்களம் புண்டரீகாக்ஷ :

மங்களா யதனோ ஹரி :

மங்களம் எங்கே இருக்கிறது ?

பகவான் விஷ்ணுவே மங்களம்.

பகவான் மதுஸுதனனே மங்களம்

பகவான் புண்டரீகாக்ஷனே மங்களம்

மங்களம் எங்கே ? ஹரியிடத்தில்

அந்த மங்களம் யார் ?

பெரிய பிராட்டியார்.

அந்தப் பெரிய பிராட்டியாருக்கு,

மங்களச் சின்னங்களில் ஒன்று 'மெட்டி "

இது, பரம மங்களம்.

7. ஒரு ஸம்வாதம்

ஆசார்யன், சிஷ்யனைக் கேட்கிறார்.

" இது என்ன ? '

சிஷ்யன் பதில் சொல்கிறான் "வெல்லம் '

ஆசார்யன் :- கண்ணுக்குத் தெரியும்போது இது வெல்லம்

சரி—-இதைத் தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கு

சிஷ்யன்:–அப்படியே செய்தேன் ஆசார்யரே

ஆசார்யன் :–இப்போது வெல்லம் எங்கே –?

சிஷ்யன்:–வெல்லம் என்பது இல்லை

ஆசார்யன்;– உன் கண்ணுக்குத் தெரியாவிடில், வெல்லம்

இல்லை என்று ஆகிவிடுமா ?அந்தத் தண்ணீரை எடுத்து,

சிறிது சாப்பிட்டுப் பார்

சிஷ்யன்:–சாப்பிட்டுப் பார்த்தேன் –இனிப்பாக இருக்கிறது.

ஆசார்யன்:–கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அதை வேறு ஒரு

இந்த்ரியத்தாலே தெரிந்துகொள்வதைப் போல, ஊனக்கண்களுக்கு

"மெட்டி " ஸேவை ஆகாவிட்டாலும், "மானஸீக "மாவது

தர்ஸிக்கலாம் அல்லவா !

" சக்ஷுஸ் " பலம் வேண்டும். தவிரவும், "ஸ்ம்ருதி "பலம் வேண்டும்.

என்று , ஆசார்யன் விளக்கினார்.

8. இப்படி, "மெட்டி " என்கிற இந்தத் திருவாபரணம் .

இதை, பிராட்டியின் திருவடியின் ஆபரணமாக அடியேன் "மனஸ் " ஸால்

வரித்து, அந்தத் திருக்கோலத்தில் உபயநாச்சிமாராக எழுந்தருளும்

ஸ்ரீதேவித்தாயாரை மானஸீகமாகத் தரிஸித்து ,

பெரியபிராட்டியாரின் "மெட்டி"யின் வைபவத்தை, சொல்லத் துவங்குகிறேன்.

9. ஆசார்ய பரம்பரையை அகத்தில் இருத்தி, வணங்கி , ஸ்ரீ ஸுக்த பாஷ்யத்தை

அருளிய ஸ்ரீ நஞ்சீயரையும் , ஸ்ரீகுணரத்ன கோசத்தை அருளிய ஸ்ரீ பராசர

பட்டரையும் , ஸ்ரீ ஸ்துதியையும் , ஸ்ரீ பாதுகாசஹஸ்ரத்தையும்

அருளிய பரமாசார்யன் ஸ்வாமி தேசிகனையும், ஸ்ரீலக்ஷ்மி சஹஸ்ரத்தை அருளிய

அரசாணிபாலை வேங்கடாத்ரி கவிஸார்வ பௌமனையும் புந : புந : தெண்டனிட்டு

மஹாசார்யர்கள் , மஹா பண்டிதர்களை சிரஸ்ஸாலே வணங்கி, இருகரம் கூப்பித்

தொழுது, அனுக்ரஹிக்கப் ப்ரார்த்தித்து, எழுதத் துவங்குகிறேன்

10. ஹே—பெரிய பிராட்டியே—

எந்த நித்ய சூரிகளும் ,எந்த முக்தர்களும் அனவரதமும் உன் மெட்டியைத்

தரிசித்து, உனக்குக் கைங்கர்யம் செய்கிறார்களோ, அந்த, உன்னுடைய

திருவாபரணமான , "மெட்டித் தேவி " அடியேனுக்குத் தர்ஸனம் தந்து, அந்தத்

திருவாபரண வைபவத்தை ,சிறு குழந்தையின் மழலைச் சொற்களைப் போல

அடியேன் சமர்ப்பிக்க, உன் அனுக்ரஹத்தை வேண்டி, உன்னை எப்போதும்

தெண்டனிடுகிறேன் .

11. ஹே—பெரிய பிராட்டியே —

உன் திருவடித் திருவாபரணமான 'மெட்டி"யின் வைபவத்தை, கேட்க, உன் பதியும்,

உலகங்களுக்கு எல்லாம் பதியுமான எம்பெருமான், ஆவலாக இருக்கிறான்.

திவ்ய தம்பதியராக வீற்றிருக்கும் இத் திருவோலக்கத்தில், அடியேனின்

இந்த "மெட்டி " வைபவத்தை, ஆற அமரச் செவிமடுத்து அநுக்ரஹிக்கப்

ப்ரார்த்திக்கிறேன்

12. ஹே—பெரிய பிராட்டியே–

நீ, மெட்டிக்கு மேன்மையைக் கொடுப்பவள். உன்னால், உன் திருவடியில்

அணியப்பட்டதால், உன்னுடைய எல்லாத் திருவாபரணங்களையும்விட,

மேன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட, உன் திருவடியை அலங்கரிக்கிற

'மெட்டி " என்கிற தேவிக்கு நமஸ்காரம். புந ; புந : நமஸ்காரம்.

13. ஹே—மெட்டித் தேவியே —

மஹாவித்வான்களும், விருப்பு வெறுப்பு இல்லாதவர்களும் பொறாமை

இல்லாதவர்களும், உன்னைப்பற்றியதான அடியேனின் இந்த "வைபவ"

க்ரந்தத்தைச் செவிசாத்தி அருள, நீ க்ருபை செய்ய உன்னையே

ப்ரார்த்திக்கிறேன் .

14. ஹே—மெட்டித்தேவியே—

பெரிய பிராட்டியின் திருவடிவிரலில் பதிந்து, பிராட்டிக்கு ஆனந்தத்தைத்

தருகிறாய். நீயும் ஆனந்தப்படுகிறாய். இந்த மகிழ்ச்சியில் ,ஒருதுளி

அடியேனுக்குத் தந்து, கடாக்ஷிப்பாயாக !

——————————————————————-

2. வடிவழகு

——————

1.ஹே—மெட்டித் தேவியே—பெரியபிராட்டியின் திருவடி விரலில்,

வளையம் போலச் சுற்றிக்கொண்டிருக்கிறாய்.

அடியேனை அனுக்ரஹிப்பாயாக 1

2.ஹே—மெட்டித்தேவியே —பெரிய பிராட்டியின் திருவடி விரலுக்குப்

பாதுகாப்பாக இருக்கிறாய். அடியேனை அனுக்ரஹிப்பாயாக !

3. ஹே—மெட்டித் தேவியே—பெரிய பிராட்டியின் திருவடி விரலில்,

உன் உள்புறம் மிக வழுவழுப்பாக, திருவடிவிரலுக்குத் துன்பம்

நேராதவண்ணம் மென்மையாக இருக்கிறாய். அடியேனை

அனுக்ரஹிப்பாயாக !

4. ஹே—மெட்டித் தேவியே —பெரிய பிராட்டியின் திருவடி விரலில்

சுற்றிக் கொண்டு,வெளிப்புறத்தில், அடுத்த திருவிரல்களுக்கும்

மென்மையாக இருக்கிறாய். அடியேனை அனுக்ரஹிப்பாயாக !

5 பெரியபிராட்டியின் அணிகலனான மெட்டித் தேவியே —-

பெரியபிராட்டியின் திருக்கை வளையல்கள், உன்னைப்போலத்

திருவடிகளை அலங்கரித்துப் பாக்கியம் அடைய முடியவில்லையே

என்று ஏங்குகின்றன.

6. ஹே—மெட்டித் தேவியே—பெரியபிராட்டியார் அணிந்திருக்கும்,

மேகலையும், தோள்வளையும் , ஒட்டியாணமும் சலங்கையும்

நீ, சிறிய வடிவழகில் இருந்தாலும் உன் பெருமைக்குப் போட்டி

போட இயலவில்லையே என்று தங்களுடைய பெரிய வடிவத்தை

வெறுத்தாலும் பிராட்டியின் திருமேனி சம்பந்தத்தால் மகிழ்கின்றன .

7. ஹே—மெட்டித் தேவியே—சிறிய வடிவத்தில், உனக்குள்ள

பெருமையை சிந்தித்துத்தான் எம்பெருமான், சிறிய வடிவில்

வாமனாவதாரம் எடுத்துப் பெருமை கொண்டானோ !

8. பகவானை, மங்கலம் பகவான் விஷ்ணு : , மங்கலம் மதுஸு தன :

மங்கலம் புண்டரீகாக்ஷோ மங்கலம் கருடத்வஜ –என்று ஸ்தோத்ரம்

செய்கிறோம்.பகவானுக்கு இந்த நிலை, பிராட்டியின் சம்பந்தத்தாலே

அமைந்தது. அப்படிப்பட்ட மங்கல மஹாதேவியான பிராட்டிக்குத்

திருவடியில் ஆபரணமாக ஆகி ஹே—மெட்டியே –நீயும் மங்கல

வடிவாக ஆனாய் !

9. ஹே—மெட்டித்தேவியே —எல்லா திருவாபரணங்களும் பிராட்டியின்

சிரஸ் , திருநெற்றி, திருச்செவி , திருமூக்கு, திருக் கழுத்து, திருத்தோள்

இவைகளை அலங்கரித்துப் பெருமை பெறுகின்றன. ஆனால் நீயோ,

பரம பக்தனைப்போல, பிராட்டியின் திருவடியைத் தஞ்சம் அடைந்து,

சின்னஞ்சிறு வடிவில், கற்பனைக்கே எட்டாத பெருமையைப் பெறுகிறாய்

10. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் அப்ராக்ருதத் திருமேனியில்,

நீயும் அவருக்குத் திருவாபரணமாக ஆகி, அப்ராக்ருத வடிவமெடுத்தாய் !

11. பிராட்டி "ஹார்த மூர்த்தி"–த்யானம் செய்பவர்களின் சிறிய ஹ்ருதயத்தில்,

பகவானுடன் ஸேவை சாதிக்கும் "அந்தர்யாமி " என்கிற திருவடிவை உடையவள்.

அந்த மிகச் சிறிய திருவடிவிலும், திருவடியில் திருவிரலுக்கு ஏற்றாற்போல்

மிகமிகச் சிறிய வடிவெடுத்து அலங்கரிக்கிறாய்–உனக்கு நமஸ்காரம்

12. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருக்கரத்தில் உள்ள "கணையாழி"யும்

(மோதிரம் ) வடிவில் உன்னைப்போலச் சிறுத்து இருந்தாலும், திருவடியை

அலங்கரிக்க இயலவில்லையே என்று தாபப்படுகிறது

13. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருவடி "ப்ரணவ" ரூபத்தில் உள்ளது.

ப்ரணவத்தில் , "ம்" என்கிற அக்ஷரத்துக்கு , புள்ளியைப் போலத் திலகமாக

ஸேவை சாதிக்கிறாய். உனக்கு நமஸ்காரம்.

14. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் திருமேனியில், திருமுடியைக்

க்ரீடம் வளைத்து இருந்தாலும், திருக்கழுத்தை அட்டிகை வளைத்து இருந்தாலும்,

திருவடிகளைச் சலங்கையும் கொலுசும் வளைத்து இருந்தாலும், அவை, எவ்வளவு

பெரியவையாக இருந்தாலும், திருவடியில் அடக்கமாக இருக்கும் உன் வடிவழகு

பக்தர்களின் மனத்தில் பதிந்துவிட்டது.

————————————————————————————————————————————————–

3. த்யானம்

————-

1. ஹே—மெட்டித் தேவியே—

பிராட்டியை "பூ: பாதௌ யஸ்ய நாபி: " என்று கொண்டாடும்போது,

ஆகாசம், பிராட்டியின் திருநாபியாகத் த்யானிக்கப்படுகிறது.

அப்படிஎன்றால், நீ, "பூ: பாதௌ ' . பிராட்டியின் திருவடி இவ்வுலகமாகும்போது,

அதில் உன்னைப் புண்யபூமியான இடமாகத் த்யானிக்க ஏதுவாக இருக்கிறாய்.

2. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி "திவ்ய பூஷா" –நித்யசூரிகளே

திருவாபரணங்களாகத் தோன்றி ஸேவை சாதிப்பவள்.

"த்ரிபாத்த்வம் ச …….பூஷணாஸ்த்ராதி ரூபேண ஜகதந்திர்கத …." என்று

ச்ருதப்ரகாசிகா வர்ணிப்பது, பிராட்டிக்கும் உரியது. ஆதலால், உன்னையும்

" நித்ய சூரிகளே திருவாபரணம் என்பதாக த்யாநிக்கிறேன்

3. ஹே—மெட்டித் தேவியே—"சாகா விபாக சதுரே தவ சாதுராத்ம்யே "

என்று பரமாசார்யன் , வரதராஜ பஞ்சாசத்தில் அருளியபடி, எம்பெருமான்

வ்யூஹத்தில் வாஸுதேவ , ஸங்கர்ஷண , ப்ரத்யும்ந , அநிருத்தன் என்று

பிரித்துக்கொண்டபோது, பிராட்டியும் தன்னை, பத்னிலக்ஷ்மிஎன்றும் ,

கீர்த்தி என்றும் , ஜயா என்றும், மாயா என்றும் நான்காகப் பிரித்துக்கொண்டாள்

ஆனால், ஹே–மெட்டித் தேவியே—நீயோ அவ்விதமான எவ்விதப் பிரித்தலும்

இன்றி ."மெட்டி " என்பதாகவே திருவடிகளில் த்யானம் செய்ய அருள்கிறாய்.

4. எம்பெருமான், வ்யூஹாந்தரங்களில், தன்னை வாஸுதேவன் என்கிற

வ்யூஹத்தில், கேசவன் ,நாராயணன் ,மாதவன் என்று ிரித்துக்கொண்டபோது,

பிராட்டியும் , 'ஸ்ரீ : ', "வாகீச்வரி ", "காந்தி ", என்று பிரித்து, பகவான்

கூ டவே இருக்கிறாள்.

ஆனால், ஹே—மெட்டித்தேவியே —நீ, மெட்டி என்கிற அடையாளத்தில்

பிராட்டியின் திருவடிகளில், எவ்வித வேறு திருநாமமும் இல்லாமல்,

த்யாநிக்கத் தகுந்தவளாக இருக்கிறாய்.

5. எம்பெருமான் ,தன்னை, வ்யூஹாந்தரங்களில், 'ஸங்கர்ஷணன் " என்கிற

வ்யூஹத்தில், கோவிந்தன், விஷ்ணு, மதுஸுதனன் , என்று பிரித்துக்

கொள்ளும்போது , பிராட்டியும் "க்ரியா ", "சாந்தி :","விபூதி : " என்று

தன்னைப் பிரித்துக்கொண்டு, எம்பெருமானுடன் கூடவே உறைகிறாள்.

ஹே—மெட்டித் தேவியே—-நீ அடியார்கள் மனத்தில், என்றும் பிராட்டியின்

திருவடியில்,"மெட்டி " என்கிற திருநாமத்துடனேயே த்யானிக்க உதவியாக

இருக்கிறாய்.

6. எம்பெருமான் வ்யூஹாந்தரங்களில், தன்னை "ப்ரத்யும்நன் " என்கிற
வ்யூஹத்தில் த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன் , என்று
பிரித்துக்கொள்ளும்போது பிராட்டியும்

தன்னை, "இச்சா ", "ப்ரீதி : " , "ரதி : " , என்று பிரித்துக்கொண்டு
எம்பெருமானை
விட்டு, எப்போதும் பிரியாமல் இருக்கிறாள்.ஆனால், மெட்டித் தேவியான
நீயோ,
வேறு எந்தத் திருநாமமும் இன்றி, "மெட்டி " என்கிற திருநாமத்துடன்,
பிராட்டியின்
திருவடியில் த்யானிக்க அநுகூலையாக இருக்கிறாய்.

7. எம்பெருமான் வ்யூஹாந்தரங்களில், தன்னை, "அநிருத்தன் " என்கிற
வ்யூஹத்தில்,
ஹ்ருஷீகேசன் , பத்மநாபன், தாமோதரன், என்று பிரித்துக்கொள்ளும்போது,

பிராட்டியும் தன்னை, "மாயா " , "தீ : ", "மஹிமா " என்கிற
திருநாமங்களில் பிரிந்து,
பகவானுடன் உறைகிறாள் . ஆனால்,ஹே , மெட்டித்தேவியே—உன்
சௌலப்யம்தான் என்னே ! நீ, அதே திருநாமத்துடன், அடியோங்கள்
த்யானிக்க அருள்கிறாய்

8. பிராட்டி, "பல்லவாங்க்ரி " –தளிர் போன்ற மெல்லிய திருப்பாதங்கள்
உள்ளவள் என்று,
சஹஸ்ரநாமம் சொல்கிறது. அந்தத் தளிரில், இது தாயாரின் திருவடி என்று

"இலச்சினை" செய்யும் ஹே —மெட்டித்தேவியே —உன்னைத்
த்யாநிக்கிறோம்

9. பிராட்டி, "ஸமாதி பூ : " என்று கொண்டாடப்படுகிறாள். த்யானத்தில்
தோன்றுபவள்,
பிராட்டி. அப்படித் த்யானம் செய்பவர்களின் மனதில், ஹே—மெட்டியே
-பிராட்டியின்
திருவடியை அலங்கரிக்கும் நீயே முதலில் தோன்றுகிறாய்.

10.பிராட்டியை "கல்யா " என்று சஹஸ்ரநாமம் புகழ்கிறது. த்யாநிக்கத் தக்கவள்

பிராட்டி. பிராட்டியைத் த்யாநிப்பது என்றால்,ஹே–
மெட்டித்தேவியே–நீயே
முதலாவதாக த்யாநிப்பதற்கு ஸேவை சாதிக்கிறாய். உனக்கு நமஸ்காரம்

11.பகவான் கிருஷ்ணன், விதுரர் மாளிகையில், உணவு அருந்திய பிறகு,

துர்யோதனன் கேள்விக்குப் பதில் சொல்லும்போது,

"சுத்தம் விஷ்ணு பத த்யானம் " என்கிறார்

( சுத்தம் பாகவதாஸ்யன்னம் ,

சுத்தம் பாகீரதி ஜலம்

சுத்தம் விஷ்ணு பத த்யானம்

சுத்தம் ஏகாதசி வ்ரதம் ) விஷ்ணுபதத் த்யானம் என்பதில்

பெரியபிராட்டியின் திருவடித் த்யானமும் அடங்கி இருக்கிறது.

எக்காலத்திலும், எந்தச் சமயத்திலும் பிராட்டி, பகவானைப்

பிரிந்தாளில்லை. ஆதலால், விஷ்ணுபத த்யானம் செய்யும்போது,
பிராட்டிபத
த்யானமும், பிராட்டி பத த்யானம் செய்யும்போது, உன் த்யானமும்

பக்தனுக்குப் பரவசத்தைக் கொடுக்கிறது.உனக்கு நமஸ்காரம்

————————————————————————————————————————

4. சஞ்சாரம்—நாதம்

——————————-

1. பரமபதத்தில், நவரத்ன மாளிகையில், பிராட்டியார் வரும்போது, அவரது

திருவடியில் அணிந்துள்ள சிலம்பும்,கொலுசும் பல ராகங்களில்
,சப்திக்கின்றன
அப்போது ,ஹே—-மெட்டித் தேவியே— நீ சலவைக் கற்களில் பதிந்து
எழுப்பும்
சப்தம், தாளம் இடுவதைப்போல் அமைகிறது.

2. பெரிய பிராட்டியார் ஒய்யாரமாக நடக்கும்போது, நீ, மாளிகைப் பளிங்குக்

கல்லில் எழுப்பும் நாதம் கர்ணாம்ருதமாக ஆகி, முக்தர்களுக்கு, அங்கு

வேதகோஷம் போல இருக்கிறது.

3. பெரியபிராட்டியார், நந்தவனத்தில் "பத்தி உலாத்தும் " போது ,

ஹே–மெட்டித் தேவியே—நீ புல்லின்மீதும் அங்கு சிந்தியிருக்கும்

மலர்கள் மீதும் , அழுந்தி, எழுப்பும் நாதமானது, பிராட்டியின்
பெருமையைச்
சொல்லும் ஸ்ரீஸுக்தத்தை சேவிப்பது போல இருக்கிறது.

4. இந்த நாதம் , முமுக்ஷுக்களுக்கு , பிராட்டியை சேவிப்பதற்கு முன்பாக,

பிராட்டியின் கருணையையும் விஞ்சி , அடியோங்களை, தாயாரைச்

சரணம் அடையுங்கள் என்று அழைப்பதைப் போல இருக்கிறது.

5. பிராட்டிக்கு "உருசாரிணி " என்கிற திருநாமம். "அக்ரதஸ்தேகமிஷ்யாமி
"என்று
ஸ்ரீமத் ராமாயணம் சொல்கிறது. எம்பெருமானுக்கும் முன்னதாக

ஓடிவந்து, தர்ஸனம் கொடுப்பதற்கு, பெரிய நடையை உடையவள் —

உருசாரிணி . அனுக்ரஹிக்க , பிராட்டி நடந்து வரும்போது,
தரையில்பட்டு,
உன்னுடைய நாதம், "பிராட்டி அனுக்ரஹிக்க " வருகிறாள் என்று கட்டியம்

கூறுவதைப் போல அமைகிறது. இந்த உன்னுடைய நாதத்துக்கு

நமஸ்காரம்.

6. ஹே—மெட்டித் தேவியே—ஸ்ரீ ராமாவதாரத்தில், எம்பெருமானும் பிராட்டியும்

ஆரண்யத்தில் நடந்தபோது, பிராட்டியின் பாதுகைக்கு ஹிதமாக , உன்

அடிப்பாகம் , பாதுகையின்மேல் பட்டு,, ஏதோ ரஹஸ்யம் பேசுவதைப் போல

இருந்தது. ஒருவேளை, இது, பிராட்டியின் பாதுகை என்று முத்திரை பதித்தாயா !

7. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, எம்பெருமானுடன் ஏகாந்தமாக பஞ்சணையில்

துயிலும் போது , நீ, பஞ்சணையில் பதிந்து , அப்போது எழும் உன் நாதம்

திவ்ய தம்பதியர்க்குத் தாலாட்டுப் பாடுவதுபோல இருக்கிறது.

8. ஸாமவேதம் , வீணையில் தாளம் போடுகிற மாதிரி—-ஹாய் —ஹாய் —என்கிறது.

உபநிஷத்திலும் இந்த த்வனி உள்ளது.

பிராட்டி, எம்பெருமானுடன் சஞ்சரிக்கும்போது, பிராட்டியின் திருவடி பூமியில்

படுவதும், எழுவதுமாக இருக்கிறது. அப்போது, ஹே—மெட்டித் தேவியே—நீ எழுப்பும்

நாதம், பகவானுக்கு, ஸாமவேதமாக ஒலிக்கிறது.

———————————————————————————————————–

5.ப்ரகாஸம்

——————

1. பிராட்டி, "அச்வக்ராந்தா "—குதிரைமீது சஞ்சரிப்பவள், என்று சஹஸ்ரநாமம் சொல்கிறது.

அப்படி சஞ்சரிக்கும்போது, ஹே—மெட்டித் தேவியே—உன் ப்ரகாசத்தால் ,

அந்த அச்வத்தை வழிநடத்துகிறாய்

2. பிராட்டி "யோகநித்ரா"—உறங்குவது போல யோகு செய்பவள். அப்படி சயனித்திருக்கும்போது,

ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியின் செந்தாமரைத் திருக்கண்களின் கடாக்ஷம்

உன்மீது பட்டு ,நீ, நெகிழ்கிறாய். எங்கே, திருவடி விரல்களிலிருந்து கழன்று

விழுந்துவிடுவோமோ என்று அஞ்சி, திருவடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாய் .

3. பிராட்டி–ருக்மிணி —தங்கம், வெள்ளிகளாலான ஆபரணங்களை அணிந்தவள்.

அவற்றில் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆன ஆபரணங்களில் நவரத்னங்களும்

பதிக்கப்பெற்று , ஒளிர்விட்டுப் ப்ரகாசிப்பதில் திருவடி ஆபரணமான ,

நீயே முதன்மை பெறுகிறாய்.

4. பிராட்டி–ஹிரண்ய வர்ணாம்—-சொக்கத்தங்க நிறமுள்ளவள் . ஹே–மெட்டித் தேவியே–

அந்தப் பிராட்டியின் திருவடியில், ஹிரண்ய வர்ணமாக நீயும் ப்ரகாசிக்கிறாய் !

5. பகவானும் , " யஜ்ஞம் " செய்கிறான். அதற்கு, "சரணாகத யஜ்ஞம் " என்று பெயர்.

யஜ்ஞம் செய்ய தர்மபத்நியாக , பிராட்டி பக்கத்திலேயே இருக்கிறாள்.

யஜ்ஞ வாடிகையிளிருந்து, பீறிடும் அக்னியின் ஒளி , ஹே—மெட்டியே —

இது, உன் ப்ரகாசமோ என்று ப்ரமிக்க வைக்கிறது.

6.பெரிய பிராட்டி, அர்ச்சையில் லயம் (எம்பெருமான் திருமேனியில் பிரிவில்லாமல்

சேர்ந்திருப்பது ). "போகம் " ( பகவானின் உத்ஸவத் திருமேனிக்கு இருபுறமும்,

ஸ்ரீ தேவி, பூதேவியாக ஸேவை சாதிப்பது ), "காம்யம்" (தனிக்கோயில் நாச்சியார் )

என்று மூன்று நிலைகளில் இருந்தாலும், பெரியபிராட்டியின் பூஷணமான

ஹே—மெட்டித் தேவியே–உன் காந்தி கோடிஸுர்யனைப்போலப் பிரகாசிக்கிறது.

7. பிராட்டி, எம்பெருமானுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, உன் பிரகாசமானது,

ஸ்ரீயப் பதியை " இது நம்முடைய பாதுகையின் காந்தியோ " என்று பிரமிக்க வைக்கிறது.

8. பகவானின், மத்ஸ்ய கூர்ம அவதாரங்களில், பிராட்டியும் அப்படியே

மத்ஸ்யமாகவும், கூர்மமாகவும் அவதரித்தபோதும் அந்தந்த அவதாரத்

திருமேனிகளுக்கு ஏற்றாற்போல் , பிராட்டியின் திருவடிகளில் வளையமிட்டு,

ப்ரகாசிக்கிறாய் —உனக்கு நமஸ்காரம்

———————————————————————————————————————————————-

6. தசாவதாரங்களிலும் ,தாயாரின் மெட்டி

—————————————————

1. ஹே—மெட்டித் தேவியே—பகவான் மச்சாவதாரம் எடுத்தபோது,

நீ, பிராட்டியின் திருவடியில் கூடவே இருந்து, புவனம் முழுவதையும்

உன் ஸம்பந்தத்தால் பாவனம் ஆக்கினாய்

2. ஹே–மெட்டித் தேவியே—பகவான் கூர்மாவதாரம் எடுத்தபோதும் ,

பிராட்டி, "அகலகில்லேன்—-" என்று கூடவே இருந்தாள் .நீயும்

பிராட்டியைவிட்டு அகலமாட்டாய்.பகவான், பூமிதேவியைத்

தன் திருமூக்கு நுனியில் தூக்கி எடுத்து, ஸமுத்ரத்திலிருந்து

வெளியே வந்தபோது, ஸமுத்ரத்துக்கு உள்ளேயும் வெளியேயும்

உன் தேஜஸ் எண்ணிலடங்கா ஸுர்யர்களின் தேஜஸ்ஸைக்

காட்டிலும் விஞ்சி ஒளிர்ந்தது .

3. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் வராஹாவதாரத்தில்,

பகவான் பிராட்டியை அணைத்துக்கொண்டு ஸேவை சாதிக்கிறான்.

அதனால், பிராட்டி "லக்ஷ்மி வராஹன் " ஆனாள் .ஆனால், நீயோ,

பிராட்டியின் திருவடியை அணைத்து புளகாங்கிதம் அடைந்தாய்

4. ஹே —மெட்டித்தேவியே—பகவான் ,ந்ருஸிம்ஹனாக அவதரித்தபோது,

பிராட்டி ,லக்ஷ்மி ந்ருஸிம்ஹனாகத் தோன்றினாள் . ,பிராட்டியின்

திருவடியில் இருந்துகொண்டு ,ப்ரஹ்லாதனுக்கும் ,நாரதருக்கும்,

தேவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தாய்.

5. ஹே—மெட்டித் தேவியே—பகவான் வாமனாவதாரம் எடுத்தபோது,

வக்ஷஸ்தலத்தில் பிராட்டியை, க்ருஷ்ணாஜினத்தால்(மான்தோல் )

மறைத்துக்கொண்டார். அப்படி மறைத்தாலும், அசுர குரு

சுக்ராசார்யருக்கு ,வந்திருப்பது பகவான்தான் என்று தெரிந்துவிட்டது.

மான்தோல் மறைப்பையும் மீறி,உன்னுடைய தேஜஸ் வெளிப்பட்டதால்,

சுக்ராசார்யர், பிராட்டி திருமார்பில் உறையும் பகவான்தான்

வந்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டார் .

பகவான்,மஹாபலியிடம் வரங்கள் கேட்டு, உலகங்களை அளந்தபோது,

பகவானின் திருவடி அண்டகடாஹங்களையும் பிளந்துகொண்டு,

மேலே,மேலே சென்றுகொண்டே இருந்தது. பகவானின் பாதுகை

பகவானின் திருவடிக்குக் குடைபோல இருக்க, திருவடி அண்டங்களைப்

பிளந்துகொண்டு செல்ல ,பிராட்டியின் திருவடியில் உள்ள உன்னுடைய

கோடி ஸுர்ய ப்ரகாசம் வழிகாட்டியது—என்னே உன் பெருமை—

6. ஹே—மெட்டித் தேவியே—பகவான் பரசுராமனாக ,ஸ்ரீ ராமபிரான்

முன்பாக வந்தபோது,ராமனின் திருக்கல்யாண கோலத்தில்

மயங்கியதால், நீ, சீதாப்பிராட்டியின் திருவடிகளிலேயே தஞ்சம்

அடைந்துவிட்டாய் போலும் !

7. ஹே—மெட்டித் தேவியே—பகவான், ராமாவதாரம் எடுத்தபோது ,

ஜானகியின் திருவடிகளில் அமர்ந்து,நீ செய்த செயல்களைச்

சொல்லி மாளாது. கோதாவரி நதியில் , படகில்,ராமனும் சீதையும்

செல்லும்போதும் சரயு நதியில் சீதை ,படிக்கட்டுகளில் அமர்ந்து

திருவடிகளைத் தீர்த்தத்தில் நனைக்கும்போதும் , திருவடிகளில்

அணிந்திருக்கும் "கொலுசு " உன்னைப் பார்த்துப் பொறாமைப் படும்.

உனக்கு, புண்ய தீர்த்தத்தில் முங்கித் திளைக்கும் பாக்யம்

கிடைக்கிறது என்றும், தனக்குக் கிடைக்கவில்லையே என்றும்

ஏங்கும். ஏனெனில், சீதையின் திருவடி கணுக்காலுக்கு மேல்

நனையாது .திருவடிகள், தீர்த்தத்தில் அங்குமிங்கும்

ஊஞ்சலைப்போல் ஒய்யாரமிடும் . நீ, தீர்த்தத்தில் மூழ்கித்

திளைப்பாய் அல்லவா ! என்ன பாக்யம் ! என்ன பாக்யம் !!

8. ஹே—மெட்டித் தேவியே— பலராம அவதாரமாகப் பகவான்

சொல்லப்பட்டாலும், க்ருஷ்ணனாக பகவான் அவதாரம் செய்து,

பற்பல லீலைகளைச் செய்ததால், அண்ணனான அவதாரம்

தம்பியின் அவதாரத்தில் அடங்கிவிட்டதால், நீயும் , பிராட்டி

ருக்மிணியின் திருவடியே போதும் என்று இருந்து விட்டாயா !

9. ஹே—மெட்டித் தேவியே—பகவானின் க்ருஷ்ணாவதாரம் ;

பிராட்டி, ருக்மிணியாக அவதாரம்.

ருக்மிணி விவாஹத்தில் , பிராட்டியின் திருவடியில் இருந்த நீ,

திருக்கல்யாண கோலத்தில் க்ருஷ்ணனும் ,ருக்மிணியும்

ஸி ம்ஹாசனத்தில் வீற்றிருந்தபோது ,பற்பல தேசத்து அரசர்கள்

தங்களுடைய ரத்ன க்ரீடங்கள் உன்னை உரச, தலைகுனிந்து

வணங்க, நீ, தேஜஸ்ஸுடன் ,அவர்களை ஆசீர்வதித்ததை

பிராட்டியே அறிவாள் —பிராட்டியின் புன்னகையே

அதற்கு சாக்ஷி !

10. ஹே—மெட்டித் தேவியே—பகவான் கல்கி அவதாரம் எடுக்கும்போது

அவரது திருமார்பில் வீற்றிருக்கும் பிராட்டியின் திருவடியை

அலங்கரிக்கும் உன் பேரொளியால் , வாள்கொண்டு வீசி,

கலியைத் தொலைக்கப் போகிறார், கல்கி பகவான்—உனக்கு

நமஸ்காரம்

———————————————————————————————————-

7.பிராட்டியின் அஷ்டலக்ஷ்மி ஆவிர்ப்பாவத்தில் —மெட்டி

————————————————–

1. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி,ஆதிலக்ஷ்மியாக
,ஆவிர்பவிக்கும்போது,

இரு திருக்கரங்களிலும் தாமரை மலர் ஏந்தி, தாமரை மலரில்
அமர்ந்து,ஸேவை சாதிக்கிறாள்.அப்போது திருவடிகளை,தாமரை மலர்
தாங்குகிறது.
அந்தத் திருவடியில் தாமரையின் மகரந்தப் பொடிகளைப் போல, நீ,

ஸேவை சாதிக்கிறாய்

2. –ஹே-மெட்டித் –தேவியே-பிராட்டி, தனலக்ஷ்மியாக
ஆவிர்பவிக்கும்போது,
(ஐஸ்வர்ய லக்ஷ்மி) திருக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி
இருந்தாலும்
தாமரை மலரில் பிராட்டியின் திருவடி மறைந்து இருந்தாலும்
,உன் ஸேவை
அடியோங்களுக்குப் பாக்யத்தைக் கொடுக்கிறது

3. ஹே—-மெட்டித் தேவியே–பிராட்டி, தான்யலக்ஷ்மியாக
ஆவிர்பவித்து , எல்லா
தான்ய சம்பத்துக்களையும் அருளும்போது, தான்யம் போன்று
நீயும்
மிகச் சிறியதாக அடியோங்களுக்கு ஸேவை சாதிக்கிறாய் .

4. ஹே–மெட்டித் தேவியே—பிராட்டி, கஜலக்ஷ்மியாக
ஆவிர்ப்பவிக்கும்போது
இருபுறமும் கஜங்கள் தீர்த்தத்தால் , பிராட்டியைத் திருமஞ்சனம்
செய்கின்றன.
அந்த அபிஷேக தீர்த்தத் திவலைகள் உன்மீது தெறித்து,அற்புதமாக

ஸேவை சாதிக்கிறாய்.

5. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, சந்தானலக்ஷ்மியாக
ஆவிர்ப்பவிக்கும்போது,
நீ, பக்தர்களுக்கு, சந்தான பாக்யத்தை அருளும் விதமாக,
மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய்

6. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, வீரலக்ஷ்மியாக /
தைர்யலக்ஷ்மியாக
ஆவிர்ப்பவிக்கும்போது, நீ, பிராட்டியின் திருவடிகளில் அமர்ந்து,
பிராட்டி
திருவடிகளால் எதிரிகளை அழிக்கும்போது, ஆயுதமாக
இருக்கிறாய்.

7. ஹே—மெட்டித்தேவியே—பிராட்டி, வித்யாலக்ஷ்மியாக
ஆவிர்ப்பவிக்கும்போது
நீ, ஓலைச்சுவடி ஆகவும் , அதைசுற்றும்பட்டுக் கயிறு / குஞ்சலம்
காக்ஷி தருகிறாய்

8. ஹே—மெட்டித்தேவியே—பிராட்டி, விஜயலக்ஷ்மியாக
ஆவிர்ப்பவிக்கும்போது,
நீ, உன் வடிவழகு, நாதம் , ப்ரகாசம் இவற்றால் முரசு
கொட்டுகிறாய்

————————————————————————————————————————————————————

8. பிராட்டியின்-யஜ்ஞ பலனில், மெட்டி

—————————————————————-

1. ஹே—மெட்டித் தேவியே—சித்திரை மாதத்தில், பௌண்டரீக
யக்ஜம்
செய்யும்போது, பிராட்டி ஸ்ரீவைகுண்ட மஹாலக்ஷ்மியாகவும் ,

ஸ்ரீ பரமபத மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் ஸ்ரீ விஷ்ணுவுடனும்,

ஸ்ரீ புருஷோத்தமனுடனும் இருந்து , யக்ஜ பலனை அருள

உதவுகிறாய்

2. ஹே—மெட்டித் –தேவியே-வைகாசி மாதத்தில், அக்னிஷ்டோம

யக்ஜம் செய்யும்போது, பிராட்டி மஹாமங்கள மஹாலக்ஷ்மியாகவும் ,

அமுல்ய மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் மதுஸுதனனுடனும் ,

அதோக்ஷஜநுடனும், இருந்து, யக்ஜ பலனை அடைய உதவுகிறாய்.

3. ஹே—மெட்டித் தேவியே—ஆனி மாதத்தில், கோமேதக யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, தேஜோமய மஹாலக்ஷ்மியாகவும்,

நிர்பய மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் த்ரிவிக்ரமனுடனும் ,

ந்ருஸிம்ஹனுடனும் இருந்து, யக்ஜ பலனை அளிக்க

உன் அனுக்ரஹம் உதவுகிறது.

4. ஹே—மெட்டித் தேவியே–ஆடிமாதத்தில்,நரமேத யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி வாசிஷ்ட மஹாலக்ஷ்மியாகவும்,

அநந்யமஹாலக்ஷ்மியாகவும், பகவான் வாமனனுடனும் ,

அச்யுதனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனை

அளிக்கும்போது, உன் சங்கல்பம் மிகத் துணையாக உள்ளது.

5. ஹே—மெட்டித் தேவியே–ஆவணி மாதத்தில் , பஞ்சமஹாயக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மியாகவும்,

ஸ்ரீஜெயமஹாலக்ஷ்மியாகவும், பகவான் ஸ்ரீதரனுடனும் ,

ஜநார்த்தனனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனை அருள

நீ காரணமாகிறாய்

6. ஹே—மெட்டித் தேவியே— புரட்டாசி மாதத்தில்,ஸௌத்ராமணிமஹாலக்ஷ்மியாகவும் ,

யக்ஜம் செய்யும்போது, பிராட்டி, ஸ்ரீஹரிப்ரிய உத்தம்த மஹாலக்ஷ்மியாகவும், பகவான் ஹ்ருஷீகேசனுடனும்,

உபேந்த்ரனுடனும் , கூடவே இருந்து, யக்ஜ பலனைக்

கொடுக்க நீ, மிகவும் விருப்பப்படுகிறாய்

7. ஹே—மெட்டியே –ஐப்பசி மாதத்தில், கோதானயக்ஜம் செய்யும்போது,

பிராட்டி, ஸ்ரீ பாவன மஹாலக்ஷ்மியாகவும், புவனேஸ்வரி

மஹாலக்ஷ்மியாகவும் ,பகவான் பத்மனாபனுடனும் , ஹரியுடனும்

நீக்கமற இருந்து யக்ஜ பலனைக் கொடுப்பதில் ஆவலாக உள்ளாய்.

8. ஹே—மெட்டித் தேவியே—கார்த்திகை மாதத்தில், கோமேத யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, திவ்யராதா மஹாலக்ஷ்மியாகவும்,

ருக்மிணி மஹாலக்ஷ்மியாகவும் பகவான் தாமோதரனுடனும்

க்ருஷ்ணனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனைக் கொடுக்கும்படி

செய்கிறாய்

9. ஹே—மெட்டித் தேவியே–மார்கழி மாதத்தில் , அச்வமேத யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, கமல கோமள மஹாலக்ஷ்மியாகவும்,

ஸுலக்ஷண மஹாலக்ஷ்மியாகவும் , பகவான் கேசவனுடனும்,

சங்கர்ஷணனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனை அளிக்க

பிராட்டியைத் தூண்டுகிறாய் .

10. ஹே—மெட்டித் தேவியே—தை மாதத்தில், வாஜபேய யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, நிர்மல மஹாலக்ஷ்மியாகவும்,

விச்வபூஜித மஹாலக்ஷ்மியாகவும், பகவான்

நாராயணனுடனும், வாஸுதேவனுடனும் கூடவே இருந்து,

யக்ஜ பலனை அருள உதவுகிறாய்

11. ஹே—மெட்டித்தேவியே –மாசி மாதத்தில், ராஜஸுய யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி,மனோஹர மஹாலக்ஷ்மியாகவும் ,

பவித்ர மஹாலக்ஷ்மியாகவும், பகவான் மாதவனுடனும்

ப்ரத்யும்னனுடனும் கூடவே இருந்து, யக்ஜ பலனைக்

கொடுக்க உதவுகிறாய்.

12. ஹே—மெட்டித் தேவியே–பங்குனி மாதத்தில், அதிராத்ர யக்ஜம்

செய்யும்போது, பிராட்டி, கந்தர்வாய பூஜித மஹாலக்ஷ்மியாகவும்,

அத்புத மஹாலக்ஷ்மியாகவும், பகவான் கோவிந்தனுடனும் ,

அநிருத்தனுடனும் கூடவே இருந்து யக்ஜ பலனை அருள உதவுகிறாய்

இப்படி,12 மாதங்களிலும் ,ஒவ்வொரு யஜ்ஞம் செய்யும்போதும்

இரண்டு, இரண்டு திருநாமங்களாக பகவான் ஆவிர்ப்பவிக்கும்போது,

பிராட்டியும் , அதற்கேற்ப அப்படியே இரண்டு இரண்டு திருநாமங்களில்

பகவான் அருகிலே இருந்து, யஜ்ஞத்திற்கான பலனை அளிக்கிறாள்.

அப்போதெல்லாம், ஹே—மெட்டித் தேவியே ,நீயும் ,பிராட்டியின்

திருவடிகளில் இருந்து யஜ்ஞ பூர்த்தியில் சேவிப்பவர்களுக்கு,

உன் அருளையும் வழங்குகிறாய்

————————————————————————————————————————————-

9. அர்ச்சனம் —தர்ஸனம்

———————————-

1. கந்தர்வ ஸ்திரீகள் , பூலோகத்தில் பிராட்டிக்கு அர்ச்சனை செய்தார்கள்.

அவர்கள் உலகம் போகபூமி. பகவானை ,தாயாரை அர்ச்சிக்க ,இங்குதான்

வந்தாகவேண்டும்.. அப்படி அர்ச்சிக்கும்போது,பிராட்டியின் திருவடியில்,

மாலையை சமர்ப்பித்து , "மெட்டி தேவி " முழுகும் அளவுக்கு

புஷ்பங்களாலும் , குங்குமத்தாலும் அர்ச்சித்தார்கள். பிறகு, இந்தப்

பிரசாதங்களை எடுத்துக்கொண்டு,கொண்டு ,அவர்களுடைய உலகத்துக்குத்

திரும்பிக்கொண்டிருந்தபோது , துர்வாசர் எதிரே வந்தார்.

இவரைப் பார்த்ததும், கந்தர்வ ஸ்திரீகள் பயந்தார்கள் .துர்வாச மஹரிஷி

ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் —என்கிற பயம் .

"உங்கள் கையில் இருப்பது என்ன ? " துர்வாசர் கோபத்துடன் கேட்டார்.

"தாயாருக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை எடுத்து வருகிறோம் "

என்று பணிவுடன் சொன்னார்கள்.

" கொடுங்கள் " என்று சொல்லி, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

"தந்யோஸ்மி—நாங்கள் போகிறோம் " என்று கந்தர்வ ஸ்திரீகள் சொல்ல,

துர்வாசர் புன்னகைத்துத்தலையசைத்தார் . தாயாரின் மெட்டியின் அனுக்ரஹ

பிரசாதம் கையில் இருந்ததால், கோபம் வரவில்லை. இதை எங்கே

வைக்கலாம் ,யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, எதிரே

ஐராவதம் என்கிற பட்டத்து யானையின்மீது, இந்திரன் பவனி வந்து

கொண்டிருந்தான் . ஜன்மதின உத்ஸவம்.

பிரசாதம் இவனுக்குத் தகும் என்று நினைத்து, "இந்த்ரா –இந்த்ரா –"

என்று கூப்பிட்டார் . இந்த்ரனிடம் "மஹாலக்ஷ்மி ப்ரசாதம் –ஸ்வீகரி–"

யானைமீதிருந்த இந்த்ரன் , யானையைக் குத்தும்ஈட்டியைக் கீழே

நீட்டினான். துர்வாசருக்கு வந்த கோபம் நொடியில் மறைந்தது.

பிரசாதம் ,அவர் கையிலிருந்து இந்த்ரனுக்குப் போய் , இந்த்ரன்

பிரசாதத்துக்கான மரியாதையைக் கொடுக்காததால், பிரசாதம்

இவர் கையை விட்டு அகன்றதும் , கோபம் கொப்பளிக்க , சபித்தார்.

-ஹே-மெட்டித்தேவியே —தாயாரின் திருவடியில் இருந்துகொண்டு

அருள்புரிகிறாய்.

2. எந்தப் பரமபதம் ,ஒரு பக்தனுக்கு,மனதிற்குக்கூட எட்டாத தொலைவில்

உள்ளதோ, எது மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ , எந்த இடம் மிக மிக

வியக்கத்தக்கதோ, எந்தத் திருநாடு ,எந்தக் காலமாறுபாட்டுக்கும்

உட்படாததோ , மாறுபாடு அடையாததோ ,எந்தத் திவ்யதேசத்துக்குச்

செல்பவனுக்கு , தேவர்கள் நகரமான அமராவதி, சிவனின் கைலாசம் ,

ப்ரஹ்மலோகம் — இவை நரகமோ , எந்த இடம் பகவானுக்கு ஒத்ததோ ,

எது அடியேன் கற்பனைக்கும் , சொற்களுக்கும் எட்டாததோ ,

அந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற பரமபதத்தை , பிராட்டியின் திருவடிகளை

அலங்கரிக்கும் ஹே–மெட்டித் தேவியே , உன் தர்ஸனமே கொடுத்துவிடும்.

3. தைத்த்ரீயத்தில் ஒரு செய்தி—–

கூர்மாவதாரம் செய்து, உலகைத் தாங்கி வருகின்ற பரமபுருஷனை

ப்ரஹ்மா கேட்டாராம்

" நான் இதுவரை ச்ருஷ்டித்தவைகளில் , உம்மைப்போல் யாரையும்

சிருஷ்டிக்கவில்லையே –நீர் யார் ? "

அதற்குப் பகவான்,

நான் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டவன் –உன்னையும் சகல சேதன ,

அசேதனங்களையும் , ஸ்ருஷ்டித்தவன் — " என்றாராம்

இதற்கு நிரூபணம் ஹே–மெட்டித் தேவியே—நீ ,எம்பெருமானின்

திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டியின் திருவடிகளில்

இருந்துகொண்டு , ப்ரஹ்மாவுக்குத் தர்சனம் தந்ததாலோ !

4. ஹே–மெட்டித் தேவியே—தேவர்களும் ,அசுரர்களும் தங்களுடைய

மணிமகுடங்களுடன் ,பிராட்டியைக் கீழே குனிந்து வணங்கும்போது,

அவைகள் ஜ்வலித்து , உன்னுடைய காந்திக்கு ஹாரத்தி எடுப்பதுபோல

இருக்கின்றன

5. ஹே–மெட்டித் தேவியே—துர்வாசரின் சாபத்துக்கு இலக்கான இந்த்ரன் ,

பிராட்டியிடம் ஓடிவந்து , தெண்டனிட்டபோது , உன்னையே முதலில்

தர்ஸி த்தான். அவனுக்கு அருள் செய்ய ,பிராட்டிக்கு ,நீ , உன்

குறிப்பால் ப்ரார்த்தித்தாய் –உனக்கு நமஸ்காரம்

6. ருக்மிணி விவாஹத்தில் , அம்மி மிதிக்கும் சமயத்தில் , க்ருஷ்ணன் ,

ருக்மிணியின் தாமரைமலரையொத்த திருவடியை, தன்னுடைய

திருக் கரங்களால் பற்றி , அம்மியில் ஏற்றும்போது , ஹே–மெட்டித் தேவியே —

க்ருஷ்ணனின் திருக்கரங்களின் ஸ்பர்சம் பட்டு , பரவசப்பட்டு,,ருக்மிணியையும்

பரவசப் படுத்தினாய் –உனக்கு நமஸ்காரம்

7. ஹே–மெட்டித் தேவியே–பத்து உபநிஷத்துக்களும் ,தங்கள் சிரஸ்ஸில்

சூட்டிக்கொண்டுள்ள " ராக்கொடி "யைப் போல, பிராட்டியின் திருவடிகளில்

தர்சனம் தருகிறாய் . உனக்கு நமஸ்காரம்

8. ஹே–மெட்டித்தேவியே –நாராயணன் நம்பி செம்மையுடைய

திருக்கையால் ஆண்டாளின் தாள் பற்றி,(பூதேவி )அம்மி மிதித்தபோது

பகவானின் திருக்கரங்களின் ஸ்பர்சத்தால் பரவசமாகி, கோதாப்

பிராட்டியையும் மெய்மறக்கச் செய்தாய் .உனக்கு நமஸ்காரம்

9. ஹே–மெட்டித்தேவியே—பிராட்டி, ரத்ன பாதுகையை அணிந்திருக்கிறாள்

அந்த ரத்ன பாதுகைக்கு திலகம் இருப்பதைப் போல, நீ தர்ஸனம்

தருகிறாய்.உனக்கு நமஸ்காரம்

10. ஹே–மெட்டித்தேவியே —செம்பஞ்சுக்குழம்பால் ஆன திருவடி

இலச்சினையை உடையவள் பிராட்டி.நீ, அதற்கு அலங்காரமாகக்

காக்ஷி கொடுக்கிறாய் உனக்கு நமஸ்காரம்

11. ஹே–மெட்டித் தேவியே —பிராட்டி மங்கள தேவதா என்று

சஹஸ்ரநாமம் புகழ்கிறது –நீ,மங்களத்துக்கு எடுத்துக் காட்டு

உனக்கு நமஸ்காரம்

————————————————————————————————-

10. கடாக்ஷமும் , அனுக்ரஹமும்

———————————————–

1. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டியை , "புண்ய நிலயா " என்று

சஹஸ்ரநாமம் புகழ்கிறது. புனிதமான இடத்தில் மட்டுமே

நிலைத்திருப்பவள், தாயார். அந்தப் புனிதத்தை தாயாருக்குக்

காட்டிக்கொடுப்பவள் ,நீயே . அடியேனின் ஹ்ருதயம் புனிதம்

என்பதை ,சமர்ப்பித்து , பிராட்டி அடியேனின் ஹ்ருதயத்தில்

நிலைத்திருக்கும்படி கடாக்ஷிப்பாயாக

2. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி அடியேனின் அளவில்லாப்

பாவங்களை மன்னித்து, அடியேனைக் கடாக்ஷிக்குமாறு ,

பிராட்டிக்கு முகக் குறிப்பால் சொல்வாயாக !

3.ஹே—மெட்டித் தேவியே—மலரைச் சிறப்பித்துசொல்லுகிற

கவி , அதன் நறுமணத்தைச் சொல்லாமல் ,சொல்வதைப்

போல , பிராட்டி அணிந்திருக்கும் மெட்டியான உன்

திருநாமத்தைச் சொன்னவுடன் , மலரின் வாசனை மகிழ்ச்சி

அளிப்பதைப் போல, உன் திரண்ட அனுக்ரஹம் அடியேனுக்குக்

கிடைத்து ,க்ருதார்த்தனாக்குகிறது

4.ஹே—மெட்டித் தேவியே எட்டுத் திசைகளுக்கும் பாலகர்களான

இந்த்ரன் , அக்னி , ,யமன் நிர்ருதி, வருணன், வாயு , குபேரன் ,

ஈசானன் , ஆகியவர்கள் பிராட்டிக்கு , ஸுப்ரபாதம்

சொல்வதற்காக ,சந்நிதிக்குப் போகும்போது, முதலில் உன்னை

தரிசித்த பிறகே ,பிராட்டியின் கடாக்ஷத்தைப் பெறுகிறார்கள்

5. ஹே–மெட்டித் தேவியே–நவக்ரஹங்களான சூர்யன் ,புதன் ,

சந்த்ரன் , அங்காரகன் ,ராஹு , கேது , ப்ருஹஸ்பதி ,

சுக்ரன் ,சனி , இவர்கள் , பிராட்டியின் கைங்கர்யத்தில்

மிகவும் பற்றுதலுடன் ,பிராட்டியின் திருவடித் தாமரையை

சேவிக்க முற்படும்போது, முதலில் உன்னை சேவித்தபிறகே

,திருவடிகளை சேவிக்கிறார்கள்

6. ஹே—மெட்டித்தேவியே –ஸப்தரிஷிகளும் ,தேவ கங்கையில் நீராடி

ஸந்த்யாவந்தனாதிகளை முடித்து , பாரிஜாதம் முதலிய

தேவமரத்துப்புஷ்பங்களைக் கொய்து , பிராட்டியை சேவிக்க

வந்து . முதலில் உன் மீதுதான் மலர்களைத் தூவுகிறார்கள்

7. ஹே—மெட்டித்தேவியே—-பிராட்டி "சரண்யா " என்று புகழப்படுகிறாள்

சரணாகதி அடைந்தவர்களைக் காக்கிறாள் . ,இப்படி , பிராட்டியின்

திருவடிகளைச் சரணாகதி செய்பவர்களுக்கு, ஞான ஒளியாக

நீ, அனுக்ரஹிக்கிறாய்

8. ஹே—மெட்டித் தேவியே—பிராட்டி, "ஸுதரா "–எளிதில்

ஆச்ரயிக்கத்தக்கவளாக இருக்கிறாள் என்பதற்கு , நீ,

மிகவும் அனுகூலையாக இருக்கிறாய்

——————————————————————————————-

11. பலச்ருதி

———————

1. ஹே–மெட்டித் தேவியே —உன்னை அந்தரங்க சுத்தியுடன்

துதிக்கும்போது , சொற்கள் செய்யுளாக இல்லாவிட்டாலும்

ச்லோகமாக இல்லாவிட்டாலும், உன் வாத்ஸல்யம்

தங்குதடையின்றி அடியோங்களை நோக்கி ஓடிவரும்

2. உன் வாத்ஸல்யம் மாத்ரமல்ல, எந்தத் திருவடியை அகலகில்லேன்

என்று அனவரதமும் அணிசெய்கிறாயோ அந்தப் பிராட்டியின்

வாத்ஸல்யமும் மழைபோல அடியோங்கள் மீது பொழியும்

3. உங்கள் இருவரின் வாத்ஸல்யம் மாத்ரமல்ல, உன்னை அணியாகக்

கொண்ட பிராட்டியை, எப்போதும் வக்ஷஸ்தலத்தில் வைத்து

சந்தோஷிக்கும் திருமகள் கேள்வனின் வாத்ஸல்யமும்

சரமழையைப் போல அடியோங்கள் மீது பொழியும்

4. அடியோங்களுக்கு, இப்படி மஹா வாத்ஸல்யத்தை அருளும்போது,

வேண்டுவார் வேண்டுவனவும் அருளி, முடிவில் வானுலகும்

அருளி, அடியோங்கள் தொண்டர்குலம் தழைக்கவும்

அருளுவாயாக

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே

ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :

————————–ஸர்வம் ஸ்ரீ ஹயக்ரீவ ப்ரீயதாம் —————

அடியேன் —உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்—-

No comments:

Post a Comment